 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
டி.கவிதா, கும்பகோணம்.
|
 |
பொதுத் தேர்வுகளின் போது முன்னைவிடப் பறக்கும் படை படு தீவிரமாக இருப்பது ஏன்?
|
 |
நன்கு படித்து மதிப்பெண்கள் எடுக்கிற பிள்ளைகளின் மரியாதையை இந்த பிட் மன்னர்கள், காப்பிமன்னர்கள் குறைத்துவிடுவதைக் கல்வித் துறையால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதுபோக, சில பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களை எடுக்க வைப்பதற்காக “ம்! நடத்துங்க நாங்க அந்தப் பக்கம் திரும்பிக்கிறோம்!” என்கிற பாணியில் நடந்து கொள்வதும் உண்டு. இதையும் தடுத்தாக வேண்டும். சில சதவிகிதங்களாவது தவறு நடந்தால்தான் சில பள்ளிகளால் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற முடியும் என்கிற நிலை!
|
|
 |
ஆர்.ஜெகன், கரூர்.
|
 |
பெட்ரோல் டீசல் விலைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டுக் குறைக்கப்படும் என்று ஓர் எதிர்பார்ப்பு உங்களுக்கு இருந்ததா?
|
 |
இல்லை. எதிர்க் கட்சிகளின் கூப்பாடுகள் ஆளும் கட்சியின் காதுகளில் ஏறாது என்பது தெரிந்ததுதான்! ஆனால் கூட்டணிக் கட்சிகளாவது வலுவாகக் குரல் எழுப்பும் என்று பார்த்தால் நட்புக்குக் குரல் கொடுத்தனவே தவிர, மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கவில்லை. சொல்லப் போனால் இந்த விலையேற்றம் கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதலுக்காகக் தெரிவிக்கப்பட்டபோது, உயர்த்திக் கொள்ளுங்கள். ஆனால் நாங்கள் ஒன்றும் தெரியாதவர்கள் போல் எதிர்ப்புக் குரல் கொடுப்போம். இல்லாவிட்டால் எங்கள் பெயர் கெட்டுவிடும் என்று ஒப்புதல் பெற்றதாகவும் டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. அடாஅடா! இதுவல்லவா கூட்டணியின் இலக்கணம்!
|
|
 |
அப்துல் ஹமீது, வேலூர்.
|
 |
ஹாக்கியில் இந்தியா பாகிஸ்தானை வெற்றி கொண்டதற்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு ஏன்?
|
 |
பாகிஸ்தானுக்கு எதிரான எத்தகைய வெற்றியும் இங்கே பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவே செய்யும். ஆனால் குடியரசுத் தலைவரே அறிக்கைவிட்டதும் ஏதோ கோப்பையைக் கொண்டு வந்ததையும் போல் இலட்சக் கணக்கில் பரிசுகள் அறிவிக்கப்பட்டதும் ரொம்ப ஓவர்!
|
|
 |
எஸ்.கருப்பையா, மதுரை.
|
 |
வழக்குகள் தேங்கிப் போவதைப் பற்றி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மிகவும் கவலையுறுகிறாரே?
|
 |
இருக்காதா பின்னே? இதற்கு முன்னர் நீதிமன்றங்கள் தவறாக இயங்கிக் கொண்டிந்தபோதே தேங்கலின் உயரம தாங்க முடியவில்லை.இப்போது புதிதாக வேறு ஒரு நோய் பற்றியிருக்கிறது. ஆம் ஊம் எனறால் வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு தேங்கலின் வேகத்திற்குக் கேட்க வேண்டுமா? ஒரு கருத்தைச் சொல்லவா (நீதியரசர்களே என் தலையில் குட்டப் போகிறார்கள்) நீதிமன்றத்திற்குத் கோடை விடுமுறை தேவைதானா? நீதிக்கு ஏன் விடுமுறை?
|
|
 |
மு. சித்திரைச் செல்வன், காரைக்குடி.
|
 |
ஜெயலலிதாவின் கொட நாடு வாசம்?
|
 |
அ.தி.மு.க.வினரை மட்டுமல்ல, தமிழக நலனை விரும்பும் எவரையும் வயிற்றைக் கடகடக்க வைக்கும் விஷயம். பெண்ணாகரம் சூடுபிடிக்கப் போவதே இந்தப் பெண்மணியில்தான் எனப் பலரும் நம்பிக் கொண்டிருக்க இந் நேரத்தில் ஓய்வா? கொடநாடு தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யாத நாடு.
|
|
 |
எல்.வெங்கிட்டு, காஞ்சிபுரம்.
|
 |
தமிழக சட்டசபைக் கட்டடத்தைப் பார்த்தீரா?
|
 |
பெருமிதப்படுகிறேன். கட்டடக் கலைஞர்களைப் போல் கலைஞர் அடிக்கடி சென்று பார்த்துப் பார்த்து உருவாக்கிய கட்டடமாயிற்றே! எந்த ஒரு முதல்வரும் இப்படி ஓர் ஆர்வம் காட்ட முடியுமா? வியக்கிறேன்!
|
|
 |
கே.அப்பாசாமி, திண்டுக்கல்.
|
 |
பெண் குடியர்கள் தமிழ்நாட்டில் பெருகிவிட்டதாக ஒரு கணக்கெடுப்புச் சொல்கிறதே?
|
 |
நம் தேசிய கீதம், இதைத்தான் நான் ஒன்ஸ்மோர் கேட்டாலும் சலியாமல் கேட்கிறேன். எந்த இசைக் கருவியால் இதை வாசித்தாலும் உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகிறது.
|
|
 |
டி.திம்மன்ராஜ், கொல்லம்.
|
 |
சசிதரூர் தடுமாறுகிறாரே!
|
 |
நல்ல வேளை! இவரைப் போய் ஐ.நா. சபையின் செயலராகத் தேர்ந்தெடுக்க இருந்தார்கள். தெரிந்துதான் கழித்துக் கட்டியிருக்கிறார்கள். இந்தியா பாகிஸ்தானுக்கிடையே எவரும் வேலையில்லை. செளதி அரேபியா சமரசம் பேச வேண்டுமாம். செம பேத்தல்!
|
|
 |
எஸ். கார்த்திக், உடுமலைப்பேட்டை.
|
 |
பெண்ணாகரத்தில் தேர்தல் பரிசுகளாக அளிக்கப்பட இருந்த துணிகள் பிடிபட்டதைக் கவனித்தீர்களா?
|
 |
பெரும்பகுதி விநியோகிக்கப்பட்டுவிட்டதாவே இரகசியத் தகவல். நடப்பது ஒரே ஒரு இடைத் தேர்தல். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தேர்தல் ஆணையமும் காவல் துறையும் கண்காணிக்க அருமயான வாயப்பு. ஆனால் நம் கட்சி (?) இருக்கிறதே, இவர்கள் கண்களில் மண் தூவி விட்டு அனைத்தையும் அருமையாகச் சாதிக்கவல்லது. உலகின் பெரிய பெரிய வியாபார நிறுவனங்கள் கூட நம் கட்சியிடமிருந்து விநியோக முறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அடேங்கப்பா! என்னா சாமார்த்தியம் போங்க!
|
|
 |
பி.எல். ராமச்சந்திரன், கொடைக்கானல்.
|
 |
மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் பற்றி?
|
 |
பாராளுமன்றத்தில் இரண்டுமணி நேரமாய் பல புதிய அறிவிப்புகளை துரகாந்த் இரயில்கள் போல் வேகமாக வெளியிட்ட மம்தாவின் அறிவிப்புக்களெல்லாம் சரக்கும் இரயில்களாக மாறாமலிருந்தால், இந்த பட்ஜெட் ஒரு பயணிகள் பட்ஜெட்டுதான்.
|
|
 |
‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.
|
 |
சச்சின் டெண்டுல்கரின் சாதனையைப் பற்றி?
|
 |
மைதானத்தில் இறங்கினாலே இவர் ஃபைனானான்சியராக மாறி விடுகிறார். நன்றாகவே ஓடுகிறார். ஃபைனான்சியர்கள் ஒளிவதற்காக ஓடுகிறார்கள். இவரோ ஒளிர்வதற்காக ஓடுகிறார். இதுதான் வித்தியாசம். ஹாட்ஸ் ஆப்!
|
|
 |
எஸ்.சிவம், பாளையங்கோட்டை.
|
 |
இந்தியாவை அடிமைப்படுத்தய கிழந்கிந்தியக் கம்பெனியை சஞ்சீவ் மேத்தா என்கிற இந்தியர் விலைக்கு வாங்கியுள்ளாராமே?
|
 |
அப்படியானால் ஒரு இந்தியருக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியே இப்போது அடிமையென்று சொல்லுங்க.
|
|
 |
எம்.சரவணன், மும்பை-2.
|
 |
மும்பையில் உங்களுக்குப் பிடித்தது?
|
 |
அங்கேயுள்ள டப்பாவாலாக்கள், ஒரு பருக்கை கூட மாறாமல் எத்தனை பேர் சாப்பட்டை என்னமாய் பகிர்ந்தளிக்கிறார்கள்? அத்தனையும் நேர்த்தி. அதனால்தான் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ; கல்வி நிலையத்தில் இந்த டப்பாவாலாக்களைப் பற்றிய பாடத்தை விரைவில் சேர்க்கவுள்ளார்களாம்!
|
|
 |
ஆர்.சுகுணா, சென்னை-17.
|
 |
மத்திய பட்ஜெட் பற்றி?
|
 |
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அதன் மூலம் பல மறைமுக விலைகளை உயர்த்தி அடி மடியில் கை வைத்த பிறகு இது பற்றிப் பேசினாலே எரிகிறது. தவிர, பொம்மைகளுக்கு விலையைக் குறைத்து தன்னை ஒரு பொம்மை அரசாங்கமாகக் காட்டிக் கொண்டிருக்கும் இந்த அரசை இனி குழந்தைகள்தாம் கொண்டாட வேண்டும்.
|
|
 |
பி.பார்த்திபன், மேட்டுப்பாளையம்.
|
 |
உலக செம்மொழி மாநாட்டுக்கு அரசு உழியர்கள் பொது விடுமுறை வேண்டுமெனக் கேட்கிறார்களே?
|
 |
எனக்கென்னவோ தமிழால் இவர்கள் ஓய்வெடுக்க இருப்பதாகவே நினைக்கிறேன். ஓய்வறியாத முதல்வர் ஆட்சியில் இவர்களுக்கு இந்த ஓய்வு தேவையில்லை.
|
|
 |
ஏ.சித்ரா, கும்பகோணம்.
|
 |
டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா மானபங்கம் செய்யப்பட்ட வழக்கு என்னவாயிற்று?
|
 |
டி.ஐ.பி. ரத்தோர் வழக்கு தானே? ஏறக்குறைய திருமண வயதை எட்டி விட்ட இந்த வழக்கு இன்னும் மேஜராகிவில்லை. மைனாராகவே இருக்கிறது. நமது இந்தியச் சட்டங்கள் அப்படி! அறுந்து போன மீன் வலையில் எந்தத் திமிங்கலமாவது சிக்குமா?
|
|
 |
மு. பெரியண்ணன், மதுரை.
|
 |
அ.தி.மு.க. கூட்டணியில் வைகோ தன்னிச்சையாகச் செயல்படுகிறாரா?
|
 |
தன்னிச்சையாகச் செயல்பட வைத்து விடுவார் ஜெயலலிதா !
|
|
 |
கே.ரவி, அகமதாபாத்.
|
 |
கருணாநிதியும் ஜெயலலிதாவும் என்னதான் செய்கிறார்கள்.
|
 |
பாட்டுக்குப் பாட்டுப் பாடுகிறார்கள். சின்னத் திரைக்குள் புகாத பெரிய நட்சத்திரங்கள் இவர்கள்.
|
|
 |
|
|