» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Saturday, 6 Mar 2010

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…

நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

குத்தாலம் சிவன்கோயில் தலவிருட்சம்
கூதாளி
(IPOMOEA SEPIARIA KOEN)

இது சித்த மருத்துவத்தில் பாண்டி, மஞ்சூகம் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் வடமேற்கு மலை நாடுகளிலும், நீலகிரியிலும் பயிராகும் கொடி வகையாகும். இதன் வேர் மருத்துவத்துக்குப் பயன்படுகிறது.

சித்த மருத்துவம்

இது துவர்ப்பு, கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. சூதகம் உண்டாகும். பெண்களைப் பருவமடையச் செய்யவும் உரிய குணம் உடையது. இது சூதக அழுக்கை நீக்கும். இரத்தம், நீர் ஆகியவற்றிற்கு செந்நிறத்தைத் தரும்.

வேர் : இதன் வேரை குடிநீரிட்டுக் குடிக்க மேற்கூறிய பண்புகளைத் தரும்.

* இதனை அரைத்த வீக்கம், புண், படை இவற்றிற்குப் பூசலாம்.

* அதிமதுரத்துடன் இதனைச் சேர்த்துக் காடிவிட்டு அரைத்து, எலும்பு முறிவினால் உண்டாகும் நோயக்கும், வீக்கத்துக்கும் போடலாம்.

* மஞ்சிட்டி, சந்தனம், மருட்கிழங்கு என சம எடை அளவாக சேர்த்தரைத்து அல்லது பொடித்து நெய்யிலிட்டு காய்ச்சி, தீச்சுட்ட புண் மீது தடவலாம்.

இதனை நிறத்துக்காகத் தைலங்களில் சேர்ப்பதுண்டு. இருப்பினும் அடிக்கடி வழங்கின மனக்கலக்கம் உண்டாக்கும் என்பது சிலரின் கருத்தாகும்.

பிற செய்திகள்

‘ஐபோமியா செபாரியா’ என்னும் கூதாளி கொடியானது சமநிலத்திலும், மலைப் பாங்கிலும், புதரின் மேலும், வேலியின் மேலும், சுற்றிப் படர்ந்து வளரும். “கன்வால்வு லேசி” என்னும் இத்தாவரக் குடும்பத்தில் 57 பேரினங்களும், 1100 சிற்றினங்களும் உள்ளன என்பர் தாவர இயலார்.

‘ஐபோமியா’ இனத்தில் 400 இனங்கள் வளர்கின்றன. இக்குடும்பம் உலகில் குளிர் நாடுகளைத் தவிர மற்ற எல்லாப் பாகங்களிலும் வளர்கிறது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கூடுதல் செய்தியாகும். இருப்பினும் நிகண்டுகள் ‘துடி’ என்னும் மற்றொரு பெயரையும் இதற்கு சூட்டியுள்ளன. இம்மலரில் துளையொன்று இருக்கும் இதற்கு தூம்பு என்று பெயராகும்.

இப்பூ மலர்ந்த பின் கொடியிலிருந்து கழன்று விழும். இம்மலரின் காம்பு கழன்று உதிர்தலைப்போல தலைவியின் கை வளைகள் சோர்ந்து வீழ்வதை அழகாக குறந்தொகைப் பாடலில் விளக்கியுள்ளார்.

இதனைக் குறுமலர் எனவும் பூக்காட்டாசிரியர் உரைப்பார். வெண்குருகு தன் சிறகை விரித்து வானத்தில் பறப்பதற்கும் உவமைப்படுத்தி அவ்வையார் பாடியுள்ளதாக சங்க இலக்கிய நூல்கள் தெரிவிக்கின்றன.

இதன் சங்க இலக்கியப் பெயராக கூதளம் எனவும், வேறு பெயர்களாக கூதளி, வெண் கூதாளம், தாளி, செங் கூதாளம் எனவும், உலக வழக்குப் பெயராக தாளிக் கொடி, தாளக்கொடி, வெண்டாளி எனவும் குறிக்கப்படுகிறது.

இதனைப் போன்று ‘செங் கூதாளம்’ என்ற வேறு கொடியும் உண்டு. எனினும் தாவரவியலாளார்கள் 2 கொடிகளையும் ஒரே சிற்றினத்தில் குறித்துள்ளனர்.

குறுந்தொகை, தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை, புறநானூறு, அகநானூறு, நற்றிணை, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது. நச்சினார்க்கினியர், அவ்வையார் போன்ற புலவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

குத்தாலம் சிவன் கோயில் தலவிருட்சமாக கூதாளி வணங்கப்படுகிறது. இதன் வேறு பெயராக ‘துடி’ எனவும் அழைக்கப்படுகிறது.

சங்க இலக்கியம்

கூதளம் என்னும் கொடி வெண்ணிற மலர்களை உடையது. இது ‘வெண் கூதாளம்’ எனப்படும், வாசனையுடையது. குறுகிய காம்பினை உடையது. குளிர்ச்சியான சாரலில் வளரும். கார்காலத்தில் பூக்கும் எனவும், இதன் மலர் காம்பினை உடையது எனவும், மேலும் இது மலர்ந்த பின்னர் காம்பிலிருந்து மடல் கழன்று விழும் எனவும், இதனைத் தனியாகவும் பிற மலர்களுடனும் சேர்த்தும் கட்டி, தெய்வத்துக்குச் சூட்டுவதோடு ஆடவர், மகளிர் அணிவர் என்றும் சங்க நூல்கள் கூறுகின்றன.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2010/02/26 திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சம் கூந்தற் பாக்கு மரம்

2010/02/19 கும்பகோணம் கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம் கூந்தப்பனை

2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்

2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்

2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்

2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்

2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்

2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி

2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி

2009/12/25  ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்

2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்

2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி

2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு

2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு

2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply