மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
பெரம்பலூர் பொய்யாத நல்லூர் கோதண்ட ராமசாமி விஷ்ணு கோவில் தலவிருட்சம் சந்தன மரம் (SANTALUM ALBUM)
சந்தனம்
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல் :
செடிகொள் நோயின்அடை யார்திறம்
பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக லும்புகம்
தான்வரும்
நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்
திரு வாஞ்சியத்
தடிகள் பாதம்அடைந் தாரடி யாரடி
யார்கட்கே.
* சளி, இருமல், ஆஸ்துமா, ஜுரம்
* சிறுநீர் பாதைப்புண், எரிச்சல்
* வாய்ப்புண், தொண்டைப்புண்
* கல்லீரல், பித்தப்பைக் கோளாறுகள்
* இதய நோய்கள்
* உடலுறவு நோய்கள்
* எய்ட்ஸ் நோய்க்கு நல்ல மருந்து
1400 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் தோன்றும் போது அரபு நாட்டிலும் மற்ற நாடுகளிலும் பர்சி (FARSI) என்ற ஒரு இன மக்கள் இருந்தார்கள். அவர்கள் இப்போது கூட உலகம் முழுவதும் பரவி இருக்கின்றார்கள். ஆனால், அந்த ஜாதி மக்களின் எண்ணிக்கை குறைந்து ஓரிரு இலட்சம் மட்டுமே இருக்கின்றது என்றோர் ஆய்வு கூறுகின்றது. அந்த மக்கள் நெருப்பை வணங்குவார்கள். நெருப்பைத்தான் தெய்வம் என்று கூறுவார்கள். அந்த இனமக்களில் பெரும்பாலோர் இஸ்லாம் மதத்தை தழுவி கொண்டார்கள். நபி பெருமானாரின் அருமைத் தோழரான ஹஜ்ரத் சல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்களும் ஃபார்ஸி இனத்தைச் சேர்ந்தவர்தான்.
ஃபார்ஸி இன மக்கள் அவர்களின் கோவிலில் நெருப்பை எப்போதும் எரித்துக் கொண்டே இருப்பார்கள். எரிபொருளாக சந்தன மரக்கட்டையையே பயன்படுத்துவார்கள்.
இந்த ஆலயங்களில், மதச் சடங்குகளில், யாகங்களில், பூஜைகளில், தியானத்தில், சந்தனத்தை முக்கியப் பொருளாக பயன்படுத்துகிறார்கள்.
தேவர்களின் தலைவன் தேவேந்திரன் இந்திர லோகத்தில் ஐந்து மரங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் சந்தன மரமும் ஒன்று என்று இந்து சமுதாய மக்கள் நம்புகின்றனர். தெய்வச் சிலைகளை சந்தன மரத்தைக் கொண்டு செதுக்கித் தயாரிப்பாார்கள். இராமாயனத்திலும், மகாபாரதத்திலும் சந்தன மரத்தால் செய்யப்பட்ட மரப் பொருட்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. நெற்றியில் சந்தனத்தை பூசிக் கொண்டு தெய்வத்தை வணங்குவதால் மிக விரைவில் நன்மை கிடைக்கின்றது என்று இந்து சமுதாய மக்கள் நம்புகின்றனர். சாமி சிலைகளுக்கும் சந்தனத்தால் அபிஷேகம் செய்வார்கள்.
என்னிடம் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் திருப்பதி தேவஸ்தானத்தில் பணி செய்பவர். அவர் என் சிகிச்சையால் குணம்பெற்ற மகிழ்ச்சியில் திருப்பதி வெங்கடேச பெருமானுக்கு படைக்கும் - பூசப்படும், அபிஷேகம் செய்யப்பட்ட சந்தன நூல் பாக்கெட் ஒன்றை எனக்கு நினைவுப் பரிசாகக் கொடுத்தார். இந்த சுவாமி அபிஷேக சந்தனநூல் வி.ஐ.பிக்கு மட்டும் கிடைக்கும் அது உங்களுக்குக் கொடுத்துள்ளேன் என்றார்.
சில மாதங்களுக்கு முன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாண்டிச்சேரி தொலைக்காட்சி நிலையம் இதைத் தயாரித்து தந்தது. திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சூரிய பகவானின் மகன் சனீஸ்வரனுக்கு வி’சேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. இலட்சக்கணக்கில் பக்தர்கள் கூடி சனீஸ்வர பகவானை வணங்கிச் சென்றார்கள். அப்போது சனீஸ்வர பகவான் சிலைக்கு சந்னத்தால் உடல் முழுவதும் பூசி அபிஷேகம் செய்வதைக் கண்டேன். சந்தனத்தின் குளிர்ச்சி சனீஸ்வர பகவானின் மனதைக் குளிர வைக்கின்றது என்று டி.வியில் செய்தியாளர் விவரித்துக் கொண்டிருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி கிரகம் இடம் மாறுகிறது. இதற்காக இந்த விசேஷ பூஜை எனத் தெரிந்தது.
தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொய்யாத நல்லூர் ஊரிலுள்ள கோதண்டராமசாமி கோவிலுள்ள விஷ்ணு ஆலயம், நாகபட்டினம் மாவட்டத்திலுள்ள திருவிழிமலை என்ற ஊரிலுள்ள வீழிநாதர் சிவ ஆலயம், தேரழுந்தூர் என்ற ஊரில் வேடபுரீஸ்வர் சிவ ஆலயங்களின் தலவிருட்ச மரமாக சந்தன மரங்கள் திகழ்கின்றன. இந்த ஆலயங்களில் தெய்வத்துடன் சேர்த்து சந்தன மரத்தையும் இந்து சமுதாய மக்கள் வணங்குகின்றனர்.
சிவன், விஷ்ணு பக்தர்கள் சந்தனத்தை நெற்றியலும், கண் புருவங்களில் பூசிக் கொள்வார்கள் நெற்றியில் எக்ஸ்ட்ராஸிக்ஸ் என்ற ஒரு புள்ளி இருக்கின்றது. அந்த இடத்தில்தான் மனதையும், உடலையும் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலங்கள் உள்ளன. அதனால்தான் சந்தனப் பொட்டு அவ்விடம் வைக்கும்போது டென்ஷன், பதற்றம் இல்லாமல் மனிதன் அமைதியாகக் காணப்படுவான். சந்தனத்தை முகத்தில் பூசிக் கொள்வதால் கோடைக்கால சூடு தடுக்கப்படுகிறது.
சந்தனம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் இதை எய்ட்ஸ் நோய்க்குப் பயன்படுத்துகின்றார்கள். சில சிட்டிகை சந்தனத் தூள் பவுடரை தண்ணீரில் கலந்து குடிப்பதால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வயிற்றெரிச்சல் அனைத்தும் உடனடியாகக் குணமடைகின்றன. சன் அலர்ஜி எனப்படும், உடலில் ஆங்காங்கு தடிப்பு ஏற்படுவதை சந்தனம் தடுக்கின்றது.
வசதிப்படைத்தவர்கள் மரணமடைந்த பிறகு சந்தனக் கட்டையை கொண்டு பூத உடலை எரிப்பார்கள்.
பல ஆயிரமாண்டுகளாக வாசனைப் பொருளாக நறுமணம் தரும் அகர்வத்தியை உலக மக்கள் பயன்படுத்துகிறார்கள். சந்தன எண்ணெயால் சோப்புகளும் தயாரிக்கினறார்கள். இவ்வளவு சிறப்பு மிக்க சந்தன மரத்தை சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் மாமருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். அதைப் பார்ப்போம்.
புல்லுருவி மரமாக வளரும் இம்மரத்தை வெட்டி கடத்துவதையே தொழிலாகக் கொண்டு மூன்று மாநிலங்களின் தீராத தலைவலியாக இருந்த சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் வெட்டிய மரங்கள் போதும், தற்போது ஓரளவே மரங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு இச்சந்தன மரங்களும் ஓரளவுக்கு நிம்மதிப் பெருமூச்சு விடுவதைக் காண முடிகின்றது.
யுனானி மருத்துவத்தில் சந்தனத்தின் மருத்துவ குணங்கள்
தோற்றம் : இது யாவரும் அறிந்த ஓர மரமாகும். இது நல்ல வாசனை உடையதாகும். இது இரண்டு வகைப்படும். ஒன்று வெள்ளைச் சந்தனம் மற்றொன்று சிவப்புச் சந்தனமாகும்.
இயல்பு : வெள்ளைச் சந்தனம் குளிர்ச்சி, வறட்சி - சிவப்புச் சந்தனம் குளரிச்சி, வறட்சி கொண்டது.
வெள்ளைச் சந்தனத்தின் மருத்துவ குணங்கள்
வெள்ளைச் சந்தனம் வெளிப்புற உபயோகத்தில் ஜலதோஷம், தலைவலி மற்றும் இதர வலிகளைப் போக்குகிறது. உட்புறத்தில் இதயத்திற்கு இன்பமும், சக்தியும் அளிக்கிறது. இதய வேக்காட்டைத் தணிக்கிறது.
இரத்த ஓட்டத்தைச் சமனப் படுத்துகிறது. மூளை, வயிறு மற்றும் குடலுக்கு சக்தியளிக்கிறது. சிவப்புச் சந்தனம், வெள்ளைச் சந்தனத்தைவிட அதகி சக்தி வாய்ந்தது. ஏனெனில் இதில் ஒரு பகுதி உஷ்ணமும் உண்டு. இதனால் வெளிப்புற உபயோகத்தில் பூசு மருந்தாகப் பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை : இதை அதிகளவில் உஷ்ணத்தால் உண்டாகும் வீக்கங்கள், தலைவலி நீங்க பயன்படுத்துவர். இதய வேக்காட்டைத் தணிக்க, மார்புப் பகுதியில் இதைக் கொண்டு மசாஜ் செய்வார்கள். இதய பலவீனம், இதயப் படபடப்பு, இதய வேக்காட்டைத் தணிக்க உட்புறத்திலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், பித்தம் மற்றும் இரத்த பேதியைத் தடுக்கவும், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலைத் தணிக்கவும், இதயம், வயிறு மற்றும் கல்லீரல் ஆகியவற்றின் உஷ்ணத்தைத் தணிக்கவும் இதில் “ஷர்பத்” தயாரித்து குடிப்பார்கள்.
முக்கிய பயன்கள் : வயிறு மற்றும் கல்லீரலுக்கு சக்தி அளிக்கிறது.
அளவு : 5 கிராம் முதல் 7 கிராம் வரை பயன்படுத்தவும்.
பொதுப்பயன்கள் : மரத்தின் இலை, கனி, விதை, வேர், மரம், இரம்பத்தூள், சந்தனத் தைலம் ஆகியவை பல பயன்களை வாரி வழங்குகின்றன.
இலை : மகாராஷ்டிராவில் தழையைத் தீவனமாக உபயோகிக்கின்றனர்.
கனி : உலர்த்திய கனிகளில் இருந்து பெட்ரோலிய ஈதர் மூலம் ஒரு பிசுப்பிசுப்பான எண்ணெயை வடித்தெடுக்கின்றனர்.
விதை : இதில் சிவப்பு நிற எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆமணக்கு எண்ணெயைவிடக் கெட்டியானது. மேலும் இது ஒரு உலர் எண்ணெய் ஆகும். சோப்பு தயாரிக்கும் எண்ணெயாகவும் மாற்றலாம். முன்காலத்தில் இந்த எண்ணெயை விளக்கு எரிக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.
வேர் : மிகச் சிறந்த சந்தன எண்ணெய் உள்ளது. இது மரக்கட்டையில் இருப்பதை விடச் சிறந்தது.
மரம் : வயிற்றுப்பகுதி மணமுடையது. மேலும் கடினமானதாகும்
இரம்பத்தூள் : ஊதுவத்தி செய்யவும், ஆடைகளுக்கு மணமூட்டவும், கொசுத் தொல்லைகளைப் போக்கவும் பயனாகிறது.
ஆயுர்வேதத்தில் இதன் மருத்துவ குணங்கள்
சந்தனம் மற்றும் எண்ணெயை ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாய் பயன்படுத்தி வருகின்றனர். குளிர்ச்சி தரும் மருந்தாகவும், இரத்தப்போக்கைத் தடுத்து நிறுத்தும் வகையிலும், சிறுநீரைப் பெருமளவில் வெளியேற்றும் செய்கைகளும் கொண்டது. நரம்பு நோய்களுக்கு சந்தனப் பவுடரும், எண்ணெயும் பயனாகிறது. இதன் பசை தலைவலியைப் போக்கவும், வெப்பத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. பேதி மற்றும் வாயுக்கோளாறுகளைத் தடுத்து நிறுத்துவதுடன் வியர்க்குருவைப் போக்குகிறது.
பருக்களைப் போக்கி மனதை ஒருநிலைப்படுத்தவும், ஆன்மீக நிலைக்குக் கொண்டுசென்று, தியானத்தில் ஈடுபடவும் வைக்கிறது.
சித்த மருத்துவத்தில் மருத்துவ குணங்கள்
* இதனை நன்முறையில் உபயோகித்தால் அறிவும், மன மகிழ்ச்சியும், ஒளியும், மாதரிடத்தில் இச்சையும் உண்டாகும்.
* மாந்தம், ஜுரம், மார்புத் துடிப்பு முதலியவற்றை சந்தனக் கட்டை குடிநீர் போக்கும். ஜுரம் உள்ள சமயம் குடித்தால் வியர்த்து, தீவிர நாடித்துடிப்பு தன்னிலைப்படும. ஜுரத்தால் வரும் தலைவலி, புருவத்தில் வலி முதலியவைக்குத் தேனில் அரைத்து நெற்றியில் பற்றிடலாம்.
* அரைத்த சந்தனத்தை நீரில் கலந்து, அதில் மேலாக இருக்கும் தெளிநீருடன், பிற மருந்துச் சரக்குகளையும் சேர்த்து உட்கொண்டால் வயிற்றுப் பொருமல், சீதபேதி, வெப்பம், தண்ணீர் தாகம் தணியும்.
* சந்தனத்தூளை அரைத்து பாலில் கலக்கி கீழ் வெள்ளைக்கு கொடுக்கலாம்.
* சந்தன எண்ணெய் வடித்தெடுக்க உபயோகிக்கும் நீரை சந்தனக் குடிநீரைப் போன்று உபயோகிக்கலாம்.
* சிறுநீர் பெருக்கும், வெள்ளை வெட்டை, தொடர்ந்து மார்புச் சளி, விட்டு விட்டு வரும் ஜுரம், மூத்திர குழாய் கசிதல் - என பல நோய்களுக்கு சந்தனத் தைலம் மருந்தாகும். இதனுடன் ஓம நீர் சேர்த்தால் பயன் கூடுதலாகும்.
* இத்தைலத்தைத் தேயத்து தலைக்குக் குளித்தால், உடல், கை, கால் வலி, கண் எரிச்சல் நீங்கம்.
* பல நோய்களுக்குத் துணை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
* சொறி சிரங்குகள் குணமாக விதை எண்ணெய் பூசலாம். கடுகு எண்ணெயுடன் கலந்து மூக்கில் வரும் பருவுக்கு இடலாம். ரிண்டர்பெஸ்ட் வைரஸ் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது.
* கருச்சிதைவைத் தடுக்கின்றது.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
திருவாஞ்சியம், திருவழுந்தூர் ஆகிய தலங்களில் சந்தன மரம் திருக்கோயில் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.
திருக்காறாயில் கண்ணாயடி நாதேச்சுரர் கயிலாய நாயகியம்மை கோவிலில் அகில் மரத்தை தலவிருட்சமாக வணங்குகின்றனர். இங்கு தேவேந்திரன், முசுகுந்த சக்ரவர்த்தி பூசித்த தலமாகும். சப்தவிடங்க தலங்களுள் இதுவும் ஒன்று. ஆதிதிராவிடர், குக்குடா நடனம், திருஞான சம்பந்த சுவாமிகளால் பாடல் ெப்றற தலம்.
சங்க இலக்கியம்
சங்க இலக்கியங்களில் சந்தன மரத்தை “ஆரம்” எனவும் “சாந்தம்” எனவும் ‘சந்தனம்’ எனவும் குறிப்பிடுகின்றனர். சங்க இலக்கியப் பெயராக ‘ஆரம்’ எனவும் வழங்கப்படுகின்றது.
இம்மரம் உயரமாக வளர்வது, குடமலை, பொதியில் மலைகளில் வளர்கிறது என்றும், மலையிடைப் பிறந்தும் சந்தனம் மலைக்குப் பயன்படாது. பிறருக்கே பயன்படுவது போல, மகளிரும் பருவத்தே பெற்றோருக்கு பயன்படாது விரும்பினர்பால் சென்று பயன்படுவர் என்று கூறும் தமிழிலக்கியம்.
“ஆரம் காழ்வை கடியிரும் புன்னை” (குறிஞ்சி) எனக் கபிலர், ஆரம் எனப்படும் சந்தன மலரையும் பிற மலர்களோடு குறிப்பிடுகின்றனர். ஆயினும், ஆரத்தின் மலரில் வாசனையில்லை, சந்தனம் பரப்பும் நறுமணம் அதன் மரத்தில்தான் உள்ளது.
“குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்” (பட்டினப்பாலை)
இம்மரத்தில் மிளகுக்கொடி ஏறிப் படரும் என்றும், இம்மரத்தால் செய்யப்பட்ட உலக்கையால் ஐவன நெல்லைப் பாறை உரலிலிட்டுக் குத்துவர் என்றும் புலவர்கள் கூறுவர்.
அகில் மணமும், சந்தன மணமும் கொடிச்சியின் கூந்தலில் நாறுமென்று வயிற்றியனார் கூறுகின்றார்.
சந்தன மரத்தின் மலர் வெண்மையானது. இதில் தேனை உண்ணுவதற்கு வண்டுகள் வந்து மொய்க்கும். இவ்வியல்பினையும் புலவர்கள் கண்டு பாடியுள்ளனர்.
பட்டினப்பாக்கம், குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு சிறுபாணாற்றுப்படை, மலைபடு கடாம் ஆகிய நூல்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2010/04/09 காஞ்சி அச்சிறு பாக்கம் ஆட்சி ஈஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் சரக்கொன்றைப் புளியமரம் கொன்றை
2010/04/02 அறந்தாங்கி திருப்புனவாயில் பழம்பதி நாயகர், விருத்தபுரீஸ்வரர் கோயில் தலவிருட்சம் சதுரக்கள்ளிச் செடி
2010/03/26 தஞ்சை திருச்சேரையூர் ஸ்ரீசாரங்கபாணி விஷ்ணு கோவில் தலவிருட்சம் சங்கு புஷ்பம்
2010/03/19 திருச்சாய்க்காடு சாயாவனேசுவரர் கோயில் தலவிருட்சம் கோரைக்கிழங்கு
2010/03/12 வெண்குஷ்டத்தைக் குணமாக்கும் கொட்டை பூவரசன் மரம்
2010/03/06 குத்தாலம் சிவன்கோயில் தலவிருட்சம் கூதாளி
2010/02/26 திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சம் கூந்தற் பாக்கு மரம்
2010/02/19 கும்பகோணம் கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம் கூந்தப்பனை
2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்
2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்
2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்
2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்
2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்
2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி
2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி
2009/12/25 ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்
2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்
2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி
2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு
2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு
2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்
2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்
2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்
2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)
2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்
2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை
2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி
2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை
2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்
2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்
2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்
2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்
2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/31 ஆனைப் புளிய மரம்
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி