Friday, 12 Mar 2010
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்
வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
Hall of thousand Buddas என்கிற ஆங்கோர் வாட்டின் உள்ளே இருக்கிற அரங்கில் கூட ஆயிரம் புத்தர்கள் ஓரிடத்திலா என்று பெரிய எதிர்பார்ப்புடன் நுழைந்தால் சில நூறு புத்தர்கள்கூட அங்கு இல்லை.
இலட்சத் தீவுகள் கதைதான்! தெரியுமல்லவா? இலட்சத் தீவுகள் பகுதியில் இலட்சம் தீவுகளே இல்லை. சில நூறு தீவுகளே உள்ளன. என்னவோ இப்படிப் பெயராகிப் போனது.
ஒரு பெளத்த நாடாக இருந்தும் ஆங்கோர் வாட்டை வைத்து பல இலட்சம் டாலர்களை ஈட்டும் ஆங்கோர் (ஆங்கு+ஓர்) மாநகராட்சி குறைகிற புத்தர்களை நிரப்பி 1000 என்கிற எண்ணிக்கையை நியாயப்படுத்தப் பார்க்கலாம்.
அதெல்லாம் தொல்லிதுறை சார்ந்த விஷயம். அதில் நவீன புத்தர்கள் நுழைக்கப்படக் கூடாது என்பது ஆங்கோர் நகராட்சியின் வாதமானால் குறைந்தபட்சம் சிதிலமடைந்து உருத் தெரியாமல் ஆகிக் கொண்டிருக்கும் இக்கோயிலை பழமை கெடாதபடி புதுப்பிக்கவாவது செய்யலாம்.
ஏன்தான் இப்படி அலட்சியம் காட்டுகிறதோ தெரியவில்லை. உடைந்து கிடக்கும் சிலைகளின் பாகங்களை குன்றுபோல் குவித்து வைத்திருக்கும் கொடுமை இதனினும் கொடுமையாகும்.
இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து ஒட்டி வைத்தால் செப்பனிட்டால் என்னவாம்? ஆனாலும் ஆங்கோார் நராட்சிக்கும் கம்போடியத் தொல்லியல் துறைக்கும் இவ்வளவு அலட்சியம கூடவே கூடாது.
போதும் உங்கள் புலம்பல் என்கிறீர்களா? சரி சரி!
ஆங்கோர் வாட் பார்க்கக் கருங்கல்லால் ஆன கோயில் போல உள்ளது. ஆனால் இங்குள்ளவர்கள் இக்கல்லை Redsand Stone (செம்மண் கல்) என்கிறார்கள். காலப்போக்கில் இதன் தோற்றம் மாறி காரைகளும் பாசியும் படர்ந்து இன்றைய நிறத்திற்கு ஆகியிருக்கலாமோ என்னவோ.
உள்ளே எல்லாமே பிரமாண்டங்கள்தாம். கோயிலின் சுற்றுப்புறச் சுவரின் நீளம் 5.5 கிலோமீட்டர் என்றால் இதன் பிரமாண்டத்தை விளக்க வேறு உதாரணம் தேவையில்லை.
இங்குள்ள ஒரு சிலையை Lepper king (தொழு நோய் அரசன்) என்று அழைக்கிறார்கள். இவன் பெயர் ஜெயவர்மன் என்றும் எங்களைப் புகைப்படம் எடுத்த கலைஞர் சொன்னார்.
ஆம்! சொல்ல மறந்துவிட்டேனே! கோயிலின் நுழைவாயிலில் நிறையப் புகைப்படக் கலைஞர்கள் கிடைக்கிறார்கள். நன்கு பேரம் பேசினால் படித்து வருவார்கள். மொத்தம் பத்துப் படங்கள்தாம் எடுத்துக்கொள்வோம் என்று நிபந்தனை போட்டோம்.
இப்புகைப்படக் கலைஞரின் பெயரைக் கேட்டேன். ‘டூப்பாங்” என்றார். சரியான டூப் மனிதராக இருப்பாரோ என்று பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தோன்றியது.இதை நிரூபிக்கும் வகையில்தான் இறுதியில் நடந்து கொண்டார். இவரது முகத்திரை கிழிந்த நேரத்தை உரிய இடம் வரும்போது சொல்கிறேனே!
‘டூப்பாங்கிடம் மொத்தம் பத்துப் படங்கள் தாம்’ என்று சொல்லியும் என்னையும் சிவாவையும் “இங்கே நில்லுங்கள்;” “அங்கே நில்லுங்கள்” “ஆகா இந்தக் கோணத்தில் நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்(?) தெரியுமா!” என்றெல்லாம் ஜாலம் காட்டியபோதே நான் போட்ட கணக்கு சரியான விடையை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருக்கிறது என்று! போகிற போக்கைப் பார்த்தால் தலைக்குப் பத்துப்படங்கள் மட்டும் அல்ல! இவற்றையும் தாண்டுவார் போல!
‘யோவ் டூப்பாங்! நீ எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கோ! இவற்றில் நன்றாக இருக்கிற படத்தை மட்டும்தான் நான் எடுத்துப்பேன்! நீயாச்சு நானாச்சு! என்கிற சண்டைக் குணத்தை என்னுள் வளர்த்துக்கொண்டேன்.
இந்தப் புகைப்படக் கலைஞர் டூப்பாங்கிற்குத் தொழிலும் வருமானமும் ஆங்கோர் வாட் தருவதுதான் ஆங்கோர் வாட்டிற்குள் ஆயிரம் முறைக்கு மேல் வந்திருப்பார். ஆனால் ஓர் இழவும் தெரியவில்லை!
புகைப்படக் கலைஞருக்கு புகைப்படம் எடுக்கதோடு எல்லைக்கோடு முடிந்து போகிறது. கோயிலைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது வழிகாட்டியின் (Guide) வேலை என்று சிலர் வாதாட முன்வரலாம்.
கோயிலுக்குள் சகல இடங்களிலும் நுழைந்து புகைப்படம் எடுக்கும் உரிமை வேறு எந்த நாட்டிலும் எந்தக் கோயிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இங்கு உள்ள இந்த உரிமையைப் பயன்படுத்திக்கொண்டு இவர் வழிகாட்டி போலவும் கோயிலின் சரித்திரப் பின்னணிகளைத் தெரிந்து வைத்துக்கொண்டால், இவரது தொழில் இன்னும் அபாரமாக நடக்கலாம் என்பது என் கருத்து.
சில இடங்களில் தெரிந்த மாதிரி வேறு அளந்தார். Lepper kingஐ “இவன்தான் குபேரன்” என்றார். (யோவ்! குபேரனுக்கு எப்பய்யா குஷ்டம் வந்துச்சு?)
ஓர் இடத்தில் சில ஜப்பானியர் சுற்றுலாப் பயணிகளிடம் ஒரு வழிகாட்டி இந்துப்புராணங்களையே தப்புத் தவறுமாகச் சொன்னதைக் கேட்டபடி கடக்க நேர்ந்தது தலையில்அடித்துக்கொண்டேன்! என்னமாயப் புதுக்கதை விட்டுக்கொண்டிருந்தார் தெரியுமா? கோயிலின் பிராகாரங்களில் சுவர்க்கம் என்றால் எப்படி இருக்கும். நரகம் என்றால் எப்படி இருக்கும் என்றெல்லாம் சுவர்ச் சிலைகளால் (wall carving) விவரித்திருக்கிறார்கள். எண்ணெய்க் கொப்பறைகளில் மனிதர்கள் வேகிறார்கள். கிங்கரர்கள் அவர்களை இம்மைச்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
“திஸ் ஈஸ் நரகா! ஆப்டர் டெத் சின் மென் ஆர் டார்ச்சர்ட் இன் நரகா” என்று ஒரு வழிகாட்டி சில வெள்ளையர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் புரியாத கவர்ச்சிலைகளை எனக்குப் பிடிபட ஆரம்பித்தன.
சற்றுத் தள்ளி நடந்தால் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தத்ரூபமான காட்சியைக் கலைவடிவமாகக் காண்பது கண்கொள்ளாக் காட்சி.
1111 ஆம் ஆண்டு கட்டப்பட ஆரம்பித்த ஆங்கோர் வாட் சுமார் 30 வருடங்கள் கட்ட்ப்பட்டதாகச் சரித்திர வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்.
இந்தக் கோயில் கட்டப் பயன்படுத்தப்பட்ட கற்கள் இந்தப் பகுதியில் இல்லவே இல்லை என்கிறார்கள்.
எப்படி இதைக் கட்டியவன் ஒரு தமிழ் மன்னனின் பரம்பரையில் வந்தவனோ, அதேபோல் இந்துக் கலாச்சாரத்தை, புராணத்தைப் பிரதிபலிக்கும் இந்தக் கலைக்கூடத்திற்குத் தமிழகக் கலைஞர்களும் ஏன் தமிழகத்திலிருந்துமே கற்கள் வந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமுள்ளது.
தமிழக நிலவியல் வல்லுநர்கள் (Geolagists) இங்கு வந்து இந்தக் கற்களின் பூர்வீகத்தைக் கண்டறிந்து இவை தமிழகக் கற்கள்தாம் என்பதை நிரூபித்தால், அது தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் செயலாக இருக்கும். இதைப் பற்றியெல்லாம் கம்போடிய அரசு அக்கறைப்படுவதாகக் காணோம் (அட! மறுபடியுமா?)
ஆங்கோர் வாட்டின் மையத்தில் இருப்பது மூன்றடுத்குக் கோயிலாகும்.இதன் உயரம் 213 அடிகள்!
கவனமாக ஏறவேண்டும். இல்லாவிட்டால் எலும்பு முறிவோ மரணமோதான் காரணம். படிக்கட்டுகள் முழுக்காலையும் வைக்கும்படி அகலமாக இல்லை. காலின் முன்பகுதியை மட்டும் வைத்து ஏறவேண்டும். மேலே இருக்கும் படிக்கட்டின் நுனியைப் பிடித்தபடிதான் ஏறமுடியும்போல் தெரிகிறது.
அப்படியும் ஏறிச் சாதனை புரியலாம் என்றால் மூன்றாவது அடுக்கிற்கு ஏற அனுமதி இல்லை என்றார்கள். இரண்டு அடுக்குகள் வரை ஏறலாம். ஆனால் அங்கு காணும்படி பிரமாதமாக எதுவும் இல்லை என்றார்கள். எனவே எனக்கும் சுவாரசியமில்லாமல் போய்விட்டது.
புகைப்படக் கலைஞர் டூப்பாங் வேறு படுத்திக்கொண்டிருந்தார். ‘என்னை உயரே நிற்கச் சொல்லிக் கீழே இருந்துகொண்டு படம் எடுக்கிறேன்’ என்றார். ‘யோவ் இதெல்லாம் சரியா வராது. சொன்னாக் கேளு. நீ எவ்வளவு படம் எடுத்திருப்பாயோ, அதைவிட அதிகமான படங்களில் நான் நின்று போஸ் கொடுத்திருக்கிறேன். 33 வருடங்களாக என்று சொல்லிப் பார்த்தேன்.
அவர் கேட்பதாக இல்லை. ‘சரிசரி எடு! நான் தேர்வு செய்யும்போது ஒதுக்கி வைத்துவிடுகிறேன்! என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் அவரது மனக்கணக்கு என் கணிப்பைவிடப் புத்திசாலித்தனமாக இருந்திருக்கவேண்டும்!
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
































