Friday, 26 Feb 2010
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சம்
கூந்தற் பாக்கு மரம்
(கமுகு)
(ARECA CATECHU)
கமுகு - இதன் வேறு பெயர்களாக பாக்குமரம், கந்தி, அடைக்காய் என அழைக்கப்படுகிறது.
இது இந்தியாவின் வெப்ப நாடுகளில் பயிராகும் ஒரு மரம். மைசூர், கர்நாடகம், கேரளம் முதலிய இடங்களில் ஏராளமாய் உள்ளன. இதன் விதைக்கு பாக்கு என்பது பெயராகும்.
இது ‘அரிகா கேடெச்சூ’ என அறிவியல் பெயர் கொண்டு ‘பால்மயே’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
சித்த மருத்துவம்
இதன் இளங்குருத்து, விதை, வேர் ஆகியவை மருத்துவ உபயோகங்களுக்கு உதவுகின்றன. துவர்ப்புச் சுவையுடன், வெப்பத் தன்மையுடன் இருக்கும். சாயமேற்றும் பண்பும் இதற்கு உள்ளது. அஜீரணபேதி, சிறுநீர் நோய்கள், வயிற்றுப்பூச்சிகள், ஈறுநோய், மேக வெள்ளை முதலியவை போகும்.
இளங்குருத்து : இதனை எண்ணெய்விட்டு வதக்கி வாதவலிக்கு வைத்துக் கட்டலாம்.
இளம்பிஞ்சு : இது வயிற்று நோய்களுக்கு ஏற்றது.
பாக்கு : பச்சைப்பாக்கு தொண்டையில் கட்டும் கோழையைப் போக்கும். 6 கிராம் வரை எடுத்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் அஜீரணபேதி, சிறுநீர் நோய்கள் முதலியன தீரும்.
* மேற்படி தூளை சிறிதளவு எடுத்து, இதனைப்போல 8 மடங்கு பழச்சாறு விட்டு அரைத்து உள்ளுக்குக் கொடுத்தால் புழுக்கள் வெளியேறும்.
* 5 முதல் 10 கிராம் பொடியை 100 மி.லி. பசுவின் பாலில் கலக்கிக் கொடுத்தால் 1 மணி நேரம் கழித்துத் தட்டைப்புழு வெளியாகும்.
* பாக்கை முறைப்படி குடிநீர் செய்து வாய்கொப்பளிப்பு செய்து வந்தால் பல் ஈறில் உண்டாகும் நோய்கள் தீரும்.
* இதனைப் பெண்களுக்கு மலத்துவாரத்தில் பூசி வந்தால் வெள்ளை நோய் தீரும்.
வேர் : வேரைக் குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வந்தால் உதட்டுப் புண்களும், ஈற்றப் புண்களும் தீரும்.
யுனானி மருத்துவம்
தோற்றம் : இது ஒரு மரத்தின் பழமாகும். இது உருண்டையாகவும், தேவதாரு மரத்தின் பழத்தைப் போன்றும் இருக்கும். இதை மெல்லியதாக வெட்டி வெற்றிலையுடன் சேர்த்து உண்பார்கள். இம்மரத்தின் தண்டுப்பகுதி ஒரு ஜான் விட்டமாக இருக்கும். உயரம் ஐந்து கஜம் முதல் பத்து கஜம் வரை உயரமாக வளரும். இதன் இலைகள் தென்னை மற்றும் பேரீச்ச மரத்தின் இலைகளைப் போன்று இருக்கும். குலை குலையாகப் பழங்கள் இருக்கம். இதையே பாக்கு என்றழைப்பார்கள்.
இயல்பு : குளிர்ச்சி - வறட்சி (இரண்டாம் நிலை) கொண்டது.
முக்கிய குணங்கள் - மலச்சிக்கலை உண்டாக்கும். கட்டி வீக்கங்களையும் கரைக்கும்.
பயன்படுத்தும் முறை
இதை வெற்றிலையில் வைத்து வாயில் போட்டு மெல்லுவார்கள். இதனால் பற்களுக்கு வலிமை கிடைக்கிறது. பேதியைக் கட்டுப்படுத்த இதைப் பொடியாக்கிச் சாப்பிடச் செய்வார்கள். பற்களை உறுதியாக்கவும், பல்ஈறுகளிலிருந்து கசியும் இரத்தத்தைத் தடுக்கவும் இதைப் பொடியாக்கிப் பற்பொடிகளில் கலந்து பயன்படுத்துவார்கள். கண்நோய் மற்றும் கண் எரிச்சலுக்கு இதை எரித்துச் சாம்பலாக்கி கண்ணுக்கு கர்மா பூசுவதைப் போல் பயன்படுத்துவார்கள்.
முக்கியப் பயன்கள்
சூடான வீக்கங்களைக் கரைக்கிறது. பற்களுக்கு வலிமைத் தருகிறது. பற்களில் உண்டாகும் இரத்தக் கசிவைத் தடுக்கிறது. கண் நோய்களைத் தீர்க்கிறது.
அளவு : 3 கிராம் முதல் 5 கிராம் வரை பயன்படுத்தவும்.
தீய விளைவுகள் : மார்பில் அடைத்துக் கொள்வதைப் போன்று தோன்றும், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையில் கற்களை உணடாக்கும்.
தீய விளைவுகளைத் தணிக்கும் முறை : இத்துடன் பாதாம் பிசின் மற்றும் ஏலக்காய் கலந்து சாப்பிட வேண்டும். இதற்கு மாற்றாக சந்தனத்தைப் பயன்படுத்தலாம்.
பிற செய்திகள்
இது 500 முதல் 3000 அடி உயரமான இடங்களில் வளரும் வழவழப்பான மரம். 100 அடி உயரம் வரை வளரும். ஆண்டு வளர்ச்சி காட்டும் வளையம் மரத்தில் காணப்படும். இதன் கனியில் பாக்கு விதையாக விளைகிறது. இதற்காகப் பாக்கு மரம் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பாக்கும், வெற்றிலையும் மங்கலப் பொருட்களாகும் என இலக்கியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
சங்க இலக்கியம்
கமுகில் பாளை உண்டாவதிலிருந்து இளம்பாக்குப் பிஞ்சில் உண்டாகும் சுவையான நீர் வரையில் மதுரைத் தத்தங் கண்ணனார் அக நானூற்றில் மிக அழகாகத் தொகுத்துப் பாடியுள்ளார்.
சங்க இலக்கியப் பெயராக கமுகு எனவும், தாவரப் பெயராக ‘அரீகா காட்டச்சூ’ எனவும் அழைக்கப்படுகிறது. கடியலூர் உருத்திரங்கண்ணனார் ‘கமுகு’ மரம் பெரிய தாளினை உடையது எனவும், பாளையாகிய அழகினை உடைய பசிய பூ விரியாமல் கருவாய் (பானைக்குள் மூடப்பெற்று) இருக்குமெனவும் கூறுகின்றார். இக்கமுகு நெடிது ஓங்கி வளரினும் ‘புல்’ எனப்படும்.
கமுகின் பாளை, மலர்கள் தொடுத்த தொடையில் போன்றது. இணர்க்கிளை பல மலர்களைக் கொண்டது. பாளை முதிர்ந்த போது மலர்க்கொத்து பிடிப்பு விட்டு விழும். பூங்குலை வாள் வடித்தது போல இருக்கும். இத் தோற்றம் மிக அழகானது. மலர்ந்த பல பூக்கள் மாலை போலத் தோன்றும். நரம்புகளோடு கவரிபோல வண்டுகள் உண்ணும் போது இக்கமுகு நெடிது ஓங்கி வளரினும் ‘புல்’ எனப்படும்.
பூவோடு வளர்ந்த இதன் பிஞ்சு சுவையுள்ள நீரைக் கொண்டது. அத்தீஞ்சுவையுள்ள நீரைக் காட்டிலும் தனது காதலியின் வாய் எயிற்றில் ஊறிய நீர் அமுதம் போன்றதென்று செலவழுங்கிய தலைவன் சொல்கிறான் என்கிறார் புலவர். இதன் முற்றிய காய்தான் அடைகாய் எனவும், பாக்கு எனவும் கூறப்படும். இதனை வெற்றிலை, சுண்ணாம்பு முதலிய பிற வாசனைப் பொருட்களுடன் தாம்பூலமாக போட்டுக்கொள்வர்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சமாக கூந்தற் கமுகு பக்தர்களால் வணங்கப்படுகிறது. மேலும் பேரூர் சிவன் கோயில் தலவிருட்சமாகவும் கமுகு வணங்கப்படுகிறது.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2010/02/19 கும்பகோணம் கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம் கூந்தப்பனை
2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்
2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்
2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்
2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்
2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்
2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி
2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி
2009/12/25 ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்
2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்
2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி
2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு
2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு
2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்
2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்
2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்
2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)
2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்
2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை
2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி
2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை
2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்
2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்
2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்
2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்
2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































