Friday, 12 Feb 2010
மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து
காளான்
நம் கடன் பணி செய்து கிடப்பதே என்று பாரதியார் கூறியதுபோல், எனது மருத்துவச் சேவையை தொடருகிறேன். கனடாவில் பிரபல்யமாக விளங்கும் இயற்கை உணவாக பாவிக்கப்படும் காளான் பற்றி பார்ப்போமா!
உடல் குண்டாக இருப்பது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இன்று பெரும் பிரச்னையாக பொதுவாக உள்ளது என்பதை என்னிடம் வரும் பெரும்பாலோர் கூறுவதுண்டு. இவர்கள் உடல் எடையை குறைக்க ஆலோசனைகளுக்கு பஞ்சமே இல்லை. ஆளாளுக்கு தங்களுக்கு தெரிந்து தெரியாதது என எண்ணற்ற ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவார்கள். இதை ஏற்று பலர் பல்வேறு உடற்பயிற்சி, யோகா, தியானம், பிசியோதெரபி என்று எதாவது ஒரு வகையை தேர்ந்தெடுத்து கடைபிடிப்பார்கள். இதில் பலன் இல்லை என்று கூறிவிட முடியாது. ஆனால் பலருக்கு இதற்கு எல்லாம் நேரம் ஒதுக்குவது என்பதும் அடுத்த பிரச்னையாகும். மேலும் பலர் பட்டினி கிடந்து, எதையும் சாப்பிடாமல் உண்ணாநோன்பு, விரதம் போன்றவற்றை மேற்கொண்டு, தங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்வார்கள். இதெல்லாம் தேவையே இல்லை.
நீங்கள் குண்டானவரா? உடல் எடையை குறைக்க வேண்டுமா? காளான் இதற்கு பெரிதும் உதவி புரிகிறது. காளான்களில் ஒன்றல்ல, இரண்டல்ல 2000 வகைகள் இருக்கின்றன. இவற்றில் இயற்கை தந்துள்ள உணவு வகைக்கானவை என்பன 12 வகை காளான்கள் மாத்திரமே. இவற்றில் தந்தை காளான், சிப்பி காளான் ஆகியவை தனிச்சிறப்பு கொண்டவையாகும்.
நத்தை காளானில் வைட்டமின் மற்றும் 9 வகையான அமினோ மிலங்கள் அடங்கி உள்ளன. சத்துகளை பொறுத்த வரை இதை முட்டையுடன் ஒப்பிடலாம். சிப்பிக் காளானில் புரதச் சத்து 2.9 சதவீதம், கொழுப்பு 0.36 சதவீதம், மாவுச்சத்து 5.3 சதவீதம், கால்சியம் 71.2 சதவீதம், பாஸ்பரஸ் 91.2 சதவீதம், இரும்புச்சத்து 8.8 சதவீதம், சோடியம் 10.6 சதவீதம், பொட்டாசியம் 28.50 சதவீதம் மற்றும் விட்டமின் பி, சி, டி ஆகிய சத்துகள் அடங்கி உள்ளன.
காளான் உணவு குறித்து சிலருக்கு அச்சமும் ஒரு வித தயக்கமும் இருக்கும். இந்த பயம் தேவையில்லை. எல்லாப் பருவத்தினரும், எல்லா சமயத்திலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எந்த வித பாதிப்போ அலர்ஜியோ ஏற்படாது. உடல் பருமனை குறைக்க விரும்புவோர் கொழுப்பு சத்துள்ள உணவு வகைகளை முழுமையாக தவிர்த்து விட்டு, ஒரு மாத காலம் காளான் வகைகளை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆரோக்கிய கேடு ஏதும் இல்லாமல் உடல் எடை குறைவதை காணலாம். தொடர்ந்து சாப்பிட முழு பலன் கிடைக்கும். தெளிவான, கூர்மையான கண் பார்வை, உறுதியான பலம் பொருந்திய எலும்புகள், பற்கள் பொலிவுற அமைய என காளான் பல் வகைகளில் நம் ஆரோக்கியத்திற்கு உதவி புரிகின்றது.
புரதச் சத்து வேண்டுவோரும் இதனை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். காளானில் மாவுச் சத்து குறைவு, எனவே இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, சர்க்கரை நோய் போன்றவற்றால் அல்லல்படுவோரும் காளான் உணவு சாப்பிடுவதால் சிறந்த பலன் பெறலாம். காளான் முழுமையான சைவ உணவாகும். ஆனால் அசைவ உணவு விரும்புவோர், அசைவ முறைப்படி சமைத்து உண்டாலும் சுவையாக இருப்பதை உணர முடியும். காளானில் மற்ற காய்கறிகள் போல் பொரியல், குருமா, குழம்பு செய்வதுடன், கட்லெட், பிரியாணி, சமுசா, போண்டா, ஆம்லெட், பகோடா, வறுவல் போன்றவற்றை தயார் செய்து சாப்பிடலாம். ஊறுகாயாகவும் பயன்படுத்தலாம். இது தவிர காளான் சூப் மிகவும் சுவையானதாகும்.
இதற்கு புதிய காளான் 100 கிராம், கேரட் 50 கிராம், பட்டாணி 100 கிராம், சோளப்பொடி 2 கரண்டி, டால்டா 4 கரண்டி மற்றும் பெருங்காயம், மிளகுப் பொடி, தேவையான அளவு உப்பு ஆகியவை தேவை. காளானை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, பின்னர் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கேரட்டையும் துண்டு துண்டாக நறுக்கி வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு காளான், கேரட், பட்டாணி, (தேவையென்றால் வெங்காயம், பூண்டு கூட, சேர்த்துக் கொள்ளலாம்) மற்றும் உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாய் கொதித்த பின் அவற்றை எல்லாம் மிக்ஸியில் அரைத்து அதில் உருக்கிய டால்டாவை ஊற்றி, மிளகுப் பொடி சேர்த்தால் காளான் சூப் தயார். இதை சுடச்சுட அருந்தினால் சுவையாக இருப்பதோடு, இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் ஒரு சிறந்த இயற்கை உணவாகும். பொதுவாகவே பாஸ்தா பிட்ஸா மற்றும் பல வகை இதாலிய உணவு வகைகள் காளான் சேர்க்கப்பட்டு சுவைபட தயாரித்து விற்பதை இந்நாட்டில் நிறைய இடங்களில் காணலாம். அனைத்து மரக்கறி மால்களிலும் நல்ல முறையில் பேக் செய்யப்பட்ட காளான்கள் விற்கப்படுவதால் நீங்கள்அடிக்கடி உணவில் சேர்த்து வாழ்க்கை வாழ்வதற்கே என நலமும் வளமும் பெறுக.
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?
2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!
2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!
2009/12/25 இஞ்சியின் மகத்துவம்
2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
































