வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
“இது அடுக்கவே அடுக்காது!”
கம்போடியா போன்ற பின் தங்கிய நாடுகளில் கூட சாலைப் போக்குவரத்தில் நடக்கும் குளறுபடிகளில் மனிதர்களிடையே காக்கப்படும் வார்த்தை நாகரிகம் உண்மையில் வியக்கத் தோன்றுகிறது.
மனிதன் குறைபாடுகளை உடையவன்; சாலைகளில் கவனக் குறைவால் ஏற்படும் தவறுகள். இதற்காக அவனைக் கேவலப்படுத்தக்கூடாது. வீணே கோபப்பட்டு நிதானத்தை இழக்கக்கூடாது. எவ்விதத் தவறுக்கும் சட்டம் மூலமாகத் தீர்வு இருக்கிறது. காவல்துறை வழியே அது செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் கம்போடிய மக்கள் தெளிவாகவும் தீர்மானமாகவும் இருக்கிறார்கள்.
நான் பார்த்த ஒரு மோசமான சாலை விபத்தில்கூட, இரு வாகன உரிமையாளர்களும் என்ன செய்யலாம் என்று இடுப்பில் கைகளை வைத்தபடி அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு மகா ஆச்சரியத்தைக் தந்தது.
கடுமையான வார்த்தைகளோ, கைகலப்போ இன்றி எவ்வளவு நாகரிகமாக நடந்துகொள்கிறார்கள் தெரியுமா?
ஊருக்குப் புதுசா நான் ஓர் இடத்தில் வழியை மறித்துக் கொண்டு நிற்க, ஒரு ரிக்ஷாக்காரர், “நீங்கள் பாதையில் நிற்கிறீர்கள்!” என்று தம் பூச்சிப் பற்கள் தெரிய மிக நாகரிகமாக சிரித்தப்படி சொன்னதை மறக்க இயலாது. சாமானியத்தில் டென்ஷன் அடையாத இவர்களுக்கு நிச்சயம் ஆயுள் அதிகம் என்று நினைத்துக் கொண்டேன்.
நான் கம்போடியாவிலிருந்து புறப்பட்டு லாவோஸ் நாட்டிற்குச் செல்லவேண்டிய தினம் வந்தது.
சிவா வந்து வழியனுப்பி வைத்தார். தமிழர்களை அதிகம் காணமுடியாத கம்போடியாவில் என்னை உபசரிக்கவே வியட்நாமிலிருந்து வந்த சிவா மறக்க முடியாதவர்.
கம்போடியாவில் தனக்கென்று சிறு தொழில் தொடர்பான பணிகள் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் என்னை வழியனுப்பிய பிறகுதான் எடுத்துக்கொள்வேன் என்பதில் இவர் காட்டிய உறுதி என்னை வியக்க வைத்தது. சியாம் ரியாப் விமான நிலையம் எனக்கு ஒரு சிறு அதிர்ச்சியை வெளிப்படுத்தக் காத்திருந்தது.
டிக்கெட் பாஸ்போர்ட்டைக் காட்டி போர்டிங் பாஸ் கூட வாங்கியாயிற்று. உள்ளே நுழையலாம் என்று பார்த்தால் ‘20 டாலர் செலுத்திய இரசீது எங்கே? அது வேண்டும்’ என்றார் பாதுகாப்பு அதிகாரி.
“வந்து இறங்கிய அன்றே செலுத்திவிட்டேன் இங்கே பாருங்கள்” என்று பாஸ்போர்ட்டில் அடையாளம் காட்டிய போது,
“அது வந்து இறங்கியதற்கு, இப்போது புறப்படுவதற்கும் கட்ட வேண்டும்.”
எல்லா நாடுகளிலும் நான் அறிந்தவரை ஒருமுறைதான் இத்தகைய கட்டணம். புறப்படும் போதுமா கட்டணும்?
“ஆமாமா! கட்டினால்தான் உள்ளே விடுவேன்”
‘இது ரொம்ப அநியாயம்” என்றது மனது.
கட்டிவிட்டு, இரசீதைக் காட்டிவிட்டுத் தான் புறப்பட முடிந்தது.
விமானம் புறப்பட நேரம் இருந்ததால் வயிற்றை நிரப்ப ஏதும் உணவகம் இருக்கிறதா எனத் தேடினேன்.
நான் விரும்புகிற மாதிரி இரண்டுதான் இருந்தன. ஆரஞ்சுப் பழங்களும் ஆப்பிள்களும்.
“சாறாக்கித் தருவீர்களா?”
“இல்லை. அப்படியே தருவோம்” என்றார்கள்.
விலை மிரட்டலாக இருந்த போதும் பசியே வென்றது.
நான் இப்போது பறக்க ஆரம்பித்தது வியட்நாம் ஏர்லைன்ஸ் மூலம் வியான் டியனுக்கு வியான்டியன் லாவோஸ் நாட்டின் தலைநகர். இதற்கு நேரடியாக சியாம் ரியாப்பிலிருந்து விமானம் கிடையாது.
வியட்நாமிய நகரான ஹனாய்க்குச் சென்றுதான் செல்ல முடியும்.
சியாம் ரியாப்பும் வியான் டியனும் மிகப் பக்கம். 40 நிமிடம் கூடப் பறக்க வேண்டியிருக்காது. ஆனால் ஒரு மணி நேரம் ஹனாய்க்குப் பறந்து திரும்பக் கீழே இறங்கி அங்கிருந்து ஒன்றரை மணி நேரம் வியான்டியானுக்குப் பறக்க வேண்டும்.
ஏன் இந்த கிறுக்குத்தனமான பயணம் என்று விசாரித்த போது சியாம் ரியாப் வியான்டியானுக்கு நேரடி விமானச் சேவை இல்லை என்றார்கள்.
இதில் பெரிய சோதனை என்றால் மறுபடி ஏகப்பட்ட சம்பிரதாயங்கள்; பாதுகாப்புச் சோதனைகள்; மருத்துவப் பரிசோதனைகள்; காத்திருப்புகள். படு போர்! லாவோஸ் எங்கிருக்கிறது என்று எவரை வேண்டுமானாலும் கேளுங்கள். பெரும்பாலும் பேபே என்பார்கள். அல்லது திருதிரு என்று விழிப்பார்கள்.
லாவோஸை நம் மக்கள் அதிகம் அறிந்திராமல் இருப்பது நம்மவர்களின் குறையா? அல்லது இந்த நாடு பிரபலமடையாதது இந்நாட்டு மக்களின் குறையா? உங்கள் விவாதத்திற்கே விட்டு விடுகிறேன்.
வியட்நாம், தாய்லாந்து, பர்மா, கம்போடியா ஆகியவற்றிற்கு நடுவே இந்த நாடு அடங்கி ஒடுங்கி இருக்கிறது.
2,36,000 சதுர கிலோ மீட்டர்களைக் கொண்ட இந்த நாட்டில் 60 இலட்சம் மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.
லாவோஸ் நாட்டில் நுழைபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? என்று சிவாவிடம் கேட்டு வைத்துக் கொண்டேன்.
‘போட்டோ எடுக்குமுன் ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு நபரிடமும் அனுமதி பெறுங்கள்” என்றார்.
“ஏன்?”
“அதென்னவோ தெரியவில்லை. அப்படி ஒரு விதி அங்கு உண்டு.”
“ஏதடா இது புதிதாக இருக்கிறது!”
“என்னது?”
“சார் உங்களைச் சொல்லவில்லை, எனக்குள் எழுந்த வியப்பை அடக்கமாட்டாமல் சொன்னேன். அப்புறம்?”
“உட்கார்ந்திருக்கும்போது எதிர் நாற்காலியில் கால்களைப் போடாதீர்கள்.”
“என்னங்க இது அநியாயமாக இருக்கு! இது கூடவா தப்பு?”
“அங்கு அப்படித்தான்.”
“ஏனாம்?”
“அவனுக்கே வெளிச்சம்!”
‘எவனுக்கு?”
“லாவோக்காரனுக்கு என்றோ ஆண்டவனுக்கு என்றோ வைத்துக்கொள்ளுங்கள்.”
“என்னங்க இது! பெரிய கூத்தா இருக்கே! இன்னும் வேறு என்ன இருக்கு?”
“சொல்றேன்.”
“நிறைய இருக்கோ?”
“கொஞ்ச தான்.”
“சொல்லுங்க”
“எந்தக் காரணம் கொண்டும் பிறர் மீது உங்கள் கால் பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.”
“பார்த்துப்பேன். தப்பித் தவறி பட்டு விட்டால்?”
“டின்னு கட்டிடுவானுங்க!”
“ஐயோ!”
“ஆமா”
“பிறகு?”
“எங்கே நுழைந்தாலும் (வீடு, கோயில்) செருப்பைக் கழற்றி வச்சுட்டு உள்ளே போங்க.”
“இது சரிதான் நம்ம ஊரிலேயே இந்தப் பழக்கம் உண்டே.”
“காலை ஏன் இவ்வளவு கேவலமாக நினைக்கிறாங்க?”
“ஒவ்வோர் ஊரிலேயும் ஒரு பழக்கம்.”
“நல்லவேளை எச்சரிச்சீங்க, கவனமா இருப்பேன்.”
இந்ந உரையாடலை நினைவிற்குக் கொண்டு வந்தபடி லியான்டியான் விமான நிலையத்திற்குள் நுழைந்தேன்.
இந்த விமான நிலையத்தில் நுழைந்ததும் மூன்று பேர் வரிசையாக அமர்ந்திருந்தார்க்ள. மற்ற நாடுகளுக்கெல்லாம் 20 டாலர்கள். அமெரிக்கர்களுக்கு, ஆஸ்திரேலியர்களுக்கு, ஐரோப்பியர்களுக்கு, இந்தியர்களுக்கு மட்டும் 10 டாலர்கள் நுழைவுக் கட்டணம்.
‘அட! இந்தியர்களுக்கு என்ன உயர்வு! என்ன உயர்வு!’ மறு கேள்வி கேளாமல் ஒழுங்காக மரியாதையாக 40 டாலர் கட்டிவிட்டு வியான்டியன் விமான நிலையத்தை விட்டு வெளியேறி என்னை வரவேற்கக் காத்திருந்த டோனா ரீ யைத் தேடினேன். டோனா ரீ? ஆமாம். லாவோசில் நான் தங்கயிருக்கும் நாள்களில் என்னுடனேயே இருக்கப் போகும் நடுத்தரப் வயதுப் பெண்மணி தொழில் ரீதியான வழிகாட்டி (கெய்டு) இவர்.
“ஐயோ அநியாயம்! அநியாயம். லேனா! உங்களுக்கு இது அடுக்கவே அடுக்காது” என்கிறீர்களா?
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































