Friday, 12 Mar 2010
புரியாமலா போகும்?
தமிழக முதல்வர் கருணாநிதி, நல்ல பேச்சாளர்; நல்ல எழுத்தாளர்; இணையற்ற சிந்தனையாளர், கருணாநிதியுடன் அரசியலில் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் கொண்டிருப்பவர்களும்கூட, இவரது பிரசன்ஸ் ஆப் மைண்டையும் (தமிழில் ?), நகைச்சுவை உணர்வையும், சொல்லாடல்களையும், வளமான தமிழையும், இலக்கிய உதாரணங்களையும் இரசிக்காமல் இருக்க முடியாது.
குறைந்தபட்சம் மனத்திற்குள்ளாவது இரசிப்பார்கள்.
அவரது ஆட்சித் திறமையைக் குறை கூறுகிற நடுநிலையாளர்கள் கூட, அவரது இலக்கியத் திறமையை பேச்சாற்றலை, உரைநடை அழகை வியந்தே தீருவார்கள். அண்மையில் சென்னைப் பொது மருத்துவமனையின் 175 ஆண்டு விழாவின்போது முதல்வர் பேசிய பேச்சு இருக்கிறதே இது. மிக அருமை என்பேன்.
குறிப்பாக மருத்துவ மாணவர்களுக்கு முதல்வர் சொன்ன அறிவுரை இருக்கிறதே, இது அட்சர இலட்சம் பெறும்.
மருத்துவம் என்பது தொழில் அல்ல. அது சேவை என்கிற கருத்தை முதல்வர் வலியுறுத்தியுள்ள விதம் என்றும் நினைத்துக் கொள்ளும்படியானது.
மருத்துவர்களுக்கு ஈரம், கருணை, இதயக்கசிவு வேண்டும் என்று பேசியிருப்பது இன்றையச் சூழலுக்கு மிக அவசியமாகிறது.
முதல்வர் என்று இல்லாவிட்டாலும் வயதில் மூத்த குடிமகன் என்ற வகையிலும் பிறந்தது முதல் மருத்துவர்களிடம் மிக அதிகமாகப் பழகியவர் என்ற வகையிலும் (இது அவரது வாக்குமூலமாகும்!) முதல்வரின் கருத்துக்கு மருத்துவர் சமுதாயம் செவி சாய்க்குமா?
இலட்சங்களைக் கொட்டிக் கொடுத்துப் (ஒரு சில மருத்துவப் படிப்புகள் கோடியைத் தொட்டும் தாண்டியும் விட்டன) படிப்பதால் அதை முதலிடமாகவே கருதி அதைத் திரும்ப எடுக்கும் (பன்மடங்காக) முயற்சிகள் பல மருத்துவர்கள் வியபாரிகளாகவே ஆகிப் போனார்க்ள.
“உங்களுக்கு ஒன்றும் இல்லை” என்கிற வாக்கியத்தைச் சொல்வதற்குள் நோயாளிகளிடம் ஒன்றுமே (பணம்) இல்லாமல் ஆக்கிவிடுகிறவர்கள் இன்று எவ்வளவோ பேர்!
மருத்துவமனை பில்கள் நூறுகளாகி, ஆயிரங்களாகி, இலட்சங்களாகிவிட்டன. நாம் என்ன அமெரிக்காவிலா வாழ்கிறோம்? அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள?
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கூடச் சிலரையே சிறுஅளவில் காப்பாற்றுகிறது. பெரும்பகுதிப் பணத்தைக் கையைவிட்டே கொடுக்கவேண்டிய நிலை.
அவசர கதியில் வேறு வைத்தியம் நடப்பதால் நோயாளிகளுக்கு ஏகப்பட்ட மனக்குறைகள் இருக்கின்றன.
இவர்களது ஏக்கங்களை, விரக்திகளை, சலிப்புகளை வெளிப்படுத்தும் ஏகப் பிரதிநிதியாகத்தான் முதல்வர் பேசியிருக்கிறார்.
மருத்துவர்களுக்கு முதல்வர் விடுத்தது அன்பான வேண்டுகோள் போலத் தெரிந்தாலும் சரியான சம்மட்டிஅடியாகவும் தோன்றுகிறது.
கலைஞரது சொல்வித்தை மருத்துவர்களுக்குப் புரியாமலா போகும்.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?
2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?
2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!
2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!
2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!
2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!
2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!
2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?
2009/12/31 அம்புகளை நோவானேன்?
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்
































