Tuesday, 2 Feb 2010

American district Hillcroft renamed Mahatma gandhi

அமெரிக்க நகருக்கு மகாத்மா காந்தியின் பெயர்!
mahatma-gandhi-district.jpg

மெரிக்காவில் டெக்சாஸ் நகருக்கு அருகே தென்மேற்கு ஹூஸ்டனில் வரும் ஒரு பகுதியான ஹில்க்ராப்ட் என்ற இடத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 141 ஆவது பிறந்த ஆண்டையொட்டி இந்த கெளரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஹில்கிராப்ட் பகுதிக்குள் நுழைந்தால் இந்தியாவிலுள்ள ஏதோ ஒரு நகருக்குள் நுழைந்தது போன்ற தோற்றம் தானாகவே ஏற்படும். எங்கு திரும்பினாலும் இந்தியத் தலைகளாகவே தெரியும். இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருவதால் இந்தப் பகுதி ‘லிட்டில் இந்தியா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.

இங்கு வசிக்கும் இந்தியர்கள், தாங்கள் வசிக்கும் ஹில்கிராப்ட் பகுதிக்கு மகாத்மா காந்தியின் பெயரை வைக்குமாறு நகர நிர்வாகத்திடம் கேட்டு வந்தனர். அவர்களுடைய 7 வருட ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. கடந்த மாதம் ஹில்கிராப்ட் பகுதி மகாத்மா காந்தி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கான விழாவில், நகர மேயர் ஆன்னைஸ் பார்க்கர் இந்த பெயர் மாற்றத்தை அறிவித்தார். அப்போது ஹூஸ்டன் நகரத்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் அரோரா உடன் இருந்தார்.

ஊரின் பெயரை மாற்ற வேண்டுமானால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வர்த்தக கட்டட உரிமையாளர்களில் 75 சதவிகிதம் பேர் சம்மதம் தெரிவித்து கடிதம் அளிக்கவேண்டும். அப்போது தான் அந்த கோரிக்கையை நகர நிர்வாகம் பரிசீலிக்கும். ஹில்கிராப்ட் பகுதியை பெயர் மாற்றிக் கோரி 75 சதவிகிதம் பேர் சம்மதம் தெரிவித்ததால் இந்த பெயர் மாற்றம் நிகழந்துள்ளது.

Most Commented Posts


One Response to “American district Hillcroft renamed Mahatma gandhi”

  1. SSS SARAVANAN

    vazgha antha india desa patru ulla amareka indiyargal

Leave a Reply