Friday, 5 Feb 2010

Vietnam travel

meta.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

இது என்ன டாலர் பாசமா?

சியாம் ரியால் நதியில் நீர்வடிந்திருக்க, 1008 சிவலிங்கங்கள் சற்றுத் தொலைவில் தெரிந்தது உண்மை.

இந்தக் காட்சிக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கும்படி ஆகிவிட்டது! எவ்வளவு தூரம் பயணிக்கும்படி - எவ்வளவு செலவழிக்கும்படி ஆகிவிட்டது.

சிவலிங்கங்கள் என்றால் மனத்தில் பதிந்திருக்கிறதே ஓர் உருவம். இங்கு அப்படி அல்ல. இவை ஒரு சதுர வெட்டுக் கற்களின் நடுவே வட்ட வடிவிலே பதிக்கப்பட்ட கற்களைப் போல இருக்கின்றன.

ஒருவேளை உண்மையில் அசல் சிவலிங்கங்களாக வடிக்கப்பட்டு நீரின் ஓட்டத்தில் தேய்ந்து இப்படி ஆகியிருக்குமோ என்று நீரோட்டத்தினையும் பொருட்படுத்தாமல் நன்கு அமர்ந்து கைகளால் அந்தச் சிவலிங்கங்களை வருடிப் பார்த்தேன்.

சில்லென்ற அந்த நீரில் ஓரளவு மரத்துவிட்ட என் விரல்கள் நுணுக்கமாக வருடிப் பார்த்தபோது இல்லையில்லை இன்று தேய்ந்த சிவலிங்கங்கள் அல்ல, வடிவமைக்கப்பட்ட விதமே இப்படித்தான் என்று சொல்லின.

சிவலிங்கங்களை மிதிக்கக் கூடாது என்று இந்துக்களின் நம்பிக்கையாக இருந்தாலும் இங்குள்ள அறிவிப்புப் பலகைகள் மூலம் சிவலிங்கங்களை மிதிக்கக் கூடாது என்று சொல்லப்படக் காரணம் பழங்கால நினைவுச் சின்னங்களை நன்கும் அப்படியேயும் பாதுகாக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில்தான்.

ஆற்றின் படுகைகள் தாறுமாறாக இருந்தன. பாசியால் வழுக்கலும் இருந்தது. விழுந்தால் முன்பாவது தண்ணீர். இப்போது பாறைகளின் மீதுதான் விழவேண்டும். சரியான அடியோ, எலும்பு முறிவோதான் நிகழும் என்பது உறுதியாகத் தெரிந்தது.

சிவலிங்கங்கள் ஆற்றின் பரப்பில் பெருமளவில் பரவியிருந்தன. எல்லாவற்றையும் எண்ணினால் ஆயிரம் தேறுமென்று தோன்றவில்லை. எண்ணச் சோம்பல்பட்டு உத்தேசமாக 1000 என்று ஆக்கி விட்டார்களா?

“நான் உதவிக்கு வரவா? நீரில் வழுக்கி விழுந்து விடுவீர்கள். பாறைகள் பாசைபிடித்துக் கிடக்கின்றன” என்றாள் கியானா. “பரவாயில்லை நான் சமாளித்துக் கொள்வேன்” என்மேல் எனக்கு இருந்த நம்பிக்கை கியானாவுக்கு இல்லை. இது உண்மையான அக்கறையா, அல்லது டாலர் பாசமா?

“பசிக்கிறதா? வெகுநேரமாய் ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்களே” என்றாள் நிவின்.

நாங்கள் கரை ஏறியபோது இன்னும் சில புதுக் கடைகள் உருவாகியிருந்தன. ஒரு சில உணவுக் கடைகள். ஒரு சில கலைப் பொருள்களைக் கொண்ட கடைகள்.

என் பதில் ஒரு மழுப்பில் சிரிப்பாக இருக்கவே, எனக்குப் பசிப்பது உண்மைதான் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்ட நிவின், “வாருங்கள் எங்கள் வீட்டிற்குப் போவோம். சாப்பிட ஏதாவது தருகிறேன்.”

ஆனால் நான்  ஒரு முன் ஜாக்கிரத்தை முத்தப்பா என்பது நிவினுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. காரில் என் பையில் கொரிக்கவும் வயிற்றை நிரப்பவும் நிறைய உணவுப் பொருள்கள் இருந்தன.

நிவினும் கியானாவும் இரு கைகளையும் ஆளுக்கொன்றாகப் பிடித்துக்கொண்டு நீங்கள் கண்டிப்பாக எங்கள் வீட்டிற்குச் சாப்பிட வந்தாக வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டனர். இவர்கள் நல்லவர்களா? சரியானவர்களா? இவர்களுக்கு வேறு ஏதும் உள்நோக்கம் இருக்குமா? வம்பில் கிம்பில் நம்மை மாட்டிவிட மாட்டார்களே? இவர்கள் வேறு மாதிரியான பெண்கள் இல்லையே? என்கிற மனப் போராட்டம் எனக்குள் ஆரம்பிக்க, சரி கம்போடிய மக்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பு இது என்று அவர்களுடன் நடக்கலானேன். சிவாவை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். அவர் உள்ளூர் நிலவரங்கள் நன்கு தெரிந்தவர். அவரது பார்வையில் புன்னகை ஒன்று சற்றே ஒளிந்திருந்ததே தவிர, வம்பு, ஆபத்து, வேண்டாம் போன்ற ஆட்சேபங்கள் இல்லை.

ஆனால் இவர் ஒன்றை நினைத்திருக்க வேண்டும். இந்தாள் என்ன இவர்கள் இழுத்த இழுவைக்கெல்லாம் ஓடுகிறானே என்று!

ஆற்றிலிருந்து நிவினின் வீடு அப்படி ஒன்றும் வெகுதூரம் இல்லை. சொல்லப்போனால் ஆற்றின் பேரோசை குறைந்து அது ஒருவித மெல்லிய பின்னணி இசையாகக் கேட்கக்கூடிய தூரத்தில்தான் இருந்தது.

மூங்கில்களாலும் வேறுசில பருமனான மரங்களாலும் உருவாக்கப்பட்டிருந்த கலை வண்ணமான வீடு அது. ஆனால் அங்கே, எளிமை என்று சொல்ல முடியாத வறுமை காணப்பட்டது.

சில படிக்கட்டுகள் ஏறித்தான் வீட்டை அடைய முடிகிறது. நம் வாசகர்களுக்கு ஏற்கெனவே சொல்லப்பட்டுவிட்ட விஷயம்தான். கம்போடிய வீடுகள் பெரும்பாலும் குடிசையோ வீடோ தரைமட்டத்தில் இல்லை.

கம்போடியாவில் மழை வளம் அதிகம்; அது கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்ப்பதால் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் தரைப் பகுதியிலிருந்து தங்கள் வீட்டை சற்றே உயர்த்திக் கட்டிக் கொள்கிறார்கள். இத்தனைக்கும் கியானாவின் வீடு சற்று மேட்டுப் பகுதிதான். ஆனாலும் இங்கு வீட்டை சற்று உயரத்தில் உருவாக்குவது என்கிற கொள்கைகள் படி கியானாவின் வீடு உயரமாகவே கட்டப்பட்டிருந்தது.

வா! பார்! எங்கள் வறுமையைப் பார்! அள்ளிக் கொடு டாலர்களை என்று கியானா சொல்லாமல் சொல்லுவது போல அமைந்ததுதான் அவளது இல்லத்து அழைப்பு.

வீட்டில் எந்த நவீனங்களும் இல்லை. தொலைக்காட்சி பெட்டி தர அங்கே ஒரு கலைஞர் இல்லை. கிழிந்த பாய்கள், தலையணைகள் என்ற பெயரால் பல்லாண்டு அழுக்குகள் ஏறிய மோசமான நிறத்தில் சில காணப்பட்டன.

ஏதோ சியாமியா என்று குடும்ப உறுப்பினர்கள் பேசிக் கொண்டார்கள். கொண்டுவந்து வைக்கப்பட்டவை மரவள்ளிக் கிழங்கைப் போல் தோற்றமளித்த கிழங்குகளின் அவியல் குவியல்கள்.

சாப்பிடத் தயக்கம். இதெல்லாம் நமக்கு ஆகுமா?

ஒவ்வாமல் போய் வயிற்றுவலி வந்தால் என்ன ஆவது? கண்ணுக்குத் தெரிய, நம் அறிவிற்கு எட்ட ஒரு மருந்துக் கடையோ, ஒரு மருத்துவரோ இங்கு இல்லை. குறைந்த பட்சம் நமக்கு அரித்தால்கூடக் கஷ்டம்தானே?

மிரட்டலான அந்தக் கிழங்கில் சிறிது புட்டுப்பார்த்து மெல்ல வாயில் வைத்தேன். அப்படி ஒன்னும் நல்லபடியானதாகத் தெரியவில்லை.

இவர்களது அன்புக்காகத் தின்றுதான் ஆகவேண்டும். வயிறும் வெட்கமறியாது ‘தள்ளு உளளே!’ என்று இராணுவ மிரட்டலை விடுத்தது.

தண்ணீர் கேட்டேன். தண்ணீருக்குப் பதிலாகக் கலங்கலாக ஒரு திரவம் வந்தது.

“என்னது இது?”

“மூலிகைச் சாறு! குடிக்க”

“என்னது மூலிகைச் சாறா? இதெல்லாம் எனக்கு ஆகாது. தண்ணீர் கொடுங்க போதும்.”

கியானா அருகில் வந்து அமர்ந்து என் வாய்க்கருகே டம்ளரை வைத்து, “குடிங்க குடிங்க ஒண்ணும் பண்ணாது” என்றாள்.

என்ன இது தர்மசங்கடம்! இவர்கள் வழிகாட்டிகள் என்கிற எல்லையை மீறிப் போய் நம்மை ஏதும் வம்பில் சிக்கவைத்துப் பார்க்கிறார்களா? இது ஏதும் மயக்கபானமாக இருக்குமோ?

என்னவென்று சொல்வேன். நான் சந்தித்த இந்த உலகமகா தர்மசங்கட சம்பவத்தை?

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Most Commented Posts


Leave a Reply