வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
லாவோர்ஸ் நாட்டு ஓட்டலில் உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு, அப்படியென்ன நீங்கள் வியந்த பரிசு என்கிறீர்களா? இருக்கிறது
என் பெயரை கண்ணாடி இழையால் உருவாக்கி அதன் முனையில் ஒரு பிளக்கை இணைத்து மின் இணைப்பில் சேர்த்தால் என் பெயர் நியான் விளக்கு போல எரிகிறது.
பேனா கொடுத்தால் எழுதிப் பார்க்கிறவர்கள் முதலில் தங்கள் பெயரைத்தானே எழுதுகிறார்கள்? தங்கள் பெயர்களை நேசிக்காதவர்கள் உலகில் மிகக் குறைவு. அதுவும் நான் வந்து இறங்கும் தினத்தன்று அதைத் தயாரித்து வைத்திருந்து கொடுத்ததும் அசந்து போனேன்.
டோனா ரீக்கும் அப்படி ஒரு வியப்பு. ஆங்கிலத்தில் சூப்பர்லேட்டிவ் டிகிரியில் உள்ள பல வார்த்தைகளைப் பயன்படுத்தி அந்தப் பரிசைப்பற்றி என்னிடமும் வரவேற்பாளரிடமும் பாராட்டிச் சொன்னார்.
இந்த அழகிய பரிசைக் கையில் வாங்கியதும் எனக்கு ஏற்பட்ட அடுத்த இரு உணர்வுகளைச் சொல்லியாக வேண்டும்.
முதலாவது இது யார் மூளையில் உதித்த யோசனையோ தெரியவில்லையே, அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
14 வார்த்தைகள் கொண்ட கண்ணாடிப் பொருளால் செய்யப்பட்ட இந்தப் பொருளை உடையாமல் பத்திரமாக இந்தியாவிற்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியுமா என்பது இரண்டாவது உணர்வு.
“நான் ஓட்டல் அதிபருக்கா, பொது மேலாளருக்கா, யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்?” என்று வரவேற்பாளப் பெண்மணி மாயூனிடம் கேட்டதற்கு அவர்,
“என்னிடம் சொல்லி மகிழ்ந்தீர்களே, அதுவே போதும் நான் சொல்லிவிடுகிறேன்” என்று எனக்கும் உரியவர்களுக்கும் இடையே சீனச் சுவராய் நின்றாள்.
ஓட்டல்காரர்கள் இப்படி ஒரு பரிசைத் தந்து என் வாயையும் கையையும் கட்டிப் போட்ட கதை தனிக் கதை. அதையும் சொல்லிவிடுகிறேன்.
டோனா ரீ “நீங்கள் ஓய்வெடுக்கிறீர்களா, இருவருமாக எங்கும் புறப்படுவோமா?” என்று என்னிடம் கேட்க, எனக்கு இந்தக் கேள்வியே புதுமையாக இருந்தது.
இந்தக் கேள்வியை எந்த ஒரு பெண்மணியாவது என்னிடத்தில் கேட்டுவிட முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். எனக்கே விநோதமாக இருந்தது.
சரி ஓட்டல்காரர்கள் அளித்த துன்புறுத்தும் படலத்திற்கு வருவோம்.
நான் சொன்னேன். “தொடர்ந்து ஓய்வே இல்லாமல் பயணித்து இங்கு வந்திருக்கிறேன். நீட்டி நிமிர ஆசைதான். ஆனால் இந்த பகல் பொழுதைத் தூங்கிக் கழிக்க விரும்பவில்லை. அறையில் செட்டில் ஆகி, குளித்து உடைமாற்றி ஒரு குட்டித் தூக்கம் போட்டு ஒரு மணி நேரத்தில் தயாராகிவிடுவேன். எனவே இன்னும் ஒரு மணி நேரத்தில் வரவேற்பறையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.”
”என்னது இத்தனைக்கும் ஒரு மணி நேரமா? போதுமா?”
”போதும்”
”அதெப்படி சில நிமிடங்கள் மட்டும் தூங்கி எழ முடியும்? அப்படியே நீங்கள் உறங்கிவிட்டால்.”
“என்னிடம் டைமர் என்ற கடிகாரம் உள்ளது. அதில் இருபது நிமிடங்களை மட்டும் செட் செய்து தட்டிவிட்டால் சரியாக இருபதாவது நிமிடம் நம்மை எழுப்பிவிடும்.”
“இருபது நிமிட உறக்கம் போதுமா?”
“எனக்குப் போதும்.”
“டைமருக்கும் அலாரம் கடிகாரத்திற்கும் என்ன வேறுபாடு?” என்றார் டோனா ரீ ஆர்வம் அடங்காமல்.
“டைமரில் துல்லியமாக உதாரணமாக 21 நிமிட அலாரம்கூட வைக்க முடியும். சாதாரண கடிகாரத்தில் இவ்வளவு துல்லியம் சாத்தியமில்லை!”
“அந்த டைமரை நான் பார்க்க வேண்டும்.”
“மறுபடி உங்களைச் சந்திக்கும்போது பார்க்கலாம்.”
டோனா ரீ நம்ப முடியாமல் நிமிர்ந்தார். இந்த இந்தியா ஆசாமி கதைவிடுகிறார். நிச்சயம் ஏகமாய்த் தூங்கி நம்மைக் காக்க வைக்கப் போகிறார் என்பதை இவரது நம்பிக்கையற்ற முகம் பட்டவர்த்தனமாய் எனக்குச் சொல்லிற்று.
“பார்ப்போம் ஒரு மணி நேரத்தில்” என என் அறையை நோக்கி நகர்ந்தேன்.
டோனா ரீ காத்திருப்பாரோ வேறு எங்கும் போய் வருவாரோ அது பற்றி எனக்கு அதிக அக்கறை இல்லாதிருந்தது. நானும் அறைக்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறேனே என்று சொல்லிவிடக் கூடாது என்பதே என் பயம்.
அவ்வாறு டோனா ரீ சொல்லவில்லை. கண்ணியமான பெண்மணிதான்.
பெட்டிகளைப் பிரித்தேன். மேக்கப் சாமான்கள், உடைகள், எழுத்துப் பணிகள், படிக்க வேண்டியவை. எலக்ட்ரானிக் சாதனங்கள் என்று அனைத்தையும் அறை முழுக்கக் கடைபரப்பினேன். ஏதோ இங்கேயே நாள்பட வசிக்கப் போகிறவன் போல!
டைமரைத் தட்டி 20 நிமிடமாக்கினேன். அதையும் தூக்கக் கலக்கத்தில் அமர்த்திவிட்டுத் தொடர்ந்து தூங்கிவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பெரிய அறையின் வெகு மூலையில் வைத்தேன்.
ஸ்கிரீன்களை இழுத்துவிட்டுப் பகலை இரவாக்கினேன்.
சரியாக டைமர் தன் கடமையைச் செய்ய 20ஆவது நிமிடம் எழுந்து விடுவிடுவெனத் தயாரானேன். 58ஆவது நிமிடம் வரவேற்பறையை நோக்கி நடந்தால்
டோனா ரீ, ஓட்டல் வாசலில் ஓடும் மெக்காங் ஆற்றைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டு ஏதோ படித்துக் கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும் கடிகாரத்தைப் பார்த்து “நான் உங்களோடு இருக்கும்வரை இனிமேல் கடிகாரமே கட்டவேண்டாமென்று பார்க்கிறேன்.”
“புரியவில்லை என்ன சொல்கிறீர்கள்?” என்றேன் புரிந்தும்வேண்டுமென்றே.
“நீங்கள் ஒரு நேரம் சொன்னால் அதன்படி நடக்கிறீர்கள் என்கிறேன்.”
“மகிழ்ச்சி. போகலாமா?”
“எங்கள் நாட்டு டீ சர்ட்டில் நீங்கள் இளைஞராகவே ஆகிவிட்டீர்கள்.”
“நன்றி. அது என் தேர்வில் உள்ளது. லாவேஸ் டீ சர்ட் என்பதால் மட்டுமல்ல” என்றேன் சிரித்தபடி.
“ஏற்கிறேன்.”
“லாவோசைப்பற்றி ஏதாவது சொல்லுங்கள். நாம் இப்போது எங்கு போகிறோம்?”
“லியான்டியானில் பார்ப்பதற்கென்று பெரிதான இடங்கள் என ஒன்றும் இல்லை. இங்கு வருபவர்கள் இங்கு உள்ள பாதுகாப்பான அமைதியான சூழ்நிலைக்காகவே வருகிறார்கள். ஓட்டல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”
“பிடித்திருக்கிறது. மெக்காங் ஆற்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சீனாவில் தோன்றி பல நாடுகளைக் கலந்து தெற்கே வெகு தூரம் ஓடிக் கடலில் கலக்கும் வற்றாத ஜீவ நதி. இதன் கரையில் ஓட்டல் அமைந்திருப்பதால் மிகப் பிடித்திருக்கிறது.
“ஓட்டலின் மறு கரையில் தெரிவது தாய்லாந்து.”
“அப்படியா?”
“ஆமாம்.”
“ஓர் ஆற்றின் அகலத்தில்தான் இதன் இருவேறு கரைகளில்தான் எவ்வளவு வேறுபாடுகள்!”
“என்ன வேறுபாடுகள் என்கிறீர்கள்?”
“லாவோஸ் மக்கள் கலாசாரத்தில் ஊறித் திளைப்பவர்கள் தாய்லாந்து பற்றி என் வாயைக் கிளறாதீர்கள்!”
“எனக்கே ஓரளவு தெரியும். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் ஆசை.”
“வேண்டாம்”.
“சரி.”
“இந்தப் பயணத்தில் நான் கம்போடிய லாவோஸ், வியட்நாம், ஹாங்காங் என்று நான்கு நாடுகளை வலம் வருகிறேன். இதில் தாய்லாந்தையும் சேர்த்துக் கொள்ள விருப்பம். ஆற்றைக் கடந்து தாய்லாந்து போகலாமா?”
“சற்றுத் தூரம் போனால் லவோசையும் தாய்லாந்தையும் இணைக்கும் பாலம் வரும் போகலாம். ஆனால் லாவேஸ் மக்கள் விசா இல்லாமல் போகலாம். நீங்கள் போக முடியாது.”
“ஏன்? போய் வாங்கிக் கொள்ளும் ஸ்பாட் விசாதானே தாய்லாந்திற்கு?”
“நாங்கள் விசா இல்லாமல் போவதால் வருவதால் இந்தியர்களுக்கு என என்ன விதி என்று தெரியாது. நாங்கள் நினைத்தால் காய்கறி வாங்கக் கூட தாய்லாந்திற்குப் போவோம்.”
டோனா ரீ பேச்சைத் திசை திருப்பியதற்கும், என்னைத் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்ததற்கும் ஏதேனும் சிறப்புக் காரணம் இருக்கும் என என் மனம் சிந்திக்க ஆரம்பித்தது.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































