Friday, 12 Feb 2010
கொசு(று)ப் பிரச்னையல்ல இது!
இந்தியாவில் வேறு எந்த அரசியல் தலைவர்களுக்கும் தோன்றாத, பின்பற்றாத யோசனை ஒன்றைப் புதிய பாணியில் செயல்படுத்தி வருபவர் ஜெயலலிதா.
தமிழகச் சிற்றூர்களிலும் பெரிய ஊர்களிலும் உள்ளூர்ப் பிரச்னைகளை எடுத்து அலசி அவற்றுள் எது மையமானதோ எதற்கு உடனடித் தீர்வு தேவையோ அவற்றை முன்னிலைப்படுத்தித் தம் கட்சிக்காரர்கள் மூலம் போராட்டம் நடத்தி உள்ளூர் நிர்வாகத்தின் கவனத்திற்கு நினைவூட்டியபடி இருந்து அதில் ஒரளவு வெற்றியும் பெற்று வருபவர் ஜெயலலிதா.
இப்படி நடத்தப்படும் போராட்டங்களுக்கு உடனடிப் பலன்கள் இல்லாவிட்டாலும் அட! இந்தச் சிறுபிரச்னைகூட ஜெயலலிதாவின் கவனத்திற்குப் போயிருக்கிறதே என்று மக்களால் பாராட்டப்படுகிற அல்லது நினைத்துக்கொள்கிற நிலையை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டார்.
இந்த அடிப்படையில்தான் சென்னையை கொசுக்கள் வழியே தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த கொசு ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று ஜெயலலிதா அறிக்கையும்விட்டு, போராட்டமும் நடக்கச் செய்தார்.
இதை வேறு பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை என்பதால் கொசு என்கிற நிலைக்கு இறங்கிவிட்டார் என்று தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சற்றே கேலித் தொனியில் பேசியிருப்பது நமக்கு ஏமாற்றம் தருவதாக இருக்கிறது.
சுகாதாரக் கேடு என்பதை அவ்வளவு இலேசாக எடுத்துக் கொண்டு விடமுடியுமா? சரி, இதற்குமுன் ஜெயலலிதா சுட்டிக்காட்டிய பல பிரச்னைகளுக்குத் தமிழக அரசு தீர்வுகண்டுவிட்ட மாதிரியல்லவா இருக்கிறது?
இன்னும் ஒருபடி மேலே போய் தன் புகைப்படம் தினமும் வர வேண்டும் என்பதற்காக இப்படி அறிக்கைவிடுகிறார் என்றும், இவரா இறங்கிப் போராடப் போகிறார் என்றும் முதல்வர் கேட்டிருப்பது வியப்பிலும் வியப்பு.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது போராட்டங்கள் அத்தனையிலும் உயர்மட்டத் தலைவர்களா இறங்கிப் போராடினார்கள்? இல்லையே!
சென்னை மாநகராட்சியின் கொசு ஒழிப்புத் திட்டங்கள் செயல்படவில்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. ஆனால் இவை போதுமானதாக இல்லை; கொசுக்கள் ஈக்களவிற்குப் பெருத்து மொய்க்கிற அளவிற்கு அதிகரித்துவிட்டன என்பதே உண்மை.
ஜெயலலிதா கொசுவோடு நின்றுவிடவில்லை.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவும், மர்மக் காய்ச்சலைக் தடுத்து நிறுத்தவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிறார். தேர்வு எழுதும் மாணவ மாணவிகளைப் பற்றியும் அக்கறைப்பட்டிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு முக்கியத்துவம் தராவிடில் கூடப் பரவாயில்லை. மக்களின் பிரச்னைகளுக்காவது முக்கியத்துவம் கொடுங்கள்!லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!
2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!
2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!
2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?
2009/12/31 அம்புகளை நோவானேன்?
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

































February 13th, 2010 at 9:06 am
எதிர்க்கட்சித் தலைவரும் முக்கியத்துவம் தராவிடில் கூடப் பரவாயில்லை. மக்களின் பிரச்னைகளுக்காவது முக்கியத்துவம் கொடுங்கள்,sabash sareyana kuttu