» 2010 » March .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Prohibit unnecessary blocking

Posted on Friday 26 March 2010

people-fight-for-rights1.jpgசாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

திருச்சி, காட்டூர், திருவள்ளூர் என்று அண்மைக் காலம் வரைக்கும் தமிழகத்தில் பொதுமக்களால் சாலை மறியல் நடந்து வருவது வருத்தம் தருகிறது.

உலகிலே எங்கும் நடவாத செயலாகவே என்னுடைய உலக அனுபவம் சொல்லுகிறது.

பொதுமக்களுக்கு இந்தப் புண்ணியப் பாதையைக் காட்டிக் கொடுத்தவர்களே அரசியல்வாதிகள்தாம்.

இரயில் மறியல், சாலை மறியல் (நல்லவேளை! கடல் மறியல் வான்மறியல் சாத்தியமற்ற விஷயங்கள்!) என்று இவர்கள காட்டிய பாதைகள் இவர்கள் அநேகமாகக் குறைத்துக் கொண்டுவிட, பொதுமக்கள் பிடித்துக் கொண்டுவிட்டார்கள். ஆகா! என்ன அருமையான வழி இந்த அண்ணன்கள் (?) காட்டிய வழி என்று!

காரணம் பெரும்பாலும் கைமேல் பலன்!

சாலை மறியல் என்றதுமே காணக் கிடைக்காத பதவியில் இருப்பவர்கள் கூடச் சாலைக்கு வந்து மக்களைச் சந்திக்கிறார்கள்.

உடனே வாக்குறுதி தந்தது (!) கலைந்து போகச் சொல்கிறார்கள் (மசியாதவர்களுக்கு நல்ல பூசையும் கிடைப்பது தனிக்கதை!)

இப்படியே காலம் ஓட, சில நேரங்களில் வேலை ஆக, சில நேரங்களில் இரண்டாவது சாலை மறியலும் நடக்கிறது.

சாலை மறியல் செய்தால் கை மேல் பலன் என்று பொதுமக்களை நம்ப வைத்த குற்றம் யாருடையது என்று சிந்தித்துப் பாருங்கள். மக்களின் மனக் கொதிப்புகளையும் உணர்வுகளையும் உள்வாங்கிக் கொள்ளாத பதவியாளர்களும் அரசியல்வாதிகளும் சாலை மறியலை மறைமுகமாகத் தூண்டுபவர்களே.

உாய் அதிகாரி ஒருவரே சொல்லிக் கொடுத்தாராம் இப்படி - “நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டோம். பதவியில் இருக்கிற பெருமக்கள் (?) காதல போட்டுக்கலை. பேசாத சாலை மறியல் பண்ணுங்க. சரியாயிடும்!”

பொதுமக்களுக்குப் பொது மக்களே இடைஞ்சல் செய்கிற இந்த மோசமான கலாசாரத்திற்கு என்று முடிவு வரும்?

எத்தனைப் பேர் அவசரமாகப்போக வேண்டிய நிலை! பாலும் அத்தியாவசியப் பொருள்களும் சில மணி நேரம் தாமதிக்கப்பட்டாலும் அவை வீண்தான்!

மருத்துவ சிகிச்சைக்கும் கல்வித் தேர்வுகளுக்கும் நேர்முகத் தேர்வுகளுக்கும் அரக்கப்பறக்க போகிறவர்கள் எத்தனைப் பேர்! எத்துணை மனித நேரங்கள் சாலைகளில் முடக்கப்பட்டு விடுகின்றன!

முதலில் சாலையோரப் போராட்டம், கவன ஈர்ப்பு ஏற்படாவிடில் அடுத்தகட்டப் போராட்டம். இதன் பின்னர் சாலை மறியல் என்கிற படிப்படி அணுகுமுறைகூட இல்லாமல் நின்றது நிற்க சாலையில் கூடி வழிமறிப்பது என்ன நியாயம்?

ஒரு சாலை விபத்திற்குக் கூட சாலை மறியல் செய்வது என்கிற அளவிற்கு நிலைமை மோசமாகி வருகிறதே, இதற்கு என்னதான் தீர்வு!

உரியவர்கள் சிந்திக்கட்டும்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 2:48 am
Filed under: Uncategorized
Problem could be opponent

Posted on Friday 26 March 2010

குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

மரணங்கள் மனங்களை ஒன்று சேர்ப்பது உண்டு. திருமணங்களோ மனங்களில் விரிசல்களை அதிகமாக்குவதும் உண்டு. ஏன் இப்படி என்று நான் சற்று விளக்காவிட்டால் ஏன் இந்த வாதத்தை நீங்கள் ஏற்கமாட்டீர்கள்.

திருமணங்களின்போது அழைப்பிதழ்களைப் பொறுத்தவரை ‘என்னைச் சரிவர அழைக்கவில்லை’ என்றோ ‘ஏன் எனக்கு அழைப்பே இல்லை’ என்றோ புகார்கள் எழ, இதற்கான பதில்கள் உரியவர்களிடமிருந்து சாதகமாக வருவதுண்டு. (”ஆமாமா! தப்புத்தான்” பாதகமாக வருவதும் உண்டு. (”இவர் எனக்கு அழைப்பு வச்ச அழகைச் சொன்னா ஊரே சிரிக்கும்!”) இந்த இரண்டுமின்றி மெளனமாக இருந்து விடுபவர்களும் உண்டு. இந்த மெளனத்திற்கு, ‘நான் அப்படித்தான் செய்வேன்! நீ வந்தா வா! வராட்டிப் போ! என்பதுதான் மறைமுக விளக்கம்!

இம்மாதிரியான உறவுச் சீர்க்கேடுகளின்போதும் மனக்குறைகள் பெரிதாகும்போதும், “இந்த ஆளுக்கு நான் அழைப்பே அனுப்பப்மாட்டேன்” என்று முரண்டு பிடிக்கிறவர்கள் உண்டு.

“அழைப்புக் குடுத்தா வரவா போறார்? இமு வீண் வேலை” என்று அழைக்காமலிருக்க விதவிதமாகச் சாக்குச் சொல்கிறவர்கள் உண்டு.

ஒரு திருமணம் என்பது மகிழ்வின் சங்கமம். இந்தச் சங்கமத்தின்போது நம் மனக்குறைகள், கோபதாபங்கள், பழைய சண்டைகள்; நைந்து போன வரலாறுகள்; காலங்காலமாக உள்ள புகார்கள் ஆகிய அனைத்தையும் மறந்துவிட்டு, பெருந்தன்மையுடன் அழைப்பு அனுப்புவதே நல்லது.

“அவரு பெருந்தன்மையா திருமணத்திற்கு அழைச்சாருங்க. அந்த அன்பைப் புரிஞ்சுக்காம இவரு போகாம இருந்துட்டாருல்ல! இது நல்லா இல்லைங்க. இந்நாளுக்கு இது கொஞ்சங்கூட அழகுமில்லீங்க.”

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 1:51 am
Filed under: Uncategorized
Disease relief plants - Akbar Kausar

Posted on Friday 26 March 2010

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…

நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

தஞ்சை திருச்சேரையூர் ஸ்ரீசாரங்கபாணி
விஷ்ணு கோவில் தலவிருட்சம்

சங்கு புஷ்பம்(CLITORIA TERNATEA .L)

இந்தியா முழுவதும் உள்ள வெப்பப் பிரதேசங்களில் பரவலாக வளரும் “சங்கு புஷ்பம்” எனும் தாவரம் தஞ்சை மாவட்டம் திருச்சேரையூரிலுள்ள ஸ்ரீசாரங்கபாணி விஷ்ணு கோயிலில் காணப்படுகிறது. விஷ்ணு பக்தர்கள் இந்த மரத்தை மிகவும் போற்றுகிறார்கள்.இந்த மரத்துப் பூக்களை “தந்திரப்பூக்கள்” என்றும் கூறுவார்கள். மகாபாரதத்தில் இதனை “அபராஜிதா” என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

மருத்துவ குணங்கள்
சங்கு புஷ்பம் ஒரு தலைசிறந்த மருத்துவ குணம் வாய்ந்ததாகும். மூக்கில் நீர் கசிதல், மனத்தளர்ச்சி, உள் புண்கள், காய்ட்டர் என்னும் தைராய்டு கட்டிகள், யானைக்கால் வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இதன் இலைகளை அரைத்து சாறு பழிந்து அதில் சிறிதளவு சமையல் உப்பைச் சேர்த்து காதுகளில் ஏற்படும் வலி, வீக்கங்களுக்கு மருந்தாகப் பூசலாம். தோல் அழற்சி, அல்சர் வீக்கங்களுக்கு மருந்தாகப் பூசலாம். தோல் அழற்சி, அல்சர் புண்களைக் குணப்படுத்தவும் இவை மிகவும் உதவுகிறது. இதன் இலைச்சாற்றை இஞ்சியில் கலந்து, காயச்சலின் போது வெளிப்படும் வியர்வை நாற்றத்தைப் போக்கும் மருந்தாகப் பயன்படுத்துவார்கள்.

வயிற்றுப்புடைச்சல், வயிற்று உப்புசத்தைக் குணப்படுத்த இதன் விதைகளை வறுத்து வெல்லம் மற்றும் உப்புடன் கலந்து பயன்படுத்துவார்கள். மேலும், இதன் விதை மற்றும் வேர்ப்பகுதிகளை இருமல், கல்லீரல், மண்ணீரல் நோய்கள், மூட்டு குறைபாடுகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இதன் வேர்ப்பகுதி சீராக சிறுநீர் கழியவும், ஜீரண சக்தியை மேம்படுத்தவும் பயன்படுகிறது. சிறுநீர்ப்பையில் ஏற்படும் அழற்சியைக் குணப்படுத்தவும் இவை மிகவும் உதவுகிறது.

மூச்சு விடும்போது ஏற்படும் குறைபாடுகளுக்கு இதன் வேரைச் சாறு பிழிந்து அதனுடன் குளிர்ந்த பாலைக் கலந்து குடிக்கச் செய்யலாம். மலச்சிக்கல், நரம்புக் கோளாறுகளையும் இதன் விதைகள் குணப்படுத்துகின்றது.

இதன் வேர், தண்டு, பூக்கள பாம்பு - தேள் கடியினால் ஏற்படும் விஷத் தன்மைகளைப் போக்க மருந்தாகப் பயன்படுத்தலாம். கால்நடைகளின் வயிறு வீங்கி இருந்தால் இதன் வேரை அரைத்து அதனை வயிற்றின் மீது பூசச் செய்யலாம். தவறான உடலுறவினால் ஏற்பட்ட கர்ப்பத்தைக் கலைக்க, மலைவாழ் மக்கள் இந்த வேரைப் பயன்படுத்துவார்கள்.

ஆனால், இதன் இலை துளிர்களில் நச்சுத்தன்மை மிகுந்து இருக்கின்றது. யுனானி மருத்துவத்தில், இதனை “மெஜரியான்” என்று அழைப்பார்கள். இதன் இலைகளை காடியில் 48 மணி நேரம் அளவிற்கு ஊறவைத்து, அலசி, உலர்த்தி, பாதாம் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.

நச்சுத் தன்மைகளை நீக்க, ஊற வைக்கும் காடியை 48 மணி நேரத்தில் 3 அல்லது 4 முறையாவது மாற்றிவிட வேண்டியது அவசியம். இதனைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களுக்கும், நீர்க்கோப்பு வியாதிகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். தோல்நோய்கள், வயிற்றுப் பூச்சிகளைப் போக்கிக் குணப்படுத்தவும் இவை மிகவும் உதவுகிறது.

அடங்கியுள்ள மருத்துவப் பொருட்கள்

இதன் வேர்ப்பகுதியில் டாராக்ஸிரால், டாராக்ஸி ரோன், சின்னாமிக் அமிலம், அந்தோஸான்தீன், குளுக்கோசைடு போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன. இதன் இலைகளில் லாக்டோன், அபாராஜிடின், கிளிடோரின் ஆகியவை காணப்படுகின்றன.

அளவு

இதனைக் கஷாயமிட்டு 50 முதல் 100 மில்லி வரையிலோ அல்லது இதன் பசையை ஒன்றரை கிராம் அளவிலோ மருந்தாகப் பயன்படுத்தலாம்.

“எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை” என்பது கபிலர் வாக்கு.

கருவிளை என்பது கருங்காக்கணம், செருவிளை என்பது வெண் காக்கணம், இவையிரண்டும் வெவ்வேறு கொடிகள். கருநீலப்பூக்கள் உடையதால் செருவிளை எனவும் வழங்கப்பட்டன. இவற்றுள் கருவிளையின் மலரை காதலர் பிரிந்த மகளிரின் நீர் வாரும் கண்களுக்கு உவமை கூறினார், கீரன் எயிற்றியனார்.

‘கடி தடங் காக்கணமே’ என்று கருவிளை மலரைப் பெண் குறிக்குப் பிற்கால புலவர்கள் கூறுவதுபோல, தாவரவியலிலும் இம்மலர் இக்குறியின் உள்ளுறுப்பை ஒத்தது என்னும் பொருள்பட இதற்கு ‘கிளைடோரியா’ என்ற பேரினப் பெயர் வகுத்தனர்.

இது உலக வழக்குப் பெயராக நீலக் காக்கட்டான், கருங்காக் கட்டான், காக்கட்டான், கண்ணி, காக்கணம்பூ, வெண்காக்கணம், சங்கு புட்பம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் குறிஞ்சிப்பாட்டு, நற்றிணை, அகநானூறு, ஐங்குறு நூறு முதலிய நூல்களில் சிறப்பித்துப் பாடப்பெற்றுள்ளன.

ஆண்டாள், கருவிளையை ‘கார்கோடப்பூ’ என்று அழைக்கின்றாள் என இலக்கிய நூல்கள் தெரிவிக்கின்றன. இக்கொடியானது தனித்தும், வேலிகளிலும், புதர்களிலும் ஏறிப் படரும் சுற்றுக் கொடியாகும். இப்பேரினம் வெப்ப நாடுகளில் அதிகம் வளர்கிறது. அதிலும், மேலை நாடுகளில் மிகுந்து காணப்படுவதாக புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2010/03/19 திருச்சாய்க்காடு சாயாவனேசுவரர் கோயில் தலவிருட்சம் கோரைக்கிழங்கு

2010/03/12 வெண்குஷ்டத்தைக் குணமாக்கும் கொட்டை பூவரசன் மரம்

2010/03/06 குத்தாலம் சிவன்கோயில் தலவிருட்சம் கூதாளி

2010/02/26 திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சம் கூந்தற் பாக்கு மரம்

2010/02/19 கும்பகோணம் கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம் கூந்தப்பனை

2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்

2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்

2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்

2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்

2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்

2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி

2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி

2009/12/25  ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்

2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்

2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி

2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு

2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு

2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

admin @ 1:31 am
Filed under: Uncategorized
Samayal

Posted on Friday 26 March 2010

cartoon-chef.jpgமாங்காய் காரத் தொக்கு - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்

பெரிய மாங்காய் - 6
மிளகாய்ப் பொடி - 10 தேக்கரண்டி
வெந்தயப் பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சிறியக் கட்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி

செய்முறை
மாங்காயைக் கழுவி தோல் சீவி காரட் துருவியில் துருவவும். களிம்பு ஏறாத சட்டியில் எண்ணெய்யை விட்டு, கடுகு போடடு வெடித்ததும், பெருங்காயப் பொடியைச் சேர்த்துக் கிளறி, துருவிய மாங்காயைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி எல்லாம் சேர்த்துக் கிளறவும். அடிப்பிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும். மாங்காய் நன்றாக வெந்து எண்ணெய் தெளிந்து வந்ததும், வெல்லத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கி ஆற வைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால், ஒரு வாரம் கெடாமல் இருக்கும். பிரிஜ்ஜில் வைத்தால் அதிக நாட்கள் கெடாது.

Chettinadu Samayal

2010/03/19 மாங்காய் ஊறுகாய்

2010/03/12 மாவடு

2010/03/06 அடை மாங்காய் - முதல் வகை

2010/02/26 ஆவக்காய் ஊறுகாய்

2010/02/19 காய்கறி ஊறுகாய்

2010/02/12 மாங்காய் இஞ்சி ஊறுகாய்

2010/02/05 அரிநெல்லிக்காய் ஊறுகாய்

2010/01/29 நெல்லிக்காய் ஊறுகாய்

2010/01/22 நார்த்தங்காய் ஊறுகாய்

2010/01/15 முழு எலுமிச்சம்பழ ஊறுகாய்

2010/01/08 எலுமிச்சம்பழ ஊறுகாய்

2009/12/31 மாகாளிக்கிழங்கு ஊறுகாய்

2009/12/25 தேங்காய்ச் சட்னி

2009/12/18 புதினாத் துவையல்

2009/12/11 வெங்காயத் துவையல்

2009/12/04 பிரண்டைத் துவையல்

2009/11/27 இஞ்சித் துவையல்

2009/11/20 துவரம்பருப்பு துவையல்

2009/11/13 பாசிப்பருப்பு துவையல்

2009/11/06 மல்லி, பச்சைமிளகாய் துவையல்

2009/10/30 பச்சை கொத்தமல்லி துவையல்

2009/10/23 செளசெள துவையல்

2009/10/16 கத்தரிக்காய் துவையல்

2009/10/09 சீரக ரசம்

2009/10/02 தக்காளி ரசம்

2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்

2009/09/18 திடீர் ரசம்

2009/09/11 எலுமிச்சை ரசம்

2009/09/04 கொட்டு ரசம்

2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு

2009/08/21 நார்த்தங்காய் குழம்பு

2009/08/14 சப்ஜி

2009/08/07 பாசிப்பருப்பு தால்

2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்

2009/07/17 இட்லி சாம்பார்

2009/07/10 கீரை சாம்பார்

2009/07/04 தாளிதம்

2009/06/26 தேங்காய்ப்பால் சொதி

2009/06/19 மசாலா பருப்பு

2009/06/12 குருமா

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

admin @ 1:19 am
Filed under: Uncategorized
Healthy life

Posted on Friday 26 March 2010

super-lady.jpgமணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்துபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்

தொடர்ச்சி…

சுகப் பிரசவம்
கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது வேதனை ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுவார்கள். அதிக வலி இல்லாது சுகப் பிரசவமாக முன்னேற்பாடாகச் சில இயற்கை மூலிகளைகளைக் கொடுக்கலாம். இதைப் பிரசவ காலத்திற்கும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே சாப்பிட ஆரம்பிக்கலாம். இதனால் எந்த வித கெடுதியும் ஏற்பட்டு விடாது. மூலிகைகள் என்றதும் அவை கனடாவில் கிடைப்பதில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். இங்குள்ள சில சீன மருந்துக்கடைகளில் இவை கிடைக்கின்றன. அதுபோன்றே ஒரு சில தமிழ்க் கடைகளிலும் கிடைக்கின்றன. நமது தாயகத்தில் ஒரு சில மூலிகைகள் மற்றும் கீரை, கிழங்கு வகைகள், துளசி, வேப்பிலை கத்தாழை, முருங்கை மரவேர்கள் போன்றவை எளிதில் கிடைக்கும். கனடாவில் அவை சாத்தியமில்லை, பயிரிடவும் முடியாது. எனினும் நமது வீட்டில் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் சில மளிகைப் பொருட்கள் இதை ஈடுசெய்ய முடியும் என்பதால் கூடுமான வரை அவற்றைப் பற்றிய தகவல்களையே இயற்கை மருத்துவ முறைக்கு ஏற்றவாறு உபயோகித்து தயாரிப்பதும் எளிதாகும்.

சிறிதளவு சீரகத்தை மைபோல் மிக்ஸியில் அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து காலை மாலை இரு வேளையாக மூன்று நாள் சாப்பிட வேண்டும். அடுத்து மூன்று நாள் இடைவெளி விட்டு மீண்டும் மூன்று நாள் சாப்பிட வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் இடைவெளி விட்டுப் பிரசவமாகும் வரை சாப்பிட்டு வர சுகப் பிரசவமாகும்.

ஆமணக்கு எண்ணெய் 20 கிராம், பிரண்டை 10 கிராம் எடுத்து, எண்ணெயில் பிரண்டையைத் தட்டிப் போட்டு சலசலப்பு சத்தம் அடங்கும் வரை காய்ச்சி வைத்துக் கொண்டு அந்த எண்ணெயை ஏழாம் மாதமும், ஒன்பதாம் மாதமும் ஒவ்வொரு முறை வீதம் ஒரு ஸ்பூன் உள்ளுக்கு அருந்தினால் போதும். சுகப்பிரசவம் எளிதாய் அமைந்துவிடும்.

பிரசவ வேதனை ஏற்படும் சமயம் கொஞ்சம் எடுத்து வறுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்சி, காயமாக தயாரித்து உள்ளுக்கு கொடுத்தால் போதும், சுகப்பிரசவமாகும்.

வலிப்பு
ஒரு சில பெண்களுக்குப் பிரசவ காலம் நெருங்கும் போது வலிப்பு ஏற்படும். இதை கவனிக்காது விட்டால் தாய்க்கும் குழந்தைக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டு பிரசவத்தில் பிரச்சனை ஏற்படக்கூடும்.

லவங்கப் பட்டையை நன்றாக இடித்துத் தூளாக்கி மெல்லிய துணியில் சலித்துக்கொள்ளவேண்டும். அதே அளவு வெங்காயத்தையும் பொறித்து அவ்வாறே தூளாக்கி சலித்துக் கொண்டு இரண்டையும் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். இந்தச் சூரணத்தை இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்துக் கொடுத்தால் போதும். வலிப்பு நீங்கி விடும். வழக்கமாக வலிப்பு ஏற்படும் பெண்களுக்கு முன்னெச்சரிக்கையாக இந்தச் சூரணத்தை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பத்து நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்க வலிப்பு ஏற்படாது.

பிரசவித்தபின் ஏற்படும் தொல்லைகள்
பிரசவித்த பிறகும் எச்சரிக்கையுடன் ஒரு தாய் கவனமாக இருக்க வேண்டும். சீதளம் ஏற்பட்டால் பல தொல்லைகளுக்கு ஆளாக நேரிட வாய்ப்புகள் உண்டு. அதனால் பிரசவித்த தாய்மார்களுக்கு ஆகாரத்துடன் அதிக அளவு வெள்ளைப் பூண்டை ரசம் அல்லது குழம்பு வைத்து கொடுத்து வர வேண்டும். வெள்ளைப் பூண்டைத தனியாக அரைத்து உள்ளுக்குக் கொடுப்பதை விட அப்பெண்ணுக்குக் கொடுக்கும் ஆகார வகைகளில் அதிகம் சேர்த்துக் கொடுத்தால் எந்த வித வியாதியும் வராது. மேலும் வாய்வு தொல்லையும் ஏற்படாது. தாய்க்கு மட்டுமின்றி, பால் குடிக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் இது நல்ல பலன்களைத் தரும். இருவருக்குமே எளிதில் சீரண சக்தியை அளிப்பதோடு இரத்தத்தையும் சுத்தப்படுத்தி, தாயின் பால் சுரப்புக்கும் மிகவும் நல்லதாகும்.

கருப்பையில் அழுக்கு
பிரசவித்த பின் கருப்பையில் அழுக்கு நின்று விடுவது உண்டு. முள்ளுக் கீரைத்தண்டு, நாயுருவி, மூங்கில் இலை, வாழைச் சருகு இவற்றை வகைக்கு 25 கிராம் எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி, கஷாயமாக்கி, அதில் ஒரு நாளைக்கு இருவேளை வீதம் கால் டம்ளர் அளவுக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட கருப்பையில் தேங்கும் அசுத்தம் வெளியேறிச் சுத்தமடையும்.

கருப்பையில் ரணம், வலி
பிரசவித்தபின் கருப்பை தன் அளவுக்குச் சுருங்கிவிட நேரும். அச்சமயத்தில் வலி ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருப்பதில்லை. விட்டு விட்டு வரும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குள் பால் கொடுத்து விட்டால் இந்த வலி குறையும் . ஒரு சிலருக்கு குறையாது, வலியும் தாங்க முடியாததாக இருக்கும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, ஆலரிசி, லவங்கப்பத்திரி, லவங்கப்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து லேசாக வறுத்து இடித்து தூளாக்கி சலித்து வைத்துக் கொண்ட சூரணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்தால் போதும். அடி வயிறு வலி குணமாகும்.

கருப்பையில் ரணம் ஏற்பட்டு, அதனால் இரத்தப்பெருக்கு ஏற்படுவதும் உண்டு. அச்சமயத்தில் வில்வ இலையுடன் வெங்காயம் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றில் அதே அளவு விளக்கெண்ணையும் சேர்த்து, காய்ச்சி வடித்து அத்தைலத்தில் ஒரு ஸ்பூன் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்து வர, ரணம் ஆறும். இரத்தப் போக்கும் நிற்கும். ஒற்றைத் தலைவலி கூட பிரசவமான பிறகு ஒரு சிலருக்கு ஏற்படுவதுண்டு. அப்போது இஞ்சிச் சாற்றுடன் அதே அளவு நல்லெண்ணெயும் சேர்த்துக் காய்ச்சி, அந்த தைலத்தைத் தலைக்கு தடவி சீவி வரலாம். தலை வலி குணமாகும்.

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 12:43 am
Filed under: Uncategorized
Vietnam travel

Posted on Friday 26 March 2010

binh-tay-market.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

ரஷ்யப் பயணிகளுக்கு ஆங்கோர் வாட்டின் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் குருச்சேத்திரப் போரைப் பற்றி விளக்கிச் சொல்ல ஆரம்பித்தபோது என் உடலில் இனம் புரியாத பெருமையில் பரவி நின்றது.

காரணம் கடல் கடந்து வந்து இந்த அந்நிய மண்ணில் குருச்சேத்திரம் போர்க்களக்காட்சிகளைப் பதிவு செய்திருக்கிற திறமும், அதை உலகெங்குமிருந்து வருகிற சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கப்பட்டுவரும் காட்சியும், அதை ஆர்வமாய்க் கேட்டுக் கொள்கிற அவர்களின் ஈடுபாடும் இந்திய மண்ணின் மைந்தன் என்கிற கோணத்தில் சற்றுப் புல்லரிக்கவே செய்தது.

போர்க்களக் காட்சிகளின் உக்கிரத்தைச் சிற்பிகள் மிக அழகுற வடித்திருக்கிறார்கள். ஒரு சிறு சிற்பத்தின் முகத்தில் கூடச் சீறிப் பாய்கிற உணர்வை வடித்திருக்கும் திறனை என்னென்று சொல்வேன்!

ஆனால அமானுஷ்யமாய் (இயற்கைக்கு மாறாய்) சில மனித உருவங்களும் கற்பனையான விலங்கினங்களும் போர்க்களக் காட்சியின் தத்ரூபத்தைக் குலைப்பதாக இருக்கின்றன.

பல தலைகளைக் கொண்ட நாகங்கள், சிங்கமும் கொண்ட மனிதர்கள், டிராகன் எனப்படும் கீழை நாடுகளின் கற்பனைப் பாம்புகள் புகுந்திருக்கிற விதம், அந்தக் காலத்தில் நிலவிய கலாசாரத்தின் தாக்கம் போலும்.

தமிழக மன்னர்களின் உருவாக்கமாக இருந்தால் முழுக்க முழுக்கத் தென்னக சிற்பக் கலையின் ஆக்கிமிப்பே இருந்திருக்க வேண்டும். ஆனால் சூரியவர்மனே கம்போடிய அரசர்களின் வழிவந்த பரம்பரையுடன் கொண்ட மண உறவில் வந்தவனாகையால் அவன் இந்திய - கம்போடியக் கலைகளைக் கலந்து இந்தக் கோயிலை குபேரன் என்கிற சிற்பக் கலை வல்லுநர்களைக் கொண்டு படைத்திருப்பான் என ஊகிக்க இடம் இருக்கிறது.

மற்ற விஷ்ணுக் கோயில்களைப் போல் இல்லாமல் மேற்கு நோக்கி அமைந்த கோயிலாகவும் இது இருப்பதால் நம்முடைய இந்த ஊகம் வலிமை பெறுகிறது.

உள்ளே சிறிதும் பெரிதுமாய் 72 கட்டடங்கள் உள்ளன. ரஷ்ய உல்லாசப் பயணிகளுக்கு கம்போடிய வழிகாட்டி குருச்சேத்திரப் போரைப் பற்றி அள்ளிவிட்டுக் கொண்டிருந்த கதைகள் எவையும் நம்பும்படியாகவே இல்லை. நான் இருந்த இடத்தில் மட்டும் குருச்சேத்திரப் போரைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவர் இருந்திருந்தால் “யோவ்! என்ன இஷ்டத்துக்கு அளக்கிற? குருச்சேத்திரப் போர் நடந்த நாட்டிலிருந்து வருகிறேன். தெரியும்ல” என்ற சண்டைக்கே போயிருப்பார்.

சுற்றலா வழிகாட்டி சொன்ன ஒரு தகவல் மட்டும் சற்று வியப்பைத் தந்தது. ஆங்கோர் வாட் உலகின் மிகப் பெரிய இந்துக் கோயில் மட்டும் இல்லையாம். அதற்கு இன்னொரு பெருமையும் உண்டாம். உலகில் உள்ள மதம் சம்பந்தமான வேறு எந்த கட்டடத்தையும்விட இதுதான் விஸ்தீரணத்தில் பெரிதாம். (200 சதுர கிலோ மீட்டர்!) அப்சரஸ் (பேரழிகிகள்) என்கிற சொல்லும் இங்கே பிரசித்தம். 15000 அப்சரஸ் பெண்களின் வடிவங்கள் இக் கோயிலில் வெவ்வேறு இடங்களில் சிலை வடிவில் காணப்படுகிறார்கள்.

இவர்கள் கோயிலுக்கு என அளிக்கப்பட்ட பெண்களாக இருக்கலாம். இவர்கள் ஆண்களின் சுயநல நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்க இடமிருக்கிறது.

இவர்களை நினைவூட்டும் வகையில் நடைமுறையிலேயே இங்கு சில அப்சரஸ் பெண்கள் நடமாடுகிறார்கள். இவர்கள் அப்சரஸ்களாக இல்லை என்பதோடு கிட்டத்தட்ட சிறுமிகளாகவே தோற்றமளிக்கிறார்கள்.

இவர்களின் உடைகள் மட்டும் கோயில் சிலைகளில் காணப்படுவன போலவே அச்சு அசலாக இருக்கின்றன.

ஆனால் இவர்கள் தவறானவர்கள் அல்லர். இவர்களுள் மூன்று பேரை வேலைக்கு அமர்த்திக் கொண்டு ஒரு தங்கப் பல் கம்போடியன் “இங்க வாங்கடி! அங்கே போங்கடி!” “இந்தக் கறுப்பு கண்ணாடிக்காரனோட (என்னைத்தான்!) படம் எடுத்துக்க போஸ் கொடுங்கடி” என்று மிரட்டுகிறான்.

ஒருமுறை படம் எடுத்துக்கொள்ள ஒரு டாலராம் (46 ரூ)

இவர்கள் நளினமாய் வளைத்து ஒரு நடனப் பாணியில் போஸ் கொடுத்தபடி, நம்மையும் அப்படி அபிநயம் பிடிக்கச் சொல்கிறார்கள். அடியேனுக்குத் தெரிந்தது எல்லாம் டப்பாங்குத்துப் பாணி நடனம்தான். எனக்கு அவர்களைப் போல் அபிநயம் பிடிக்கத் தெரியாமல் போகவே அவர்களுள் இருவர் வந்து நான் எப்படிக் கைகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று என் கைகளை பிடித்தே சொல்லிக் கொடுக்கிறார்கள். எனக்குத்தான் கூச்சமாக இருந்ததே தவிர, அவர்கள் இதை இயந்திரமயமாகத் தொட்டுச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

கை விரலின் வளைவில் சிறு தவறு இருந்தால்கூட விடமாட்டோம் என்கிறார்கள். அபிநயம் சுத்தமாக வரும் வரை பல முறை விரலைத் தொட்டுத் தொட்டுத் திருத்துகிறார்கள்.

“ஏய்! ஏதோ ஒண்ணு எடுத்து தொலைங்க. வெயில் சுள்ளுங்குது” என்று சொல்லவேண்டும்போல் உள்ளது.

இவர்கள் மட்டும் கோயில் எல்லைக்குள் இப்படிச் சம்பாதிப்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் பின்னணியில் இப் படங்கள் தத்ரூபமாய் வரவேண்டும் என்பதற்காக இந்த அனுமதி போலும்! ஆங்கோர் வாட் சரிவரப் பராமரிக்கப்படாமல் போகக் காலங்காலமாக வலுவான சரித்திரக் காரணங்கள் இருக்கின்றன.

ஹிட்லரைத் தூக்கிச் சாப்பிடும் கொடுங்கோலர்கள் இருவர் கம்போடியாவை ஆண்டிருக்கிறார்கள்.

இந்தக் கொலைகாரப் பாவிகளின் பெயர்கள் கமீர்ரோஜ், போல்பாட்.

கமீர்ரோஜ், தன்னையும் கம்யூனிசத்தையும் ஏற்காத 17,00,000 பேர்களைக் கொன்று குவித்து உலகமகாக் கொடுங்கோலனாகத் திகழ்ந்தான்.

இவனுக்குப் பிறகு வந்த போல்பாட்டும் தன் பங்கிற்குப் பல இலட்சம் பேரைக் கொன்று குவித்தான்.

நாடே பயங்கரத்தில் உறைந்து போன வேளையில் கோயிலாவது ஒண்ணாவது? கம்யூனிசத் தலைவர்கள் கோயிலை விரோதச் சின்னங்களாகவே பார்த்தனர். இவற்றை மட்டும் இவர்கள் கலைப் பொக்கிஷங்களாகப் பார்த்திருந்தால் இன்று இவை இவ்வளவு மோசமாக ஆகியிருக்காது.

மக்களின் உயிர்ப் பயமும் ஸ்திரமற்ற வாழ்க்கையும் வாய் பேசா நிலைக்கு உள்ளாக்கினவேயன்றி கோயிலை இப்படிப் பாராமுகத்துடன் இருக்கிறிர்களே, என்று ஆட்சியாளர்களைக் கேள்விகேட்கத் தோன்றவில்லை.

இந்நிலையில் ஆங்கோர்வாட் அலங்கோல நிலைக்கு ஆளானது. பாம்புகளின் புகலிடமாயும் மனித நடமாட்டமின்றியும் போக, மாபெரும் மரங்களின் வேர்கள் கோயில்களுக்குள் நுழைத்து கட்டடங்களைப் பிளக்க ஆரம்பித்தன. அமெரிக்க இராணுவம் வேறு தன் பங்கிற்கு மூக்கை நுழைத்து குண்டு மழையைப் பொழித்து தள்ள நிலைமைகள் விபரீதமாயின்.

கோயிலின் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்றதும் வயிற்றைக் கழுவும் நோக்கில் ஏழை மக்கள் இக்கோயிலினுள் புகுந்து அரிய சிற்பங்களைத் திருடி வந்து அற்ப விலைக்கும் சொற்ப விலைக்கும் விற்க ஆரம்பித்தனர்.

இச் சிலைகளைக் கிளப்ப முடியாதவர்கள் ஆத்திரத்தில் அவற்றை உடைக்கவும் ஆரம்பித்தனர்.

இதனிடையே சொற்ப விலைக்கு வாங்கப்பட்ட அரிய சிற்பங்கள் ஐரோப்பாவில் படுபயங்கர விலைக்குப் போக ஆரம்பித்தன.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 12:10 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 26 March 2010

ipl-t20-2010.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

பி.எல்.ராமச்சந்திரன், கொடைக்கானல்.

தமிழக அரசைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்களே பிரதமரும் சோனியாவும்?

நம் அனைவருக்கும் தெரியும் இவை வேறு வழியின்றிப் பாராட்டிய பாராட்டு என்று உன்னால் எனக்கு வாழ்வு; என்னால் உனக்கு வாழ்வு என்று எது தொன்னை எது நெய் எனறு பிரிக்க முடியாதபடி உறைந்து போய்க் கிடக்கும் உறவு இது. சில வாரங்களே பயன்படுத்தப்படும் கட்டடத்திற்கு நானூறு கோடி தேவையா? மக்கள் நலத் திட்டங்கள் இன்னும் எவ்வளவோ பாக்கி. மக்களின் வாழ்வுத் தரம் இன்னும் உயர்ந்தபாடில்லை. வறுமை ஒருபுறம் கசக்கிப் பிழிகிறது. அரசுப் பதவிகள் பல நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. மேலே வா உன்னைக் குதறுகிறேன், என்று கிணற்றின் விளிம்பில் புலி நிற்க, கீழே விழு உன்னை விழுங்குகிறேன் என முதலை காத்திருக்க, கிணற்றுக் கிளையில் தொங்கியவனின் வாயில் ஒரு சொட்டுத் தேன் விழ; ஆகா தேன் எவ்வளவு இனியது என்று மகிழ்தானாமே ஒருவன் அவன் கதைதான் தமிழக மக்களின் கதை!


பெ.தொல்காபியன், சென்னை-2.

இன்றைய பல்கலைக்கழகங்கள் கட்சி ஆபீசுகள் மாதிரி ஆகிவிட்டதே?

அதனால்தான் அவற்றின் சில துணைவேந்தர்களும் கட்சித் தொண்டர்கள்போல் பேச ஆரம்பித்துவிட்டார்கள். பல்கலைக் கழகங்கள் பலவும் இன்று வெறும் கழகங்கள் என்பது சின்னக் குழந்தைகளுக்கும் புரிந்துவிட்டன.


எஸ்.மீனா, ஒண்டிப்புதூர்.

மினதனுக்குக் கவலைகள் வரலாமா?

மனதார வந்துவிட்டுப் போகலாம். கவலையில்லை. ஆனால் அவை நம் தலையில் குடியுரிமை கேட்கக் கூடாது.


கே.ராஜ்வேல், எட்டயபுரம்.

எம்.எல்.ஏ.க்கள் ஏன் கட்சி மாறுகிறார்கள்?

‘டீலா, நோ டீலா’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் ‘ஒரே வார்த்தை ஓஹோன்னு வாழ்க்கை’ என்ற மந்திரத்தை அவர்கள் காதுகளில் ஓதிவிடுகிறார்கள் ஆளுங்கட்சிக்காரர்கள். அந்தப் பிரணவ மந்திரத்தில் அப்படியே பித்துப் பிடித்துப் போகிறார்கள் சில எதிர்க்கட்சிக்காரர்கள். அப்புறமென்ன கட்சி மாறவேண்டியதுதான்.


எஸ்.பெத்தபெருமாள், அரக்கோணம்.

நித்யானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றி…?

இவரது மூன்று வீடியோ தகவல்களையும் ஒப்பிடும்போது முரண்பாடுகளே மூக்கு நீட்டியபடி நிற்கின்றன. இனியும் சராசரி மனிதர் போல் சமாளிக்க எண்ணுவது பெருமை இல்லை.


எம்.சாதிக் அலி, திருப்பூர்.

ஓவியர் உசேன் கத்தார் நாட்டுக் குடிமகனாக ஆனது பற்றி…?

இந்திய மண்ணிற்குக் கிடைத்த அரிய சொத்து ஓவியர் உசேன். ஆனால் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக இவர் ஓவியம் வரைந்ததும் சராசரி மனிதன் போல் நடிகைகளை வியந்து நடந்து கொண்டதும் இவரைப் பிரச்னைக்குரிய மனிதராக ஆகிவிட்டன. கத்தாரில் இனி நிம்மதியாக இருப்பார். எங்கு வாழ்ந்தாலும் பிறப்பால் இந்தியர் என்பதால் இன்னமும் நம்மவர்தான்!


மு.கருப்பையா, கோவை-2.

மத்திய அரசின் பட்டங்களை வலிய வாங்குபவர்களைப் பற்றி?

இவை மாஞ்சா பட்டங்கள் இல்லை. எனவே இந்த பட்டங்கள் பறப்பதால் யாருக்கும் தொல்லையில்லை. பறந்துவிட்டுப் போகட்டும்.


ஆர்.தியாகராஜன், திருவாரூர்.

தி.மு.க. பொதுக்குழுவானது சேது சமுத்திரத்தைக் கண்டுகொண்டதுபோல் முல்லைப் பெரியாறைக் கண்டு கொள்ளவில்லையே?

சேது சமுத்திரம் என்பது தங்கத்தினாலான ஒரு அட்சயப்பாத்திரம் முல்லைப் பெரியாறு என்பது மண்ணால் ஆன ஒரு சொப்பு. தங்க அட்சயம் பெரிதா? மண் சொப்பு பெரிதா? இப்போது என்ன? அரை மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கணும் என்கிறீர்களா? இருந்துவிட்டுப் போகிறார்கள்? ஒரு மணி நேரம் கூட இருக்கலாம். ஆனால் முல்லைப் பெரியாறு என்பது தி.மு.க.விற்கு அவ்வளவு ஒன்றும் பெரிய பிரச்னையல்ல.


எஸ்.அம்புஜம் அம்மாள், திண்டுக்கல்.

எங்களிடம் முதலீடு செய்தால் உங்கள் பணம் மும்மடங்கு ஆகும் என்கின்றனவே சில விளம்பரங்கள் எப்படி ஆகும்?

சும்மா உங்கள் பணம் டிரிபிள் ஆகாது. டிரபிள்தான் ஆகும்.


ஆர்.மாரியப்பன், தேனி.

உங்களுக்குச் சிலை வைக்கலாமா?

என்னை நடுத்தெருவில் நிறுத்துவதாக எத்தனை நாள் சபதம்?


எல்.பீட்டர், மதுரை.

கிரிக்கெட்டின் மவுசு எப்போது குறையும்?

கல்லூரிகளில் தமிழக ஆந்திர மாணவர்களுக்கும், திரைத்துறையில் நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமிடையே சமீபகாலமாக நடந்து வருகிற சண்டைகளின் எண்ணிக்கையானது அதிகரித்தால் 20க்கு 20 கூட விரைவில் சப்பு கொட்டும். அப்புறம் கிரிக்கெட்டே ஃபீல்டில் இருக்காது.


ஏ. அப்துல்ஹமீது, வேலூர்.

பா.ஜ.க. தலைவர் கட்காரியும் குடிசைகளுக்குப் போகிறாராமே?

ராகுல் மற்றும் கட்காரிகளுக்காகவே ஏழைகளுக்கு வழங்கும் இலவச அரிசியை அதிகரிக்கலாம். பிறகு இவர்கள் எந்த வீட்டிற்கு எப்போது போவார்களோ?


எஸ்.கோபால், விருதுநகர்.

குற்றங்கள் பெருகக் காரணம்?

காவல்துறைதான் காவல் சில நேரங்களில் துறையாய் இல்லையே. அது ஆளுங்கட்சியின் தொண்டர் அணியாய் இருக்கே? தொண்டர் அணிக்குக் குற்றவாளிகளைப் பிடிக்கும் அதிகாரமில்லை.


அ.சோலைமணி, திருச்சி.

கலைஞர் இலவச கான்கிரீட் வீடுகள் திட்டம் துவங்கப்பட்டுவிட்டதே?

அறிவிப்பு விழா நடத்திவிட்டார்கள் இல்லையா? இனிமேல் பாருங்கள். இதன் மீது நிறைய கான்கிரீட் விளம்பரங்களை எழுப்பி விடுவார்கள். ஏழைகளுக்கு குடிசைகள்தான் நிரந்தரம். செளகரியங்கள் எப்போதாவதுதான்.


எஸ்.ஏகப்பன், தேவகோட்டை.

காவிரிப் பிரச்னை கிடப்பில் போட்டுவிட்ட மாதிரி தெரியுதே?

அதுதான் சர்வக்ஞர் சிலை சென்னையில் திறந்தாச்சே! இன்னும் என்ன, காவிரி விவசாயிகள் மறந்தாலும் நீங்கள் மறக்கமாட்டீர்கள் போல.


டி. பெருமாள், ஹைதராபாத்.

விலைவாசிப் பிரச்னை பற்றிய ஒத்திவைப்புத் தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளமாட்டேன்கிறார்களே?

அதை எடுத்தால் கூடவே வாக்காளர் - வேட்பாளர் விலைவாசிகளும் விவாதத்திற்கு வருமென்று நினைக்கிறார்களோ என்னமோ? அவற்றின் விலைகளும்தான் எக்குத்தப்பாய் எகிறியிருக்கிறதே?


வெ.ஞானசேகரன், திருவாரூர்.

டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தமாக்கு என்கிறதே பாரதிய ஜனதா?

எங்கள் மாவட்டத்தில் ஒரு பழமொழி உண்டு. “கிடக்குறதெல்லாம் கிடக்கட்டும் கெழவனைத் தூக்கி மனையில் வை!” என்று அந்த இரகமாக இருக்கிறது. டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்குவது என்பது டஃப் டாஸ்க்!


டி.கதிரேசன், உடுமலைப்பேட்டை.

ஐ.பி.எல் போட்டிகளைப் பார்க்கிறீர்களா?

வாண வேடிக்கைபோல்தான் இருக்கிறது. யார் ஆடினால் என்ன? யார் வெற்றி பெற்றால் என்ன? சிறந்த ஆட்டத்தை யார் வெளிப்படுத்தினாலும் காழ்ப்பு இன்றி இரசிக்கும் மனநிலை இதனால் வளர்ந்திருக்கிறது. (ஆனாலும் ஒரு மூலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றால் ஒரு மாதிரியாத்தான் இருக்கிறது!) சில மணி நேரங்களுக்குள் ரன்களைக் குவிக்கும் ஆசையில் இஷ்டத்திற்கு மட்டையை வீசும் ஆட்டக்காரர்கள் கிராமத்து கிரிக்கெட்டை நினைவுபடுத்துகிறார்கள்.


எஸ்.தேவராஜன், முசிறி.

தவறிழைத்துவிட்டு மன்னிப்புக் கேட்காத சில பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி?

பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்யத் தயங்காதவர்கள் மத்தியில் இப்படியும் சில பாராளுமன்ற உறுப்பினர்களா? வியந்து போற்றுவோம்.


எஸ்.தர்மாம்பாள், தஞ்சாவூர்.

மகளிர் இட ஒதுக்கீடு மக்களையிலும் நிறைவேறினால்?

தமிழகத்திற்கு 13 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் 77 சட்டமன்ற உறுப்பினர்களும் அமைவார்கள். ஹையா! ஜாலி! (இது என்ன அர்த்தத்தில் என்று கேட்பீர்களோ?)


எஸ்.விக்டர், கோபிசெட்டிபாளையம்.

துபை நிலைமை எப்படி?

பொருளாதார இடிகள் உலகெங்கும் இறங்கியபோது உலக நாடுகள் பெரும்பான்மையும் பாதிக்கப்பட்டன. மெல்ல எழுந்து நின்று சுதாரிக்க முற்படும் இந்த வேளையில் துபை அதற்கான முனைப்பை இன்னும் காட்டவில்லை. இந்தியாகூடச் சுதாரித்துவிட்டது என்பேன்.

19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 12:01 am
Filed under: Uncategorized
Healthy life

Posted on Friday 19 March 2010

மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்

தொடர்ச்சி…..

காய்ச்சல்
கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சலுக்கு சுக்கு, மிளகு, திப்பிலி ரசம் வைத்து சாப்பிடுதல் நன்மை பயக்கும். அதுபோன்றே ஒரு சிலருக்கு கண்களில் வீக்கம், நீர்ச்சுரப்பு ஏற்படுவதுண்டு. அது உஷ்ண மிகுதியால் ஏற்படுவதாகும். குளிர்ச்சியான உணவுப் பதார்த்தங்களை, சோயா பால், சத்துள்ள பழ வகைகளைச் சாப்பிட பயனளிக்கும். நன்றாக கொதிக்க வைத்த சோயா பாலில் ஒரு துண்டு வெள்ளைத் துணியை நனைத்துப் பிழிந்து கண் இமைகளில் ஒற்றடம் கொடுக்க, கண் சிவப்பு மாறும், வீக்கம் வலி போன்றவை குறையும்.

விக்கல்
கர்ப்பக் காலத்தில் விக்கல் ஏற்படுவது சாதாரணம். அது நீடித்திருக்கக்கூடாது. அப்படி இருக்குமானால் 5 கிராம் இஞ்சியை எடுத்து அரைத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து கலக்கி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் எடுக்க அடியில் வண்டல் தங்கி இருக்கும். அந்த நீரை மட்டும் இறுத்துக் கொள்ள வேண்டும். கடுக்காய், திப்பிலி வகைக்கு 5 கிராம் எடுத்து முன் இறுத்த இஞ்சி நீரை விட்டு மை போல அரைத்து, பின்அந்த நீரிலேயே கலக்கி காலை மாலை இரு வேளையும் அருந்த உடனே விக்கல் தணிந்து விடும்.

மாதவிடாய்க் கோளாறுகள்
விளாம்பிசின் 50 கிராம் அளவு எடுத்து சுத்தப்படுத்தி வெய்யிலில் காய வைத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அளவு பசும் வெண்ணெயில் கலந்து காலை மாலை இரு வேளை வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல், வெள்ளை படுதல், ரணம், அதிக இரத்தப்போக்கு போன்றவை தீர்க்கப்படும்.

எருக்கம் பூ 10 கிராம், மிளகு 5 கிராம், வெள்ளைப் பூண்டு 10 கிராம், இவற்றை ஒன்றாய்ச் சேர்த்து இடித்துச் சாறு எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவு மாதவிடாய் ஆகும் நாட்களில் ஐந்து நாள் அருந்தி வர மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்னைக்ள நீங்கும். இதையே மாத்திரைகளாகவும் செய்து அருந்தலாம். மேற்கூறியவற்றில் வெள்ளைப் பூண்டின் தோல்களை சுத்தப்படுத்திக் கொண்டு பின் மூன்றையும் அம்மியில் வைத்து அரைத்துச் சிறு சிறு உருண்டைகாளக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். மாதவிடாய் நாட்கிளல் அதில் 2 மாத்திரைகள் வீதம் வாயிலிட்டு வெந்நீர் அருந்தி வர குணம் பெறலாம்.

மிளகு, கருஞ்சீரகம், கடுகு, கறிமஞ்சள் இவற்றை வகைக்கு 25 கிராம் எடுத்து, வறுத்து எடுத்துச் சூரணமாக்கிக் கொண்டு அத்துடன் 25 கிராம் வெல்லத்தையும் சிறிது தேனையும் சேர்த்து அரைக்க மெழுகு பதத்தில் வரும். அதில் ஒரு நாளைக்கு இரு வேளையாக மாதவிடாய் ஆகும் ஐந்து நாட்களிலும் தொடர்ந்து நெல்லிக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். இவ்வாறு நான்கு, ஐந்து முறை மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டு வர அனைத்து தொல்லைகள் நீங்குவதோடு கருப்பையும் சுத்தமடையும்.

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் சரிவர வராமல் இருக்கும். அப்படி வந்தாலும் பல தொல்லைகள் கொடுக்கும். அவர்கள் மாதவிடாய் ஏற்பட வேண்டியதற்கு ஒரு வாரம் முன்னதாகவே சாம்பார் வெங்காயத்தில் மூன்று அல்லது நான்கு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்ன வேண்டும். இவ்விதம் ஒரு வாரம் சாப்பிட மாதவிடாய் எந்தவித சிக்கலுமின்றி ஒழுங்காக அமையும். மாதவிடாய் ஒழுங்காக வராத நிலையில் ஒரு கைப்பிடி மல்லிகைப் பூக்களை, காம்புகளை நீக்கி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி, கசாயமாக்கி காலை மாலை இரு வேளை இரண்டு ஸ்பூன் அளவு உள்ளுக்கு அருந்தலாம். இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து பருகி வர கருப்பை பலம் பெறுவதோடு, காலத்தோடு மாதவிடாய் ஏற்படும். பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நோய்களில் பெரும் இரத்தப்போக்கு எனும் பெரும்பாடு மிகவும் கொடுமையானது. இரத்தம் சதா வெளியேறிக்கொண்டே இருக்கும். அடிக்கடி மருந்துகளைச் சாப்பிட்டு வந்தாலும், இத்தொல்லை ஏற்படுவது நிற்காது. இதனால் இரத்த சோகை ஏற்படவும் கூடும். உடல் வெளுத்து, சோர்வு, களைப்பு போன்ற உடல் தளர்ச்சியும் மற்றும் மனதளவில் விரக்தியும் ஏற்படுவது சகஜம். இதற்கு எளிய முறையிலான சிகிச்சையை தக்க தருணத்தில் மேற்கொண்டால் பூரண குணம் பெறலாம.

மருந்து அருந்தும் நாட்களில் அதிக காரம், புளிப்பு, போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மாதவிடாயில் இரத்தப்போக்கு அளவுக்கு அதிகமாக இருக்குமானால் கரிய போளத்தை சிறிது நீரில் கரைத்து வடிக்கட்டிய பின் மணல் கற்கள் ஏதுமின்றி, சுத்தப்படுத்தி வெயிலில் உலர்த்தி தூளாக்கிக்கொண்டு அதில் ஒரு சிட்டிகைத் தூளை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிடலாம். ஐந்து அல்லது ஆறு நாட்கள் சாப்பிட இரத்தப்போக்கு நிற்கும்.

கருவேல மரப்பட்டை மேல் பாகத்தில் கனமான கறுப்புப் பகுதியை நீக்கிவிட்டு உள்பட்டையை எடுத்துச் சுத்தப்படுத்தி 25 கிராமும், அதே அளவு அரசம் பட்டை, அத்திப்பட்டை, நாவல் பட்டை, உதியம் பட்டை இவற்றையும் சுத்தப்படுத்தி சேர்த்து வெயிலில் காய வைத்து இடித்துத் தூளாக்கி, சூரணமாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பாடு தொல்லையால் மிகுதியாக அவதிப்படுவோர், காலை மாலை இரு வேளைக்கு இரு ஸ்பூன் சூரணத்தை, வாயிலிட்டு சாப்பிட்டு வென்னீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட குணமாகும். இரத்தப் போக்கு நிற்க, வில்வ இலையுடன் (இங்குள்ள சிவ ஆலயங்களில் கிடைக்கும்) வெங்காயத்தைச் சேர்த்து இடித்து எடுத்து சாற்றுக்குச் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து சிறு தீயிலிட்டுக் காய்ச்சிய தைலத்தில் ஒரு ஸ்பூன் வீதம் காலை ஒரு வேளையாக பத்து நாட்கள் அருந்த வேண்டும். அதனால் கருப்பை பையிலுள்ள புண்கள் ஆறி, இரத்தப் போக்கு நிற்கும். இதை அதிக நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம். கெடுதல் இல்லை. அது போன்றே பசலைக் கீரை, வெங்காயம், சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்து அம்மியில் மைபோல் அரைத்து காலை மாலை இரு வேளை வீதம் ஒன்பது நாட்களுக்குச் சாப்பிட பெரும்பாடு தொல்லை நீங்கும்.

அதிமதுரம் 20 கிராம் எடுத்து ஒன்று பாதியாகத் தட்டி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டக் காசயமாக்கி அதை காலை மாலை இரு வேளையாகச் சாப்பிட்டு வர அதிக உதிரப் போக்கு நிற்கும். மருந்து சாப்பிடும் அன்று மோர் சாதம் புசித்தல் நல்லதாகும். சுத்தமான சந்தன அத்தரில் 5 அல்லது 6 சொட்டுகள் சோயாபாலை விட்டு உள்ளுக்கு அருந்த அதிக இரத்தப்போக்கு மட்டுப்படும். அதுபோன்றே சந்தன கட்டையைச் சந்தனக் கல்லில் இழைத்து அதில் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து, சோயா பாலில் கலந்த அருந்த குணமாகும்.

ஜாதிக்காயைப் பொடியாக்கி நெய் விட்டு வறுத்த பின் சூரணமாக்கி அதில் இரண்டு சிட்டிகை வாயிலிட்டு வென்னீர் அருந்த அதிக இரத்தப் போக்கு நீங்கும் கருஞ்சீரகம், பழைய துணி எரித்த சாம்பல் இரண்டையும் சம அளவு எடுத்து தூளாக்கி அதே அளவு பனை வெல்லம் சேர்த்து அரைத்து ஒரு நாளைக்கு இரு வேளை வீதம் எலுமிச்சங்காய் அளவு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் உதிரப் போக்கு நிற்கும்.

இரத்தப்போக்கு ஏராளமாகப் போய் உடல் சோர்வும் மயக்கமும் ஏற்பட்டிருந்தால் ஒரு சதுரமான பழைய நூல் துணியைச் சுட்டு கரியாக்கிப் பொடி செய்து, அதன் தூளுடன் ஒரு ஸ்பூன் தேன், ஒரு கோழி முட்டையின் வெண்கரு எடுத்து அதில் சேர்த்து நன்றாகக் கலக்கி உள்ளுக்குள் அருந்த மயக்கமும் இரத்தப் போக்கும் நிற்பதோடு சோர்வும் நீங்கும்.

வாழைக் காயை நெருப்பிலிட்டு சுட்டு தோலைச் சீவி எறிந்துவிட்டு உள் காயை மை போல அரைத்து எருமைத் தயிரில் கலந்து உள்ளுக்கு அருந்தினால் இரத்தப் போக்கு நிற்கும். மாதவிடாய் நாட்களில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இதை அருந்த வேண்டும். அடுத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான பல்வேறு பிரச்சனைகளைப் பார்ப்போம்.

(தொடரும்)

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 2:04 am
Filed under: Uncategorized
Disease relief plants - Akbar Kausar

Posted on Friday 19 March 2010

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…

நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

திருச்சாய்க்காடு சாயாவனேசுவரர் கோயில் தலவிருட்சம்

கோரைக்கிழங்கு
(CYPERUS ROTUNDUS LINN)

கோரை
CYPERUS ROTUNDUS, LINN; CYPERACEAE

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல்

மண்புகார் வான்புகுவார்
மளைமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார்
கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா
வெண்மாட நெடுவிதித்
தணபுகார் காய்க் காட்டென்
தலைவன்தான் சார்ந்தாரே

சித்த மருத்துவம்
இது இந்தியாவில் எல்லா சம பூமிகளிலும் வளருகின்ற ஒரு வகைப் புல்லினம். இதன் கிழங்குக்கு கோரைக்கிழங்கு என்பது பெயர். கோரையில் பல இனமுண்டு. இவை சிறுங்கோரை, பெருங்கோரை என்பனவாகும். சிறுங்கோரையில் கிழங்குகள் உண்டு. ஆனால், பெருங்கோரையில் கிழங்குகள் கிடைப்பதில்லை. மருத்துவப் பயன்பாட்டுக்கு கிழங்கும், காயும் உபயோகமாகின்றன.

கிழங்கு : கைப்புச் சுவை கொண்டு. உஷ்ணத்தைத் தரும். உடலை வலுவாக்கும். சிறுநீர் பெருக்கும், வியர்வையைப் பெருக்கும், பெண்களை பருவமடையச் செய்யவும், புழுவகற்றும் தன்மையும், கிருமி நாசினியாகவும் பயனாகிறது. காய்ச்சல் வகைகள், தண்ணீர் தாகம், பேதி, பித்ததாகம், குதிக்கால் பற்றிய வாயு, மற்றும் வாந்தி ஆகியவற்றைக் குணமாக்குகிறது.

மாவு : கோரைக்கிழங்கின் மாவை முறையாக உபயோகித்தால் காய்ச்சிக் குணமாகும்.

கோரைக்கிழங்கு குடிநீர்

கோரைக்கிழங்கு, பர்ப்பாகம், விலாமிச்சு, வெட்டிவேர், சுக்கு, சந்தனம் இவற்றைச் சமமாய்க் கலந்து காய்ச்சிக் குடித்தால் பித்த சுரம் நீங்கும்.

கோரைக் கிழங்கு மாம்பட்டை ஆகிய இரண்டையும், இடித்துப் பொடியாக்கிப் பிட்டு செய்து, அதை நன்கு பிழிந்தெடுத்த சாற்றில் அதிடயம், இலவம் பிசின் இவற்றைச் சேர்த்து தக்க அளவில் உட்கொண்டால் கழிச்சல் ஜுரம் தீரும்.

* இதன் குடிநீரை பேதி, குன்மம், வாந்தி முதலியவற்றிற்குத் தரலாம்.

* இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் இடித்து தேன் விட்டரைத்து ஒரு சிறு சுண்டைக்காய் அளவு கொடுத்தால் சீதபேதி போகும்.

* பச்சைக் கிழங்கை அரைத்து மார்பில் பற்றாகப் போட்டால் பால் சுரக்கும் தேள் கடிபட்ட இடத்திலும் பற்றிடலாம். உடல் மீது பூசி வந்தால் வியர்வை நாற்றம் போகும்.

* கோரைக் கிழங்கு, பேய்ப்புடல், திரிபலை, திராட்சை, வேம்பு, வெட்பாலை இவைகளை வகைக்கு கொஞ்சம் எடுத்து முறையாக குடிநீர் செய்து சாப்பிட்டால் சுரம் நீங்கும்.

கோரைக்கிழங்கு முழுகுநீர்
* கோரைக்கிழங்கு, திரிபலை, மருக்காரை, புங்கு, கொன்றை, வாலுளுவை, வாற்கோதுமை, ஏழிலைப் பாலை, கோட்டம், ஞாழல், மரமஞ்சள், வெண்கடுகு இவற்றை நீரிலிட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் பெருநோய், சொறி, வீக்கம், பாண்டு தீரும்.

* கோரைக்கிழங்கு, சீந்தில், மரமஞ்சள், அன்னபேதி, கோண்டம், வெள்ளிளலோத்திரம், கந்தகம், சாம்பிராணி, வாய்விடங்கம், மனோசிலை, தாளசம், அலசிப்பட்டை இவற்றைப் பொடித்து, உடலில் எண்ணெய் தடவி, அதன்பின் மேற்படி பொடியைத் தேய்க்க, சருமப்படை, சிரங்கு நீங்கும்.

கோரைப்பாய்
இது சிறிய, பெரிய கோரைக்களால் செய்யப்படுகிறது. இதில் படுத்து வந்தால் பசி, மந்தம், காய்ச்சல் வேகம் நீங்கும், உடலுக்கு குளிர்ச்சி தரும், தூக்கம் உண்டாகும்.

ஆயுர்வேதம்
சரக்கா மற்றும் சுஸ்ருதா பழம் பெரும் நூல்களில் கோரைக் கிழங்கைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. பேதி, வயிற்றுவலி, சீதபேதி, ஜுரம், குணமாக்க பயன்படுத்துவார்கள்.

கோரைக்கிழங்கு ஒரு கிராம், அஷ்வகந்தா வேர் 1 கிராம் இரண்டையும் சேர்த்து பவுடராக்கி தினமும் காலை, மாலை, இரவு என 3 வேளையும் பயன்படுத்தினால் மூட்டுவலி, மூட்டுவாதம் குணம்பெறுகிறது என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பயன்கள்

இதை அரைத்து தோல்மீது பூசினால், எரிச்சல் அரிப்பு மற்றும் தோல்நோய்கள் குணமாகும். மார்பகங்கள் மீது பூசினால் பால் சுரக்கும். குண்டான உடல் இளைக்க இதை பவுடராக உடல் மீது பூசி மசாஜ் செய்வார்கள்.

கிழங்கைப் பாலுடன் அரைத்து பசையாக்கி மண்டை மீது பூசினால் மூளைக்கு வலிமை கிடைக்கிறது. வலிப்பு நோய்களும், மூளைக் கோளாறுகளும் குணம் பெறுகின்றன. இதைத் தவிர இரத்தக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், சொட்டு சொட்டாக சிறுநீர் கழிதல் போன்ற நோய்கள் குணம்பெறுகின்றன. கர்ப்பப்பையையும், மார்பகங்களையும் நன்கு வளர்ச்சியடையச் செய்து இயங்க வைக்கின்றது. இதை 1 கிராம் முதல் 3 கிராம் வரை பவுடராகவும், 10 முதல் 70 மில்லி வரை கஷாயமாகவும் குடிக்கலாம்.

யுனானி மருத்துவம்

யுனானி மருத்துவத்தில் உலகப் புகழ்பெற்ற லேகியம் ஒன்று ஜவாரிஷ் ஜாலி நியூஸ் என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. இது கல்லீரல், வீக்கம், வயிற்றுக் கோளாறுகள், இதயப் படபடப்பு மற்றும் பொதுவான பலவீனத்தைப் போக்க ஒவ்வொரு யுனானி மருத்துவரும் பயன்படுத்துகின்றார்கள். இந்த லேகியத்தில் சஅத் கூஃபி என்னும் கோரைக் கிழங்கு முக்கிய மருந்தாகச் சேர்க்கப்படுகிறது. இதைப்பற்றி யுனானி மருத்துவக் களஞ்சியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனை யுனானியில் மோதஹா, அரபு மொழியில் சஅத் கூஃபி பாரசீகத்தில் மணக்ஜேர் ஜமீன், தமிழில் கோரைக்கிழங்கு, பைஞ்சாய் என்பர்.

தோற்றம்

இது ஒரு செடியின் வேராகும். இது வெளிப்புறம் கறுப்பு நிறத்திலும், உட்புறம் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இது கசப்புச்சுவை கொண்டது. நறுமணத்துடன் இருக்கும்.

இயல்பு : உஷ்ணம் - வறட்சி (இரண்டாம் நிலை)

முக்கிய குணங்கள் - இதயம், மூளை, நரம்புகள், வயிற்றுக்குச் சக்தியளிக்கிறது வாயுத்தொல்லையை நீக்குகிறது. நறுமணம் அளிக்கிறது.

பயன்படுத்தும் முறை
மோதஹாவை மூளை பலவீனத்துக்கும், நரம்புகள் பலவீனத்திற்கும் மற்றும் மூளைக் குறைபாட்டிற்கும் பயன்படுத்துவார்கள். வயிற்றுப் பலவனீத்திற்கும் வாய் மணக்கவும் இதைச் சாப்பிடுவார்கள்.

முக்கியப் பயன்கள்
சிறுநீர், மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கிச் சரியாகப் பிரியச் செய்யும்.

அளவு : 1 கிராம் முதல் 3 கிராம் வரை பயன்படுத்தவும்.

தீய விளைவுகள் : தொண்டை நுரையீரலுக்குத் தீங்குண்டாக்கும்.

தீய விளைவுகளைச் சரி செய்யும் முறை : இத்துடன் சர்க்கரை, சோம்பு அனீசூன் கலந்து பயன்படுத்தலாம்.

கூடுதல் செய்தி செருந்தி
செருந்தி ஆக்னா ஸதுவரோசா (OCHNA SQUARROSA LINN) என சங்க இலக்கியங்களில் செருந்தியின் அரும்பும், போதும், மலரும், இணரும் பேசப்படுகின்றன. வேறு பல மரங்களுடன் இது வளர்வதாகக் கூறப்படுகிறது.

இதனைச் சிறு மரமாகக் கொண்டு தரப்பட்டுள்ள விளக்கத்தில், ‘யானை நின்றால் மறையும் வாட்கோரை’ என்றும், செருந்திநெட்டிக் கோரையுமாம் என்றும் விளக்கம் கூறப்படுகிறது.

மேலும் ‘சாய்’ என்பது பைஞ்சாய்க் கோரையைக் குறிக்கும். செருந்தி, நெய்தல் நிலத்தைச் சார்ந்தது என்றும், ஆண்டின் 6 பருவங்களில் முதல் பருவமான இளவேனிற் பருவத்தில் மலரும் என்பதும், நீண்ட காம்புகளையும், விரிந்த மலரும் தன்மையும், தன்னைக் காண்போரை பொன் என்று மருளச் செய்யுமாறு பொன் தகடு போன்றுள்ள இது பளபளப்பாக பூக்கும் என்பதும், இதனை பெண்கள் சூடிக்கொள்வர் என்பதும் சங்கப் பாடல்களில் நமக்குக் கிடைத்த செய்திகளாகும்.

சங்க இலக்கியம்
சங்க இலக்கியக் குறிப்புகளில் இம் மரம் எருவை என குறிக்கப்படுகிறது. எருவை ஒரு வகையான கோரைக் புல், நிலத்தில் வளர்வது, மலர் சிறியது, தோடு போன்றது, மழைக்காலத்தில் பூப்பது, மலைப்புறங்களில் அதிகம் காணப்படுகின்றது. எருவை என்னும் பெயர் பிற்காலத்தில் பைஞ்சாய்க்கோரை எனும் பெயர் கொண்டுள்ளது.

சைபீரியஸ் ரோடன்டஸ் (CYPERUS ROUTUNDUS LINN) என்னும் அறிவியல் பெயரோடும், சைபிரேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாக உள்ளது.

தற்போது கோரா, கோரை, கோரைக் கிழங்கு, முத்தக்காசு என வழங்கப்படுகிறது.

இக்கோரையைக் கொண்டு மகளிர் பாவை செய்து விளையாடுவதும், இதனைக் கொண்டு கோதை புனைவதும் வழக்கம். இதனையே ‘பைஞ்சாய்க் கோதை மகளிர்’ என ஐங்குறு நூறு என்னும் நூலில் குறிப்பு காணப்படுகிறது.

சைபிரேசி என்ற இத்தாவரக் குடும்பத்தில் உள்ள கைபீரஸ் என்னும் இப்பேரினத்தில் இந்திய நாட்டில் உள்ள 61 சிற்றினங்களில் தமிழ்நாட்டில் 36 சிற்றினங்கள் வளர்வதாக அறியப்பட்டுள்ளது.

இது கோரைப்பாய் முடைவதற்குப் பயன்படுகின்றது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2010/03/12 வெண்குஷ்டத்தைக் குணமாக்கும் கொட்டை பூவரசன் மரம்

2010/03/06 குத்தாலம் சிவன்கோயில் தலவிருட்சம் கூதாளி

2010/02/26 திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சம் கூந்தற் பாக்கு மரம்

2010/02/19 கும்பகோணம் கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம் கூந்தப்பனை

2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்

2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்

2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்

2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்

2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்

2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி

2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி

2009/12/25  ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்

2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்

2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி

2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு

2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு

2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

admin @ 1:57 am
Filed under: Uncategorized
Samayal

Posted on Friday 19 March 2010

child-chef.jpgமாங்காய் ஊறுகாய் - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்

பெரிய மாங்காய் - 1
மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
வறுத்த வெந்தயப் பொடி - 1/2 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி

செய்முறை :
மாங்காயைக் கழுவி பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள்பொடி, சர்க்கரை கலக்கவும். மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி, வெந்தயப் பொடி மூன்றையும் மாங்காய் துண்டுகளின் மேலாகப் போட்டு அதன் மேல் எண்ணெய்யில் தாளித்த கடுகைப் போட்டுக் கிளறி பரிமாறவும்.

Chettinadu Samayal

2010/03/12 மாவடு

2010/03/06 அடை மாங்காய் - முதல் வகை

2010/02/26 ஆவக்காய் ஊறுகாய்

2010/02/19 காய்கறி ஊறுகாய்

2010/02/12 மாங்காய் இஞ்சி ஊறுகாய்

2010/02/05 அரிநெல்லிக்காய் ஊறுகாய்

2010/01/29 நெல்லிக்காய் ஊறுகாய்

2010/01/22 நார்த்தங்காய் ஊறுகாய்

2010/01/15 முழு எலுமிச்சம்பழ ஊறுகாய்

2010/01/08 எலுமிச்சம்பழ ஊறுகாய்

2009/12/31 மாகாளிக்கிழங்கு ஊறுகாய்

2009/12/25 தேங்காய்ச் சட்னி

2009/12/18 புதினாத் துவையல்

2009/12/11 வெங்காயத் துவையல்

2009/12/04 பிரண்டைத் துவையல்

2009/11/27 இஞ்சித் துவையல்

2009/11/20 துவரம்பருப்பு துவையல்

2009/11/13 பாசிப்பருப்பு துவையல்

2009/11/06 மல்லி, பச்சைமிளகாய் துவையல்

2009/10/30 பச்சை கொத்தமல்லி துவையல்

2009/10/23 செளசெள துவையல்

2009/10/16 கத்தரிக்காய் துவையல்

2009/10/09 சீரக ரசம்

2009/10/02 தக்காளி ரசம்

2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்

2009/09/18 திடீர் ரசம்

2009/09/11 எலுமிச்சை ரசம்

2009/09/04 கொட்டு ரசம்

2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு

2009/08/21 நார்த்தங்காய் குழம்பு

2009/08/14 சப்ஜி

2009/08/07 பாசிப்பருப்பு தால்

2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்

2009/07/17 இட்லி சாம்பார்

2009/07/10 கீரை சாம்பார்

2009/07/04 தாளிதம்

2009/06/26 தேங்காய்ப்பால் சொதி

2009/06/19 மசாலா பருப்பு

2009/06/12 குருமா

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

admin @ 1:51 am
Filed under: Uncategorized