வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
புகைப்படக் கலைஞர் டூப்பாங் எங்களிடம் காட்டிய சாதுரியத்தை நாம் பிறகு பார்ப்போம்.
காரணம் ஆங்கோர்வாட் பற்றிச் சொல்ல இன்னும் செய்திகள் உள்ளன.
கோயிலின் ஒரு பகுதியில் தேவர்களும் அசுரர்களுமாய் பாற்கடலைக் கடையும் காட்சியை அமைத்திருக்கிறார்கள் பாருங்கள். இந்தச் சிற்ப வேலைப்பாட்டினை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
அசுரர்கள் விகார முகங்களோடும் பிதுங்கிய விழிகளோடும், பருத்த உடல்களோடும், சிங்கப் பற்களோடும் காட்சி அளிக்க, தேவர்கள் பாம்பைக் கொண்டு பாற்கடலைக் கடைகிறோம் என்கிற உணர்வுகூடக் காட்டாமல், ஒரு பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்கிற உணர்வும் இல்லாமல் ஏதோ தவம் செய்பவர்களைப்போல் காட்சி தருகிறார்கள்.
பாம்பு, மகா நீளமாக இருக்க வேண்டுமே என்கிறீர்களா? ஆமாம். தமிழகக் கலைஞர்கள் இதற்கெல்லாம் பஞ்சம் வைக்கவே இல்லை. இடமும் தாராளம். நிர்மானித்த மன்னனு தாராளம். கால அவகாசமும் நிறையக் கொடுத்து சாவகாசமாக உருவாக்குங்கள் என்று விட்டிருப்பாான் போலிருக்கிறது. இந்தச் சிற்பக் குவியலுக்கே வெகுகாலம் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அங்கங்கே மூக்கு முகரையெல்லாம் பெயர்த்து விழுந்து காணாமல் போயிருப்பது மனத்திற்கு வேதனை தருவதாக உள்ளது.
கலை உள்ளமும் பக்தி உள்ளமும் அபரிமிதமாகக் கலக்கப் பெற்றவர்கள் இந்தச் சிற்பத்தைப் பார்த்தால் மகிழ்வதற்குப் பதிலாக கண்ணீரே சிந்துவார்கள்.
கேட்டால், இந்திய உதவி அபாரமாகக் கிடைக்கப்போகிறது. சில ஒட்டுவேலைகளும் பூச்சு வேலைகளும் செய்தால் ஓரளவாவது இயல்புத் தோற்றத்திற்குக் கொண்டு வந்துவிடலாம்.
ஆனால் கம்போடிய அரசும் ஆங்கோர் வாட் கோயில் நிர்வாகமும் அநியாத்திற்கு அலட்சியம் காட்டுகின்றன.
நம்மூரில் காணப்படும் சில கைவிடப்பட்ட கோயில்களுக்குள் நுழைந்து பார்த்தால் நமக்கு என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு இங்கும் ஏற்படுகிறது. நாட்டின் பிரதான வருமானங்களுள் ஒன்று சுற்றுலாப் பயணிகளின் மூலம் கிடைத்தும், இப்பயணிகளின் கவனம் முழுவதும் ஆங்கோர்வார்ட்தான் என்று இருந்தும் இந்த நிலை ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. இங்குள்ள ஊழியர்கள் எவரையேனும் பார்த்து இதுபற்றிக் கேள்வி கேட்கலாம் (சட்டையைப் பிடித்து?)என்றால் ஒருவரையும் கண்ணில் தென்படக் காணோம்.
எந்தச் சமூக விரோதியாவது ஒரு சுத்தியலை எடுத்து வந்து தன் பங்கிற்கு ஒரு கெடுதல் வேலையைச் செய்து கொண்டிருந்தால் அதைத் தட்டிக் கேட்கக்கூட ஆள் இருக்காது போலிருக்கிறது.
இது ரொம்ப மிகைப்படுதல் என்பவர்களுக்கு ஒரு சில வார்த்தைகள் இந்த உறுதியான சிலைகளின் பாதிப்புகள், இயற்கைத் தேய்மானங்களாகவும் காலப்போக்கில் ஆனதாகவும், கருதமுடியாத அளவுக்கு ஏதோ வேண்டுமென்றே கோப உணர்வுடன் சேதப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது.
இடைப்பட்ட காலத்தில் ஆங்கோர் வாட் அந்நிய மண்ணைச் சேர்நதவர்களால் கண்டுபிடிக்கப்படும்வரை ஏற்பட்ட சேதங்களை நம்மால் உணர முடிந்தாலும் ஆங்கோர்வாட் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் காட்டப்படும் அலட்சியத்திற்கு எந்த நியாயப்படுத்தலும் நிச்சயம் எடுபடாது.
இதைத்தான் எங்களுடன் நடந்துவந்த சில ஜப்பானிய பயணிகள் வெளிப்படுத்தினர். எனக்கு ஜப்பானிய மொழி புரியவில்லையே தவிர, அவர்களது மொழியில், வருத்தம், ஏமாற்றம், சகிப்பு, கோபம் கலந்த அவர்களது உணர்வுகள் இதைச் சொல்லாமல் சொல்லின.
நல்லவேளை, இவ்வளவு மோசமான பராமரிப்பிலும் கோயில் அசுத்தமின்றி உள்ளது. இந்தப் பெருமை சுற்றுலாப் பயணிகளைத்தாம் போய்ச் சேரும்.
கோயிலை அசுத்தப்படுத்தினால் தண்டனை என்கிற அறிவிப்புப் பலகை பயணிகளை மிரட்டியிருக்கலாம் அல்லது வந்த இடத்தில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்கிற சுயகட்டுப்பாடு காரணமாகவும் இச்சுத்தம் கடைப்பிடிக்கப்படுகிறதோ என்னவோ.
ஓர் இடத்தில் மட்டும் ஓர் ஊழியர் மட்டும் என் கண்களில் இப்போது தென்பட்டார். இவர் அக்கோயிலுக்குள் வருபவர்கள் இந்த வழியாகத்தான் வெளியேறவேண்டும்; வந்த பாதையிலேயே திரும்பிப் போகக் கூடாது என்று ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார்.
அவர் எவ்வித பரபரப்பையும் காட்டவில்லையே தவிர,அவர் பணி சற்று கடுமையாகவே இருந்தது.
வந்த பாதையிலேயே திருப்பினால் குறைவாக நடக்கலாம்; சுற்றிப்போவது என்றால் அதிகதூரம் நடக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் விதியை மீற முயல, அவர் எவருக்கும் புரியாத ஓர் உள்ளூர் மொழியில் அப்படிப் போங்க’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். நான் இவரிடம் பேச்சுக் கொடுக்கச் சிறிதுநேரம் அவர் அருகே நின்றேன்.
அவரோ நான் எதற்கு நிற்கிறேன் என்று அக்கறை காட்டாமல் ‘அப்படிப் போங்க’ என்று கிளிப்பிள்ளை போலவே சொல்லிக்கொண்டிருந்தார்.
(அடப் பாவி மனுஷன்! இங்கு ஒருத்தன் உன் கவனத்தை ஈர்க்கக் குத்துக்கல்லாட்டம் நிற்கிறேன், என்ன ஏது என்று கேட்கப்டாதா?)
தயக்கத்தை நீக்கி நானே கேட்டேன். “உங்களுடன் சற்றுப் பேசலாமா?” இதைக் காதில் வாங்கிக்கொண்டவராகவே காட்டிக்கொள்ளாமல் மறுபடி வேறுபுறம் திரும்பி “அப்படிப்போங்க, அப்படிப்போங்க என்று அதே பல்லவியை ஆரம்பித்துவிட்டார்.”
அவரைத் தொட்டேன். பிறகும் அவர் திரும்பவில்லை.
கடமையை என்னமாய்ச் செய்தார் தெரியுமா? என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கக் காணோம்.
ஏதேனும் மனநவலம் பாதிக்கப்பட்டவரா? எவரிடமும் நீ பேசக்கூடாது என்கிற கடுமையான உத்தரவு ஏதும் இருக்குமோ? ஒன்றும் பிடிபடவில்லை.
சரிசரி, இவரிடம் பேசிப் பயனில்லை என்கிற முடிவுக்கு வந்தேன்.
நான் வெறும் சுற்றுலாப் பயணி அல்ல. பத்திரிகையாளன். எனக்கு இந்தக் கோயில் ஏன் இவ்வளவு அலட்சியக் கவனிப்பின்கீழ் உள்ளது என்று தெரிந்தே ஆகவேண்டும் என்கிற வேகம் வந்தது.
எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு, உடனே காரில் ஏறிப்போய் ஆங்கோர்வார்ட்டின் நுழைய அனுமதிச் சீட்டு வழங்குகிறார்களே அங்கேயே போய் யார் தலைமை அதிகாரியோ அவர் கதவையே உடைப்பது (Gate crash) என்றுகூட முடிவிற்கு வந்தேன். கோயில் ஊழியர் என்னை உதாசீனப்படுத்திய விதம்தான் எனக்குள் இத்தகைய வேகத்தைத் தந்திருக்குமோ?
இல்லை. இக்கோயிலில் இதுவரை நாம் பார்த்த அலட்சியங்களில் ஒட்டு மொத்த உணர்வை இந்த ஊழியர் இன்னும் கூர்மைப்படுத்திவிட்டிருக்க வேண்டும் என்று உள்மனம் விளக்கம் கொடுத்தது.
ஆனால் இதை நான் செய்யவில்லை. அடக்கிக்கொண்டேன். காரணம் பார்க்க இன்னும் ஏராளமாய் உள்ளன. பேசாமல் வந்த வேலையைப் பார்த்துக்கொண்டு போ. உனக்கு எதற்கு இந்த வேலையெல்லாம் என்று உள்உணர்வு தலையில் ஒரு குட்டுக்குட்டவும் செய்தது.
வலம் வந்தால் மறுபடி சுவரில் தொடர்ச்சியாகச் செதுக்கப்பட்ட எக்கச்சக்கமான உருவங்கள். அது ஒரு போர்களச் காட்சி நானும் எனகடகிருந்த ஆன்மிக, சரித்திர அறிவை நினைவிற்குக் கொண்டுவரப் போராடினேன்.
சில ரஷ்யப் பயணிகளோடு எங்களை நோக்கி வந்த ஒரு சுற்றுலா வழிகாட்டியைப் பார்த்ததும்தான் சரி, சற்று நேரம் நின்று இவர் அந்த ரஷ்யப் பயணிகளுக்குச் சொல்வதை ஒட்டுக்கேட்பது என்று முடிவு செய்தேன்.
அந்த வழி காட்டி ஆங்கிலத்தில் பேசுவார் என்று பார்த்தால் மளமளவென்று ரஷ்ய மொழியில் பேச ஆரம்பித்துவிட்டார்.
என் கணிப்பில் மண்தான் விழுந்தது.
ஆனால் அவர் சொன்ன ஒரு சொல் என்னை அங்கேயே நிற்க வைத்தது அது நான் கேள்விப்பட்ட சொல்.
அந்தச் சொல்.
குருச்சேத்ரம் என்பது.
ஓ! இது குரூச்சேத்ரப் போரை விவரிக்கும் காட்சிகளா என்று அதிசயத்தில் வாய் பிளந்தேன்.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































