Friday, 5 Feb 2010

MK’s grandson becomes hero

கதாநாயகன் ஆனார் கருணாநிதி பேரன்

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து இன்னொரு சினிமா தயாரிப்பாளர் உருவாகி விட்டார். துணை முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினும், அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் தனித்தனியாக தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதல்வரின் இன்னொரு மகனான மு.க.முத்துவும் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அவர் தயாரிக்கும் புதிய படத்தில் அவரது மகன் மு.க.த.அருள்நிதிதான் கதாநாயகன். படத்தை இயக்குபவர் பாண்டிராஜ். இசை தாஜ் நுர். ஒளிப்பதிவு மகேஷ் முத்துச்சாமி. படத்தின் நாயகி மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வரும் நிலையில் முதல்வர் கருணாநிதியை படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதல்வர் கருணாநிதி போலவே அவரது வாரிசுகளும் தமிழ் சினிமாவில் காலூன்றி வெற்றி கண்டு வருகிறார்கள். முதல்வரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி பாடகரானார். இப்போது அவர் பிஸியாக பாடிக் கொண்டிருக்கிறார். தற்போது இளைய மகன் மு.க, தமிழரசு தயாரிப்பாளர் ஆகியிருப்பதுடன், தன்னுடைய மகனையே கதாநாயகனாக்கி விட்டார். ஏற்கனவே முதல்வர் கருணாநிதியின் வீட்டில் இருந்து மு.க.முத்து மற்றும் ஸ்டாலின் ஆகியோர் சினிமா கதாநாயகர்களாக இருந்தது நினைவு கூரத்தக்கது.

Related Posts Title


One Response to “MK’s grandson becomes hero”

  1. SSS SARAVANAN

    vazkayil pala thunbangali anubavitha muthu ineyavathu oru pudeya pathayil payanapattu vetri pera en vazthukkal

Leave a Reply