நானும் தூக்கில் தொங்க ஆசைப்படுகிறார் வடிவேல் : நடிகர் சிங்கமுத்து ஆவேசம்

‘மேலாளர் வேல்சாமி தூக்கில் தொங்கியதுபோல், நானும் தொங்க வேண்டும் என்று, வடிவேல் ஆசைப்படுகிறார்’ என்று நடிகர் சிங்கமுத்து கூறியுள்ளார்.
வடிவேல் நடித்த படங்களில் அவருடன் நடித்தவர் சிங்கமுத்து. இவர், போலி பத்திரம் தயார் செய்து தன்னை மோசடி செய்துவிட்டதாகவும், மோசடி செய்த தொகை ரூ.7 கோடி வரை இருக்கும் என்றும், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனிடம், நடிகர் வடிவேல் புகார் செய்துள்ளார்.
அந்தப் புகார் மீது விசாரணை நடந்து வரும் நிலையில், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளார் சிங்கமுத்து.
இதற்கிடையில் இவ்விவகாரம் குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில்தான் ‘நானும் தூக்கில் தொங்க வடிவேல் ஆசைப்படுகிறார்’ என்று சிங்கமுத்து கூறியுள்ளார்.
மேலும் அவருடைய பேட்டியில் “தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடும் என் வாயில் பொய் வராது. யாரையும் மோசடி செய்யும் எண்ணமும் வராது. பொய்யான புகார்களைச் சொல்லி என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார் வடிவேல்.
நான் புறம்போக்கு இடத்தையும் சுடுகாட்டு நிலத்தையும் வாங்கி கொடுத்து ஏமாற்றி விட்டதாகக் கூறுகிறார் அவர். அது எந்த நிலம் என்று வடிவேல் கூறவேண்டும். என்மீது தவறு இருந்தால் வடிவேல் வழக்கு போடட்டும்.
வடிவேல் பற்றிய எல்லா ரகசியங்களும் எனக்குத் தெரியும். எல்லா உண்மைகளையும் வெளியிட தயாராக உள்ளேன்.
சக நடிகர்களோடு அவர் பகை வளர்த்துக்கொண்டே போகிறார். எல்லாரிடமும் சண்டை போடுகிறார். இதற்கு பொறாமைதான் காரணம். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.
அவருடை மேலாளர் வேல்சாமி தூக்கில் தொங்கியபோல் நானும் தொங்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் அது நடக்காது. அவரரை நான் சட்டரீதியாகச் சந்திப்பேன்” என்று எதிர்சவால் விட்டிருக்கிறார்.
Related Posts Title































