Friday, 5 Feb 2010
குப்பைக் கூளங்களை வைத்து ஒரு பாலம் : சீன நிறுவனம் செய்த மோசடி

சீனாவின் பெருநகரங்களில் ஒன்றான ஷாங்காயில் வூசாங்க் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. அதற்கு காரணம் மோசமாக கட்டப்பட்டது அல்ல, அதைவிட மோசமானது. பாலத்தின் பல இடங்களில் கான்கிரீட்டுக்கு பதிலாக உள்ளே குப்பைக் கூளங்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் வைத்து கட்டப்பட்டுள்ளது.
ஷாங்காயில் ஓடும் வூசாங்க் ஆறு முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையாகும். சீனாவின் உள்ளே ஒரு சரக்கு செல்ல வேண்டுமானால் இந்த ஆற்றை கடக்காமல் முடியாது. இந்த ஆற்றுடன் கலக்கும் ஷசோவ் ஆற்றின் ஒரு பகுதியில் இருந்த பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம்ஒன்று கட்டப்பட்டது. 2009 இல் பாலப் பணிகள் நிறைவடைந்தன. ஆனால், குறுகிய காலத்திலேயே பாலத்தின் பல இடங்களில் விரிசல் விடத்தொடங்கியது. அமைந்த நிலம் சரியாக இல்லையோ என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அப்படி ஏதும் இல்லை என்பதும், பாலம் உறுதியாகக் கட்டப்படவில்லை என்பதும் தெரிய வந்தது. விரிசல் விடத்தொடங்கிய இடங்களை தட்டிப் பார்த்தபோது அந்த இடத்தில் கான்கிரீட்டுக்குப் பதிலாக கட்டட மிச்சங்களும், பிளாஸ்டிக் மற்றும் துணி குப்பைக் கூளங்களும் வெளியே வந்து விழுந்துள்ளன.

பாலப் பணிக்கு சரியான விகிதத்தில் சிமெண்ட், மணல் மற்றும் இதர அவசியமான பொருட்களைப் பயன்படுத்தாமல் கழிவுகளை கலப்படம் செய்து பாலத்தை தயார் செய்து விட்டார்கள். அது புழக்கத்திற்கு வந்த சில மாதங்களிலேயே பல்லிளித்து விட்டது..
மறு சுழற்சி தேவைதான் அது மனித சுழற்சியை கெடுக்கும் அளவுக்கா போகும் என்ற கேள்வியுடன் அந்தப் பாலத்தை கட்டிய நிறுவனம் மீது விசாரணை நடந்து வருகிறது.

































February 6th, 2010 at 11:11 pm
பாலப் பணிக்கு சரியான விகிதத்தில் சிமெண்ட், மணல் மற்றும் இதர அவசியமான பொருட்களைப் பயன்படுத்தாமல் கழிவுகளை கலப்படம் செய்து பாலத்தை தயார் செய்து விட்டார்கள். அது புழக்கத்திற்கு வந்த சில மாதங்களிலேயே பல்லிளித்து விட்டது..
namma orur araseyalvadhi formula than velenadu pola adhai kandupedikkathan nam nattil atkal illai