Saturday, 6 Mar 2010
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
ஆங்கோர் வாட் கோயிலின்முன் நான் கண்ட கட்டுப்பாடு என்னவென்றால் சுற்றுலாப் பயணிகளை ஓர் எல்லைக்குமேல் போய்த் தொந்தரவு செய்யக்கூடாது என்று சியாம் ரியாப் நகராட்சி ஆணையிட்டிருக்கிறது.
இது எனக்குத் தெரியாது. இதுபற்றி எங்கள் ஓட்டுநரும் பேச்சுவாக்கில் கூடச் சொல்லவில்லை.
இந்த எல்லை எப்படி வகுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள். ஆம். தரையில் கனமான மஞ்சள் பிளாஸ்டிக் கயிறைப் பதித்திருக்கிறார்கள். இந்தக் கயிற்றைக் தாண்டி எவரும் வந்து சுற்றுலாப் பயணிகளிடத்தில் ஏதும் விற்பனை செய்தால் அவர்களைப் பிடித்து போய்விடுவார்களாம். எனக்கு ஒரு வெள்ளைத் தொப்பி பிடித்துப்போய்விட, சிவாவைப் பேரம் பேசச் சொன்னேன். 5 டாலர் சொல்லி பேசப் பேச நன்கு இறங்கி வந்தார்கள். இதில் கஷடம் என்னவென்றால் நமக்குத் தொப்பியில் ஆர்வம் குன்றதும் பல தொப்பிக்காரர்கள் தங்கள் கடைகளிலிருந்து தொப்பிக் குவியல்களை ஓடிப்போய் எடுத்து வந்து நம்மைச் சூழந்துகொள்கிறார்கள்.
ஒரே நேரத்தில் எல்லோரும் நம்மை நடக்கக்கூட விடாமல் வழிமறிக்கிறார்கள். இவர்கள் தொல்லை தாங்காமல் நாங்கள் நகர்ந்தோம் பாருங்கள்; அப்போது தற்செயலாக மஞ்சள்கயிற்றை நாங்கள் தாண்டியிருக்க ஏதோ நெருப்பை மிதித்தவர்கள் போல் எல்லோரும் அந்த மஞ்சள் கோட்டிற்கு உள்ளே தங்கிவிட நாங்கள் நிம்மதியானோம்.
எங்களைச் சூழ்ந்து சூழ்ந்து சுற்றி வந்த இவர்கள் ஏன் இப்படித் திடீரென்று அடங்கி ஒடுங்கிவிட்டார்கள் என்பது எங்களுக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. இவர்களது தொல்லை தாங்கமுடியவில்லை. தொப்பியை வாங்கத்தான் வேண்டுமா என சிவா கேட்க, தொப்பியை வாங்குவதில் நான் மிகக் குறிப்பாக இருந்தேன்.
முதலாவது காரணம், அந்தத் தொப்பியின் வடிவம் என் தந்தை தமிழ்வாணன் பயன்படுத்திய கறுப்புத் தொப்பியின் வடிவத்திலேயே இருந்தது என்பது.
இரண்டாவது வெயில் அப்போது போடு போடு என்று போட்டுக்கொண்டிருந்தது. ஆங்கோர்வாட்டின் (வாட் என்றால் கம்போடியாவில் கோயிலாம்) கோயில் பகுதி பெரும்பாலும் திறந்த வெளிதான். வெயிலில் மண்டை காய வேண்டியதுதான்.
குடிக்க மினரல் தண்ணீர் வாங்கவும், பசி நேரம் நெருங்கவே பக்கத்தில் உணவகம் ஏதும் இல்லாததால் தட்டில் நறுக்கி வைத்த பழங்களை வாங்கவும் மஞ்சள் கோட்டிற்குள் போனோம் பாருங்கள் மறுபடி தொப்பிக்காரர்களின் தொல்லை, பெண்கள் உட்பட உரசி உரசி தொட்டுத் தொட்டு ‘எங்களிடம் வாங்குங்கள்’ என்று மகாத் தொந்தரவு.
பழங்களை வாங்கப் போனால் அங்கே பத்துக் கடைகளுக்கு மேல் இருக்கின்றன. இவர்களுள் நான்கு பேர் வந்து சூழந்துகொண்டு ‘எங்களிடம் வாங்குங்கள்’ என்று இவர்களும் ஒரே தொந்தரவு.
எவரிடம் வாங்குவது என முடிவெடுக்கவேண்டிய தருணத்தில் எங்களை வந்து அணுகாத இடுப்பில் குழந்தை ஒன்றை வைத்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை சிவாவிடம் காட்டி, “வாருங்கள் அவரிடம் வாங்குவோம். குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டத்தோடு கஷ்டமாக வியாபாரம் செய்யும் அந்த இளம் தாய்க்கு நம்மாலான ஆதரவு இது” என்றேன்.
இந்தப் பெண்ணிடம் வாங்க முடிவு செய்தது ஒரு வகையில் நன்மையாகப் போயிற்று.
பேரம் பேசி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. (ஒரு டாலர்). ‘இந்தத் தட்டில் இரண்டு கொடுங்கள்’ என்று சொன்னதும் அதைக் கேட்டுக்கொண்டவராய்க் காட்டிக்கொண்டவராய்க் புதிதாகப் பழங்களை எடுத்து நறுக்கிப்போட ஆரம்பித்தார். நமக்கு இருக்கிற பழத்தட்டுகளை எடுத்துக் கொடுக்காமல் அடுத்துச் செய்யப்போகிற வியாபாரத்திற்காக நறுக்குகிறார் என்று புரியாமல் நான் சலிப்படைந்து பழத்தட்டை நானே எடுக்கப் போக…
“வேண்டாம் அது ஒரே தூசி! உங்களுக்குப் புதிதாக நறுக்கித் தருகிறேன்” என்றார் பாருங்கள், அசந்து போனேன்! பலரையும் கடந்து தாண்டி வந்து இவரிடம் வியாபாரம் செய்கிறோம் என்பதால் இந்தக் கரிசனமா? சொல்லத் தெரியவில்லை.
ஒரு வித்தியாசமான பழமும் இல்லை. தர்பூசணி, அன்னாசி, ஆப்பிள், வாழைப்பழம், சப்போட்டா, திராட்சை ஆகியவை கொண்ட கலவைப் பழத்தட்டு இது. வாழைப்பழம் மட்டும் அபரிதமான இனிப்பு. தனியே ஒரு சீப்பு வாங்கிக் கொள்ளலாம் என்று கூடத் தோன்றியது. இதன் ருசியை நம் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையின் வாழைப்பழத்தை ஒப்பிட்டுச் சொல்லலாம். சாப்பிட்டு முடித்து நகர்ந்ததும் தொப்பிக்காரர்கள் மறுபடி சூழந்துகொண்டார்கள். கடைசியில் 2 டாலர்களுக்கு பேரம் முடிந்தது. சிவாவும் நானுமாக ஆளுக்கு ஒன்று வாங்கிக் கொண்டோம்.
தொப்பிகளை வாங்கிய பிறகும் பிற தொப்பிக் கடைக்காரர்கள் வேறு ஓர் இரகத் தொப்பியைக் காட்டித் தொந்தரவு செய்ய, நாங்கள் அந்த லக்ஷ்மண் (மஞ்சள்) கோட்டை நோக்கி ஓடினோம். இந்த யோசனை நன்றாகவே வேலை செய்தது.
இந்திய பாகிஸ்தான் எல்லையில் காணப்படும் ரெட்டை வேலியைவிட இது நன்றாக வேலை செய்கிறதே! பரவாயில்லையே.
அங்கு ஓர் கோயில் என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம் போலிருக்கிறதே! ஆங்கோர் வாட்டினுள் நுழையும்போதே இருகாவலர்கள் எங்கள் நுழைவுச் சீட்டுகளை வாங்கிப் பார்த்து அதில் உள்ள எங்கள் புகைப்படங்களை ஏதோ குடியேற்ற அதிகாரிகள் விமான நிலையத்தில் சில கணங்கள் நம் முகத்தை உற்றுப் பார்ப்பார்களே, அப்படிப் பார்த்தார்கள். நாங்கள் நடக்க நடக்க பேருந்து பேருந்தாக ஜப்பானியர்களும் ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் வந்து ஏகமாய் இறங்க ஆரம்பித்த எனக்கு மிக வியப்பாகப் போய்விட்டது.
நம் தமிழ் மன்னர்கள் உலகின் மிகப் பெரிய இந்துக்கோயிலை இங்கே வந்து கட்டி, இந்த நாட்டில் இவ்வளவு வெளிநாட்டுப் பயணிகள் வந்து பார்த்து இரசிக்கும்படி செய்திருக்கிறார்களே, நம் மண்ணில் இப்படி ஒரு பிரமாண்டத்தை விட்டுவிட்டார்களே என்கிற ஏக்கமும் எனக்குள் ஏற்பட்டது.
உலகில் உள்ள இந்துக்கள் அல்லாதவர்களுக்குக்கூட உலகின் மிகப் பெரிய இந்துக் கோயிலைப் பற்றித் தெரிந்து இப்படி வந்து குவிகிறார்களே, ஆனால் நம் பார்வையில் இந்து பக்த கோடிகள் ஒருவரைக்கூட இங்கே காண முடியவில்லை, ஏன் இப்படி என்கிற ஏக்கமும் கூடவே சேர்ந்துகொண்டது.
பேருந்துகளில் வந்து குவியும் இவ்வளவு சுற்றுலாப் பயணிகளையும் படம் எடுத்து அவ்வளவு முகங்களையும் நுழைவுச்சீட்டில் பதித்து, யப்பா! சாமி! பெரிய பணிதான் என்று ஆங்கோர் நகராட்சியின் மாட்சிமையை வியந்து நோக்கினேன்.
ஆங்கோர்வாட், இந்த நாட்டின் மிகப் பெரிய கொடை டாலர்களை அள்ளிக் கொட்டுகிற (தலைக்கு 20 டாலர்கள்!) கஜானாபோல!
கம்போடிய நாட்டின் முக்கிய வருமானமே இந்த ஒரு கோயில்தானாம்.
ஆனால் உள்ளே நுழைந்தால்தான் ஆங்கோர்வாட் தொல்லியல் துறை; நகராட்சியின் அலட்சியம் புரிகிறது.
சிலைகள் சரிந்து கிடக்கின்றன. உருவங்கள் முழுமையின்றியும் மூக்கு உடைத்தும் கைகால்கள் இன்றியும் காணப்படுகின்றன. கோயிலின் பல பகுதிகளை பல மரங்கள் வேர்களால் விழுங்கிக் கொண்டிருக்கின்றன.
கோயில் சிலைகளும், வலம் வரும் பாதைகளும் கறைபடித்தும் பாசிளால் ஆக்கிமிக்கப்பட்டும், மிகப் பாழடைந்த நிலையில் இருக்கின்றன.
உண்மையான பக்தர்கள் இவற்றையெல்லாம் காண நேர்ந்தால் கண்ணீர் வடிப்பார்கள். உரியவர்களைச் சபிப்பார்கள்.
ஆங்கோர் நகராட்சிக்கோ இந்நாட்டின் தொல்லியல் துறைக்கோ இன்னுமொரு பழிபாவமும் காத்திருக்கிறது.
அது, இங்கு உள்ளே உள்ள விஷ்ணுவின் தலை உடைந்துவிட்டது என்பதற்காக அதில் ஒரு பெளத்தர் சிலையைப் பொருத்தியிருக்கிறார்கள்.
இதுமட்டுமா? இந்த இந்துக் கோயிலுக்குள் பெளத்தர் சிலைகளை ஏராளமாக நிறுவி வழிபடவும் ஆரம்பித்துவிட்டார்கள். இங்கு Hall of thousand Buddas என்று ஒன்றும் உண்டு. இதுவும் சரித்திர காலத்திற்குப் பிறகு நுழைக்கப்பட்டதுதான்.
இக்கோயில் உருவாகக் காரணமாக இருந்த சூர்யவர்மனோ இக்கோயிலை நிர்மாணித்த திவாகரப் பண்டிதனோ இக்கோயிலை முழுக்க முழுக்க ஓர் இந்துக்கோயிலாகத்தான் பார்த்தார்கள்.
ஆங்கோர்வாட் உருவான காலமான பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குச் சற்று முன்பே கம்போடியாவில் பெளத்தம் பரவ ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் சூர்யவர்மனும் திவாகரப் பண்டிதனும் இது ஓர் இந்துக்கோயில் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.
ஆங்கோர்வாட் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டு போர்ச்சுக்கீசியரால் கண்டுபிடிக்கப்பட்டு காடுகள் நீக்கப்பட்டு அணுகப்படும் கோயிலாக இது ஆனதும்தான் இக்கோயிலினுள் பெளத்தம் நுழைந்தது. இந்து மதத்தைக் கட்டிக்காக்க இந்த மண்ணில் எவரும் இல்லாததால் பெளத்த நாடான இதற்கு, இக்கோயிலினுள் பெளத்தத்தைக் கொண்டுவர மிக வாய்ப்பாகிப் போனது.
இந்த இரண்டுமே ஒரே நாட்டிலிருந்து வந்த மதங்களாக இருப்பதாலும் இவற்றைப் பிரிக்க வேண்டாம் என்று எண்ணியிருப்பார்களோ என்னவோ!
Half of thousand Buddas பற்றிய ஒரு செய்தியை அவசியம் நான் சொல்ல வேண்டும். இதைச் சொல்ல விட்டுவிட்டு எங்கோ விலகி வந்துவிட்டேன்.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
































