Vietnam travel

Posted on Friday 26 February 2010

hue.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

அடுத்து நாங்கள் செல்ல விரும்பியது உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலான ஆங்கோர் வாட்டிற்கு.

இந்துக் கோயிலுக்குள் சட்டென்று போகலாம் என்று பார்த்தால் ஏகப்பட்ட சம்பிரதாயங்கள். கோயிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளியுள்ள ஓர் அலுவலகத்திற்குப் போய் (அது சரி!) நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும். நுழைவுச் சீட்டையும் சட்டென்று வாங்கிவிட முடியாது தெரியுமா!

இங்கு ஏதோ இராணுவ அலவலகம் போல பலரும் சீருடையுடன் நிற்கிறார்கள். இவர்களைக் கடந்து போனால் முன்னும் பின்னுமாய் எட்டு கவுண்ட்டர்கள் ஒரு செவ்வகக் கட்டடடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு ஏராளமான அறிவிப்புப் பலகைகள் காணப்படுகின்றன. இவற்றைப் படிக்காமல் போனால் போச்சு! ‘பேபேபே’தான். அதாகப்பட்டது கவுன்ட்டரில் இருப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளாது.

சியாம் ரியாப் நகரைச் சுற்றி எட்டு இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் எவற்றைப் பார்க்கப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். வாகனவசதி வேண்டுமா என்கிறார்கள். வழிகாட்டி தேவையா என்கிறார்கள். இவற்றில் நாம் தெளிவு பெறாமல் நுழைவுச் சீட்டு வாங்க எண்ணுவதே அபத்தமான அணுகு முறையாகிவிடும்.

எட்டுக் கோயில்களின் படங்களும் வண்ண போஸ்டர்களாய் காட்சி அளிக்கின்றன. அவற்றில் ஆங்கோர் வாட்டை மட்டுமே தேர்ந்தெடுத்தோம்.

‘வாருங்கள், போட்டோவுக்கு போஸ் கொடுங்கள்!” என்றார்கள்.

“போட்டோவெல்லாம் வேண்டாம். எங்களிடம் கேமரா இருக்கிறது’ என்றேன்.

“அட! அது இல்லீங்க! நுழைவுச் சீட்டில் உங்கள் படம் பதிக்கப்பட வேண்டும். அதற்காக எடுக்க வேண்டும்.”

“என்னது! கோயிலுக்குள் நுழைய உதவும் சீட்டில் என் படமா?”

“ஆமாமா! வந்து போஸ் கொடுங்க!”

இதற்கும் சேர்த்துப் பணம் வாங்குகிறார்கள். இந்த நுழைவுச் சீட்டு மூன்று நாளைக்காம். நாம் ஒரு நாள் பார்த்துவிட்டு மறுநாள் யாருக்கேனும் விற்றுவிட்டால்? (அட! மூளை எப்படியெல்லாம் வேலை செய்கிறது!) எனவேதான் புகைப்படத்தோடு கூடிய நுழைவுச்சீட்டு.

படம் எடுக்கிறார்களே, ஏகமாய்க் காக்க வைப்பார்கள் போலிருக்கிறதே என்று எண்ணினால் இரு நிமிடங்களில் தந்து விடுகிறார்கள்.

கண்ணாடியைக் கழற்ற மாட்டேன் என்று முரண்டு பிடித்துப் பார்த்தேன்.

கழற்றத்தான் வேண்டும் என்று கழற்றவே செய்துவிட்டார்கள். எனக்கு என் படத்தோடு கூடிய இந்த நுழைவுச் சீட்டை வாசகர்கள் அறிய வெளியிட ஆசை. ஆனால் கண்ணாடி இல்லாததால் என்னால் வெளியிட முடியவில்லை.

சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் பக்கவாட்டில் உள்ள கடைகளில் விற்கிறார்கள். ஆனால் மிரட்டும் விலை. கம்போடியா ஏழைநாடுதான். ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு விலை உயர்ந்த நாடாக இருக்கிறது.

நானும் சிவாவும் மட்டும் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டோம். எங்கள் ஓட்டுநரை ஒரு மரியாதைக்குக் கேட்டதற்கு வேப்பங்காயைக் கடித்தவர்போல் முகத்தை மாற்றிக் கொண்டார். எங்களுக்கு இவரும் வந்தால் நிறையப் படங்கள் எடுத்துக் கொள்ளலாமே என்கிற எதிர்பார்ப்பு. அது நடக்கவில்லை.

ஆங்கோர் வாட் கோயிலை நெருங்க நெருங்க பெரிய பிரமிப்பு.

கோயிலைச் சுற்றி ஓர் அகழி இருக்கிறது பாருங்கள். அடேங்கப்பா! எவ்வளவு பெரிய அகழி! அகழியும் கோயிலுமாய்ச் சேர்த்து 22 ஹெக்டேர் நிலப்பரப்புக் கொண்டது இது.

கம்போஜம் என்றும் கம்பூச்சியா என்றும் அழைக்கப்பட்ட கம்போடியாவில் ஓர் இந்துக் கோயில் எப்படி உருவாயிற்று என்பது சுவையான வரலாறு.

இதைப் பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இதைச் சிலர் புராணம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கம்போடியாவில் கமெர் கலாசாரம் என்று ஒன்று உண்டு. இந்த வம்சாவளியைக் துவக்கி வைத்தவன் ஒரு சோழ மன்னனாம். சோழ நாட்டில் பிறந்த இந்த இளவரசன் சோழ மன்னர்களால் ஏனோ நாடு கடத்தப்பட்டான். அவன் கடத்தப்பட்டு வந்தடைந்த நாடு கம்போடியா.

இவன் கடல் அரசனின் (?) மகளை மணந்து அவன் தன் மகளுக்குச் சீதனமாகக் கொடுத்த நிலப்பரப்பை ஆள ஆரம்பித்தான்.

இவனது வம்சத்தவர்கள் உருவாக்கிய கோயில்களே சியாம் ரியாப் நகரிலும் கம்போடியாவெங்கும் பரவிக் கிடக்கின்றன.

இந்தக் கோயில்கள் இன்று உலகெங்கிலும் உள்ள உல்லாசப் பயணிகளை அப்படிச் சுண்டியிழுக்கின்றன.

கமெர் அரசர்கள் ஏற்படுத்திய இந்தப் பிரமாண்டமான கலைப்படைப்புகள் ஏனோ நாளடைவில் மக்களால் மறக்கப்பட்டன. சியாம் ரியாப் நகர் மக்களால் கைவிடப்பட்டு நாம் வென் (இன்றைய கம்போடியாத் தலைநகர்) மெல்ல முக்கியத்துவம் பெறவே சியாம் ரியாப் மறக்கப்பட்டு பாழடைந்தது.

மரங்களும் புதர்களுமாய் ஆங்கோர்வாட் மூடப்பட்டுவிட, இதை ஆராய்ந்து கண்டுபிடித்து உலகின் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவரே ஒரு போர்ச்சுக்கீசியர்தான்.

இக்கோயிலை மரங்களின் வேர்களின் பிடியிலிருந்து இன்னமும் மீட்க முடியவில்லை. வேர்களை நீக்கினால் கட்டடம் சிதைந்துவிடும் என்கிற நிலைமை இப்போது இந்தியத் தொடர்புகள் இருப்பதால் இந்தியத் தொல்லியல் வல்லுநர்களும் அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் மரங்களின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்றப் புறப்பட்டு வந்தனர். ஓரளவு வெற்றியும் பெற்றனர்.

ஆங்கோர் வாட்டிற்கான கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திய போது எங்களை ஏகப்பட்ட பேர் சூழந்து கொண்டனர்.

சிலர் இந்தாங்க பழம் என்றனர். சிலர் கலைப்பொருட்களை நீட்டினர். சிலர் தொப்பிகளைக் காட்டி, வாங்கிக் கொள்ள வற்புறுத்தினர். ஆனால் இவர்களிடம் காணப்பட்ட கட்டுப்பாடும் ஒழுங்கும் என் புருவங்களை உயர்த்தின.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…
 

admin @ 5:47 am
Filed under: Uncategorized
Building A Strong Family Bond

Posted on Friday 26 February 2010

lena-kalkandu.jpgஉறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

“என்னோட மூணு புள்ளங்க கல்யாணத்துக்கும் அழைச்சேன். ஒன்றிற்குக்கூட வரவில்லை. நடுப்பையன் கல்யாணத்துக்கு மட்டும்தான் வாழ்த்து வந்துச்சு. மற்ற கல்யாணங்களுக்கு அதுவும் வரவில்லை. என்னைக் கொஞ்சங்கூட மதிக்கிறது. இல்லை. அப்புறம் எப்படி அவரோட உறவு கொண்டாடறது சொல்லுங்க?” என்று தன் உறவினர் பற்றி மனவருத்தப்பட்டுக்கொண்டார் என் நண்பர்.

இவர் குறிப்பிட்ட உறவினரும் எனக்கு நண்பர் என்பதால் சண்டை இழுத்துவிடுகிற பாணியில் பேசாமல் அவரோட மூணு புள்ளைங்க கல்யாணத்துக்கும் போகமுடியாமல் போனது ஆச்சரியம்தான் என்றேன் ஒரு தொடர்புடைய உரையாடலில். இவர் சொன்ன காரணங்கள் ஏற்கும்படி இருந்தன. இதன் சாரம் என்னவென்றால் போகக்கூடாது என்பதில்லை. உண்மையில் போகமுடியாத சூழ்நிலை.

“அதுக்குப்பிறகு அவரும் பேசறது இல்லை; நானும் பேசறது இல்லை” என்றார் இந்த நண்பர்.

ஒட்டிக்கொள்ளமுடியாவிட்டாலும் வெட்டிக்கொள்ளாதீர்கள். பத்துக் காரணங்கள் சொன்னாலும் எடுபடா. உங்கள் இல்லத்து விசேஷத்தின்போது, “கணக்குப் பார்க்காமல் வாஞ என்று அழைத்து “என் பக்கம் தவறுதான் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்” என்றேன். இவை நடக்க, இன்று ஃபெலிக் கால் உறவாகிவிட்டது இவர்கள் உறவு.

நீரின்மீது பிரம்பு கொண்டு வலுவாக அடியுங்கள். பிளவு வருவதுபோல் வந்து மறுபடியும் சேர்ந்துகொள்ளும் உண்மையான நட்பிற்கும் உறவிக்கும்கூட இதே நன்மை உண்டு. உறவைப் புதுப்பிக்க வாய்ப்பைக் தேடுங்கள். ஏன் உருவாக்கவேகூடச் செய்யுங்கள்.

தாழ்வு மனப்பான்மையும் உயர்வு மனப்பான்மையும் செல்வ நிலைகளும் செல்வாக்குகளும் வீண் கெளரவங்களும் உறவைத் துண்டாட வல்லவை என்பதை உணருங்கள். இவற்றிற்கு இடம் கொடாதீர்கள்.

சிறுசிறு குறைகளைப் பெரிதுபடுத்துவது; வீண் சம்பிரதாயங்களை நம்புவது; போலியான நடைமுறைகளை எதிர்பார்ப்பது; உதவிகளை மறுக்க நேரும்போது காரணங்களைச் சரிவரப் புரிய வைக்கத் தவறுவது; இடைப்பட்ட மனிதர்களிடம் தேவையில்லாமல் விமரிசிப்பது ஆகியவை உறவிற்கு வைக்கும் வெடிகுண்டுகள் உறவூரிற்கான இரயிலைக் கோட்டைவிட்டு விட்டால் கூடப் பரவாயில்லை; பேருந்தையாவது பிடித்துவிடுங்கள்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்
 

admin @ 5:33 am
Filed under: Uncategorized
Announcement On Price Reduction For Consumer Products

Posted on Friday 26 February 2010

manmohan-singh1.jpgகைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

விலைவாசி குறையத் தொடங்கும் என்று பாரதப் பிரதமர் மன் மோகன்சிங் மட்டும் அறிவித்திராவிட்டால் இது அரசியல்வாதிகளின் வழக்கமான தந்திரப் பல்லவிதான் என்று எண்ணத் தோன்றியிருக்கும்.

மன்மோகன்சிங் ஒரு மாறுபட்ட தலைவர். நமக்குக் கிடைத்த நல்ல பிரதமர். மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக உலக அளவில் பாராட்டப்படுபவர். இலஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர். சில கட்டுப்பாடுகளுக்குள் வலம் வந்தால் சரி வர இயங்கிக் கொண்டிருப்பவர்.

எனவே இவரது வார்த்தைகளை நம்பலாம் என்று தோன்றியது. என்ன வியப்பு! ஏறுமுகத்தில் இருந்த விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது.

அரிசி விலை குறைவதாகப் பத்திரிகைகளே ஆதாரம் காட்ட ஆரம்பித்துவிட்டன. பிரேசிலிலிருந்து வந்து இறங்கியுள்ள சர்க்கரை கிலோவுக்கு நான்கு ரூபாய் வரை குறைந்துள்ளது.

துவரம்பருப்பு மத்திய பிரதேசம் உத்திரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நல்ல விளைச்சலைக் காண ஆரம்பித்து சந்தைக்கு வர ஆரம்பித்துவிட்டதால் இதுவும் விலை சற்றே குறைந்துள்ளது. பர்மாவிலிருந்து துவரம் பருப்பு ஏகமாய் வந்து இறங்கவே காட்டுத்தனமாக ஏறிய துவரம் பருப்பு விலை ஒரு கட்டுக்குள் வந்துள்ளது.

கடலைப் பருப்பு 40 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக ஆகியுள்ளது. பாசிப்பருப்பின் விையும் அடங்க ஆரம்பித்துவிட்டது.

இவையெல்லாம் இந்த மண்ணைத் தங்கப் பூமியாக ஆக்கிவிட்டதா என்றால், இல்லை!

ஏன் தெரியுமா இவை அனைத்தும் செய்தித்தாள்களில் காணப்படும் புள்ளி விவரங்களாகவே உள்ளன. வேறு வகையில் சொல்லப் போனால் ஒட்டு மொத்தக் கொள்முதல் வியாபாரிகளின் அளவிலோ, சில்லறை வியாபாரிகளின் அளவிலோ இந்த விலை வித்தியாசம் நின்று போய்விட்டது.

ஆம். இன்று விலைவாசி இறங்கியிருப்பதால் அதிகம் நன்மை அடைந்து கொண்டிருப்பவர்கள் வியாபாரப் பெருமக்களே.

மக்களை இந்த விலைவாசி இன்னும் சென்றடையவே இல்லை. பொதுமக்களையும் குறிப்பாக நடுத்தர ஏழை மக்களையும் சென்றடையாத விலைவாசிக் குறைவை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 5:17 am
Filed under: Uncategorized
Disease relief plants - Akbar Kausar

Posted on Friday 26 February 2010

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…

நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சம்

கூந்தற் பாக்கு மரம்

(கமுகு)

(ARECA CATECHU)

கமுகு - இதன் வேறு பெயர்களாக பாக்குமரம், கந்தி, அடைக்காய் என அழைக்கப்படுகிறது.

இது இந்தியாவின் வெப்ப நாடுகளில் பயிராகும் ஒரு மரம். மைசூர், கர்நாடகம், கேரளம் முதலிய இடங்களில் ஏராளமாய் உள்ளன. இதன் விதைக்கு பாக்கு என்பது பெயராகும்.

இது ‘அரிகா கேடெச்சூ’ என அறிவியல் பெயர் கொண்டு ‘பால்மயே’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

சித்த மருத்துவம்

இதன் இளங்குருத்து, விதை, வேர் ஆகியவை மருத்துவ உபயோகங்களுக்கு உதவுகின்றன. துவர்ப்புச் சுவையுடன், வெப்பத் தன்மையுடன் இருக்கும். சாயமேற்றும் பண்பும் இதற்கு உள்ளது. அஜீரணபேதி, சிறுநீர் நோய்கள், வயிற்றுப்பூச்சிகள், ஈறுநோய், மேக வெள்ளை முதலியவை போகும்.

இளங்குருத்து : இதனை எண்ணெய்விட்டு வதக்கி வாதவலிக்கு வைத்துக் கட்டலாம்.

இளம்பிஞ்சு : இது வயிற்று நோய்களுக்கு ஏற்றது.

பாக்கு : பச்சைப்பாக்கு தொண்டையில் கட்டும் கோழையைப் போக்கும். 6 கிராம் வரை எடுத்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் அஜீரணபேதி, சிறுநீர் நோய்கள் முதலியன தீரும்.

* மேற்படி தூளை சிறிதளவு எடுத்து, இதனைப்போல 8 மடங்கு பழச்சாறு விட்டு அரைத்து உள்ளுக்குக் கொடுத்தால் புழுக்கள் வெளியேறும்.

* 5 முதல் 10 கிராம் பொடியை 100 மி.லி. பசுவின் பாலில் கலக்கிக் கொடுத்தால் 1 மணி நேரம் கழித்துத் தட்டைப்புழு வெளியாகும்.

* பாக்கை முறைப்படி குடிநீர் செய்து வாய்கொப்பளிப்பு செய்து வந்தால் பல் ஈறில் உண்டாகும் நோய்கள் தீரும்.

* இதனைப் பெண்களுக்கு மலத்துவாரத்தில் பூசி வந்தால் வெள்ளை நோய் தீரும்.

வேர் : வேரைக் குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வந்தால் உதட்டுப் புண்களும், ஈற்றப் புண்களும் தீரும்.

யுனானி மருத்துவம்

தோற்றம் : இது ஒரு மரத்தின் பழமாகும். இது உருண்டையாகவும், தேவதாரு மரத்தின் பழத்தைப் போன்றும் இருக்கும். இதை மெல்லியதாக வெட்டி வெற்றிலையுடன் சேர்த்து உண்பார்கள். இம்மரத்தின் தண்டுப்பகுதி ஒரு ஜான் விட்டமாக இருக்கும். உயரம் ஐந்து கஜம் முதல் பத்து கஜம் வரை உயரமாக வளரும். இதன் இலைகள் தென்னை மற்றும் பேரீச்ச மரத்தின் இலைகளைப் போன்று இருக்கும். குலை குலையாகப் பழங்கள் இருக்கம். இதையே பாக்கு என்றழைப்பார்கள்.

இயல்பு : குளிர்ச்சி - வறட்சி (இரண்டாம் நிலை) கொண்டது.

முக்கிய குணங்கள் - மலச்சிக்கலை உண்டாக்கும். கட்டி வீக்கங்களையும் கரைக்கும்.

பயன்படுத்தும் முறை

இதை வெற்றிலையில் வைத்து வாயில் போட்டு மெல்லுவார்கள். இதனால் பற்களுக்கு வலிமை கிடைக்கிறது. பேதியைக் கட்டுப்படுத்த இதைப் பொடியாக்கிச் சாப்பிடச் செய்வார்கள். பற்களை உறுதியாக்கவும், பல்ஈறுகளிலிருந்து கசியும் இரத்தத்தைத் தடுக்கவும் இதைப் பொடியாக்கிப் பற்பொடிகளில் கலந்து பயன்படுத்துவார்கள். கண்நோய் மற்றும் கண் எரிச்சலுக்கு இதை எரித்துச் சாம்பலாக்கி கண்ணுக்கு கர்மா பூசுவதைப் போல் பயன்படுத்துவார்கள்.

முக்கியப் பயன்கள்

சூடான வீக்கங்களைக் கரைக்கிறது. பற்களுக்கு வலிமைத் தருகிறது. பற்களில் உண்டாகும் இரத்தக் கசிவைத் தடுக்கிறது. கண் நோய்களைத் தீர்க்கிறது.

அளவு : 3 கிராம் முதல் 5 கிராம் வரை பயன்படுத்தவும்.

தீய விளைவுகள் : மார்பில் அடைத்துக் கொள்வதைப் போன்று தோன்றும், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையில் கற்களை உணடாக்கும்.

தீய விளைவுகளைத் தணிக்கும் முறை : இத்துடன் பாதாம் பிசின் மற்றும் ஏலக்காய் கலந்து சாப்பிட வேண்டும். இதற்கு மாற்றாக சந்தனத்தைப் பயன்படுத்தலாம்.

பிற செய்திகள்

இது 500 முதல் 3000 அடி உயரமான இடங்களில் வளரும் வழவழப்பான மரம். 100 அடி உயரம் வரை வளரும். ஆண்டு வளர்ச்சி காட்டும் வளையம் மரத்தில் காணப்படும். இதன் கனியில் பாக்கு விதையாக விளைகிறது. இதற்காகப் பாக்கு மரம் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பாக்கும், வெற்றிலையும் மங்கலப் பொருட்களாகும் என இலக்கியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

சங்க இலக்கியம்

கமுகில் பாளை உண்டாவதிலிருந்து இளம்பாக்குப் பிஞ்சில் உண்டாகும் சுவையான நீர் வரையில் மதுரைத் தத்தங் கண்ணனார் அக நானூற்றில் மிக அழகாகத் தொகுத்துப் பாடியுள்ளார்.

சங்க இலக்கியப் பெயராக கமுகு எனவும், தாவரப் பெயராக ‘அரீகா காட்டச்சூ’ எனவும் அழைக்கப்படுகிறது. கடியலூர் உருத்திரங்கண்ணனார் ‘கமுகு’ மரம் பெரிய தாளினை உடையது எனவும், பாளையாகிய அழகினை உடைய பசிய பூ விரியாமல் கருவாய் (பானைக்குள் மூடப்பெற்று) இருக்குமெனவும் கூறுகின்றார். இக்கமுகு நெடிது ஓங்கி வளரினும் ‘புல்’ எனப்படும்.

கமுகின் பாளை, மலர்கள் தொடுத்த தொடையில் போன்றது. இணர்க்கிளை பல மலர்களைக் கொண்டது. பாளை முதிர்ந்த போது மலர்க்கொத்து பிடிப்பு விட்டு விழும். பூங்குலை வாள் வடித்தது போல இருக்கும். இத் தோற்றம் மிக அழகானது. மலர்ந்த பல பூக்கள் மாலை போலத் தோன்றும். நரம்புகளோடு கவரிபோல வண்டுகள் உண்ணும் போது இக்கமுகு நெடிது ஓங்கி வளரினும் ‘புல்’ எனப்படும்.

பூவோடு வளர்ந்த இதன் பிஞ்சு சுவையுள்ள நீரைக் கொண்டது. அத்தீஞ்சுவையுள்ள நீரைக் காட்டிலும் தனது காதலியின் வாய் எயிற்றில் ஊறிய நீர் அமுதம் போன்றதென்று செலவழுங்கிய தலைவன் சொல்கிறான் என்கிறார் புலவர். இதன் முற்றிய காய்தான் அடைகாய் எனவும், பாக்கு எனவும் கூறப்படும். இதனை வெற்றிலை, சுண்ணாம்பு முதலிய பிற வாசனைப் பொருட்களுடன் தாம்பூலமாக போட்டுக்கொள்வர்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

திருமாந்துறை சிவன் கோயில் தலவிருட்சமாக கூந்தற் கமுகு பக்தர்களால் வணங்கப்படுகிறது. மேலும் பேரூர் சிவன் கோயில் தலவிருட்சமாகவும் கமுகு வணங்கப்படுகிறது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2010/02/19 கும்பகோணம் கூந்தலூர் ஜம்புகாரண்ய ஈசுவரர் கோயில் தலவிருட்சம் கூந்தப்பனை

2010/02/12 பதரிகாச்சிரமம் சிவன் கோயில் தலவிருட்சம் குங்குமம்

2010/02/05 புத்த பிரானின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த மரம் குங்கிலியம்

2010/01/29 திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம் குரா மரம்

2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்

2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்

2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி

2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி

2009/12/25  ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்

2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்

2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி

2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு

2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு

2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

admin @ 4:32 am
Filed under: Uncategorized
Samayal

Posted on Friday 26 February 2010

chef.jpgஆவக்காய் ஊறுகாய் - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்

நார் உள்ள உருண்டை மாங்காய் - 10
கடுகுப் பொடி - 1/2 கப்
மிளகாய்ப் பொடி - 1 கப்
வெந்தயம் - 4 தேக்கரண்டி
பெருங்காயம் - 6 துண்டுகள்
நல்லெண்ணெய் - 4 கப்
மஞ்சள் பொடி - 2 தேக்கரண்டி
கல் உப்பு - 1-1/2 கப்

செய்முறை :
மாங்காயைக் கழுவித் துடைத்து உள்ளே இருக்கும் விதையின் ஓட்டுடன் 4 துண்டாக வெட்டவும். எல்லா மாங்காய்களையும் இதே போல் வெட்டி உள் பக்கத்தை நன்றாகத் துடைக்கவும். மிளகாய்ப் பொடி, கடுகுப்பொடி, மஞ்சள் பொடி, உப்புப்பொடி எல்லாம் கலந்து கொண்டு சுத்தமான, வாய் அலகமான ஜாடியில் முதலில் கொஞ்சம் பொடி, மாங்காய்த் துண்டுகள், மறுபடி பொடி, மாங்காய் என்ற முறையில் இரண்டையும் போட்டு, வெந்தயம் பெருங்காயத்தையும் போட்டு எண்ணெய் விட்டுக் கிளறி மூடி வைக்கவும். அடுத்த நாளில் இருந்து கிளறி விட்டு மாங்காய் ஊறியதும் பரிமாறவும்.

குறிப்பு : மிளகாய், கடுகு, உப்பு மூன்றையும் பொடி செய்து ஊறுகாய் போட்டால்தான் கெடாமல் இருக்கும். டேபிள் சால்ட் உபயோகித்தால் எந்த ஊறுகாயும் சீக்கிரம் கெட்டு விடும். ஆவக்காய் ஊறுகாய்க்கு மிளகாய், கடுகை வெய்யிலில் காயவைத்து இடித்து சலித்து போடவேண்டும். வறுக்கவேண்டாம். கொண்டைக் கடலையைக் கழுவி வெய்யிலில் காய வைத்து இந்த ஊறுகாயில் போடலாம். ஊறியதும் உப்பு, புளிப்பு, காரம் கலந்து ஊறுவதால் சுவையாக இருக்கும். மாங்காய் பெரியதாக இருந்தால் எட்டுத் துண்டுகளாக வெட்டிப் போடவேண்டும். மாங்காய் உள்ளிருக்கும் ஓட்டுடன் இருக்கவேண்டும்.

Chettinadu Samayal

2010/02/19 காய்கறி ஊறுகாய்

2010/02/12 மாங்காய் இஞ்சி ஊறுகாய்

2010/02/05 அரிநெல்லிக்காய் ஊறுகாய்

2010/01/29 நெல்லிக்காய் ஊறுகாய்

2010/01/22 நார்த்தங்காய் ஊறுகாய்

2010/01/15 முழு எலுமிச்சம்பழ ஊறுகாய்

2010/01/08 எலுமிச்சம்பழ ஊறுகாய்

2009/12/31 மாகாளிக்கிழங்கு ஊறுகாய்

2009/12/25 தேங்காய்ச் சட்னி

2009/12/18 புதினாத் துவையல்

2009/12/11 வெங்காயத் துவையல்

2009/12/04 பிரண்டைத் துவையல்

2009/11/27 இஞ்சித் துவையல்

2009/11/20 துவரம்பருப்பு துவையல்

2009/11/13 பாசிப்பருப்பு துவையல்

2009/11/06 மல்லி, பச்சைமிளகாய் துவையல்

2009/10/30 பச்சை கொத்தமல்லி துவையல்

2009/10/23 செளசெள துவையல்

2009/10/16 கத்தரிக்காய் துவையல்

2009/10/09 சீரக ரசம்

2009/10/02 தக்காளி ரசம்

2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்

2009/09/18 திடீர் ரசம்

2009/09/11 எலுமிச்சை ரசம்

2009/09/04 கொட்டு ரசம்

2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு

2009/08/21 நார்த்தங்காய் குழம்பு

2009/08/14 சப்ஜி

2009/08/07 பாசிப்பருப்பு தால்

2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்

2009/07/17 இட்லி சாம்பார்

2009/07/10 கீரை சாம்பார்

2009/07/04 தாளிதம்

2009/06/26 தேங்காய்ப்பால் சொதி

2009/06/19 மசாலா பருப்பு

2009/06/12 குருமா

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

admin @ 4:13 am
Filed under: Uncategorized
Rest needed for healthy

Posted on Friday 26 February 2010

sleep.jpgமணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து

உடலுக்கு ஓய்வு கொடுப்பது

உடல் இயக்கத்திற்கு பல்வேறு உறுப்புகள் பல்வேறு பணிகளைப் புரிந்து வருகினறன. எல்லா உறுப்புக்களுக்கும் அளவான வேலையே கொடுக்க வேண்டும். இப்படியின்றி அளவுக்கு மீறி ஓய்வின்றி வேலை கொடுத்தால் அவ்வுறுப்புகள் விரைவில் பழுதடைந்து பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே ஓய்வு என்பது இரவில் அதிக நேரம் கண் விழித்தலைத் தவிர்த்தல், படுக்கப் போவதற்கு முன்பு சிறிது தூரம் நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுவது நலம் பயக்கும். அதுபோன்றே இரவு உணவை அளவோடு உண்பதோடு, பால் பழம், முக்கியமாக இரண்டு டம்ளர் தூய்மையான நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து, சுத்தம் செய்து பின்பு நீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டால், உண்ட உணவு ஜீரணம் அடைவதோடு, இரவில் நல்ல நித்திரையையும் அளிக்கும் தினந்தோறும் பற்களைச் சுத்தம் செய்வதுபோல், நாக்கினையும் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் உணவின் ருசியை அறிந்து சாப்பிட முடியும். ஆரோக்கியத்திற்கு நாக்கு சுத்தமாக இருக்கவேண்டியது முக்கியம் என்பதால்தான், உடல் நோயுற்றபோது, மருத்துவர்கள் நாக்கை காட்டச்சொல்வதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? அதுபோன்று தான் சித்த வைத்திய முறையிலும் நாடி பார்த்து வியாதி அறியும் முறை பண்டைய காலம் தொட்டு வழக்கமாக இருக்கிறது. இதயத்திலிருந்து ஏற்படும் ரத்த ஓட்டம் ஏற்படுத்தும் அலைகளையே நாடிகள் என்று கூறுகின்றனர். தினந்தோறும் காலையிலும் இரவு படுக்கப் போவதற்கு முன்பும் பற்களைச் சுத்தம் செய்யும்போது, கைவிரலினால் ஈறுகளையும் இரண்டு மூன்று நிமிடங்கள் அழுத்தி தேய்ப்பதின் மூலம் பற்கள் பலமடையும். நீண்ட வயதானாலும் பற்சிதைவு, பல் சொத்தை தடுக்கப்படும்.

அன்றாடம் பற்களை சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நாம், கண்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. பற்களைப் போன்றே கண்கள் பாதுகாப்பும் மிகவும் அவசியமாகும். கண்களையும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை, சுத்தமான நீரை கையிலேந்தி கண்களைத் திறந்துகொண்டு பத்து பதினைந்து முறை நீரினால் கண்களில் அடித்து கழுவ வேண்டும். இதனால் கண்ணில் உண்டாகும். அசுத்தம் அவ்வப்போது நீங்கிவிடும். நீண்ட காலத்திற்கு கண் ஒளி மங்காமல் பாதுகாக்க முடியும்.

சர்க்கரை நோயுள்ளவர்கள் முறையாக உணவு சாப்பிடாமல் மாத்திரை சாப்பிட்டு விட்டலோ, அளவுக்கு மீறி மாத்திரை உட்கொண்டு விட்டாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பு அளவை விடக் குறைந்துவிடும். அப்போது கிறுகிறுப்பும், மயக்கம், உடல் வியர்ப்பது போன்ற தொல்லைகள் மற்றும் அறிகுறிகள் தோன்றும். இதை உடனடியாகச் சரி செய்ய சீனி, குளுகோஸ், இனிப்பு பானங்கள் இவற்றில் ஒன்றை உபயோகித்தால் நிலமை சீராகும், மயக்கம் தெளிவாகும். சரி, சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய அன்றாட உணவுப் பட்டியலைப் பார்ப்போமா?

காலை உணவு (6.00 மணி) சர்க்கரை இல்லாத சோயா பால், 8.00 மணி இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் அல்லது ரொட்டி சாம்பார், நல்லெண்ணெய் மிளகாய்ப் பொடி - சட்னி காலை 11.00 மணி மோர் அல்லது சர்க்கரை இல்லாத சோயா பால்-எலுமிச்சை (தேசிக்காய்) ரசம் - மதிய உணவு அரிசி அல்லது கோதுமைச் சோறு அல்லது நெய் இல்லாத சப்பாத்தி - கீரை மற்றும் பச்சைக் காய்கறிகள் வேக வைத்தவை - சாலட் - சுட்ட அப்பளம் - சாம்பார் ரசம், மோர், ஊறுகாய்.

மாலைச் சிற்றுண்டியாக சோயா பால் தேநீர் - ஏதாவது பிஸ்கட், சுண்டல், ரொட்டி, அதுபோன்றே இரவு உணவும் எளிதாக தெரிவிக்கக்கூடிய அளவில் இட்லி, கோதுமை (சம்பா) ரவை உப்புமா அல்லது சப்பாத்தி - தோசை போன்றவை சிறந்தது. அதன் பின் ஒரு 15-30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவது இரவு சுகமான நித்திரையை அளிக்கும்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் : வெல்லம், சர்க்கரை, சீனி, தேன், ஜாம், இனிப்புப் பண்டங்கள், வெண்ணெய், நெய், கோலா ஐஸ்கிரீம், முந்திரி பருப்பு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பேரீச்சம் பழம், கொழுப்பு மிகுந்த உணவு வகைகள், இறைச்சி ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை என ஆங்கில மருத்துவக் குறிப்பு கூறினாலும் இயற்கை மூலிகை சிகிச்சையில் இந்த வித கட்டுப்பாடு ஏதும் இன்றி முறையே மருத்துவ ஆலோசனையின் படி உணவுகளை அமைத்துக்கொள்ள வழி வகைகள் உள்ளன.

பச்சரிசி, நிலக்கடலை, தேங்காய், சேப்பங்கிழங்கு, உருளைக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, வாழைக்காய், தேங்காய் மது போன்ற இதர பான வகைகள் தவிர்ப்பது சிறந்ததாகும். காய்கறிகளை பொறுத்த வரை முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பீன்ஸ், வெண்டை, காராமணி, முருங்கைக்காய், புடலங்காய், வெங்காயம், பாகற்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கீரைத்தண்டு, காளான், குட மிளகாய், பச்சை மிளகாய் அனைத்து கீரை வகைகள், புழுங்கல் அரிசி, கோதுமை மற்றும் கேழ்வரகு ஆகியவற்றின் உணவு வகைகள், சர்க்கரை நோயாளிகள் சேர்த்துக் கொள்ளலாம்.

சமையல் உப்பு என்பது சோடியம் குளோரைடு என்ற அயனிகளால் ஆனது. இதில் சோடியம் அயனிக்கு உடலில் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை உண்டு. நம் சிறுநீரகங்களுக்கு சிறுநீரைச் சுரக்கும் பணியைத் தவிர, உடலில் திரவ நிலையைச் சமச்சீராக வைத்துக்கொள்ள வேண்டிய பணியும் உண்டு. உணவில் அதிகமாக உப்பைச் சேர்த்தால் அதிலுள்ள சோடியம் உடலில் தண்ணீரைத் தேங்கச் செய்து சிறுநீரகங்களுக்கு அதிக வேலைப் பளுவைக் கொடுத்துவிடும். அதிலும் ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்குச் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தத்தால் சிறுநீரகம் சிறிதளவு பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த சமயத்தில் அவர்கள் உப்பை அதிகம் சேர்த்துக்கொண்டால் சீக்கிரமே சிறுநீரகம் பழுதடைந்ததுவிடும். இந்த நிலைமையைத் தவிர்க்கத்தான் மருத்துவர்கள் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களை உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்கள். அதுபோலவே சர்க்கரையை அதிகமாகச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையல்ல. சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் சாக்கரையைச் சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கு சர்க்கரை நோய் அதிகரித்துவிடும் என்று வேண்டுமானால் சொல்லலாம். நம் உடலில் இன்சுலின் என்ற இயக்குநீர் சுரப்பது குறையும்போதுதான் சர்க்கரை நோய் வருகிறது. மற்றபடி சர்க்கரையை அதிகம் சாப்பிடுவதற்கும் சர்க்கரை நோய் வருவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. வாழ்வது ஒருமுறைதான் என்றபடி, வாழும் வரை நாம் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடனும், அடிக்கடி மருத்துவரை கலந்து ஆலோசனைகளைப் பெற்று, இயற்கை உணவு வகைகளை உண்டு வந்தால் பிணிகளை தவிர்க்க முடியும்.

தூக்கம்
உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஓய்வு எனும் நித்திரை மிகவும் தேவையானதாகும். அப்போதுதான் உடல் ஆரோக்கியம் பாதுகாக்க முடியும் என்பதோடு, உடலில் சுறுசுறுப்பும் தெம்பும், மனோபலமும் ஏற்பட்டு, அலுப்போ அல்லது களைப்போ இன்றி, நமது அன்றாட அலுவல்களை கவனிக்க முடியும், மற்றும் உடல் ஆரோக்கியமும் பேண முடியும்.

நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் நல்ல பொழுது போக்கு, குடும்பத்தில் குதூகலம், பொருளாதார திருப்தி இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை அமைந்திருந்தும், இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இத்தகைய வாழ்க்கை நிம்மதியற்ற நிலைமைக்கும் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பொதுவாக உடல் நோயுற்று, சிரமப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, தூக்கம் இல்லாமல் இருப்பதைக்கூட, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சமாளிக்க முடியும். அதற்காக எப்போதெல்லாம் நித்திரை வரவில்லை என்றாலும் தூக்க மாத்திரைகளை பாவித்தால் மிகவும் ஆபத்தானதோடு மட்டுமின்றி, அதன் தாக்கத்தால் வேறு சில உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. சில சமயங்களில் நோயுற்ற காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளாம் தூக்கம் வராமல் போவதும் இயல்பானதாகும். இது ஒரு சாதாரண சூழ்நிலையாகும். மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டால் தூக்கம் வரும். ஆனால் இப்படி எந்த வித காரணங்கள் இன்றி தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகும். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உள்ளன என்று பொதுவாகச் சொல்வார்கள். அவற்றின் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை இனி பார்ப்போம்.

தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் என்பது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். ஒரு மனிதனுக்கு தினமும் எத்தனை கலோரிச் சத்து உணவு தேவைப்படும் என்பதற்கு இது ஒப்பான கருத்தாகும். இதற்கு சரியாக பதில் கூறுவது என்பது கடினம். அதுபோலதான் தூக்கமும், தூக்கம் என்பது ஆளாளுக்கு மாறுபடும். ஒரு நாளில் எட்டு அல்லது குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் தூக்கம் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமாகும். இந்த நேரம் குறைந்தால் இதய நோய் அல்லது கேன்சர் எனும் புற்று நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க ஆராயச்சி கூறுகிறது. அதுபோன்றே நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கும் இத்தகைய ஆபத்துகள் விளைய வாய்ப்பு இருக்கின்றது.

தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு வாரம் வரை தூங்கும் நேரத்தை குறிப்பெடுத்துக் கொண்டு அனுமானிப்பததோடு தூங்கும் மற்றும் எழுந்திருக்கும் கால அளவையும் அவதானிப்பதன் மூலமும், தூக்க மாத்திரையின்றி தூக்கம் வருகிறதா போன்றவற்றை கவனித்து வருவதும் ஒரு விதத்தில், அதன் பின்னனியை அறிந்து கொள்ள முடியும். ஒரு சிலரின் இமைகள் மூடியபடி இருக்கும். ஆனால் தூக்கம் வராது. அதே சமயம் ஒரு சிலர் கடுமையான வேலைகளுக்கு இடையில் அன்றாடம் அடிக்கடி குட்டித் தூக்கம் மேற்கொள்ளுவார்கள். இருப்பினும் நாள் பட்ட தூக்கமின்மையால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயதானவர்களாக இருந்தால் டயாபடிஸ் உண்டாகும் வாய்ப்பும் அதிகம்.

தூக்கமின்மை இருந்தால், இரவு 8.00 மணிக்குள் இரவு உணவை அதிக அளவு உட்கொள்ளாமல் உட்கொண்டம பிறகு கொஞ்ச தூரம் நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு, ஒரு டம்ளர் பால், ஏதாவது ஒரு பழத்தை உண்டு விட்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்து, சீக்கிரமே படுக்கப் போவது சிறந்ததாகும். பொதுவாகவே தூக்கம் வரவில்லையே என்பதற்காக ஒரு சிலர் தீய பழக்கங்களான, மது அருந்துதல், புகைப் பிடித்தல் போன்றவற்றை மேற்கொள்வதும் உடல் நலத்திற்கு கெடுதல் என்பதோடு, நாளடைவில், இவற்றை பிரயோகித்தால் தான் தூக்கம் வரும் என்ற மன நிலைக்கு கொண்டு செல்லுதல், இவ்வாறாக மது, காபி, மன அழுத்தம், மனச்சோர்வு, டென்சன், உள்ளிட்டவையும் தூக்கமின்மைக்கும் காரணமாய் அமைகின்றது. ஒரு சிலர் தூங்க முற்படும்போது, புத்தகம் படிக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அது தவறில்லை. ஆனால் அதிக நேரம், குறைவான வெளிச்சத்தில் படிப்பதுமே கண்களை பாதிப்பதோடு, நிம்மதியான தூக்கத்தை தராது. இரவு படுக்க போவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மிகவும் சிறந்ததாகும். எது எப்படி இருப்பினும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் தங்கள் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஓய்வு தர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. அது தான் களைப்பாகவோ, சோர்வாகவோ அல்லது எதிலும் ஒரு சுறுசுறுப்போ, ஆர்வமோ இல்லாதபடி செய்து, உடல் நலத்தையும் பாதிப்படைய வைக்கின்றது. கண் விழித்தல் என்பதும் இந்துக்களுக்கு மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் கடைபிடிப்பது வழக்கமாகும். அது கூட இரவு கண் விழித்து விட்டு மறுநாள் பகலில் தூங்கக்கூடாது என்றும், அதுபோல் எண்ணெய் ஸ்நானம் எடுத்துக் கொண்டால் பகலில் தூங்ககூடாது என்றும் கடைபிடிக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. எனவே தூக்கம் வராததிற்கு பல வித காரணங்கள் இருப்பதால், மருத்துவரை கலந்து, அதற்கான சிகிச்சை பெறுவது தான் சிறந்தது. அவ்வாறின்றி கண்ட தூக்க மாத்திரைகளையோ, தீய பழக்க வழக்கங்களை மேற்கொள்வதோ ஆபத்தானதாகும்.

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
 

admin @ 4:00 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 26 February 2010


anjali-sachin-tendulkar1.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எம்.ராஜா, கும்பகோணம்.

இந்த நாட்டில் இலஞ்சம் குறையும் என்று நம்பிக்கை உள்ளதா உங்களுக்கு?

இலஞ்ச ஒழிப்புத் துறையின் சில தீவிரமான ரெய்டுகள் அவ்வப்போது நம்பிக்கை அளிக்கவே செய்கின்றன. இந்தத் துறை கும்பகர்ணத்துறையாக மாறாதவரை நம்பிக்கைக் கீற்று தொடரும்.

டி. பாக்கியலட்சுமி, அரக்கோணம்.

கனகா, ஜெயலலிதாவிடம் புகார் செய்யப் போகிறாராமே?

ஆதரவு கிடைக்கும். அனுசரணையான பதில் கிடைக்கும். தன்னம்பிக்கை தரப்படும். தைரியம் வரும். ஆனால் தீர்வு கிடைக்காது. கனகா இன்று பெரும் பணக்காரர். இவர் அந்தக் காலத்தில் வாங்கிப் போட்ட சொத்துகளின் மதிப்புகள் இன்று தாறுமாறாய் ஏறிக் கிடக்கின்றன.

டி.குரு, செங்கல்பட்டு.

பாகிஸ்தான் அதிபர், அமெரிக்க அதிபர் யாருக்கு பொறுப்புகள் அதிகம்?

பாகிஸ்தான் அதிபருக்குத்தான் பொறுப்புகள் அதிகம். அமெரிக்க அதிபருக்கு துருப்புகள் அதிகம்.

எஸ்.மகேஷ், சென்னை-92.

எந்த நடிகையின் உதடு அழகு?

சாரி! ராங் நம்பர்!

எம். முத்து, ஈரோடு.

உழைத்தும் முன்னுக்கு வர முடியாதவர்களுக்குத் தாங்கள் கூறும் அறிவுரை?

உழைப்பைப் பருவத்தே பயிர் செய்திருக்கமாட்டார்கள். அல்லது அந்த உழைப்பு புத்திசாலித்தனம் கலக்காத உழைப்பாக இருந்திருக்கும். முறையான உழைப்பால் உயராதவர்கள் இல்லவே இல்லை!

கே.சந்திரன், ஆவடி.

வாழக்கையின் சின்னச் சின்ன தொல்லைகளைச் சமாளிப்பது எப்படி?

வாழ்க்கையின் பெரும்பாலான தொல்லைகள் பணமின்மையால் வருபவையே. முதலில் பணத்தை வென்று விடுங்கள்!

எம்.பிரபு, பெருங்களத்தூர்.

இறைவன் படைப்பில் மூக்கில் விரல் வைக்கும் படைப்பு எது?

சந்தேகமில்லாமல் பெண்தான்! அவளால் ஒரு ஆணை அசத்தவும் முடிகிறது; அசதியாக்கவும் முடிகிறது. அதாவது கரையேற்றவும் செய்கிறாள்; உடலில் மூழ்கடிக்கவும் செய்கிறாள்.

பி.துரை, ஓட்டேரி.

ஆண்களைவிடப் பெண்கள் கல்வியில் சிறக்கக் காரணம்?

அவர்கள் எப்போது பார்த்தாலும் புத்தகங்களைத் தங்கள் நெஞ்சிலிருந்து எடுப்பதில்லை. இரண்டு அர்த்தத்தில்தான் சொல்கிறேன்!

ஆர்.கண்ணன், புத்தூர்.

இந்திய அரசியல்வாதிகளில் உங்களை வியக்க வைக்கிறவர்கள் யார்?

ஆண்களில் லல்லு. பெண்களில் மாயாவதி. நன்றாயிருக்கிற அரசியலைக் கூட மிக்சர் பண்ணி, அதன் மேல் மல்லியைத் தூவி விடுகிறவர்கள். அந்த மல்லி வாசனைக்கே இவர்களின் மார்க்கெட் படுஜோர்!

ஆர்.சாகுல்ஹமீது, ஆத்தூர்.

ரவுடித்தனம் செய்பவர்களிடம் இனிமேல் துப்பாக்கி பேசும் என்று ஓர் உயர்மட்டக் காவல்துறை அதிகாரி எச்சரித்திருப்பது பற்றி?

அப்பட்டமான மனித உரிமை மீறல் சட்ட அணுகுமுறைகளில் காவல்துறையினருக்கே நம்பிக்கை போய்விட்டதையே இந்தப் பொறுப்பற்ற பேச்சு சுட்டிக் காட்டுகிறது.

எல்.வெங்கடாசலம், தஞ்சாவூர்.

கனிமொழி ஒரு துறவி என்கிறாரே அவரது தாய்?

நல்ல நகைச்சுவை!

டி.விக்டர், சென்னை-17.

ஒரு நல்ல பாடகரை அவரது மருத்துவரே கொன்றது பற்றி?

மைக்கேல் ஜாக்சனின் டாக்டர் முர்ரேவைச் சொல்கிறீர்களா? ஒரு பலவீனரின் பலவீனத்திற்குத் துணை போனவர் முர்ரே. இவரை ஒரு கொலைகாரராக என்னால் எண்ண முடியவில்லை.

என்.பிரகதீஷ், மதுரை.

சந்தேகம் - கோபம் எது பொல்லாதது?

சந்தேகம் இல்லாமல் சந்தேகம்தான். கோபம் அப்போதைக்கு மட்டும் கஷ்டம் தருவது. சந்தேகம் எப்போதைக்கும்!

ஜே.சார்லஸ், நங்கநல்லூர்.

நாகரிகம் என்ற பெயரில் ஆபாச உடை உடுத்தும் இன்றைய பெண்களுக்குத் தங்களின் அட்வைஸ்?

உடையை நீங்கள் விழுங்கினால், அந்த உடையே உங்களை விழுங்கும்!

ஆர்.பாலாஜி, கும்பகோணம்.

துணிவுமிக்க அரசியல் தலைவர் யார்?

ஜெயலலிதாதான்! இதை பயந்து சொல்லவில்லை. நயந்து சொல்கிறேன். எந்த எதிர்ப்பையும் வைட்டமின் மாத்திரைகளாய் ஏற்றுக் கொள்கிறார். ஒரு டாக்டர் கூட அவ்வளவு மாத்திரைகளை உட்கொள்வதில்லை. ஆனால் இந்த டாக்டர் உட்கொள்கிறார்.

எஸ்.குமார், இராமேஸ்வரம்.

பொன்சேகாவின் கதியைப் பார்த்தீர்களா?

பித்தளைசேகாவாக ஆக்கப்படுவார் என்பது தெரிந்ததுதான். ராஜபக்சேவை இன்னும் சில காலத்திற்கு எவரும் அசைக்க முடியாது!

எம்.ராமனாதன், சேலம்.

ராஜசேகர ரெட்டியின் மனைவி சட்டமன்ற உறுப்பினராகிவிட்டாரே?

அனுதாப அலை காரணமாகப் போட்டிகூட இல்லை. கொல்லப்பட்ட அரசியல்வாதிகளின் மனைவிகள் பலர் அரசியல் வாழ்வில் ஒளிவிடவே இல்லை. விஜயலட்சுமி விதிவிலக்கானவராக இருந்தால் நல்லது.

ஏ. பார்வதி, பாண்டிச்சேரி.

இசைக் கச்சேரிகளுக்குச் செல்வது உண்டா?

வேலைகளைப் பார்த்துக் கொண்டு இசை கேட்பது உண்டே தவிர, கடமைகளைக் கெடுத்துக் கொண்டு அல்ல. நான் என்ன ஓய்வா பெற்றுவிட்டேன், சபாக்களுக்குப் போய் இரசிக்க?

கே.முருகேசன், விழுப்புரம்.

டென்னிஸில் உங்களைக் கவர்ந்தவர்?

லியாண்டர் பயஸ் எனலாம். 36 வயதிலும் சோர்வு காட்டாமல் அண்மைக் காலம் வரை வெற்றிகளைக் குவித்து வருகிறார். கோபம் இவரது பெரிய குறையாக இருந்தது. ‘வாழும் கலை’ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வழியில் சிந்தித்து, குறைத்துக் கொண்டுவிட்டார். மணவாழ்வில் மயக்கமான முடிவுகளை எடுத்துத் துவண்டார். மனைவி ரியாபிள்ளையுடன் ஒருவழியாக செட்டில் ஆகிவிட்டார். பூபதியுடன் விளையாடாமல் வம்பு செய்தார். இதிலும் சரியாகிவிட்டார். பயஸை இப்போது எனக்கு மிகப் பிடிக்கிறது.

சி.மலை, சேலம்.

சச்சினைவிட அவரது மனைவி மூத்தவராகத் தெரிகிறாரே?

அஞ்சலி 5 வயது மூத்தவர் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா? அவர்களுக்கு இடையில் இது ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை. நாம் இதைப் போய்க் கிளறுவானேன்?

எஸ்.செந்தில், திருவெற்றியூர்.

வடிவேலு சிங்குமுத்துவை மன்னிக்க மாட்டாராமே?

நம்பிக்கைத் துரோகங்களையும் அபாண்டப் பழிகளையும் வடிவேலுவால் தாங்க முடியவில்லை. பாவம்! சிங்குமுத்துவின் காமெடி நடிப்புதான் அருமை என்றால் அப்பாவி வேடம் இதைவிட அருமை!

பி.லோகேந்திரன், சென்னை-70.

வரவிருக்கும் பெண்ணாகர இடைத் தேர்தல் எப்படியிருக்கும்?

இன்னொரு திருமங்கலம்தான்! காந்திகள் நடமாடும் காந்தியக் கொள்கைகள் நடமாடாது!

என்.இலியாஸ், சென்னை.

அரசியல்வாதிகளின் பேச்சு சில நேரம் புரிவது இல்லையே?

நீங்கள் கொடுத்து வைத்தவர் உங்களுக்காவது சில நேரங்களில்! எனக்கு எப்போதுமே!

பி.ராஜேந்திரன், மாதவரம்.

மனிதாபிமானம் தேய்ந்து வருகிறதே?

தேய்ந்தாலும் பரவாயில்லை. அதில் கிரகணமே வரப் போகிறது. மனிதாபிமானத்தை இப்போது பணம் எனும் ராகு விழுங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆர்.கார்த்திகேயன், எம்.கே.பி. நகர்.

கவிதைகள் காதலுக்கு மட்டுமே முன்னுரிமை தருகின்றனவே ஏன்?

கவிதைகளுக்காக விற்காவிட்டாலும் காதலுக்காக விற்றுவிடுகின்றன. புத்திசாலிக்கவிஞர்கள்!

19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 3:49 am
Filed under: Uncategorized
Tanushree Dutta admires Prakash Raj

Posted on Monday 22 February 2010

பிரகாஜ்ராஜின் நடிப்பைக் கண்டு பிரமித்த தனுஷி தத்தா
tanushree-dutta.jpg

தீராத விளையாட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதில் விஷாலுக்கு சந்தோஷமோ இல்லையோ, அவருடைய ப்ளேபாய் விளையாட்டுக்கு தோதாக செட் ஆன மூன்று நாயகிகளும் குஷியாக இருக்கிறார்கள். குறிப்பாக தனுஸ்ரீ தத்தாவுக்கு சந்தோஷமோ சந்தோஷம். அவர் வாயாலேயே கேளுங்களேன்.

“இந்தப் படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரம் பற்றி சொன்னதுமே பிடித்துவிட்டது. இதில் இன்னும் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள் என்பதை யும் அப்போதே சொல்லிவிட்டார்கள். படப்பிடிப்பில் மூவரும் நல்ல தோழிகளாகிவிட்டோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அவர்களுடன் இணைந்து நடித்தது புது அனுபவமாக அமைந்தது. பிரகாஷ்ராஜின் தங்கையாக நடித்த எனக்கு, அவருடைய நடிப்பைப்பார்த்து பிரமிப்பாக இருந்தது. தெரியாத மொழியில் நடிக்கும்போது சிரமமாகத்தான் இருக்கும். என்னுடைய கேரக்டரை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்திருந்ததால், எளிதாக இருந்தது. தொடர்ந்து நல்ல கேரக்டர்களாக அமைந்தால் தமிழில் நடிப்பேன் என்று சொல்கிறார் தனுஷி தத்தா. ஐயையோ அப்போ அடிக்கடி உங்களைப் பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க.

admin @ 9:57 pm
Filed under: kollywood
Nandhaki, heroine from Kanchipuram

Posted on Monday 22 February 2010

காஞ்சிபுரத்து கதாநாயகி

அவள் பெயர் தமிழரசி பட நாயகி நந்தகிக்கு விமானபணிப்பெண்ணாகவோ, கம்யூட்டர் இன்ஜினீயராகவோ, பேஷன் டிசைனராகவோ ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாம். எதிர்பாராதவிதமாக ‘அவள் பெயர் தமிழரசி’ மூலம் திரைத்துறைக்கு வந்துவிட்டார். இருந்தாலும் பரவாயில்லையாம் அவருக்கு. விரும்பியது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை விரும்பவேண்டும் என்ற நோக்கத்தில் சந்தோஷமாகவே இருக்கிறாராம் அவர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர் கதாநாயகி ஆன கதை வித்தியாசமானது. +2 தேர்வு எழுதிவிட்டு சாமி கும்பிட குடும்பத்துடன் கோயிலுக்குப் போனரை பார்த்துவிட்ட இயக்குநர் மீரா கதிரவன் உடனே ‘நடிக்கிறியா’ எனக் கேட்டிருக்கிறார். முதலில் விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டாலும், பிறகு சம்மதித்திருக்கிறது குடும்பம்.

டிரைலருக்காகக் காட்சிகள் எடுக்கப்பட்டபோது காமிரா கண்டு பயந்த நந்தகிக்கு போகப்போக காமிரா பயம் சுத்தமாகப் போய்விட்டதாம். பின்னே வெட்கமே போகும்போது பயம் போகாதா என்ன?

admin @ 8:49 pm
Filed under: kollywood
Smoke Alarm came to help Deaf

Posted on Monday 22 February 2010

காது கேளாதோருக்கான சிறப்பு அலாரம்

smoke-alarm.jpg
காது கேட்கிறது அலாரம் வைக்கிறோம். நாம் நினைத்த நேரத்திற்கு எழுகிறோம். காது கேளாதோர் என்ன செய்வார்கள். அவர்களுக்கு என்றே சிறப்பு அலாரம் ஒன்றை ஜப்பான் நிறுவனமான ‘ஏர் வாட்டர் சேப்டி’ நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது.

கடந்த ஆண்டே இந்த அலாரம் அறிமுகம் ஆகிவிட்டாலும், இதன் விலையான ரூ.2,500 என்பது அதிகமாகத் தெரிந்ததால் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டது. இந்த கருவியை கொஞ்சமாக மாற்றியமைத்து ரூ.1200 விலையில் கொண்டுவர அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்.

இந்த அலாரத்தில் இருந்து மணியோசை ஏதும் கேட்காது. மணியோசைக்கு பதிலாக புகையும் வாசமும் வெளியாகும். அப்படி வெளியாகும் புகையில் அலில் ஐசோதிசைனட் என்ற ரசாயணம் இருக்கிறது. இந்த ரசாயணம் எவ்வித பக்க விளைவுகளும் அற்றது என்கிறார்கள். இதை நுகரும் காதுகேளாதோர் அடுத்த இரண்டு நிமிடங்களில் படுக்கையை எழுந்திருப்பது நிச்சயம் என்கிறார்கள்.

admin @ 3:31 am
Filed under: news