» Mullai Periyar Dam Issue .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Saturday, 6 Mar 2010

Mullai Periyar Dam Issue

periyar-dam.jpgசெயற்குழுவா பகைக்குழுவா?

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சிபாரிசு செய்துள்ள நிபுணர் குழுவில் தமிழகம் அவசியம் இடம்பெறவேண்டும் என்கிற ஜெயலலிதாவின் கருத்து மிக அருமையான ஒன்றாகவும், இந்த விஷயத்தில் தி.மு.க. பொதுக்குழு எடுத்துள்ள தீர்மானம் அபத்தமாகவும் படுகிறது. இது என்ன செயற்குழுவா, பகைக்குழுவா?

“இது கேரள அரசிற்குச் சாதகமான முடிவல்ல” என்று பதிலிறுத்த தமிழக முதல்வர், தம் கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானத்தை இந்த விஷயத்தில் ஆதரிப்பதன் மூலம் கேரள அரசிற்குச் சாதகமான முடிவை இவரே எடுத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

கேரள அரசு, மிட்டல் குழுவின் கருத்திற்கு (அணை வலுவாகவே உள்ளது) எதிர்ப்புத் தெரிவித்து அதை எடுபடாமல் செய்து மீண்டும் ஓர் ஐவர் குழுவுக்கு உச்சநீதிமன்றத்தில் சிபாரிசு பெற்று, அதை உடனடியாக மகிழ்ந்து வரவேற்றிருக்கிற நிலைபாட்டைப் பார்க்கும்போது, இதை எப்படிக் கேரள அரசிற்குச் சாதகமற்ற விஷயம் என்று வாதிட முடியும்?

சாதகமாக இல்லாவிட்டால் கேரள அரசு ஏன் இந்தப் புது முடிவை ஆதரிக்கப்போகிறது?

வழக்குத் தொடுத்தவர், நீதிமன்றத்திற்குத் தொடர்ந்து வராமல் போனால் அதை எக்ஸ் பார்ட்டி என்பார்கள். இத்தகைய நிலை யார்மீது வழக்குத் தொடுக்கப்பட்டதோ அவருக்குச் சாதகமாக ஆகிவிடும். வேறு வகையில் சொன்னால் வழக்கு விசாரிக்கபடாமலே தள்ளுபடி செய்யப்படும். உச்சநீதிமன்றம் நியமிக்கும் குழுவில் தமிழக அரசு இடம்பெறாமல் போனால், அதில் இரு குற்றச்சாட்டுகள் எழும்.

முதலாவது, ஒரு மாநில முதல்வர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஆலோசனைக்குக் கட்டுப்படவில்லை என்பது.

இரண்டாவது, நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யாத குழுவில் நாங்கள் எடுப்பதுதான் முடிவு என்று உச்சநீதிமன்றம் உறுதி காட்டுமானால் அது தமிழகத்திற்கு நன்மை செய்யும் தீர்ப்பாக இராது.

உச்ச நீதிமன்றம் இந்த நாட்டின் உச்சபட்ச சக்தி. சில நேரங்களில் மத்திய அரசுகூட இதனிடம் கைகட்டி நிற்க வேண்டியதுதான். இதைத் தமிழக முதல்வரே உணர்ந்திருக்கிறார் என்பதை “இன்றைய அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசிடமிருந்து ஒரு தெளிவான முடிவை எதிர்பார்க்க இயலாத நிலை” என்கிற இவரது கருத்து நன்கு வெளிப்படுத்துகிறது.

மத்திய அரசு கைகட்டி நின்று வேடிக்கை பார்க்க சர்வ வல்லமை படைத்த உச்சநீதிமன்றம் தமிழக நலனுக்கு எதிராக முடிவெடுக்கும் சூழ்நிலையைத் தமிழகமே உருவாக்கி வருவது உண்மையில் வருத்தத்திற்குரிய செயலே!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Most Commented Posts


Leave a Reply