» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 12 Mar 2010

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…

நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

வெண்குஷ்டத்தைக் குணமாக்கும்
கொட்டை பூவரசன் மரம்
(THESPESIA POPULNEA (LINN)

தமிழகத்தில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் தேவஸ்தானம் என்னும் இடத்தில் ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுககு முன்பு மன்னர்களால் கட்டப்பட்ட இந்த திருக்கோவிலின் பூசாரியாகவும், நிர்வாகியாகவும் திருமிகு. சிவசாமி குருக்கள் இருந்தார்கள். அவர் அனைத்து மதத்தினரையும் மதித்து நல்லுறவு வளர்த்து வந்தவர்.

25 ஆண்டுகளுக்கு முன்பு வாணியம்பாடியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ள அம்பலூர் கிராமத்தில் என் ஆரம்ப காலத்தில் சிறியதோர் மருத்துவமனை வைத்திருந்த காலத்தில் சிவசாமி குருக்களை அடிக்கடி சந்திப்பது உண்டு. கோவிலின் பின்பக்கத்தில் அவருடைய வீடு அமைந்திருந்தது. அவர் சிறந்த சித்த மருத்துவராகவும் திகழ்ந்தார். அவருடைய வீட்டைச் சுற்றி கொட்டை பூவரசன் மரங்களை வளர்த்து வந்தார்கள். இம்மரத்தை அந்த கிராமிய மக்கள் கடி மரம் என்று அழைப்பார்கள்.

சொறி, சிரங்கு, வெண் குஷ்டம் போன்ற நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தி வந்தார்கள். அவரிடம் நான் “இந்த மரத்தை தினசரி நீங்கள் வணங்குகின்றீர்களே அதில் என்ன விஷேசம் இருக்கிறது?” எனக் கேட்டேன். அதற்கு அவர், “பல உயிர்களைக் காக்கின்றதே அதற்காகத்தான் நன்றியை செலுத்துகின்றேன்” என்றார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் ஆதரவுடன் பத்து நாட்கள் போதை ஒழிப்பு மாநாடு நடத்தினேன். 6 வது நாள் தவத்திரு சிவசாமி குருக்களையும் அருள்மிகு புதூர் தேவாலய பாதிரியார் சாம்ராஜ் அவர்களையும், மெளலவி இஸ்மாயில் அவர்களையும் அழைத்து “எம்மதம்தான் போதைப் பழக்கத்தை ஆதரிக்கும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்தினேன்.

அப்போது அவர் மேடையிலே சொன்னார். “அக்பர் கவுஸர் ஒரு காலத்தில் மூலிகை சாம்ராஜியத்தின் மன்னராகத் திகழ்வார். அரண்மனைகளைக் கட்டுவார். அவை மக்களுக்குப் பயன்தரும் வகையில் அமைந்திருக்கும்” என்றார். அவருடைய அருள் வாக்கு பலித்தது அவர் சொன்னபடியே நடந்தது.

தெய்வீக மருத்துவமனையின் கட்டிடம் அரண்மனை போல் கட்டினேன். மூலிகை தோட்டம் ஒன்று அமைத்தேன். அதில் கொட்டை பூவரசன் மரத்தையும் நம் தோட்டத்தில் வைக்கலாம் என்ற ஆர்வத்தில் அவரைக் காணச் சென்றபோது 100 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு அவர் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன்.

அவருடைய வீட்டில் கொட்டை பூவரசன் மரங்கள் அதிகமாக இருந்தது. அதெல்லாம் என்னவாயிற்று என்று கேட்டதற்கு மக்கள் தொல்லை தாங்க முடியவில்லை. தினசரி வந்து இலைகளையும், காய்களையும், பட்டையையும் எடுத்துச் செல்லுகின்றார்கள்.

இப்போது அந்த இடம் சிவசாமி குருவுக்குச் சொந்தமில்லை வாங்கியவர் அம்மரத்தை எல்லாம் வெட்டித் தள்ளிவிட்டார் என்று, துணை அர்ச்சகர்கள் கூறும் போது என் மனம் வேதனையடைந்தது. அம்மரத்தை தேடினேன். தேடிக்கொண்டே சென்றேன். பெங்களூரில் சர்ஜாபூர் ரோட்டில் உள்ள ட்ரீனிட்டீ பூட்ஸ் குடியிருப்புப் பகுதியில் அம்மரத்தைக் கண்டேன். அதைக் கண்டு வந்து, என் தோட்டத்தில் வைத்துள்ளேன். தற்போது, அந்த மரங்கள் பருவத்துக்கு வந்துவிட்டன. அழகாக பூக்களும், காய்களும், இலைகளும் தோன்றி இருப்பது, கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருக்கிருக்கின்றது.

கொட்டைப் பூவரசன் மரம் பார்ப்பதும், கிடைப்பதும் அரிது. அந்த மரம் பூவரசன் மரத்தைப் போலவே இருக்கும். அதேபோல் காய்களோ, பூக்களோ வருமானால் கொட்டை பூவரசன் காய்களை உடைத்தால் 10 விதைகள் இருக்கும். அந்த விதைகள் சாத்துக்குடி விதைகள் போல் இருக்கும். இதுதான் இதன் விசேஷமாகும். எப்படிப்பட்ட வெண் குஷ்டம் இருந்தாலும் இந்த கொட்டை பூவரசன் மரம் குணமாக்கிவிடுகிறது. இவ்வளவு சிறப்புமிக்க மரத்தைப்பற்றி மருத்துவ நூல்களில் கூறப்பட்டிருப்பதை காண்போம்.

இரண்டாவது வகை மரத்தில் காய்க்கும் காய்களை உடைத்தால், அதற்குள் வேப்பங்கொட்டையைப் போல் அதே அளவில், வடிவில் விதைகள் இருக்கும். இதனைக் கொட்டைப் பூவரசன் என்பார்கள்.

மருத்துவ குணங்கள்

இதன் இலைகளை வெது வெதுப்பாக சூடுபடுத்தி, சீழ் கொண்ட கட்டிகள் மீது சுட்டுவார்கள். இது கட்டிகளைக் கரைப்பதற்கும், பழுக்க வைப்பதற்கும் பயன்படுகிறது. அரச மரப்பட்டையைத் தண்ணீரில் சேர்த்து அரைத்து சீழ்கொண்ட கட்டிகளின் மீது பூசுவார்கள். இதனை எரித்து தண்ணீரில் கரைத்து வடிகட்டி சுத்தம் செய்து வாந்தி, குமட்டல், தண்ணீர் தாகம் தணிய எனப் பலவிதமான நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இதே போல் இதன் இலைகளை எரித்து சாம்பலாக்கி, சுத்தம் செய்து, தண்ணீரில் வடிகட்டி நுரையீரல் வீக்கம், குழந்தைகளுக்கு வரும் நிமோனியா ஜுரம் போன்ற பிரச்சினைகளைப் போக்கக் குடிக்க வைப்பார்கள்.

மரப்படடை : இதன் மரப்பட்டையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளிக்கச் செய்தால், பல்லீறுகளின் வீக்கம் மற்றும் வாயில் புண் போன்றவை நீங்கி நலப்படும். இந்திரியம் அடிக்கடி வெளியேறுவதைத் தடுக்க, மற்ற மருந்துகளுடன் கலந்து பயன்படுத்துவார்கள். பழங்காலம் முதற்கொண்டே மக்கள் இம்மரத்தினை மருத்துவத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

தமிழகத்தில் இந்துக் கோயில்களில் முக்கியமாக புராணங்களில் இடம் பெற்ற கோயில்களில் தலவிருட்ச மரம் இருக்கும். இக்கோயில்களில் தெய்வத்துடன் சேர்த்து இம்மரத்தையும் வணங்குவார்கள்.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2010/03/06 குத்தாலம் சிவன்கோயில் தலவிருட்சம் கூதாளி

2010/02/26 திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சம் கூந்தற் பாக்கு மரம்

2010/02/19 கும்பகோணம் கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம் கூந்தப்பனை

2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்

2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்

2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்

2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்

2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்

2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி

2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி

2009/12/25  ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்

2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்

2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி

2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு

2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு

2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply