Saturday, 6 Mar 2010
உரிமைக் குரல்
கொடுக்கும் விதம்
உரிமைக்குக் குரல் கொடுப்பது என்றால் சில பாடகர்கள் உச்சக் குரலில் கத்துகிறார்களே, அப்படிக் கத்துவது என்று சிலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இது சரியல்ல என்பதுடன் எடுத்த எடுப்பிலேயே கோபப்படுவதும் அல்லது சத்தம் போடுவதும் இந்த இரகத்தைச் சேர்ந்ததுதான். இவை யாவும் சரியான அபத்தங்களே!
காரணம் நம் பக்கத்து நியாயங்கள் மட்டுமே நமக்குத் தெரிய, ஓர் எதிர்பாராத கோணத்தில் நாம் மடக்கப்பட வாய்ப்பு உண்டு. அதாவது நம் செயல்பாடுகளில் விட்டுவிட்ட கோட்டைகளையும் ஓட்டைகளையும் நம் எதிராளி சுலபமாய்க் கண்டுபிடித்து அதன் மூலம் நம் வாயை அடைத்துவிட வாய்ப்பு அதிகம். குரலை ஏகமாய் உயர்த்த உயர்த்த இந்த வாயடைப்பு மிகக் கடுமையாக ஆகிவிட வாய்ப்பு அதிகம். வேறு ஒரு வகையில் சொன்னால் இதற்கெனப் பலர் முன்னிலையில் அவமானப்படவும் நேரும்.
நாம் நம் பக்க நியாயத்தை தனிப்பட்ட முறையிலும் தன்மையாகவும் பண்போடும் உரைக்காதபோது, இன்னொரு தவறும் நிகழந்துவிட வாய்ப்பு உள்ளது. அது, நம்மையுமறியாமல் உணர்ச்சிவசப்பட்டு ஒரு தவறுதலான வார்த்தையை உதிர்ப்பது.
அவ்வளவுதான் இப்போது பிரச்னையே திசை திரும்பிவிடுகிறது. “உங்க பக்கம் நியாயம் இருக்கலாம். அது இப்போ ே’கள்வியே இல்லை. ஆனால் அந்த வார்த்தையை எப்படி நீங்கள் சொல்லப் போயிற்று? இதை நான் சும்மா விடுவதாக இல்லை? என்று அடிப்படை விஷயத்திலிருந்து உரியவர்கள் தப்பிவிடுகிறார்கள். எனவே பிறர் செய்யும் தவறுக்கு நாம் செய்யும் தவறு சரியான பரிகாரமாகாது. மாறாக நாம் செய்த தவறே அதிகம் பேசப்படும்.
குரலை உயர்த்துவதும், தவறான வார்த்தைப் பயன்பாடுகளும் உரியவர்களை மட்டுமல்ல, பார்ப்பவர்களையும் இதைக் கேள்விப்படுபவர்களையும்கூட எதிராளியின் பக்கம் சாயச் செய்துவிடும்.
எனவே குரலை உயர்த்துவதும் வார்த்தைகளை வரம்பு மீறி நழுவவிடுவது ஆகியவற்றை விட்டுவிட்டுமு, நம் நியாயத்தை உறுதியான உள்ளத்துடன் மென்மையாக எடுத்துரைத்து எதிரியை அழகுறச் சாய்க்க வேண்டும். இதுதான் காரியவாதிகளின் வழி!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?
2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?
2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?
2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!
2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!
2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!
2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!
2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!
2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

































March 8th, 2010 at 11:37 pm
எனவே குரலை உயர்த்துவதும் வார்த்தைகளை வரம்பு மீறி நழுவவிடுவது ஆகியவற்றை விட்டுவிட்டுமு, நம் நியாயத்தை உறுதியான உள்ளத்துடன் மென்மையாக எடுத்துரைத்து எதிரியை அழகுறச் சாய்க்க வேண்டும். இதுதான் காரியவாதிகளின் வழி-superb leena sir