Friday, 5 Feb 2010
தேவை ஒரு புது வாரியம்
சென்னை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையை மையமாகக் கொண்ட 2,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியில் நீர் ஆதாரப் பகுதிகள் மாணவர்கள் சிலராலும் தொண்டு நிறுவன ஆர்வலர்களாலும் முறையாக ஆய்வு செய்யப்பட்ட வேளையில் சில வயிற்றைக் கலக்கும் உண்மைகள் வெளிப்பட்டிருக்கின்றன.
34 ஏரிகள் மற்றும் குளங்கள் கழிவுநீர்ப் பகுதிகளாக மாறிவிட்டன.
2 ஏரிகள் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
42 ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர் சேராதபடி வழியெங்கும் தடுக்கப்பட்டுவிட்டன.
26 ஏரிகள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. சென்னை நகரின் விரிவாக்கத்தைக் கணக்கிட்டால் அது வியப்பை அளிக்கிறது. ஆனால் இதற்கு ஏற்ப நீர்வள ஆதாரங்கள் பெருகியுள்ளனவா என்றால் இல்லை. மாறாக, குறைய ஆரம்பித்துள்ளன என்பதை மேற்காணும் ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துவனவாக உள்ளன.
அரசியல்வாதிகளின் ஆதரவில் அதிகாரிகளின் ஒத்துழைப்பில் காலியாகக் கிடக்கும் நீர் நிலைகளையும் நீர்ப்பிடிப்பு இடங்களையும் கண்டபடி ஆக்கிரமிப்பது அதிகமாகி வருகிறது.
இடைப்பட்ட காலத்தில் அரசிற்கு வேகம் வந்து நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நடவடிக்கைகள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டன.
போரூர் ஏரியும் அம்பத்தூர் ஏரியும் காப்பாற்றப்பட்ட அழகு இருக்கிறதே அதை இன்றளவும் அடையாளச் சின்னங்களாகக் காணமுடிகிறது.
அரசு மனம் வைத்தால் எதுவும் முடியும் என்பதற்கு இவை நல்ல முன்னுதாரணங்கள்.
இந்த மகிழச்சி நீடிக்க முடியாதபடி இப்போதைய ஆக்கிரமிப்புகள் முட்டுக்கட்டை போடுகின்றன.
உலகில் எந்த நாட்டிலும் இத்தகைய தவறுகள் எளிதில் நடந்துவிடா. தங்கள் மண்ணைத் தவிர அங்குல மண்ணைக்கூட ஆக்கிரமிப்புச் செய்யமுடியாது.
அரசுக்குப் பல்வேறு கவனங்கள். அப்படித் திரும்பி ஒன்றைக் கவனிக்கும்போது இந்தப் பக்கத்தில் ஆக்கிரமிப்புகள் மளமளவென்று நிகழ்ந்துவிடுகின்றன.
பொதுப்பணித்துறையிடமும், உள்ளாட்சித் துறையிடமும், வருவாய்த் துறையிடமும் இதற்கான அதிகாரங்கள் பரவலாகப் பிரிந்து கிடப்பதுதான் இத்தகைய கொட்டங்களுக்குக் காரணம்.
நீர்நிலைப் பாதுகாப்பு வாரியம் என்று ஒரு தனி வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால் அது கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு கவனிக்க ஆரம்பிக்கும் அல்லவா?
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!
2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!
2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!
2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?
2009/12/31 அம்புகளை நோவானேன்?
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

































February 10th, 2010 at 11:04 pm
நீர்நிலைப் பாதுகாப்பு வாரியம் என்று ஒரு தனி வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால் அது கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு கவனிக்க ஆரம்பிக்கும் அல்லவா?
nalla arivurai sambantha patta thurai gavanekka vendum