மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
காஞ்சி அச்சிறு பாக்கம் ஆட்சி ஈஸ்வரர்
சிவன் கோவில் தலவிருட்சம்
சரக்கொன்றைப் புளியமரம்
கொன்றை
CASSIA FISTULA, LINN, CAESALPINIACEAE
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல் :
பொன்னினார் கொன்றை
யிருவடங்கிடந்து பொறிகிளர்
பூணநூல் புரள
மின்னினார் உருவின் மிளிர்வதோர்
அரவம் மேவுவெண்ணீ
றுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க் கறம்அமர்ந்
தருளித் தொன்மையார் தோற்ற
முங்கேடும்
பன்னினார் போலும் பந்தணை
நல்லூர் நின்றயெம் பகபதியாரே.
இன்றைய உலகில் வாய்ப்புண், தொண்டைப்புண், நுரையீரல் புண், வாய்ப்புண் நோய், தொண்டைப் புற்றுநோய் என அதிகமாகக் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் பற்கள், ஈறுகள், தொண்டை, நுரையீரல், இன்ஃபெக்ஷன் ஏற்பட்டால் ஆண்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடுவார்கள். நாளடைவில் அடிக்கடி புண் ஏற்பட்டு அது புற்றுநோயாக மாறிவிடுகிறது. இந்தக் கொடிய நோயைத் தடுக்கும் சக்தி சரக்கொன்றை மரத்துக்கு இருக்கின்றது.
கொடிய நோய்களில் இருந்து விடுபட பழங்கால மக்கள் சரக்கொன்றைப் புளிய மரத்தைக் கோவில்களில் வைத்து தெய்வத்துடன் சேர்த்து வணங்கத் தொடங்கினார்கள். அத்துடன், இம்மரத்தின் காயில் உள்ள உட்பகுதியையும், மேல் தோலையும், வாய் கொப்பளிக்கும் மருந்தாகவும், வயிற்றுக்கு லேகியமாகவும் பயன்படுத்தத் தொடங்கினார்கள், யுனானி மருத்துவர்களும், சித்தா மருத்துவர்களும் சரக்கொன்றை புளியை மருந்தாகத் தயாரித்து பல நூற்றாண்டுகளாகக் கொடுத்து வருகின்றனர்.
வாசகர்கள், மருத்துவர்கள் இதன் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளும் வகையில், திராவிட கலாச்சாரத்திலும், ஆசிய கலாச்சாரத்திலும், அரேபிய பழக்கத்திலும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
‘நிலத்துக்குள் என்றைக்கும் வாடாத இன்ற மலர்க் கொம்பே’ என அகத்தியரால் பாராட்டப்பட்ட மரமே சரக்கொன்றை, இருக்கும் இடமெல்லாம் அழகைச் சொரியும். வலுவான மரத்தைத் தரும். மருத்துவ சக்தியுள்ள குல்கந்து தயாரிக்க பூக்கள் தரும் மரமாகும்.
“காசியாஃபிஸ்டுலா” என்னும் அறிவியல் பெயரோடு “சிசால் பினியேசி” என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. மும்பாயில் இருபுறமும் சரக்கொன்றை மரங்களுடைய சாலைக்கு ‘லெபர்ணம் சாலை’ என்ற பெயர் இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச், ஏப்ரல் மாதங்களில பூக்கத் தொடங்கும்.
சித்த மருத்துவம்
இலைக்கொழுந்து : இதனை அரைத்து சாறு எடுத்து சர்க்கரையுடன் உட்கொண்டால், உடலிலுள்ள கிருமி, திமிர்பூச்சி ஆகியவை மலத்துடன் வெளியேறும்.
இலை : துவையல் செய்தும் உண்ணலாம், கடைந்தும் சாப்பிடலாம். அரைத்துப் படர் தாமரைக்குப் பூசலாம். சேராங்கொட்டைப் பாலால் ஏற்படும் நமைச்சலுக்கு இதன் இலைச்சாற்றைப் பூசலாம், கீல்வாதம் மற்றும் முகத்தில் வலிப்பு உள்ள இடங்களில் இலையைத் தேய்க்கலாம். மூளைக்காய்ச்சலுக்கு கூட பயன்படுகின்றது.
பூ : பூவுக்கு புழுக்கொல்லும் திறன் உள்ளது. பூவைத் தனியாகவோ அல்லது இலைக் கொழுந்துடனோ அரைத்து, பாலில் கலந்து உட்கொண்டால் வெள்ளை, வெட்டை, பாண்டு, காமாலை நோய்கள் நீங்கும். பழச்சாற்றுடன் பூவை அரைத்துத் தேய்த்துக் குளித்து வந்தால் தேமல், சொறி, கரப்பான் ஆகியவை குணமாகும்.
பூவைக் குடிநீர் செய்து குடித்தால், வயிற்று வலி, குடலைப்பற்றிய நோய்கள் குணப்படும்.
பூவைப் பாலுடன் காய்ச்சி உட்கொண்டால் உள்ளுறுப்புக்களை வன்மைப்படுத்தும். மெலிந்தோரும் வலிமை பெறுவர். பூவைக் கொண்டு குல்கந்து செய்யலாம். இது சிறந்ததொரு வெப்பமகற்றும் பணியைச் செய்கிறது.
புளி அல்லது கோந்து : மலமிளக்கியாக செயல்படுகிறது. குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், மெலிந்தவர்கள் ஆகிய அனைவருக்கும் மலமிளக்கியாக செயலாற்றுகிறது. மேலும் நிலவாகை அல்லது சிவதைப் பொடியுடன் உபயோகிப்பது நலம். பிசினை குடிநீர் செய்தும் சாப்பிடலாம். உப்பு, சமையல் புளி, மிளகாய், இஞ்சி ஆகியவற்றுடன் இதன் பிசினைத் துவையல் செய்தும் உட்கொள்ளலாம். மிளகு நீராகவும் செய்து குடிக்கலாம்
சீழ்பிடிப்பு மற்றும் இதர பிடிப்புகளுக்கு நீரில் அரைத்துக் கொதிக்க வைத்துப் பூசலாம். குழந்தைகளில் வயிற்றுப் பொருமல் நீங்கிட தொப்புளைச் சுற்றிப் பற்றிடலாம். பிற மருந்துச் சரக்குடன் சேர்த்து அடிவயிற்றில் பற்றிடலாம். வயிற்று வலி, வயிற்றுக்கடுப்பு, வாய்க் குமட்டல் ஆகியவற்றைக் குணப்படுத்த பிற மருந்துகளுடன் கலந்து கொடுக்கலாம். அராபிய வைத்திய நூல்களில் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு ஆகியவற்றிற்கு உபயோகிக்கலாம் என்னும் குறிப்பு உள்ளது.
மரப்பட்டை : அஜீரணத்தைப் போக்கும், பட்டையையும், இலையையும் எண்ணெய் விட்டு அரைத்துப் பூசினால், புண்ணால் ஏற்படும் கை, கால் சில்லிடல் கட்டி, படர்தாமரை ஆகியவை நீங்கும்.
வேர்ப்பட்டை : நீர்மலம் போக்கும், உரமாக்கும், வெப்பமகற்றும் பண்புகள் உள்ளன. வண்டுக்கடி, தேமல், சொறி போக்கும். அதிக பேதியை உண்டாக்கும்.
பிற செய்திகள் : பாளைப் பகுதிகளில் தோப்பாகவே கூட நட்டு வளர்க்கலாம். காற்றுத் தடுப்பு மரம் ஆடு மாடுகளின் தொல்லை இவற்றுக்கு இல்லை. சாலை ஓரமாக நட இம்மரம் மிகவும் ஏற்றது.
யுனானி மருத்துவம்
இது ஒரு மரமாகும். இதில் நீளமான காய்கள் இருக்கும். பழம் முற்றிய நிலையில் சதைப்பகுதி கருப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும. இது “மக்ஸே அமல் தாஸ்” மற்றும் “மக்ஸேபுளுஸ்கியார் ஷம்பர்” என்ற பெயரில் புகழ்பெற்றதாகும்.
இயல்பு : உஷ்ணம் - 1, ஈரம் - 1 தன்மை கொண்டது.
பயன்படுதம் உறுப்புகள் : காயின் மேல்தோல் மற்றும் சதைப்பகுதி.
பண்புகளும் பயன்களும் : பொருத்தமான மருந்துகளுடன் கலந்து பேதி மருந்தாகப் பயன்படுகிறது. இதன் துவையலைத் தயார் செய்து இருமல், ஆஸ்துமா, மார்பு வலி போக்கப் பயன்படுத்துவார்கள். இதிலிருந்து செய்யப்படும் களிம்புக் கட்டிகளைக் கரைப்பதற்கும், மூட்டுவலி, பின் தொடை நரம்பு வலிகளைப் போக்கவும் பயன்படுகிறது.
மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், ஜுரங்களுக்கும் பயன்படுகிறது. இதன் சாற்றைப் பாலுடன் கலந்து கஷாயம் தயார் செய்து தொண்டை நோய்க்குப் பயன்படுத்துகிறார்கள்.
இதன் பூக்கள் மற்றும் சதைப்பகுதியைக் கொண்டு, குல்கந்து தயாரித்து மலச்சிக்கல் போக்கப் பயன்படுத்துவார்கள். (சதைப் பகுதியைக் கொதிக்க வைத்தால் இதன் சக்தி பலவீனம் அடையும் என்று கூறுப்பட்டுள்ளது).
தீய விளைவுகள் : அதிகளவில் பயன்படுத்தினால் சீதபேதியையும், வயிற்று வலியையும் உண்டாக்கும்.
தீர்க்கும் நோய்கள் : இருமல், ஆஸ்துமா, மார்பு வலி, மூட்டுவலி, பின்தொடை நரம்பு வலி, மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், மலச்சிக்கல்.
சிறப்புக் குறிகள் : பேதியின் மூலம் கரும் பித்தத்தை வெளியேற்றும்.
அனுபானங்கள், பத்தியங்கள் : இத்துடன் மஸ்த கிருமி, அனிசூன் மற்றும் எண்ணெய்ப் பொருட்கள் கலந்து பயன்படுத்த வேண்டும். மாற்று மருந்தாகத் தர்புத் பயன்படுத்தலாம்.
தயாரிக்கப்பட்ட மருந்து : லவூக் கயார்ஷம்பர்.
இயல்பு : உஷ்ணம் - 2, வறட்சி - 2 தன்மை கொண்டது.
பயன்படும் உறுப்பு - மேல் தோல்
பண்புகளும் பயன்களும்
தடைப்பட்ட மாதவிலக்கை வெளியேற்றும். பிறந்த குழந்தையின் மேல் உள்ள திரையை அகற்றும். இதன் மேல்தோல் அதகளவில் மாதவிலக்கு நின்று போவதிலும், வலியுடன் மாதவிலக்கு வெளியேறுதல் போன்ற பிரச்சினைக்குத் தனியாகவோ அல்லது மற்ற பொருத்தமான மருந்துகளுடனோ கலந்து பயன்படுத்தப்படுகிறது. கர்ப்பக் காலத்தில் குழந்தையை வெளியேற்றவும், குழந்தையின் மேல் உள்ள திரையை அகற்றவும் இதன் கஷாயம் பயன்படுகிறது.
தீய விளைவுகள் : அதிகளவில் பயன்படுத்தினால் கருச்சிதைவு உண்டாகும்.
தீர்க்கும் நோய்கள் : மாதவிலக்குப் பிரச்சினைகள்.
சிறப்புக் குறிகள் : தடைப்பட்ட மாதவிலக்கை வெளியேற்றகிறது.
அளவு : 6 கிராம் முதல் 12 கிராம் வரை பயன்படுத்தவும்.
தலவிருட்சம் கொண்ட கோயில்கள்
சென்னை வழிதயநாதர் ஆலயத்திலும், கடலூர் மாவட்டம் திருவடிகை வீரட்டேஸ்வரர் ஆலயத்திலும், திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்திலும், திருக்கோபுரம் மங்களபுரேஸ்வரர் ஆலயத்திலும், திருத்தினை நகர் சிஷ்ட குருநாதர் ஆலயத்திலும், திருமணிக்குளி மாணிக்க புரிஸ்வரர் ஆலயத்திலும், காஞ்சிபுர மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஆட்சி ஈஸ்வரர் சிவன் ஆலயத்திலும், மதுரை மாவட்டம் திருப்பனூர் கொன்றை வேந்தனார் ஆலயத்திலும் நாகப்பட்டின மாவட்டம் திருக்கண்ணர் கோவில் கண்ணாயிரநாதர் ஆலயத்திலும், ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும், திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் பந்தனை நல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திலும், ஆவூரில் பசுபதீஸ்வரர் ஆலயத்திலும் கொன்றை மரம் சிவபெருமானுடன் இணைத்து வணங்கப்படுகிறது.
திருத்துறையூர் என்னும் ஊர் பண்ருட்டியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூர் திருத்தளூர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பசுபதீசுவரர், சிஷ்ட குருநாதஈஸ்வரர், பூங்கோதை நாயகி, சிவலோக நாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கொன்றை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கொன்றை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
திரு. அதிகை விரட்டானம் (PINCODE-607 106) என்னும் ஊர் பண்ருட்டிக்குத் தென்கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு அதிகை வீரட்டநாதர், அதிகை நாயகி, திரிபுரசுந்தரி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் சரக்கொன்றை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
அச்சிறுப்பாக்கம் (PINCODE-603 301) என்னும் ஊர் சென்னை விழுப்புரம் சாலையில் மதராந்தகத்திற்கு அருகில் தெற்கே 90 கி.மீ. தூரத்தில் உள்ளது.
பாக்கபுரேசர், ஆட்சிஸ்வரர், சுந்தரநாயகி, இளங்கிளியம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் சரக்கொன்றை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
ஏமநல்லூர் (PINCODE - 609 804) என்னும் ஊர் திருப்பனந்தாளிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூர் திருலோக்கி என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு சுந்தரேஸ்வரர், அகிலாண்டேசுவரி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் சரக்கொன்றை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
நாகர்கோவில் சுசீந்திரம் தாணுமாலயன் பார்வதி, லஷ்மி, சரஸ்வதி கோயிலில் கொன்றை மரம் தலவிருட்சமாக உள்ளது.
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 6 கி.மீ. தூரத்தில், பழையாற்றின் தீரத்தில் அமைந்துள்ளது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றாக இணைந்து ஒரே உருக்கொண்டு தாணுமால் அயன் எனும் பெயர் கொண்டு பார்வதி லஷ்மி - சரஸ்வதி ஆகிய இறைவியருடன் அற்புதக் காட்சியளித்த தலம் இதுமட்டுமே என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யர் - அகோர மூர்த்தி, நடராஜர் - பிரம்ம வித்யாநாயகி அஷ்டபுஜ துர்க்கை, காளி கோயிலில் தலவிருட்சமாக கொன்றை உள்ளது.
சீர்காழி - பூம்புகார் மார்க்கத்தில் அமைந்துள்ளது. மூன்று வகை சிறப்புடைய கோயில், இது திருவெண்காடு, ஆதி சிதம்பரம் எனவும் அழைக்கப்படுகிறது.
இவ்வூர் வால்மீகி இராமாயணத்தில் இடம்பெற்ற பழமை வாய்ந்தது.
பண்ருட்டி திருத்துறையூர் பசுபதீஸ்வரர் பூங்கோதை நாயகி கோயிலில் கொன்றை தலவிருட்சமாக உள்ளது.
பண்ருட்டியில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. ஆன்மாவைப் பசுவாகவும், இறைவனைப் பதியாகவும் நினைப்பது ஒரு தத்துவம். இந்த தத்துவப்படி இக்கோவிலில் பசுபதீஸ்வரர் போற்றப்படுகிறார்.
திருக்கோலக்கா (PIN CODE-609 110) என்னும் ஊர் சீர்காழி கோவிலுக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. இக்கோவில் திருத்தாளமுடையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு சத்தபுரிநாதர், ஓசை கொடுத்த நாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கொன்றை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கொன்றை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
திருப்பந்தனை நல்லூர் (PINCODE - 609 807) என்னும் ஊர் குற்றாலத்திற்கு வடமேற்கே 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு பசுபதிநாதர், காம்பன தோளிம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் சரக்கொன்றை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
திருப்பத்தூர் (PIN CODE-623 211) என்னும் ஊர் காரைக்குடியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு திருத்தளிநாதர், புத்தூர் ஈசர், சிவகாமியம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் சரக்கொன்றை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
திருஅஞ்சைக்களம் (PIN CODE-680 664) என்னும் ஊர் தென்கிழக்கே 10 கி.மீ. தொலைவிற்குச் சென்றால் கருவப்பட்டை என்னும் ஊர் உள்ளது. அங்கிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூர் ஸ்ரீவாஞ்சிக்குளம் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு அஞ்சைக்களத்தப்பர், மகாதேவர், உமையம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் சரக்கொன்றை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
திருக்கண்ணார் கோவில் (PIN CODE-609 117) என்னும் ஊர் வைத்தீசுவரன் கோவிலுக்குத் தென்கிழக்கில் 2-1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூர் குறுமாணக்குடி என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு கணணாயிரநாதர் முருகுவளர் கோதை நாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் சரக்கொன்றை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
திருவெண்காடு (PINCODE - 608 114) என்னும் ஊர் சீர்காழிக்குத் தென்கிழக்கில் 11 கி.மீ. தொலைவிலும், வைத்தீஸ்வரர் கோவிலுக்குக் கிழக்கில் 11 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
இங்கு சுவேதாரணியேச்சுரர், பிரம வித்தியாநாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் வில்வம், கொன்றை, வட ஆலயம் மரமாகும். இங்கு தெய்வத்துடன் வில்வம், கொன்றை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
திருமாணிகுழி (PIN CODE-607 401) என்னும் ஊர் கடலூரிலிருந்து மேற்கே 4 கி.மீ. தொலைவில் சென்று திருவகீந்திரபுரம் என்னும் திருமால் திருவூரின் வழியாக 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இங்கு மாணிக்கவரதர், வாமனபுரீஸ்வரர், மாணிக்கவல்லி, அம்புஜாட்சி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கொன்றை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் சரக்கொன்றை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
திருத்தனிநகர் (PIN CODE-608 801) என்னும் ஊர் சிதம்பரம் சாலையில் 10 கி.மீ. தூரத்தில் ஆலம்பாக்கம் புதுச்சத்திரம் To மேட்டுப் பாளையம் ஸ்டாப்பில் இறங்கி 5 கி.மீ. தொலைவிற்கு சென்று தானூரை அடைந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூர் தீர்த்தனகிரி என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு சிவக்கொழுந்தீசர், நந்தீசுவரர், ஒப்பிலா நாயகி, இளங்கொம்பன்னாள், கருந்தடங்கன்னி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கொன்றை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கொன்றை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
திருத்துறையூர், திருப்பந்தனை நல்லூர், திருஅச்சிறுப்பாக்கம், திருக்கோவலூர் முதலிய 15க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் தலவிருட்சமாகக் கொன்றை வணங்கப்படுகிறது. வன்னிக்கு அடுத்தபடியாக அதிகமான கோவில்களில் கொன்றை தலவிருட்சமாக அமைந்துள்ளது.
சங்க இலக்கியம்
கொன்றையைத் ‘தூங்கிணர்க் கொன்றை’ என்றார் கபிலர். தொங்குகின்ற இயல்பை உடைய இதன் நீண்ட பூங்கொத்தை மேல் நோக்கி வளைத்துக் கட்டி வைத்தாலும் இதன் இணர் திரும்பத் திரும்ப கீழ்நோக்கியே வளரும். இதற்கு சரக்கொன்றை என்ற பெயரும் உண்டு. கொன்றை மரம் சிறியது. மலர்களில் பொன் நிறமான மஞ்சள் இதழ்கள் உள்ளன. பூத்த நிலையில் இம்மரம் ஆழமாக இருக்கும். இது கார்காலத்தில் பூக்கும்.
சங்க இலக்கியப் பெயராக கொன்றை எனவும், இலக்கியத்தில் வேறு பெயராக கடுக்கை எனவும், பிற்கால இலக்கிய பெயராக இதழி, தாமம், மதலை, ஆர்க்குவதம் எனவும், உலக வழக்கு பெயராக சரக்கொன்றை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மரம் முல்லை நிலத்தைச் சார்ந்தது. சங்கத் தமிழில் கொன்றை மலரைப் பொன்மலராகப் பேசும் மரபு மிகுந்து காணப்படுகிறது.
கொன்றை மலர் சிவபெருமானுக்கு உரியதாக்கப்பட்டது. சில பரம்பொருளுக்குரிய பூக்களில் கொன்றையே முதலிடம் பெற்றது. சங்க இலக்கியத்தில் சிவபெருமானை வாழ்த்தும் பாடல்களில் எல்லாம் சிவன் கொன்றை மலரை கண்ணியாகவும், தாராகவும், மாலையாகவும், சூடியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சிவனைக் கொன்றை வேய்ந்தான் என்பர்.
“கொன்றை வேய்ந்த செல்வன் இணையடி” என தொல்காப்பியமும் விளக்குகிறது.
பாரதக் கதையில், எதிரிகளால் சூழப்பட்டு நிற்கும் அபிமன்யுவிற்காக வீமன் புகுந்தான். அவனைத் தடுக்க நினைத்த சயத்திரதன் சிவனிடத்துப் பெற்ற கொன்றையை வீமன் எதிரே ஏவினான். வீமன், அம்மாலையைக் கண்ட அளவில் கை தொழுது வீழ்ந்தான். இது கண்ட திட்டதுய்மன் வீமனைப் பழித்தான். அதற்கு வீமன் அம்மாலையின் பெருமையைப் பேசுகின்றான்.
“எங்கள் குடிபிறந்தார் எல்லாம் இறந்தாலும், சங்கரன் நம் மாலைதனைக் கடவோம்” என்று இலக்கிய நூல்கள் விளக்குகின்றன.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2010/03/26 தஞ்சை திருச்சேரையூர் ஸ்ரீசாரங்கபாணி விஷ்ணு கோவில் தலவிருட்சம் சங்கு புஷ்பம்
2010/03/19 திருச்சாய்க்காடு சாயாவனேசுவரர் கோயில் தலவிருட்சம் கோரைக்கிழங்கு
2010/03/12 வெண்குஷ்டத்தைக் குணமாக்கும் கொட்டை பூவரசன் மரம்
2010/03/06 குத்தாலம் சிவன்கோயில் தலவிருட்சம் கூதாளி
2010/02/26 திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சம் கூந்தற் பாக்கு மரம்
2010/02/19 கும்பகோணம் கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம் கூந்தப்பனை
2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்
2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்
2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்
2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்
2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்
2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி
2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி
2009/12/25 ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்
2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்
2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி
2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு
2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு
2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்
2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்
2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்
2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)
2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்
2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை
2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி
2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை
2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்
2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்
2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்
2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்
2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
Most Commented Posts
































April 15th, 2011 at 5:34 am
If you can show the picture of the plant it will be help full to identify the plant it may be more helpful with this information