Friday, 30 Apr 2010
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
சுரைக்குடி சிவன் கோயில் தலவிருட்சம்
சுரைக்காய்
(LEGENARIA VULGARIS)
ஆயுர்வேத மருத்துவம்
கொழுந்து இலை : இதனால் உடலின் நீர் இறங்கும். வீக்கம் போகும். சோம்பல், வாதம், பித்தம், கபம் போன்ற பிணிகள் நீங்கும். பேதியும் ஆகும். இலையால் சுவையற்ற தன்மை, ஈரல் நோய்கள், மார்பு நோய், உண்டாகும், உடல் சூடு தணியும். இலையால் வீக்கம், நீர்க்கட்டு போகும். கொடியால் வெறி நோய்கள் போகும்.
மற்ற பயன்கள் : சுரைக் கீரையை உள்ளிப்பூண்டு சேர்த்து சமைத்து 41 நாட்கள் சாப்பிட்டால், அல்லது கொடியை மட்டும் குடிநீர் செய்து குடித்தால் நலம் தரும்.
* இலையை குடிநீரிட்டு சர்க்கரை கலந்து காமாலை நோய்க்குக் கொடுக்கலாம். கொடியை குடிநீரிட்டு, வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு இவற்றிற்குக் கொடுக்கலாம்.
* கொடிகள், சிறுநீரை பெருக்கச் செய்யும் குடிநீர்களில் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றன.
* சுரைக்காய் குடுக்கையை சுட்ட கரியை, இரசவேக்காட்டுக்கு கொடுக்கப்படுகிறது. காட்டுச்சுரைக்காய் சாம்பலுடன், தேன் சேர்த்துக் கண்ணில் இட மாலைக்கண் நோய் போகும். இதன் சாற்றுடன் எண்ணெய் சேர்த்து காய்ச்சி கண்டமாலைக்குப் போட குணமாகும்.
இயல்பு : குளிர்ச்சி, ஈரம்.
முக்கிய குணங்கள் : இது விரைவாக ஜீரணிக்கும் தன்மை உடையது. இதைக் குறைந்த அளவில் உணவாகப் பயன்படுத்துவார்கள். சிறுநீரைப் பிரியச் செய்கிறது. உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஈரத்தைத் தருகிறது. இரத்தம் மற்றும் பித்தக் கொதிப்பைத் தணிக்கிறது.
பயன்படுத்தும்முறை : இதை அதிகளவில் தனியாகவோ அல்லது இறைச்சியுடன் கலந்தோ சமைத்து உண்பதற்குப் பயன்படுத்துவார்கள். பித்த குணமுடையவர்களுக்கு குறிப்பாக பித்தம், ஜுரம், இருமல், காசநோய், பைத்தியம், மூளைநோய் போன்றவற்றிற்குப் பயன்படுகிறது.
இது குளிர்ச்சி மற்றும் ஈரம் கொண்ட தன்மையால், உஷ்ணத்தால் உண்டாகும் தலைவலி, பைத்தியம், ஒரு வித மூளை நோய்க்கு இதன் மேல்தோலையும் உள்சதையையும், தலையில் பற்றாகப் போடுவார்கள். மேலும், உடல் உஷ்ணம் மற்றும் தண்ணீர் தாகத்தைத் தணிக்கிறது. இலேசான வயிற்றுவலியையும் உப்புச்சத்தையும் உண்டாக்குகிறது.
அளவு : சாறு 40 மில்லி கிராம் முதல் 80 மில்லி கிராம் வரை.
தீய விளைவுகள் : இலேசான வயிற்று வலியையும், உப்புச்சத்தையும் உண்டாக்குகிறது. இத்துடன் ஊதே ஹிந்த் மற்றும் கரன்ஃபல் கலந்து பயன்படுத்த வேண்டும்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
சுரைக்குடி சிவன் கோயில் தலவிருட்சமாக சுரை வணங்கப்படுகிறது. சுரையின் அறிவியல் பெயராக “லிகேனரியா வல்கரிஸ்” (LEGENARIA VULGARIS) என அழைக்கப்படுகிறது. இது இந்தியா முழுவதும் பயிராகிறது. 2 வகையாக காணப்படுகிறது. அவை இனிப்பாகவும், கசப்பாகவும் இருக்கும். காட்டுச்சுரை, பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மொத்தத்தில் மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2010/04/23 சுரைக்குடி சிவன் கோயில் தலவிருட்சம் சுரைக்காய்
2010/04/16 பெரம்பலூர் பொய்யாத நல்லூர் கோதண்ட ராமசாமி விஷ்ணு கோவில் தலவிருட்சம் சந்தன மரம்
2010/03/26 தஞ்சை திருச்சேரையூர் ஸ்ரீசாரங்கபாணி விஷ்ணு கோவில் தலவிருட்சம் சங்கு புஷ்பம்
2010/03/19 திருச்சாய்க்காடு சாயாவனேசுவரர் கோயில் தலவிருட்சம் கோரைக்கிழங்கு
2010/03/12 வெண்குஷ்டத்தைக் குணமாக்கும் கொட்டை பூவரசன் மரம்
2010/03/06 குத்தாலம் சிவன்கோயில் தலவிருட்சம் கூதாளி
2010/02/26 திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சம் கூந்தற் பாக்கு மரம்
2010/02/19 கும்பகோணம் கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம் கூந்தப்பனை
2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்
2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்
2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்
2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்
2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்
2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி
2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி
2009/12/25 ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்
2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்
2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி
2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு
2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு
2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்
2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்
2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்
2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)
2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்
2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை
2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி
2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை
2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்
2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்
2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்
2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்
2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































