மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
பிரான்மலை சிவன் கோயில் தலவிருட்சம் சாமை அரிசி (தினை)
(PANICUM ITALICUM)
சாமை அரிசி என்று மக்களால் போற்றப்படும் ஒரு தானிய வகைதான் தினை என்றும் அழைக்கப்படுகிறது. தொன்றுதொட்டு, மக்களால் அதிகளவில் விரும்பி, வரவேற்கப்பட்ட பலவகையான மூலிகைகள் நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக முக்கியத்துவம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது.
தமிழகத்தின் பல கோயில்களில் பலவகையான மரங்கள் தரவிருட்சமாக வணங்கப்படுகிறது. உண்மையில், இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய பொக்கிஷமாகும். மூலிகை மரங்களின் மருத்துவ குணங்களை அறிந்த அந்தக் காலத்திய மக்கள், அதன் பயன்களை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றைப் புனிதமாக வணங்கப்படும் கோயில்களில் வளர்க்கத் தொடங்கினர். இதனால் அம்மரங்கள் தெய்வீக முக்கியத்துவத்துடன் போற்றி வளர்க்கப்பட்டது. நாளடைவில், இவை தெய்வீக மரங்களாக உருப்பெற்று, மக்கள் மத்தியில் ஆன்மீக அந்தஸ்துடன் போற்றப்படத் தொடங்கியது.
பழங்காலத்தில் இருந்து உருவான இந்த தெய்வீக மரங்கள் பல கோயில்களில் சில முக்கியத்துவத்தின் தொடர்ச்சியாக, மரங்களை தலவிருட்சமாகக் கருதி மக்கள் வணங்குகின்றனர். இதன் மூலம் கொடிய நோய்களுக்கு நிவாரணம் கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.
சின்னஞ்சிறு செடி கொடிகளை முதல் பெரிய பெரிய மரங்கள் வரை மருத்துவ குணங்கள் நிறைந்தவை. புனித மரங்களாக போற்றப்பட்டது. தானிய வகைகளில் தினையும் இவ்வாறு புனிதத்துவம் பெற்றது.
தினை
தினையின் வேறு பெயர்களாக இறடி, ஏனல், கங்கு என அழைக்கப்படுகிறது.
இது இந்தியாவில் பயிராகும் ஒருவகை உணவுப் பொருள் ஆகும். இனிப்புச் சுவை கொண்டது.
உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.
சித்த மருத்துவம்
தினைமா - கஞ்சி - சாதம்
* தினையரிசி - உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் - வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி - வீக்கங்களை ஒழிக்கும்.
* இதன் அரிசியைச் சிலர் சமைத்து உணவாகக் கொள்வர். இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலைக் காக்கும் தன்மையுடையது.
* இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது.
பண்டைக்காலத்திலிருந்தே தினை உணவு தானியமாக பயிரிடப்பட்டு வருகின்றது. இது ஐரோப்பாக் கண்டத்தில் கற்காலத்தில் அறிமுகமானாலும், கிழக்காசிய நாடுகளில் முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.
கி.மு. 2700களிலேயே சீனாவிலும் பின்னர் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவியதாகவும், பின்னர் இந்தியா, ஜப்பான், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் பயிரிடப்படுகின்றன.
இந்தியாவில் மட்டும் ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் தினை உணவு தானியமாக பயிரிடப்படுகிறது.
அமெரிக்கா, மத்திய ஐரோப்பாவில் தீவனப் பயிராகவும், வளர்க்கின்றனர். இது வறட்சியைத தாங்கும் பயிர். இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என்பது கூடுதல் தகவலாகும்.
சத்துக்கள்
ஈரப்பதம் - 11.2%
புரதம் - 12.3%
கொழுப்புச்சத்து - 4.3%
கனிமச்சத்து - 3.3%
நார்ச்சத்து - 8.0%
மாவுச்சத்து - 60.9%
எனவும் உமி 20% வரையிலுமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புரதம்
தினையின் புரதம் கோதுமையின் புரதத்தின் அளவை ஒத்து இருந்தாலும் தரம் கோதுமையின் புரதத்தைவிடக் குறைவாகும். இருப்பினும் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது இந்தக் குறைபாடு நிவர்த்தியாகி விடுகின்றது.
இதனைத் தரம்பிரித்துப் பார்க்கும்போது அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது.
மாவுச் சத்து
மாவுச்சத்து - 60%
ஸ்டார்ச்சு - 55%
சர்க்கரைசத்து - 2% வரை உள்ளன. ஸ்டார்ச்சின் குருனைகள் பல அமைப்புகளில் உள்ளன. சில வட்டமாகவும், சில முக்கோணமாகவும், சில எண்கோணத்திலும் உள்ளன.
கொழுப்புச் சத்து
தினையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது.
* உமியிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயில் பால் மிவுக், ஸ்டீரிக் என்ற நிறைவு பெற்ற கொழுப்பு அமிலங்கள் 10 சதம் வரையிலும் லினோலியரிக் அமிலம் 80% வரையிலும் ஒலியிக் அமிலம் 9% வரையிலும் உள்ளது.
கனிமச் சத்துக்கள்
இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை,கோதுமை,ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.
உயிர் சத்துக்கள்
தினை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும்.
தினையின் பயன்கள்
உமி நீக்கிய தினை உணவாகிறது. இதனை களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சியடைந்தவர்களுக்குக் கொடுக்கின்றார்கள். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர். முளைக்க வைத்த தினையைப் பொரித்து சாப்பிடலாம். மேலும் இதனைக் கோழிகளுக்கும், கூண்டில் வளர்க்கும் பறவைகளுக்கும் கூடத் தீனியாக்கியுள்ளனர்.
தினையின் தாள்
* இதனைக் கால்நடைகளுக்குத் தீவனமாக்குகின்றனர். பூவிடும் பருவத்திலிருந்தும், தானியம் முற்றாமல் இளம் பருவத்தில் இருக்கும் வரை சத்துக்கள் அதிகம் கொண்டிருக்கும்.
* மேலும் இதனை வீடுகளுக்குக் கூரை வேயவும், படுக்கை தயார் செய்யவும் பயன்படுத்துகின்றனர். தானியம் நீக்கிய கதிர், எரி பொருளாகவும், மெத்தை, தலையணை போன்றவை தயாரிக்கவும் பயன்படுகின்றது.
நன்மைகளும் தீமைகளும்
* தினையில் பல நல்ல பயன்கள் இருந்தாலும், ஒரு சில தீய தன்மைகளும் உள்ளன. இது உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும். இதனால் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட காரணமாகிறது.
* இது உவர்ப்புத்தன்மை கொண்டது. சிறுநீர் உற்பத்தியையும் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது.
* முடக்கு வாதத்துக்கு நிவாரணியாகப் பயன்படுகிறது.
* முற்காலத்தில் பிள்ளைப் பேறு நடந்த தாய்மார்களுக்கு வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
* சினை மாடுகள் தினையின் தாளை சாப்பிடும் போது கருக்கலைவதாக தெரியவந்துள்ளது.
* குதிரைகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது. அதிகமாக உண்பதால் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. முட்டிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது ஆராய்ச்சிகள் தெரிவிக்கும் கருத்துகளாகும்.
* குளிர் காலங்களில் தினையை அறுவடை செய்யாமல் தாமதப்படுத்தும் போது தானியத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டபின் அதனை உட்கொள்பவர்களுக்கு ‘டான்சி லைட்ஸ்’ எனும் நோயும் ஏற்படுகின்றது.
தினையைக் கொண்டு சிலவகையான உணவுகள் செய்யப்படுவதை பின்வருமாறு காண்போம்.
திடை அடை
தேவையான பொருட்கள் : வறுத்த தினை மாவு 25 கிராம், வெல்லம் 20 கிராம், வறுத்த கடலை புண்ணாக்குத் தூள் 25 கிராம், டால்டா சில தேக்கரண்டி அளவு.
செய்முறை
எல்லாவற்றையும் வெல்லத்துடன் சேர்த்துப் பிசைந்து கொண்டு சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொண்டு எண்ணெய் தடவிய வாணலியில் ஒவ்வொன்றையும் அடைபோல் தட்டி இரண்டு புறமும் நன்றாக வேகவைத்து சூடு தணிந்த பின் சாப்பிட வேண்டும்.
திணை இட்லி
தேவையானவை : தினை 100 கிராம், கடலைப்பருப்பு 50 கிராம், தேவையான உப்பு.
செய்முறை
தினையையும், கடலைப் பருப்பையும் நன்றாக அரைத்து மாவாக்கி கூழ் பதம் செய்து ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் இட்லிபோல் அவித்துச் சாப்பிடலாம்.
திணைக்கஞ்சி
தேவையானவை : (வறுத்த) தினைமாவு 50 கிராம், (வறுத்த) கடலைப் பிண்ணாக்கு மாவு 25 கிராம், (வறுத்த) மொச்சைப் பருப்பு மாவு 15 கிராம், வெல்லம் 20 கிராம்.
செய்முறை
வெல்லப்பாகு தயாரித்துக் கொண்டு, மாவுகளை நீரில் ஒன்றாகக் கலந்து, நன்கு பிசைந்து வைத்துக்கொண்டு பின்பு அந்தக் கலவையை வெல்லப்பாகுடன் கிளறிக் கொண்டே சேர்க்க வேண்டும்.
பின்னர் சுமார் 25 நிமிடங்கள் வரை அடுப்பில் மேல் வைத்திருந்த பின் இறக்கி, வெதுவெதுப்பான சூட்டில் சாப்பிடலாம்.இவை குறைந்த விலையில் கூடுதலான சத்துணவு பெறும் முறையாகும்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
பிரான்மலை சிவன் கோயில் தலவிருட்சமாக தினை வணங்கப்படுகிறது.
சங்க இலக்கியம்
சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் கூறப்படுவது தினைப்புனமும், தினையும், இதற்கு ‘ஏனல்’ என்று பெயர். இது ஓராண்டுச்செடி. தினையரிசிக்காகப் பயிரிடப்படுவது, மலை மக்கள் தினைமாவில் தேனைச் சேர்த்து சாப்பிடுவர். விருந்தினருக்கும் தருவர். சங்க இலக்கியப் பெயர் ஏனல், தினை ஆகும். தாவரப்பெயர் ‘செட்டேரியா இட்டாலிகா’ வாகும்.
மலைப்பாங்கிலும், சிறு நிலங்களிலும் இது பரவி இருந்தது. அதில் தினை விதைக்கப் பெற்றது. தினையின் தாள் பசுமையானது. இலை நீளமானது. தினைத் தாளின் அடியில் சுற்றிலும் பசிய வேர்கள் பரவி இருக்கும். இதனைக் குருகென்னும் பறவையின் காலுக்கு உவமையாகக் கூறுவர். முற்றிய தினைக்கதிர் வளைந்திருக்கும். கதிரில் பொன்னிற செல்விய தினை விளையும். இவை ஒன்றோடு ஒன்று இணைந்து, பிணைந்து இருக்கும். இதனை யானைக் கன்றுகளின் துதிக்கைகளுக்கு உவமை கூறியுள்ளார். புலவர் பெருங்கெளசிகனார் என்பவர், குறுந்தொகை, நற்றிணை, மலைபடு கடாம், ஐங்குறு நூறு, அகநானூறு, திருமுருகாற்றப்படை, பெரும்பானாற்றுப்படை ஆகிய நூல்களிலும் தினை பற்றி பாடப்பட்டுள்ளது.
தினை அரிசிக்காக பயிரிடப்படுகின்றது. நல்ல உணவுப் பொருள். ஆங்கிலத்தில் இதற்கு “இட்டாலியன் மில்லெட்” எனவும் பெயரிடப்பட்டுள்ளது. சங்கத் தமிழில் தினை விளைவது பலவாறாகக் கூறப்படுகின்றது.
இது தமிழ்நாட்டில் மிகப்பழங் காலந்தொட்டு விளைந்து வருகின்றது என சங்க இலக்கியத் தாவரவகைப் பாட்டியல் நூல்கள் தெரிவிக்கின்றன.
தினைப்புணத்தை மகளிர் காவல் காத்து வந்தனர். பெரிதும் கிளிகள் தினைக் கதிர்களைக் கவர்ந்து உண்ணும்.
மேலும் யானை மேய்ந்து அழிப்பதும் உண்டு. ஆதலால் இதனைக் காப்பதற்கு மலை உச்சியில் ஒரு பரண் அமைப்பர். அவற்றில் இருந்து தட்டை, கவண், தொண்டகச் சிறுபறை முதலியவற்றால் குருவிகளையும், கிளிகளையும் விரட்டுவர்.
யானை, பன்றி முதலியவை தினைப் புனத்தைக் கவர்ந்து அழிக்காமல் அவற்றை விரட்டுவதற்கு பறை ஒலி எழுப்புவதும் உண்டு. முற்றிய தினையை அறுக்கும் போது மகளிர் பாடுவது வழக்கமாகும்.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2010/04/16 பெரம்பலூர் பொய்யாத நல்லூர் கோதண்ட ராமசாமி விஷ்ணு கோவில் தலவிருட்சம் சந்தன மரம்
2010/03/26 தஞ்சை திருச்சேரையூர் ஸ்ரீசாரங்கபாணி விஷ்ணு கோவில் தலவிருட்சம் சங்கு புஷ்பம்
2010/03/19 திருச்சாய்க்காடு சாயாவனேசுவரர் கோயில் தலவிருட்சம் கோரைக்கிழங்கு
2010/03/12 வெண்குஷ்டத்தைக் குணமாக்கும் கொட்டை பூவரசன் மரம்
2010/03/06 குத்தாலம் சிவன்கோயில் தலவிருட்சம் கூதாளி
2010/02/26 திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சம் கூந்தற் பாக்கு மரம்
2010/02/19 கும்பகோணம் கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம் கூந்தப்பனை
2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்
2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்
2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்
2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்
2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்
2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி
2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி
2009/12/25 ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்
2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்
2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி
2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு
2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு
2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்
2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்
2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்
2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)
2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்
2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை
2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி
2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை
2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்
2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்
2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்
2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்
2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
Most Commented Posts































