Tuesday, 2 Feb 2010

Actor Cochin Haneefa is dead

ஹனிபா மரணம் : முதல்வர் கருணாநிதி இரங்கல்

cochin-haneefa.jpg

பிரபல நடிகர் கொச்சின் ஹனிபா சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 59.

தமிழில் மகாநதி, முதல்வன், அந்நியன், ஜெயம்கொண்டான், சிவாஜி உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் வில்லன் வேடங்களில் நடித்தவர் கொச்சின் ஹனிபா. இவருடைய இயற்பெயர் சலீம் அகமது கவுஸ். மேடை நாடகம் ஒன்றில், ஹனிபா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் அந்தப் பெயரையே பின்னர் வைத்துக்கொண்டார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவருக்கு, கல்லீரலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த சில மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்ற மாலை 4 மணியளவில் ஹனிபா காலமானார். அவருடைய உடல் எர்ணாகுளம் எடுத்துச்செல்லப்படுகிறது. அங்குள்ள சென்ட்ரல் ஜும்மா மசூதியில் இன்று உடல் அடக்கம் நடைபெறுகிறது. இவருக்கு பாஷிலா என்ற மனைவியும் சர்ஃபா, மர்வா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

ஹனிபாவின் மரணத்திற்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Most Commented Posts


One Response to “Actor Cochin Haneefa is dead”

  1. SSS SARAVANAN

    haneefa thanudaya panmuga nadipal tamizar anivar manathelum endrum neengamal edam peruvar

Leave a Reply