» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 12 Feb 2010

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம்
குங்குமம்
(CROCUS SAFFRON)

இந்த இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்தத் தாள்களே குங்குமம் ஆகும். இது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனைத் தண்ணீரில் இட்டால் கொஞ்ச நேரத்தில் தண்ணீரும் இதன் நிறமாக மாறிவிடும்.

இத்தாவரம் வடமேற்கு நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிர் செய்யப்படுகின்றது. இது வாசனையுடனும், மினுமினுப்பாகவும் இருக்கும்.

ஆயுர்வேத மருத்துவப் பயன்கள்
* இதனால் விந்துக் குறைவு, தண்ணீர் தாகம், தலைவலி, கண்ணில் பூ விழுதல், கண்ணோய், வாந்தி, காது நோய், வாயினிப்பாக இருத்தல், வயிற்று அழுக்குகள் போகும்.

* உணவுப் பொருள்களுக்கு நிறம் உண்டாக்கவும் வாசனை உண்டாக்கவும் சேர்க்கின்றனர்.

* கர்ப்பம் தரித்துள்ள தாய்மார்கள் இதனை வெற்றிலையுடன் கலந்து தின்றாலும் அல்லது காய்ச்சிய பாலில் இட்டு அருந்தினாலும், பிறக்கும் குழந்தை அழகாகவும், பிரசவ வலி இன்றியும் குழந்தை பிறக்கும் என்பர். மாதவிலக்கு, வலியைப் போக்கும் குணம் கொண்டது.

* தலைவலி, மூக்கில் நீர்வடிதல், இவற்றிற்கு குங்குமத்தை தாய்ப்பாலில் உறைத்து நெற்றியில் பற்று போடலாம்.

* விளாம் பிசின், பனை வெல்லம் இவைகளுடன் சேர்த்தரைத்து துண்டுத்தாளில் வைத்து தடவி கன்னப்பொறியின் மீது பற்றாக போட வலி நீங்கும். மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும் சேர்க்கலாம்.

* குங்குமப்பூ 1 பங்கும், தண்ணீர் 80 பங்கும் ஊற வைத்து வடிகட்டி வேளைக்கு 50 - 100 மி.லி. அளவு கொடுக்க மேற்படி நோய்கள் தீரும்.

* பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும் போது சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்துக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும்.

* குழந்தை பிறந்தபின் சிறிதளவாக 3 வேளைகள் கொடுக்க இரத்தப்போக்கு நீங்கும்.

* 20 கிராம் பூவைத் தண்ணீரில் அரைத்து, உருண்டை செய்து உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுக்குள் இறந்துபோன குழந்தை வெளிப்படும். 10 கிராம் குங்குமப்பூவை சுமார் 15 பலம் நீரில் சேர்த்துக் குடிநீர் செய்து கொடுத்தால் பசி அதிகம் உண்டாகும்.

பிறசெய்திகள்

இது ஒரு பூண்டின் மகரந்தம். இதற்கு காரிகஸ் என்று பெயர். ஆசியா மைனரில் இவ்வாறு வழங்கப்படுகிறது. ஆசியா மைனரில் உள்ள காரிகஸ் என்னும் இடத்தில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது. தற்போது எங்கும் பயிராகும் இத்தாவரம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பறித்து உலர்த்தி தண்ணீரில் அலம்பினால் இதழ்கள் மிதந்து கோசங்கள் அடியில் தங்குகின்றன. அவற்றைப் பக்குவப்படுத்தி விற்கின்றனர்.

குங்குமம் இது தேவிக்குரிய காப்பு, இதனைக் குங்குமப்பூ, உயர்ந்த பச்சைக் கற்பூரம் முதலியவற்றுடன் சேர்த்து தேவிக்கு பனிநீரில் இழைத்திடும்படி ஸ்ரீகாரணாகமம் கூறுகிறது.

இதற்கு பிரதியாகத் தற்காலத்தில் மஞ்சள்பொடியுடன் வேறு சிலவற்றைச் சேர்த்துக் குங்குமம் எனச் செய்து கொள்கின்றனர்.

இது மங்கலப்பொருள் என்பதால் மங்கலம் பெற மங்கையர் அணிவர் என் தமிழ்க்கலைக்களஞ்சியம் நூல்கள் தெரிவிக்கின்றன என்பது கூடுதலான செய்தியாகும்.

குங்குமப்பூவின் மருத்துவ குணங்கள்
யுனானி மருத்துவம்

தோற்றம் : குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே ‘குங்குமப்பூ’ என்று அழைக்கின்றோம். இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமணமுடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும்.

குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். குங்குமப்பூ, கசம்பூவைப் போன்று இருக்கும். இதன் வேர் வெங்காயத்தைப் போன்று இருக்கும்.

இயல்பு : உஷ்ணம் 2, வறட்சி 1.

முக்கிய குணங்கள் : மலச்சிக்கலை உண்டாக்கும். கட்டி, வீக்கங்களைக் கரைக்கும். இதயம், மூளை மற்றும் கல்லீரலுக்குச் சக்தி தரும். தடைப்பட்ட சிறுநீர் மற்றும் மாதவிலக்கைப் பிரியச் செய்யும்.

பயன்படுத்தும் முறை : கல்லீரல் வீக்கம், கருப்பை வீக்கம் ஆகியவற்றைக் கரைக்க இதைத் தனியாகவோ அல்லது மற்ற மருந்துகளுடன் கலந்தோ மேல் பூச்சு மருந்தாகப் பயன்படுத்துவார்கள்.

பார்வைக் குறைவைப் போக்க இதைத் தனியாகவோ அல்லது மற்ற பொருத்தமான மருந்துகளுடன் சேர்த்தோ அரைத்துக் கண்களில் விடுவார்கள். இதயம் மற்றும் மூளைக்கு சக்திதர பலவகைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மைக் குறைவைப் போக்க மற்ற மருந்துகளில் கலந்து பயன்படுத்துவார்கள்.

மாதவிலக்கை தாராளமாகப் பிரியச் செய்ய உள் மற்றும் வெளிப்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் நாரை ஆண்களின் சிறுநீர்க்குழாயில் வைத்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

அளவு : 1 கிராம் முதல் 2 கிராம் வரை பயன்படுத்தவும்.

தீய விளைவுகள் : சிறுநீரகப் பையை பலவீனமாக்கும். பசியைக் குறைக்கும்.

தீய விளைவுகளைச் சரி செய்யும் முறை : இத்துடன் அனிசூன், சிகன்ஜபீன் மற்றும் ஜரிஷ்க் கலந்து பயன்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக உத்ரஜ் விதை, பெருலவங்கப்பட்டையைப் பயன்படுத்தலாம்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

பத்ரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சமாக குங்குமம் வணங்கப்படுகிறது. இந்தத் தலத்தில் அம்பிகையின் கையில் சிவலிங்கமிருக்கின்றது.

குங்கும்பூவின் வேறு பெயர்களாக ஞாழல் பூ, காஸ்மீரம் என வழங்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயராக “குரோகஸ் சாஃப்ரான்” எனக்கொண்டு “கிரிடாசியே” எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்து விளங்குகிறது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்

2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்

2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்

2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்

2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி

2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி

2009/12/25  ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்

2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்

2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி

2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு

2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு

2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply