 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
எம்.ஜெயபால், தாம்பரம்
|
 |
மின்னனு வாக்குப்பதிவுடன் வாக்குச் சீட்டுப் பதிவும் தேவை என்கிறாரே இராமதாஸ்!
|
 |
சின்னப்பிள்ளைகளின் உரையாடலில் நியாயமில்லாததைக் கேட்டால் அஸ்குபுஸ்கு என்று பதில் சொல்வார்கள். இதையே மருத்துவருக்குப் சொல்லலாம் போல் தோன்றுகிறது.
|
|
 |
ஆர்.பிரதாப், பெரம்பலூர்.
|
 |
ஏப்ரல் 19இல் புதிய தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்துவோம் என்கிறாரே (தமிழக) மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதிய செயலாளர்?
|
 |
படம் ரீலீசானதும் தியைரங்கை முற்றுகையிடும் ரசிகர்களைப் போல் இந்தக் கம்யூனிஸ்டுகள் ஏன் நடந்து கொள்கிறார்கள்? ஒருவேளை கலைஞர் இருப்பது போல் எப்போதும் புகழ் ஒளியில் இவர்கள் இருக்க விரும்புகிறார்களோ?
|
|
 |
எம்.பாலு, செங்கல்பட்டு.
|
 |
ஓய்வு பெறுவது எனது சொந்த விஷயம் என்கிறாரே கருணாநிதி?
|
 |
இவரது பேச்சு முதலில் குறும்படத்திற்கு ஏற்ற மாதிரி அமைந்தது இப்போது பார்த்தால் அது மெகா, மெகா சீரியலுக்கே உதவும் போலிருக்கு.
|
|
 |
ஜே.விஸ்வநாதன், மேடவாக்கம்.
|
 |
தாய்மொழியால் அனைவரும் தெலுங்கர்களே. எனவே ஆந்திராவைப் பிரிக்க வேண்டாம் என்கிறாரே ஜெயேந்திரர்?
|
 |
காங்கிரசுக்கு இது புரியாமல் போனதால்தான் சிக்கலே!
|
|
 |
என்.சூரி, விருதுநகர்.
|
 |
காதலால் கொலை, காதலால் தற்கொலை என தமிழகத்தில் இரண்டு பேராசிரியைகள் ஒரே நாளில் முடிவு கண்டது பற்றி?
|
 |
ஒரு பொறியியல் கவுன்சிலிங்கில் வென்றவர்கள் ஐம்பொறிகளின் கவுன்சிலிங்கில் பெயிலாகியிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. பாராசூட் இல்லாமல் உயரத்திலிருந்து ருசித்தால் இப்படித்தான்.
|
|
 |
வி.செண்பகராஜன், கும்மிடிப்பூண்டி.
|
 |
நடிகர் பார்த்திபனின் ‘கிறுக்கல்களை’ ஒரு தனியார் இணையதளம் சுட்டுவிட்டதாமே?
|
 |
என்ன கிறுக்கினாலும் சுட்டுவிடுவார்கள் போலிருக்கு. இப்படியே போனால் நெம்புகோல் இனி எந்த எழுதுகோலும் நகராது.
|
|
 |
ஜி.சேஷகிரிராவ், சென்னை.
|
 |
நாடு முழுவதும் நிலுவையிலுள்ள வழக்குகள் அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடிக்கப்பட்டு விடும் என்கிறாரே மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி?
|
 |
மூன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பழைய பேப்பர்களைப் பத்திரப்படுத்தினால் அவை செல்லரிக்கும். இந்த உண்மையை யாரோ மொய்லியிடம் மொய் எழுதியிருக்கிறார்கள். இல்லாவிடில் இப்படி மங்களம் பாடமாட்டார்.
|
|
 |
எம்.சீனிவாசன், வேலூர்.
|
 |
தெலுங்கானா பிரச்னை தொடர்பாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறதே, இதற்குப் பலன் இருக்குமா?
|
 |
தெலுங்கானா கெளரவர்களுக்கும், இந்த பஞ்ச பாண்டவர்களுக்கும்தான் இனி கெளரவப் போரா? நல்ல சோனியா, நல்ல மன்மோகன்சிங்! மகாபாரதங்களை இவர்கள் டி.வி.யில் பார்க்கவில்லை போலிருக்கு. அதுதான் நேரில் பார்க்க விரும்புகிறார்கள்.
|
|
 |
எம்.சுரேஷ், மூலக்கடை.
|
 |
காவல் துறையிலேயே போலி ஐ.பி.எஸ்., நடமாட்டம் இருந்தது பற்றி?
|
 |
என்னங்க செய்றது? திருடன் போலீஸ் விளையாட்டு இன்னமும் உயர்மட்டத்தில்கூட இருக்கிறது.
|
|
 |
எம்.பாட்சா, செங்குன்றம்.
|
 |
இந்தமுறை காதலர் தினம் அமைதியாக முடிந்தது பற்றி?
|
 |
அப்பட்டமான மனித உரிமை மீறல் சட்ட அணுகுமுறைகளில் காவல்துறையினருக்கே நம்பிக்கை போய்விட்டதையே இந்தப் பொறுப்பற
|
|
 |
எம்.காசி, தூத்துக்குடி.
|
 |
மனிதன் அறநெறி நூல்களைப் படிக்க வேண்டுமா?
|
 |
நிச்சயம் படிக்க வேண்டும். அதுதான் அவனது அழுக்காறுகளுக்கான வாக்குவம் கிளீனர் இந்த கிளீனர் இருந்துவிட்டால் அவன் மனதில் ஒரு தும்பு தூசு இருக்காது.
|
|
 |
எம்.சரவணன், பெருங்குடி.
|
 |
விஜயகாந்த் வீட்டு முன்பும் அவரது கட்சிக்காரர்கள் புகார் வாசிக்கிறார்களே?
|
 |
அ.தி.மு.க.வினரை ஒருவிதத்தில் தே.மு.க.வினர் பின்பற்றுவதைப் பார்த்தால் இவர்களின் கூட்டு உறுதியாகிவிட்டதோ என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
|
|
 |
ஜே. தனபாலன், திருப்பூர்.
|
 |
அரசியலுக்கு வந்து பேர் வாங்காமல் போன நடிகர்களைப் பற்றி?
|
 |
கார்த்திக், சரத்குமார், விஜயா டி.ராஜேந்தர் எல்லாம் உங்களுக்கு வேண்டாதவர்களாக இருக்கலாம். ஆனால் எனக்கு அவர்கள் வேண்டியவர்கள். நாட்டுக்கு அவர்கள் தூணாக உதவாவிட்டாலும் எனக்கு அவர்கள் துணுக்குக்காக உதவுகிறார்கள்.
|
|
 |
கே.வெங்கட், விழுப்புரம்.
|
 |
அடுத்து மத்தியில் அமரப்போவது ஆணா, பெண்ணா?
|
 |
அமர்த்தப்போவது பெண்.
|
|
 |
ஏ.காயத்ரி, திருவல்லிபுத்தூர்.
|
 |
இவ்வளவு ஜனத்தொகை இருந்தும் இந்தியா விளையாட்டில் பெரிய உயரங்களைத் தொடாதது ஏன்?
|
 |
அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பிறகு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் அள்ளிக் குவித்திருக்கும் மெடல்களைக் காணும்போது நல்ல நம்பிக்கை ஏற்படுகிறது. அரசியலை நம் நாட்டில் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்கள். விளையாட்டிலோ அரசயிலைக் கலக்கிறார்கள். இது தவிர்க்கப்பட்டால் இந்தியா நன்கு உயரம் தொடும்.
|
|
 |
பி.எல்.ராமச்சந்திரன், கொடைக்கானல்.
|
 |
கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜனின் மர்ம மரணம் குறித்து…?
|
 |
கட்சிப் பிரச்னைகளே அவரது மரணத்திற்குக் காரணம் என்றும், நான்தான் காரணம் என்று எவரேனும் சொன்னால் என் பிணம்தான் அடுத்துவிழும் என்றும் அவரது மனைவி சரஸ்வதி சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது. எதுவாக இருப்பினும் இவரது தற்கொலை முயற்சி ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிட்டது. பிரச்னையோ உறுதியாக நின்று சமாளித்திருக்கக் கூடியவையாகவே தெரிகின்றன. குடிக்கப் பயன்படுத்தும் நீரைக் கொண்ட ஏரியில் விழுந்து மாய்ந்தது இன்னும் கொடுமை!
|
|
 |
ஏ.ராதாகிருஷ்ணன், தேனி.
|
 |
இந்து சமய அறநிலையத்துறை 10,000 சைக்கிள்களை வழங்கப் போகிறதாமே?
|
 |
38,500 கோயில்களை நிர்வகிக்கும் இத்துறையில் 10,000 பேர்களுக்குத்தான் இந்தக் கொடுப்பினை. நல்லவேளை தமிழக அரசு பள்ளிப் பிள்ளைகளுக்குக் கொடுக்க, ஆறு மாதங்களிலேயே இரும்புக் கடைகளுக்குள் ஐக்கியமாகிவிட்ட பல சைக்கிள்களைப் போல் அல்லாமல் ஐ.எஸ்.ஐ. முத்திரை உள்ள சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளனவாம். இதற்காகவேனும் நன்கு பாராட்டலாம்.
|
|
 |
எஸ்.சீனிவாசன், கரூர்.
|
 |
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இரசிகரா நீங்கள்?
|
 |
இல்லை. நான் ஹரிஹரனின் இரசிகன். ஆனாலும் எஸ்.பி.பி.யின் குரலில் எனக்கு ஈர்ப்பு உண்டு. 60 வயதைக் கடந்தவரின் குரலா அது? எவ்வளவு கொப்பளிக்கும் இளமை! கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து உணர்ச்சிகளை அதல் உருக்கிக் கலந்து கதாபாத்திரமாகவே ஆகிப் பாடுவதில் எஸ்.பி.பி.க்கு இணை எஸ்.பி.பி.தான்!
|
|
 |
எம்.பழநியப்பன், கொச்சி.
|
 |
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையின் பணி எப்போது முடியும்?
|
 |
அமெரிக்காவின் ஜம்பம் அந்த மண்ணில் பலிக்கவில்லை. உள்நாட்டுத் தகவல்களைச் சரிவரத் தெரிந்து கொள்ளாமல் தீவிரவாதிகளை கோட்டைவிட்டுவிட்டு அப்பாவி மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. இதற்காகவா வந்தீர்கள்?
|
|
 |
‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.
|
 |
தோனியிடம் நீங்கள் விலக்கும் விஷயம்?
|
 |
டென்ஷன் உணர்வு நரம்புகள் அறுந்து வரும் நிலை இரசிகர்களுக்கு ஏற்பட்டாலும் கூலாகக் சூழ்நிலையைக் கையாண்டு அணியைக் கரைசேர்ப்பதிலேயே குறியாக இருக்கும் இயல்பு எனக்கு வியப்பு. கரைசேர்க்கும் தோனி, இனி தோனியல்ல! தோணி!
|
|
 |
|
|