Friday, 19 Feb 2010
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
கும்பகோணம் கூந்தலூர்
ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம்
கூந்தப்பனை
(SAGO PALM, FAN PALM)
வீடுகளையும், கட்டிட வளாகங்களையும் அழகூட்டும் மரம். சாப்பிட மாவு, ஜவ்வரிசி, வெல்லம், கற்கண்டு, தேன்பாகு, பதனீர் என தரும் மரம். நார், மரம் இலை ஆகியவை பயன்படுகின்றன.
தோற்றம் : நம் நாட்டிலும், பர்மா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலும் இம்மரம் வளருகிறது.
தமிழகத்தின் எல்லையிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளிலும், நகரங்களிலும், பூங்காக்களிலும் இம்மரம் பரவி வருகிறது.
பிற மரங்களைப்போல பூத்துக் காய்த்துக் கொண்டு வளருவதில்லை. வளர்ச்சி முடிவுற்ற நிலையில் இம்மரம் பூக்கிறது. அதுவரை மட்டைகளிலே தயாரிக்கும் உணவை மரத்தின் நடுப்பகுதியில் சேமித்து வைத்து 15 வருட வளர்ச்சி பெற்ற பின்னர் பூத்து கனிகளைத் தந்து பின் மடிகிறது. ஆண் பூ சிவப்பாகவும், பெண் பூ பச்சையாகவும் இருக்கும்.
இதன் கனியில் ஒன்று அல்லது 2 கொட்டைகள் உண்டு.
கூத்தப்பனையானது, தாளிப்பனை, கொண்டைப்பனை, மலைப்பனை என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. CARYOTA URENS எனும் அறிவியல் பெயர் கொண்டுள்ளது. விதைகள் மென்மையாக்கும், இன்பம் பெருக்கும். மலம் இளக்கும் தன்மை கொண்டது. இதன் ஓலை எழுதுவதற்கும், சோறு, மலத்தைக் கட்டுவதற்கும் பயனாகிறது.
பயன்கள்
* ஜவ்வரிசி எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது.
* மரவள்ளியைப் போன்று வேகவைத்து கஞ்சியாகவோ, ரொட்டியாகவோ செய்து சாப்பிடலாம்.
* ஒரு மரத்தில் 100 - 150 கிலோ அளவில் மாவு கிடைக்கிறது.
* பதனீர், வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து தேன்பாகு, கற்கண்டு, காடி முதலியவையும் தயாரிக்கலாம்.
* கூந்தப்பனை மொட்டு, குருத்து பகுதியைச் சாப்பிடலாம். சர்க்கரையுடன் சேர்த்து அப்படியே சாப்பிடலாம் அல்லது வேக வைத்து கறியாக சமைத்தும் உண்ணலாம்.
* கூந்தப்பனையின் நார் பிரஷ்கள் செய்யவும், வெல்வெட் துணிகளில் உள்ள தூசியை நீக்கவும் பயனாகிறது.
* வலுவான கயிறாகவும் முறுக்கிவிடலாம்.
* இவை முன்காலத்தில் குடைகள் செய்ய பயன்பட்டுள்ளது.
* வேரினைக் கொண்டு தயாரித்த, கரி, தங்கம், வெள்ளி, நகைகள் செய்வோர் உலைகளுக்கு ஏற்றவையாகும்.
* கொட்டை பித்தான்கள், மாலைகளின் மணிகள் செய்ய உபயோகப்படுகிறது.
* மரம் பூத்து முடிந்த நிலையில், வலுவுடனும், உறுதியாகவும் உள்ள நிலையில் ஒருகன மீட்டர் மரத்தின் எடை 881 கிலோ என அறியப்பட்டுள்ளது.
* பூஞ்சவுரியைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பது மிகவும் அழகாகும்.
* இதன் ஓலை நீளமாகவும், கெட்டியாகவும் இருக்கும். குடைகள் செய்யவும், எழுத்தாணி கொண்டு எழுதவும் பயனாகிறது.
யுனானி மருத்துவத்தில் இதன் குணங்கள்
குருத்து : இது துவர்க்கும். மலத்தைக் கட்டுகிறது.
விதை : அரைத்து நெற்றியில் பூசினால் ஒற்றைத் தலைவலி நீங்குகிறது.
* நீர்விட்டு அரைத்து தேள், நட்டுவாக்கலி ஆகிய கடிகளுக்கு பூசலாம்.
பதனீர் : காலைவேளையில் குடித்தால் உடலுக்கு ஊட்டம் தரும். அதிக அளவில் சாப்பிட்டால் பேதி ஆகும்.
களிச்சாறு : இது தாகத்தைத் தீர்க்கிறது. களைப்பைப் போக்குகிறது.
எழுதுவதற்கு காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பு மக்கள் கூந்தப்பனை ஓலைகளைப் பதப்படுத்தி காகிதமாகப் பயன்படுத்தினார்கள்.
இன்றுகூட அரசு அருங்காட்சியகங்களிலும், பரம்பரை சித்த மருத்துவர்கள் வீடுகளிலும் பனை ஓலை சுவடிகளில் எழுதி வைக்கப்பட்ட நூல்களைக் காண முடிகின்றது.
இதன் ஓலை நீளமாகவும் கெட்டியாகவும் இருக்கும். அந்த ஓலைகள் மீது எழுத்து ஆணிகளால் எளிதில் எழுத முடிகிறது. குடைகள் கை விசிறிகள் செய்தவற்கும் இதைப் பயன்படுத்துவார்கள்.
இதன் பாளையில் இருந்து கள் தயாரிப்பார்கள். இம்மரத்தின் கள்ளை தினசரி காலையில் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் என்று கிராமிய மக்கள் நம்புகின்றனர். இம்மரத்தின் நடுவில் இனிப்பான சோறு இருக்கும். இதை உலர வைத்து மாவு தயாரிப்பது உண்டு. கூந்தப்பனை கற்கண்டு, சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது.
இதன் விதைகளை அரைத்து சிறிது தண்ணீரில் கலந்து நெற்றியில் பூசினால் ஒற்றைத் தலைவலி நீங்குகிறது. இதன் காயை உலர வைத்துப் பவுடராக்கி கஞ்சி காய்ச்சி கிராமிய மக்கள் குடிக்கின்றார்கள். இதனால் வலிமை பெறுகிறது என்று நம்புகின்றனர்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் ஆனந்தவல்லி கோயிலில் தலவிருட்சமாக கூந்தப்பனை உள்ளது.
இவ்வூர் கூந்தப்பனை என்ற பனை மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் கூந்தலூர் எனப் பெயர் பெற்றது.
கும்பகோணம் வழி ஏரவாஞ்சேரி பூந்தோட்டம் பாதையில் இந்த ஊர் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு கடந்த 1971 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாகக் குறிப்பு காணப்படுகிறது.
[11:53:56 AM] Ganasekar: நரி பூஜித்து முக்தி பெற்ற கோவில் எனவும், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம் எனவும் இந்து சமய புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இக்கோயிலில் கூந்தப்பனை, தெய்வத்துடன் சேர்த்து வணங்கப்படுகிறது.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்
2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்
2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்
2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்
2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்
2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி
2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி
2009/12/25 ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்
2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்
2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி
2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு
2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு
2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்
2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்
2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்
2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)
2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்
2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை
2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி
2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை
2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்
2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்
2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்
2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்
2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































