Friday, 19 Feb 2010
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
ஆயிரத்தெட்டு லிங்கங்களைக் கண்டுவிட்டு நாங்கள் திரும்பிக் கொண்டிருந்த மலைப்பாதையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் எங்கள் வாகனத்தை வழிமறித்து நின்ற வில்லோடும் அம்புகளோடும் காணப்பட்ட காட்டுவாசிகளால் எங்களுக்கு ஆபத்தா இல்லையா என்கிற மனக்கேள்வியைத் தவிர வேறு எந்த நினைப்பும் எங்களுக்குள் இல்லை.
இந்த நவீன யுகத்தில் காரை மறிக்கும் காட்டுவாசிகளா? என்ன ஊர் இது?
இவர்கள் வழிப்பறிக்காரர்களா? அல்லது எங்களைப் பிடித்துப் போய் பெரிய கடாயில் உயிரோடு வேக வைக்கப் போகுமளவு மோசமான காட்டுமிராண்டிகளா என்றே என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை.
இவர்களின் தன்மையை உணர எனக்கு ஒரே ஒரு வழிதான் தோன்றியது. ஆம்! ஓட்டுநரின் முகத்தைப் பார்த்தால் தெரிந்துபோகிறது.
பார்த்தேன்!
ஓட்டுநரின் முகமோ எவ்வித உணர்ச்சியும் அற்ற பாறையைப்போல் இருந்தது. ஆனால் அவரது முகத்தில் மிரட்சியோ உயிர்ப் பயமோ தெரியவில்லை.
“ஏன் நம்மை வழிமறிக்கிறார்கள்?” ஓட்டுநரிடம் கேட்டேன்.
“எனக்கும் புரியவில்லை.”
“இவர்கள் ஆபத்தானவர்களா?”
“இல்லை. நம்மை ஒன்றும் செய்யமாட்டார்கள்.”
(யப்பாடா!)
“இறங்கிப் போய்ப் பேசுங்கள். அவர்களது மொழி உங்களுக்குத் தெரியுமல்லவா?
“தெரியாது.”
நாங்கள் காத்துக்கொண்டே இருந்தோம். ‘மொடேர்’ என்று காருக்கும் அவர்களுக்கும் இடையே இருந்த இடத்தில் ஏதோ ஓர் உயிரினம் விழுந்த சத்தம் அது.
எதிர்பாராத இந்தச் செயல் எங்கள் இதயத் துடிப்பைத் தாறமாறாக்கியது. உடனே காட்டுவாசிகள் மத்தியில் ஒரே மகிழ்ச்சிக் கூச்சல்
அம்பினால் தாக்கப்பட்டு விழுந்த அந்த உயிரினம் என்ன என்றே தெரியவில்லை. நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில்கூட நான் இதுவரை கண்டிராத உயிரினம் அது.
சுருண்டு நிலை குலைந்து முகம் வேறு உடலுக்குள் புதைந்து கிடந்ததால் என்ன உயிரினம் என்று ஊகிக்கவும் முடியவில்லை. பக்கத்துப் புதரிலிருந்து வெற்றிக்களிப்புடன் ஒரு காட்டுவாசி வில்லுடனும் முதுகில் உள்ள ஓர் அமைப்பில் சில அம்புகளோடும் வெளிப்பட்டபோதுதான் சில உண்மைகள் பிடிபட ஆரம்பித்தன.
ஒரு காட்டுவாசி மிக உயரத்தில் காணப்பட்ட இந்த மிருகத்தை அம்பினால் வீழ்த்தக் குறி பார்த்தபடி பக்கவாட்டில் உள்ள மரப்புதர்களுக்குள் நின்றிருக்கிறான்.
அடிபடும் உயிரினம் காரின்மீது விழுந்தால், கார் அதன்மீது ஓடினால் அது தேறாது; கிடைக்காது என்பதால் எங்கள் காரைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
ஒருவன் அந்த உயிரினத்தின் உடம்பில் தங்கிவிட்ட அம்பை உருவ, மற்றவர்கள் நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர, பாதையை விட்டு விலகவில்லை; வாகனத்திற்கு வழிவிடவும் இல்லை.
அவர்களது உடை தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றில் எனக்கு ஈடுபாடு இருந்ததால் நான் அவசரப்படவில்லை.
சொல்லப்போனால் இறங்கிப் போய் அவர்களுடன், கொல்லப்பட்ட மிருகத்துடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வது பற்றிய யோசனையிலும் இருந்தேன். ஓட்டுநரிடம் கேட்கவும் செய்தேன். ஓட்டுநர் ஒரு கடுப்பு முகம் காட்டினார் பாருங்கள், ஏன்தான் கேட்டோமோ என்று ஆகிவிட்டது.
“என்னய்யா! விளையாடுறியா? உயிருக்கே ஆபத்துய்யா, இவனுகளோட பேசுறதும் பழகுறதும்!’ என்று அந்தப் பார்வை சொல்வதுபோல் இருந்தது.
இவ்வளவு வெள்ளந்தியான ஓட்டுநர் இப்படிக் கோபப்படுகிறாரே, அவ்வளவு மோசமானவர்களா இவர்கள்?
காட்டுவாசிகளின் சாவகாசம் என்னையே சலிப்புக்குள்ளாக்கியது. விட்டால் நடுப்பாதையில் அடுப்பு மூட்டி அந்த உயிரினத்தைச் சமைக்கவே ஆரம்பித்துவிடுவார்கள் போலிருந்தது.
எங்கள் ஓட்டுநர் கார் என்ஜினை நிறுத்திவிட்டார். ‘என்னவோ பண்ணித் தொலைங்கடா, நீங்க வழி விடறபோது போறம்டா!’ என்பதுபோல் இருந்தது அவரது செயல். சில நிமிடங்களில் அவர்கள் சற்றே ஒதுங்கிக்கொள்ள, ஒரே ஒரு காட்டுவாசி மட்டும் தம் பூச்சி அரித்த காறைப்பற்களுடன் விகாரமாகச் சிரித்தான். ‘பார்த்தீங்களா! நாங்க கொன்ற உயிரினத்தை!’ என்று அந்தப் பார்வை சொன்னது.
கம்போடியாவின் தலைநகர் நாம்பென். இந்த நாட்டிற்கு கம்பூச்சியா என்று ஒரு பழைய பெயர் உண்டு. 1,81,035 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாடு. மக்கள்தொகையே ஒன்றரைக் கோடியை ஒட்டித்தான். 74 சதவிகித மக்கள் எழுத்தறிவு கொண்டவர்கள். (அட! பரவாயில்லையே!)
இங்குள்ள மக்கள் பேசும் மொழியை க்மெர் என்கிறார்கள். பிரான்சு நாட்டின் ஆளுகைக்குள் இருந்ததால் இங்குள்ள மக்களுள் மூத்தவர்கள் பிரெஞ்சு மொழி பேசுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்து வாழுகிற நாடு என்பதால் நகரங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் அரைகுறை ஆங்கிலம் பேசுகிறார்கள். புத்தமதத்தைப் பின்பற்றும் இந்த நாடு இப்போது சற்றே நவீனமயமாகி மெல்ல கிறித்துவத்தை நோக்கி நகர்கிறது.
நாணயத்தின் பெயர் ரியால். ஆமாம் செளதி ரியால் போலவேதான். ஆனால் இந்த ரியாலுக்கு மதிப்புக் குறைவு.
1963இல் பிரஞ்சுக் காலனியிடமிருந்து விடுதலையாகி மன்னராட்சியின்கீழ் வந்தது.
7 ஆண்டுகளில் ஜெனரல் லோன் சிகானுக் என்பவர் மன்னரை ஒன்றுமில்லாமல் ஆக்கி, இராணுவப் புரட்சிப்பாணியில் ஆட்சியைப் பிடுங்கிக்கொண்டார்.
1975இல் கம்போடியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அறிவிக்கப்பட்டது. 1976இல் இதை கம்போடிய மக்கள் குடியரசு என்று இந்நாடு தன்னை அறிவித்துக்கொண்டது. இந்த ஆட்சி வலுவானதாக இல்லை. ஆட்சியாளர்கள் திறமையாளர்களாக இல்லை. மக்களின் கஷ்டங்கள் மாறவில்லை. வறுமை தீரவில்லை.
வேலை தேடும் நோக்கத்துடன் இருந்த அண்டை நாடான வியட்நாமிலிருந்து மக்கள் ஊடுருவிப் பரவ ஆரம்பித்தனர்.
இந்த நாட்டின் பலவீன நிலை கண்டு ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் படையெடுத்தனர் வியட்நாமியர். அதிக எதிர்ப்பின்றி நாட்டைப் பிடித்தது வியட்நாம். அதுவும் அமெரிக்கர்களையே துவம்சம் செய்த வியட்நாமியர்களை எதிர்த்தால் உயிர்ச்சேதம்தான் மிஞ்சும் என்று அடங்கிப் போய்விட்டனர் கம்போடிய மக்கள்.
மெல்ல வியட்நாம் பிடியிலிருந்து விடுபட்டு, 1993இல் சிகானுக் தலைமையில் கம்போடியா மறுபடி விடுதலைக் காற்றைச் சுவாசித்தது. 2004இல் தம் மகனுக்காக மன்னர் சிகானுக் இராஜினாமா செய்தார். இதனால் நரோத்தம் சிகாமணி மன்னரானார்.
நம் நாட்டோடு உள்ள கலாசாரத் தொடர்புகளால்தான் நம்மவர்களின் பெயர்களைத் தாங்கிய இவரைப் போன்ற பலர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
நவம்பர் 9ஆம் தேதியைத்தான் இந்த நாடு இன்றளவும் சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறது.
ஜனநாயகமும் குடியரசும் கலந்த நாடு. மன்னர்களுக்கு இங்கு மரியாதை உண்டே தவிர, பெரிய செல்வாக்கெல்லாம் கிடையாது.
கம்போடிய மக்களுக்கு நெல் விவசாயம் தவிர வேறு எதுவும் அதிகம் தெரியாதுபோல! நாட்டின் 90 சதவிகித விவசாயம் இதுதான். மற்ற தேவைகளை வெளிநாடுகளிடமிருந்து தருவித்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நாட்டு விவசாயப் பெருமக்களிடமிருந்து நம் விவசாயிகள் பெறவேண்டிய செய்தி ஒன்று உண்டு.
நீர்வளம் நிறைய இருப்பதால் வருடம் முழுக்க விவசாயம் செய்கிறார்கள். பயிர்ப் பணிகள் செய்துவிட்டு அவற்றின் பலனுக்காகக் காத்திருக்கும் நேரத்தை வீணாக்குவது இல்லை.
ஆம்! மீன்பிடிக்கப் போய்விடுகிறார்கள். உணவுக்காகவும், பக்க வருமானத்திற்காகவும் இதைச் செய்கிறார்கள்.
என்னது! விவசாயி மீன் பிடிப்பதாவது என்று இவர்கள் வேறுவிதமாக எண்ணுவது இல்லை.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
































