Posted on Friday 30 April 2010
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
நான் தாய்லாந்தை எட்டிப் பார்ப்பதில் இந்த டோனா ரீக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்?
நேரம் வீண்; பெட்ரோல் செலவு என்று யோசிக்கிறாரா? லாவோசைக் காட்டத்தானே ஒப்பந்தம் பேசினோம்? தாய்லாந்து எப்படி இதனுள் வரும் என்று யோசித்திருப்பாரா? பிடிபடவே இல்லை.
இந்தப் பதிலில் எனக்கு ஏமாற்றம் ஏதும் பெரிதாக ஏற்படவில்லை என்று சொல்லலாம். காரணம், தாய்லாந்து நான் ஏற்கெனவே பார்த்த நாடுதான். இவ்வளவு அருகே இருக்கிறோமே; நம் ஜம்போ பாஸ் போர்ட்டில்தான் ஏகப்பட்ட பக்கங்கள் இருக்கின்றனவே அதில் ஒரு பக்கத்தைத் தாய்லாந்து முத்திரையால் நிரப்பினால் என்ன என்று தோன்றியதன் விளைவே தாய்லாந்தை எட்டிப் பார்க்கும் ஆசை.
இன்னொரு துணைக் காரணமும் தாய்லாந்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு நாட்டிற்கும் எனப் பன்முகங்கள் உண்டு. ஒரு நாட்டின் ஒரு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு அந்த நாட்டைப் பற்றிய முழுமையான கருத்தை ஒருவர் எட்டிவிடவே முடியாது. கேரளாவிற்கும் காஷ்மீருக்கும் ஏதேனும் ஒற்றுமைகள் உண்டா? ராஜஸ்தானின் வறட்சிப் பாலைவனப் பகுதிகளைப் பார்த்துவிட்டு இந்தியா என்பது வளைகுடா நாடுகளைப் போன்ற ஒரு பகுதிதான் என்று ஒரு வெளிநாட்டவர் முடிவிற்கு வந்தால் அதைச் சரியென்று ஏற்றுக் கொள்ள இயலுமா?
மும்பையைப் பார்த்துவிட்டு, இந்தியா எந்த மேலை நாட்டிற்கும் சளைத்தது அல்ல என்று ஒருவர் பெருமை பாடினால் அதை நம்மால் ஒப்புக் கொள்ளமுடியுமா?
பீகாரில் உள்ள மக்களின் வறுமையை மட்டும் காட்டி இந்தியா மிக வறுமை மலிந்த நாடு என்கிற கருத்திற்கு நாம் உடன்பட முடியுமா?
தாய்லாந்திற்கும் இப்படிப் பல முகங்கள் உண்டு. தாய்லாந்தில் வடக்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேனே தவிர அதன் கிழக்கு முகத்தைப் பார்த்தது இல்லை. நகரச் சாயல்படியாத தாய்லாந்தின் கிராமத்து வாழ்க்கை முறையைப் பார்க்க வேண்டுமானால் அதற்குக் கிழக்குமுகம்தான் சிறந்தது.
எனக்கும் தாய்லாந்தின் கிழக்குப் பகுதிக்கும் இடையே உள்ள தூரமே மெக்காங் ஆற்றின் அகலம் மட்டுமே.
மிஞ்சிப் போனால் ஒரு கரையில் லாவோஸ் நாட்டையும் மறுகரையில் தாய்லாந்தையும் கொண்டிருக்கும் இந்த மெக்காங் ஆற்றின் அதிகபட்ச அகலம் 500 மீட்டர்கள் இருக்கலாம். இந்த ஆறும், விதிகளும், இந்த டோனா ரீயுமா என் ஆர்வத்திற்கு அணை போடுவது?
எண்ணிப் பார்த்த போது, டோனா ரீ மீது சற்றுக் கடுப்புக்கூட ஏற்பட்டது. ஆனால் வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை.
“சரி எங்கே போவோம்?” இது நான்.
“உங்களுக்கு எதிலெல்லாம் ஆர்வம் சொல்லுங்கள்?” இது டோனா ரீ.
“இங்கே பார்க்க ரொம்பத்தான் இடங்களைக் கொண்டிருக்கிறீர்களாக்கும்?” என்று கேட்கத் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை.
“புதுமையான ஓர் இடத்தை நாம் பார்க்கப்போகிறோம். அதற்குமுன் உணவு உண்டுவிட்டுச் செல்வது நல்லது. நாம் போகும் இடம் இங்கிருந்து வெகு தூரம். வழியில் நல்ல உணவுக் கடைகளும் இல்லை. சாலையோர உணவுக் கடைகள்தாம். அதில் தயாரித்து அளிக்கப்படும் உணவு வகைகளை இந்தியர்கள் இரசித்து உண்டு நான் பார்த்தது இல்லை” என்றார் டோனா ரீ.
“அப்படியா? எங்களவர்கள் என்ன சொல்வார்கள் உங்கள் உள்ளூர் உணவைப் பற்றி?”
“நாற்றமடிக்கிறது என்பார்கள்?” சிறு புன்னகையுடன் இதை டோனா ரீ சொல்லவே எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“நீங்கள் எங்களவர்களின் கருத்தை ஏற்கிறீர்களா டோனா?”
“இல்லையில்லை”
“எங்கள் உணவு வகைகள் பெரும்பாலும் இனிய மணம் உடையவை.
பசியைத் தூண்டுமளவும் நாக்கில் நீர் ஊறுமளவும் எங்கள் சமையல் மணம் இருக்கும்.” “அதனால்தான் உங்கள் சமையலில் வரும் வாசனையை இப்படி விமரிசிக்கிறார்கள்.”
“எங்கள் உணவும் பசியைத் தூண்டும் மணமே தவிர, நாற்றம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” டோனா விட்டுக் கொடுக்காமல் பேசினார்.
நான் இதை ஒரு விவாதமாக ஆக்க விரும்பவில்லையே தவிர, நிச்சயமாக நம் உணவுத் தயாரிப்பில் இருக்கிற இனிமை, மணம் கீழை நாடுகளில் உள்ள பல நாடுகளில் இல்லவே இல்லை.
இதை ஒரு பாசமிக்க இந்திய உணவு இரசிகனாகச் சொல்லாமல் ஓர் உலகத் தரமான இரசனையுடன் கூடிய மூக்கை அடிப்படையாகக் கொண்டே சொல்கிறேன். இதை டோனாவுக்கு நிரூபிக்க வேண்டும் என்று எனக்குள் ஒரு வேகமே எழுந்தது.
“இந்திய உணவகம் இங்கு ஏதும் இருக்கிறதா?”
“இல்லை.”
“ஆச்சரியமா இருக்கிறது. இந்திய உணவகம் இல்லாத கிழக்காசிய நகரம் அநேகமாக இந்த வியான்டின் நகரமாகத் தான் இருக்கும்.”
“இந்தியர்கள் இந்த நாட்டில் மிகமிகக் குறைவு”
“ஏன் அப்படி?”
“இந்தியர்கள் என்பவர்கள் நான் அறிந்தவரை உழைப்பாளிகள் அல்லது முதலாளிகள். இங்கே விவசாயம், சுற்றுலா தவிர தொழில் விருத்தி என்று ஏதும் இல்லை. இங்கு உள்ளூர் மக்களுக்கே சரிவர வேலை கிடைக்கவில்லை. இங்கு தொழிற்சாலைகள் தொடங்கவும் வாய்ப்புக் குறைவு. எனவே இந்தியர்கள் இந்த நாட்டைக் கண்டு கொள்ளவில்லை.”
டோனாவைக் குறை சொல்லவே முடியாது. தம் நாட்டைப் பற்றிய மிகைப்படுத்தாத கருத்தையே இவர் கொண்டிருக்கிறார் என்பதற்கு இவர் கடைசியாகச் சொன்ன இந்த வாசகமே நல்ல சான்று.
ஓட்டலுக்குப் போனால் டோனாவுக்கும் சேர்த்து நான்தான் பில் கொடுக்கவேண்டும். டோனா சாலையோரக் கடைகளில் உணவருந்த விரும்பவில்லை என்பதால், நம்மை ஓர் உயர்ந்த ஓட்டலுக்கு அழைத்துப் போய் நம்மை ஒரு வழி ஆக்கி விடுவாரா?
நாங்கள் சென்றது துசாகி (TUSAKI) என்ற ஓர் ஓட்டலுக்கு. இது மெக்காஸ் ஆற்றை ஒட்டியிருந்த மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் ஆரவாரமற்று இயங்கிக் கொண்டிருந்தது.
“என்ன சாப்பிடுகிறீர்கள்?”
“நாற்றமடிக்காத எந்த உணவும்” என்று நான் சொல்ல, டோனா அந்த ஓட்டலில் உணவு உண்டு கொண்டிருந்த அனைவருமே திரும்பிப் பார்க்குமளவு பெரிய சிரிப்பாகச் சிரித்தார்.
“புரிகிறது. உங்கள் இரசனைக்கு ஏற்ப ஆர்டர் கொடுக்கிறேன்.”
வந்த சர்வரிடம் லாவோஸ் மொழியில் ஏதோ சொல்ல, அவன் பத்து நிமிடத்திற்கெல்லாம் இரண்டு பெரிய பீங்கான் கோப்பைகளுடன் வந்தான்.
அந்த பெரிய பீங்கான் கோப்பை நிறைய கலங்கலான பழுப்பு நிறத்தில் சூப் இருந்தது. அதில் ஏகப்பட்ட காய்கறிகள் மிதக்க பக்கத்தில் ஒரு சிறு கோப்பையில் வேகவைக்கப்பட்ட வெள்ளைச் சாதம்.
நாமெல்லாம் சாதத்தை நிறையவும் மற்றவற்றைக் குறைவாகவும் சாப்பிடுகிறோம் அல்லவா?
லாவோசில் அப்படி அல்ல. சாதம் பக்கவாட்டு உணவு காய்கறி சூப்தான் பிரதான உணவு.
சூப்பில் சாதத்தைப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்த டோனாவைப் பார்த்து நானும் அப்படியே சாப்பிட்டேன்.
“எப்படி இருக்கிறது?”
“சரியாக என் இரசனையோடு ஒட்டிப்போகிறது.”
இவ்வளவு பெரிய கோப்பையையும் முடித்துவிட முடியுமா என்று ஐயப்பட்ட எனக்கு அதன் ருசி, மிச்சம்மீதி வைக்கவிடாமல் செய்தது.
“வேறு ஏதும் சாப்பிடுங்க” என்றேன் மரியாதைக்காக
“ஊகும்! இதுவே அதிகம்.”
பில்வரும் நேரம்.
எனக்கு இரண்டு சஸ்பென்கள். ஒன்று பில் மிரட்டுமா? இரண்டாவது பில்லை யார் கொடுப்பது?
டோனா இதை வித்தியாசமாகக் கையாண்டார்.
(தொடரும்).
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

































மரணம் வரை தொடர வேண்டியவை…..
சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!
மணிமேகலை பிரசுரத்தின்…
ஜவ்வரிசி வடாம் - அலமேலு ரங்கநாதன்
காய்கறிகளின் மருத்துவ குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
மேல்சபை மேலான சபையாகுமா?