» Junior Kelvi Pathil .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 5 Feb 2010

Junior Kelvi Pathil

alagri-vijayakanth-vadivel.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஆர்.சுப்பராயன், வேப்பேரி.

தமிழகக் காங்கிரசார் பதவிக்கு வந்தால் அதைத் துஷ்பிரயோகம் பண்ணுவார்களா?

முதலில் பதவியைப் பிரயோகம் பண்ணுகிறார்களா பாருங்கள். அப்புறமாய் அல்லவா துஷ்பிரயோகம் பண்ணுவது?


கே.ஆர்.ராமாமிர்தம், பழனி.

அழகிரியின் மத்திய அரசு நிர்வாகம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது?

தனக்கு எதுவும் பிடிக்கலேன்னு தனது ஆதரவாளர்கள் குறைபடாத மாதிரி நார்த்தும், செளத்தும் கலந்த ஜூகல்பந்தியை நடத்திக் கொண்டிருக்கிறார் அழகிரி! அவரது கண்ணெல்லாம் இனி அறிவாலயமா அல்லது புதிய தலைமைச் செயலகமா என்பதிலே இருக்கிறது. ஆக, இவரது பார்வை சென்னையிலேயே அதிகம் இருக்கிறது.


எஸ்.கங்கா, தேனி.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது உண்மையா?

தெலுங்கானா பிரச்னையில் காங்கிரசின் பரிதாப நிலையைப் பார்த்த பிறகுமா இந்தக் கேள்வி?


ம. செந்தமிழன், குனியமுத்தூர்.

ஒருமித்த கட்சிகள் கூட்டணி அமைக்க வந்தால் கூட்டணிக்குத் தயார் என்கிறாரே விஜயகாந்த்?

கணித சாஸ்திரத்தில் விஜயகாந்த் வகுத்தலில் மட்டுமே இருக்கிறார். இதில் ஈவைப் பார்க்காமல், வரும் மீதியையே பார்க்கிறார். அதனால்தான் எந்தக் கணக்கிலும் இவர் பாசாகாமல் இருக்கிறார்.


எம்.சித்ரா, ஆயிரம்விளக்கு.

1200 கோடி கொட்டினால் கூவம் மணக்குமா?

அதுவெல்லாம் சும்மா! கூவம் என்பது இன்னொரு சேது! கூவத்தை சீரமைப்பு என்பது சில தி.மு.க.வினருக்கு தமிழக அரசே நடத்தும் ஒரு லாட்டரிச் சீட்டுத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஏழைகளுக்குச் சீட்டு இல்லை.


ஆர். தண்டபாணி, கரூர்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மிக விலாவாரியாக நடத்தப்படும் போல இருக்கிறதே?

சந்தேகமென்ன? கலைஞர் தம் ஆற்றலையெல்லாம் திரட்டி தம்முடைய அரசியல் செல்வாக்கையும் நிர்வாகத் திறமையையும் வெளிப்படுத்த நினைக்கிறார். தமிழே அழகு அதற்கு சிறு அழகு ஊட்டினால் சிறப்பழகு. ஆனால் அளவுக்கதிகமாக அலங்காரம் செய்தால் இயற்கையழகு எடுபடாமல் போய்விடும். சில கட்சிச் சார்பாளர்களும் ஈழத்தமிழர்களும் உரிய நேரத்தில் தமிழக அரசின் ஆதரவு கிடைக்காததன் காரணமாகச் சில தமிழ் உணர்வாளர்களும் இம்மாநாட்டைத் திரும்பிப் பார்க்காத காரணத்தால் வெற்றியின் சதவிகிதம் குறையவே செய்யும்!


ஆர்.சிவநேசன், காரைக்குடி.

தேசிய விருதுகளை கேட்டு நடிகர்கள் தொந்தரவு செய்வதாக அதன் நடுவர்களில் ஒருவரான சதீஷ் பச்சோரி தெரிவித்திருந்த கருத்து பற்றி?

உண்மையை உரைக்க பச்சோரிகள் இன்னமும் பாரதத்தில் இருப்பது பெருமையாக இருக்கிறது! நடிகர்களின் சிறுமைகள் வெளிப்பட உதவியாகவும் இருக்கிறது.


எம்.சுந்தரப்பெருமாள், திருவல்லிக்கேணி.

சென்னை அரசு மருத்துவமனையில் ஓர் உணவகம் கடந்த இருபது ஆண்டுகளாக உரிமம் பெறாமல் நடத்தப்பட்டு வந்திருக்கிறதே?

அந்த மருத்துவமனை தரும மருத்துவமனை என்பதால், நிர்வாகத்தினரும் தருமத்தோடு நடந்து கொண்டிருக்கிறார்கள். ஓ.பி. சீட்டிலேயே இதுவரை பொழுது ஓட்டிக் கொண்டிருந்த உணவகத்தைத்தான் நாம் பாராட்ட வேண்டும். நிர்வாகத்தினரை அல்ல.


ஏ.திருமாவேலன், மதுரை.

இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் என்கிறாரே இயக்குநர் பாலா?

வழிபடாதிருப்பதும் வழிபடுவதும் தனிமனித சுதந்தரங்கள். இதில் தலையிட நமக்கு உரிமை இல்லை. நான் கடவுளில் பிடிபடாத பாலாவின் இறைமைக் கொள்கை இந்தக் கோலத்தில் பிடிபட்டுவிட்டது. பாலாவின் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும்?


எம்.அப்பாசாமி, புதுக்கோட்டை.

சரத்குமாரின் துணை ராதிகாவுக்குப் பெரிய பலம்தானே?

ராதிகாவின் துணைதான் சரத்குமாரின் புது பலம்!


எஸ்.ராஜா, கும்பகோணம்.

நடிகர் வடிவேலு வீட்டில் ரெய்டு பற்றி?

திரைக்கு முன்னால் சிரிப்பாய்ச் சிரிக்கிறவர் திரைக்குப் பின்னால் அழுகையாய் அழுது கொண்டிருக்கிறார். உயிர் நண்பர்களே இவருக்கு அரோகரா சொல்லியிருக்கிறார்களாம். இப்படி வடிவேலுவிற்கு அரோகரா சொன்னதில் இவர் இழந்தது பெருந் தொகைகளாம். சுடுகாட்டு நிலத்தைக் கூட இந்த அப்பாவி தலையில் கட்டிவிட்டதாகக் கேள்வி. ஒரு வெளிச்ச மனிதர் இப்படி இருட்டில் இருக்கலாமா?


டி.பீட்டர், உடுமலைப்பேட்டை.

விலைவாசிப் பிரச்னைக்கு சரத்பவார் காரணமா?

இந்தப் பிரச்னையில் ஊர் எல்லையில் வைக்கப்பட்டுள்ள பொம்மைதான் இவர். இவரைத் தாண்டிப் போனால்தான் இதற்கான கோயிலும், சந்நிதிகளும் உள்ளன.


சி.ராமசாமி, திருச்சி.

மத்திய அரசு விருது பெற்றவர்களுக்கு உங்கள் வாழ்த்து உண்டா?

நன்றாக - அரசியல் பண்ணாமல் ஆள் பிடிக்காமல், டெல்லிக்கு வால் பிடிக்காமல் காசு செலவழிக்காமல் விருது பெற்றவர்களுக்கு மட்டும்!


எம்.அப்துல்காதர், வேலூர்.

இந்தியா - பங்களாதேஷ் டெஸ்ட் மோதல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதானே?

ஆமாம். என்றாலும் சற்றுத் தண்ணி காட்டிவிட்டார்கள். சீட்டுக்கட்டை அடுக்கி வைத்துக் காற்றை ஊதினால் போதும். வரிசைக்குச் சாயுமே அப்படிச் சாயாமல் நன்கு எதிர்த்து நின்றார்கள். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் எல்லாவற்றிலும் ‘தண்ணி’ காட்டினார்கள். தாடையை உடைத்தார்க்ள. உலகின் நம்பர் ஒன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் சற்று உதவினார்கள்.


எஸ்.ராதாகிருஷ்ணன், கோயமுத்தூர்.

பெண்ணகரம் இடைத் தேர்தலை பா.ஜ.க. புறக்கணிக்கப் போகிறதாமே?

திருவிழாவில் ஏன் தொலைந்து போவானேன் என்று இந்தக் குழந்தை வீட்டிலேயே இருக்கிறதாக்கும். சமத்துக் குழந்தை! இந்தச் சமர்த்து பா.ம.க. குழந்தைக்கு வரவில்லையே!


டி.செல்வம், குற்றாலம்.

வரும் பொதுத் தேர்தலில் யார் யாரோடு கூட்டணி என்பது தெரிகிறதா?

கட்சித் கல்யாணங்களும் நம் வீட்டுக் கல்யாணங்களைப் போலதான். சில சமயம் காவல் நிலையத்தில் கூட அது முடிந்து போகும். எனவே, தேர்தல் நெருங்கும்போது அந்தச் சிவப்புக் கட்டடங்களைப் பார்த்துதான் யாராலும் சொல்ல முடியும்.


சி.சரளாதேவி, முசிறி.

வி.வி.ஐ.பி.க்கள் தங்கள் புகழை நிலை நிறுத்தத் தொடர்ந்து பாடுபட வேண்டியிருக்கிறதே?

புகழ் என்பது ஒரு பாலிசி மாதிரி. தொடர்ந்து அதற்கு பிரிமியம் செலுத்தினால்தான். அதன் மெச்சூரிட்டி காலம் நன்றாக இருக்கும். இடையிலே விட்டு விட்டால் செலுத்திய பணத்திற்கே போராட வேண்டியிருக்கும்.


எஸ்.ஹமீது, பொள்ளாச்சி.

இன்றைய உலகத்தின் ஆக்கம் எது? அழிவு எது?

ஆக்கம் ஒபாமா, அழிவு ஒசாமா. இவர்களிடம் உள்ள இந்தப் ‘பா’வும் ‘சா’வும் தான் இந்த உலகத்தை இப்போது ஆட்டிப் படைக்கின்றன.

29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Most Commented Posts


One Response to “Junior Kelvi Pathil”

  1. Rajen

    அதுவெல்லாம் சும்மா! கூவம் என்பது இன்னொரு சேது! கூவத்தை சீரமைப்பு என்பது சில தி.மு.க.வினருக்கு தமிழக அரசே நடத்தும் ஒரு லாட்டரிச் சீட்டுத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஏழைகளுக்குச் சீட்டு இல்லை

    100000000000000000 % CORRECT

Leave a Reply