Friday, 26 Feb 2010
உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?
“என்னோட மூணு புள்ளங்க கல்யாணத்துக்கும் அழைச்சேன். ஒன்றிற்குக்கூட வரவில்லை. நடுப்பையன் கல்யாணத்துக்கு மட்டும்தான் வாழ்த்து வந்துச்சு. மற்ற கல்யாணங்களுக்கு அதுவும் வரவில்லை. என்னைக் கொஞ்சங்கூட மதிக்கிறது. இல்லை. அப்புறம் எப்படி அவரோட உறவு கொண்டாடறது சொல்லுங்க?” என்று தன் உறவினர் பற்றி மனவருத்தப்பட்டுக்கொண்டார் என் நண்பர்.
இவர் குறிப்பிட்ட உறவினரும் எனக்கு நண்பர் என்பதால் சண்டை இழுத்துவிடுகிற பாணியில் பேசாமல் அவரோட மூணு புள்ளைங்க கல்யாணத்துக்கும் போகமுடியாமல் போனது ஆச்சரியம்தான் என்றேன் ஒரு தொடர்புடைய உரையாடலில். இவர் சொன்ன காரணங்கள் ஏற்கும்படி இருந்தன. இதன் சாரம் என்னவென்றால் போகக்கூடாது என்பதில்லை. உண்மையில் போகமுடியாத சூழ்நிலை.
“அதுக்குப்பிறகு அவரும் பேசறது இல்லை; நானும் பேசறது இல்லை” என்றார் இந்த நண்பர்.
ஒட்டிக்கொள்ளமுடியாவிட்டாலும் வெட்டிக்கொள்ளாதீர்கள். பத்துக் காரணங்கள் சொன்னாலும் எடுபடா. உங்கள் இல்லத்து விசேஷத்தின்போது, “கணக்குப் பார்க்காமல் வாஞ என்று அழைத்து “என் பக்கம் தவறுதான் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்” என்றேன். இவை நடக்க, இன்று ஃபெலிக் கால் உறவாகிவிட்டது இவர்கள் உறவு.
நீரின்மீது பிரம்பு கொண்டு வலுவாக அடியுங்கள். பிளவு வருவதுபோல் வந்து மறுபடியும் சேர்ந்துகொள்ளும் உண்மையான நட்பிற்கும் உறவிக்கும்கூட இதே நன்மை உண்டு. உறவைப் புதுப்பிக்க வாய்ப்பைக் தேடுங்கள். ஏன் உருவாக்கவேகூடச் செய்யுங்கள்.
தாழ்வு மனப்பான்மையும் உயர்வு மனப்பான்மையும் செல்வ நிலைகளும் செல்வாக்குகளும் வீண் கெளரவங்களும் உறவைத் துண்டாட வல்லவை என்பதை உணருங்கள். இவற்றிற்கு இடம் கொடாதீர்கள்.
சிறுசிறு குறைகளைப் பெரிதுபடுத்துவது; வீண் சம்பிரதாயங்களை நம்புவது; போலியான நடைமுறைகளை எதிர்பார்ப்பது; உதவிகளை மறுக்க நேரும்போது காரணங்களைச் சரிவரப் புரிய வைக்கத் தவறுவது; இடைப்பட்ட மனிதர்களிடம் தேவையில்லாமல் விமரிசிப்பது ஆகியவை உறவிற்கு வைக்கும் வெடிகுண்டுகள் உறவூரிற்கான இரயிலைக் கோட்டைவிட்டு விட்டால் கூடப் பரவாயில்லை; பேருந்தையாவது பிடித்துவிடுங்கள்!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?
2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?
2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!
2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!
2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!
2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!
2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!
2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

































March 4th, 2010 at 4:14 pm
vanakkam unkalin karuthukkal ellam ennakku nalla athi sirantha nanpanin karuththukkal. naan muthal unkalin napan akka asai padukkiran .ok ja???