» Vietnam travel .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 26 Feb 2010

Vietnam travel

hue.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

அடுத்து நாங்கள் செல்ல விரும்பியது உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலான ஆங்கோர் வாட்டிற்கு.

இந்துக் கோயிலுக்குள் சட்டென்று போகலாம் என்று பார்த்தால் ஏகப்பட்ட சம்பிரதாயங்கள். கோயிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளியுள்ள ஓர் அலுவலகத்திற்குப் போய் (அது சரி!) நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும். நுழைவுச் சீட்டையும் சட்டென்று வாங்கிவிட முடியாது தெரியுமா!

இங்கு ஏதோ இராணுவ அலவலகம் போல பலரும் சீருடையுடன் நிற்கிறார்கள். இவர்களைக் கடந்து போனால் முன்னும் பின்னுமாய் எட்டு கவுண்ட்டர்கள் ஒரு செவ்வகக் கட்டடடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு ஏராளமான அறிவிப்புப் பலகைகள் காணப்படுகின்றன. இவற்றைப் படிக்காமல் போனால் போச்சு! ‘பேபேபே’தான். அதாகப்பட்டது கவுன்ட்டரில் இருப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளாது.

சியாம் ரியாப் நகரைச் சுற்றி எட்டு இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் எவற்றைப் பார்க்கப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். வாகனவசதி வேண்டுமா என்கிறார்கள். வழிகாட்டி தேவையா என்கிறார்கள். இவற்றில் நாம் தெளிவு பெறாமல் நுழைவுச் சீட்டு வாங்க எண்ணுவதே அபத்தமான அணுகு முறையாகிவிடும்.

எட்டுக் கோயில்களின் படங்களும் வண்ண போஸ்டர்களாய் காட்சி அளிக்கின்றன. அவற்றில் ஆங்கோர் வாட்டை மட்டுமே தேர்ந்தெடுத்தோம்.

‘வாருங்கள், போட்டோவுக்கு போஸ் கொடுங்கள்!” என்றார்கள்.

“போட்டோவெல்லாம் வேண்டாம். எங்களிடம் கேமரா இருக்கிறது’ என்றேன்.

“அட! அது இல்லீங்க! நுழைவுச் சீட்டில் உங்கள் படம் பதிக்கப்பட வேண்டும். அதற்காக எடுக்க வேண்டும்.”

“என்னது! கோயிலுக்குள் நுழைய உதவும் சீட்டில் என் படமா?”

“ஆமாமா! வந்து போஸ் கொடுங்க!”

இதற்கும் சேர்த்துப் பணம் வாங்குகிறார்கள். இந்த நுழைவுச் சீட்டு மூன்று நாளைக்காம். நாம் ஒரு நாள் பார்த்துவிட்டு மறுநாள் யாருக்கேனும் விற்றுவிட்டால்? (அட! மூளை எப்படியெல்லாம் வேலை செய்கிறது!) எனவேதான் புகைப்படத்தோடு கூடிய நுழைவுச்சீட்டு.

படம் எடுக்கிறார்களே, ஏகமாய்க் காக்க வைப்பார்கள் போலிருக்கிறதே என்று எண்ணினால் இரு நிமிடங்களில் தந்து விடுகிறார்கள்.

கண்ணாடியைக் கழற்ற மாட்டேன் என்று முரண்டு பிடித்துப் பார்த்தேன்.

கழற்றத்தான் வேண்டும் என்று கழற்றவே செய்துவிட்டார்கள். எனக்கு என் படத்தோடு கூடிய இந்த நுழைவுச் சீட்டை வாசகர்கள் அறிய வெளியிட ஆசை. ஆனால் கண்ணாடி இல்லாததால் என்னால் வெளியிட முடியவில்லை.

சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் பக்கவாட்டில் உள்ள கடைகளில் விற்கிறார்கள். ஆனால் மிரட்டும் விலை. கம்போடியா ஏழைநாடுதான். ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு விலை உயர்ந்த நாடாக இருக்கிறது.

நானும் சிவாவும் மட்டும் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டோம். எங்கள் ஓட்டுநரை ஒரு மரியாதைக்குக் கேட்டதற்கு வேப்பங்காயைக் கடித்தவர்போல் முகத்தை மாற்றிக் கொண்டார். எங்களுக்கு இவரும் வந்தால் நிறையப் படங்கள் எடுத்துக் கொள்ளலாமே என்கிற எதிர்பார்ப்பு. அது நடக்கவில்லை.

ஆங்கோர் வாட் கோயிலை நெருங்க நெருங்க பெரிய பிரமிப்பு.

கோயிலைச் சுற்றி ஓர் அகழி இருக்கிறது பாருங்கள். அடேங்கப்பா! எவ்வளவு பெரிய அகழி! அகழியும் கோயிலுமாய்ச் சேர்த்து 22 ஹெக்டேர் நிலப்பரப்புக் கொண்டது இது.

கம்போஜம் என்றும் கம்பூச்சியா என்றும் அழைக்கப்பட்ட கம்போடியாவில் ஓர் இந்துக் கோயில் எப்படி உருவாயிற்று என்பது சுவையான வரலாறு.

இதைப் பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இதைச் சிலர் புராணம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கம்போடியாவில் கமெர் கலாசாரம் என்று ஒன்று உண்டு. இந்த வம்சாவளியைக் துவக்கி வைத்தவன் ஒரு சோழ மன்னனாம். சோழ நாட்டில் பிறந்த இந்த இளவரசன் சோழ மன்னர்களால் ஏனோ நாடு கடத்தப்பட்டான். அவன் கடத்தப்பட்டு வந்தடைந்த நாடு கம்போடியா.

இவன் கடல் அரசனின் (?) மகளை மணந்து அவன் தன் மகளுக்குச் சீதனமாகக் கொடுத்த நிலப்பரப்பை ஆள ஆரம்பித்தான்.

இவனது வம்சத்தவர்கள் உருவாக்கிய கோயில்களே சியாம் ரியாப் நகரிலும் கம்போடியாவெங்கும் பரவிக் கிடக்கின்றன.

இந்தக் கோயில்கள் இன்று உலகெங்கிலும் உள்ள உல்லாசப் பயணிகளை அப்படிச் சுண்டியிழுக்கின்றன.

கமெர் அரசர்கள் ஏற்படுத்திய இந்தப் பிரமாண்டமான கலைப்படைப்புகள் ஏனோ நாளடைவில் மக்களால் மறக்கப்பட்டன. சியாம் ரியாப் நகர் மக்களால் கைவிடப்பட்டு நாம் வென் (இன்றைய கம்போடியாத் தலைநகர்) மெல்ல முக்கியத்துவம் பெறவே சியாம் ரியாப் மறக்கப்பட்டு பாழடைந்தது.

மரங்களும் புதர்களுமாய் ஆங்கோர்வாட் மூடப்பட்டுவிட, இதை ஆராய்ந்து கண்டுபிடித்து உலகின் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவரே ஒரு போர்ச்சுக்கீசியர்தான்.

இக்கோயிலை மரங்களின் வேர்களின் பிடியிலிருந்து இன்னமும் மீட்க முடியவில்லை. வேர்களை நீக்கினால் கட்டடம் சிதைந்துவிடும் என்கிற நிலைமை இப்போது இந்தியத் தொடர்புகள் இருப்பதால் இந்தியத் தொல்லியல் வல்லுநர்களும் அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் மரங்களின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்றப் புறப்பட்டு வந்தனர். ஓரளவு வெற்றியும் பெற்றனர்.

ஆங்கோர் வாட்டிற்கான கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திய போது எங்களை ஏகப்பட்ட பேர் சூழந்து கொண்டனர்.

சிலர் இந்தாங்க பழம் என்றனர். சிலர் கலைப்பொருட்களை நீட்டினர். சிலர் தொப்பிகளைக் காட்டி, வாங்கிக் கொள்ள வற்புறுத்தினர். ஆனால் இவர்களிடம் காணப்பட்ட கட்டுப்பாடும் ஒழுங்கும் என் புருவங்களை உயர்த்தின.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…
 

Most Commented Posts


Leave a Reply