» Vietnam travel .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 29 Jan 2010

Vietnam travel

cambodia.jpgவீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

சியாம் ரியாப்பில் என்னிடம் கற்களை விற்ற மாணவனிடம் நான் வாங்க முடிவு செய்த அந்த மூன்று கற்களின் மதிப்பு நிச்சயம் சாதாரணமில்லை என்று என் மனம் உறுதியாக நம்பியது. அதே நேரத்தில் ஆனால் இவற்றிற்காக 24 டாலர்கள் கொடுக்கத் தயாராக இல்லை. எனக்குத் தெரியும் சுற்றுலாப் பயணிகளின் தலைகள் அனைத்தையும் மிளகாய் அரைக்கவல்ல அம்மிகள் என இங்குள்ள சின்னஞ்சிறு வாண்டுகள்கூடக் கருதுகின்றன என்பது.

எனவே பேரத்தை ஆரம்பித்தேன். அந்த மாணவன் அரைகுறை ஆங்கிலம் பேசினாலும் இதுவே அவனது பகுதி நேரத் தொழில் என்பதால் மிகச் சாதுரியமாகப் பேசுகிறார். “சரி ஏழு டாலர் வீதம் மூன்று கற்களுக்கும் 21 டாலர் கொடுங்கள்” என்றான்.

நான் கொடாக்கண்டனாக மாற, அவன் விடாக் கண்டனாக ஆனான். இந்த விஷயத்தில் கியானா உதவுவாள் என்று பார்த்தால் அவளோ ஒதுங்கி நின்றாள்.

வருகிறவர்களையெல்லாம் கூட்டணி போட்டு மொட்டையடிக்கிறவர்கள் என்பது எனக்குப் புரிந்துவிட்டது.

நான் அதிரடியாக “மூன்றிற்குமாக 9 டாலர்கள் தருகிறேன்” என்று ஆரம்பிக்க, அந்த மாணவன் அலறிவிட்டான்.

“தரமாட்டாயல்லவா? கட்டுப்படியாகாதல்லவா? ஆளைவிடு” என்று சொல்லி நடக்க ஆரம்பித்தேன்.

இதற்குள் எங்களைச் சுற்றிப் பெருங்கூட்டம் கூடிவிட்டது. ஒரு காலத்தில் வெள்ளையர்கள் வந்தால் நம்மவர்கள் பின்னாலே ஒரு கூட்டம் சூழ்ந்தபடி பின்பற்றுமே, அதுதான் என் நினைவிற்கு வந்தது.

இரண்டு சிறுவர்கள் ஏதோ கமெண்ட் அடித்து என்னைப் பார்த்துக் கெக்கேபிக்கே என்று சிரிக்க ஆரம்பித்தார்கள். “டேய் பசங்களா! அப்படியாடா நான் கேலிப் பொருளாகிவிட்டேன்?” நினைத்துக் கொண்டேன் கேட்கவில்லை.

கடைசியில் 12 டாலர்களுக்குப் பேரம் முடிந்தது. சிவா சொன்னார், “லேனா சார் இன்னும் கூடக் குறைத்துக் கேட்டிருக்கலாம். தந்திருப்பான்” என்றார்.

“போனால் போகட்டும் சார். பையன் படிக்கிறான். அவன் படிப்பிற்கு உதவி செய்ததாக இருக்கட்டும்” என்றேன்.

“அப்படியானால் சரி. ஆனா இந்தப் பசங்களை நம்ப முடியாது சார்! வேணும்னே பள்ளி யூனிபார்மைப் போட்டுக்கிட்டு ஏமாத்தினாலும் ஏமாத்துவானுங்க சார்” என்றார்.

‘ஓ! அப்படியும் இருக்குமோ!’ சற்றே அசடு வழிந்தேன்.

கியானா இப்போது மறுபடி என் கையைப் பிடித்துக் கொண்டு, “வாருங்கள் உங்களுக்கு ஓர் அதிசயம் காட்டுகிறேன்” என்றாள்.

“என்ன அதிசயம்?”

“நீருற்று. அதிசய நீரூற்று. நீங்கள் அப்படிப் பார்த்திருக்கவே மாட்டீர்கள்”

நதியில் நீர் வடிய எப்படியும் பல மணி நேரம் ஆகும். அதுவரை நேரத்தைக் கடத்தியாக வேண்டும்.

“போலாமா சிவா சார்?”

“போகலாம்”

கியானா வேகமாக ஓர் ஒற்றையடிப்பாதையில் நடக்க நான் பின் தொடர என் பின்னால் நிவின் வர, அவளுக்குப் பினனால் சிவா.

ஓடினான் ஓடினான் வாழ்வின் ஓரத்திற்கே ஓடினாள் என்று பராசக்தியில் ஒரு வசனம் வருமே அப்படி. கியானா ஓட்டமும் நடையுமாகப் போய்க் கொண்டே இருக்க.

“யம்மா! கியானா! இன்னும் எவ்வளவு தூரம்மா இருக்கு? என்ன நீரூற்றோ போ! இப்படி மூச்சிரைக்க இன்னும் எவ்வளவு தூரம்தான் உன் ஓட்டத்திற்கும் நடைக்கும் ஈடுகொடுப்பதம்மா?”

“இதோ இன்னும் சிறிது தூரம்தான்.”

அவள் அழைத்துப் போன பாதை படு மோசமாக இருந்தது. மிக அடர்த்தியான செடி கொடி மரங்கள். இடையிடையே சிற்றோடைகள். அவற்றின் மேல் பாலம் என்ற பெயரால் பதம் பார்க்கும் மரக் கட்டைகள். அவை செமர்த்தியாக ஆட்டம் காட்டின.

எந்தப் பக்கத்திலிருந்து என்ன மிருகம் தலைநீட்டுமோ தெரியாது. மாட்டினால் மாட்டியதுதான்! தப்பித்து ஓட மாற்றுப் பாதை இல்லை.

ஒரு வழியாக ஒரு கைவிடப்பட்ட குடிசை மகா மோசமான நிலையில் காணப்பட, அதன் வாயிலில், பொக்களித்துப் பொக்களித்து இட்டலி மாவுக் கணக்காய் கொழக் கொழ என்று நீரோடு வெள்ளை மாவு நீருற்றாய் பொங்கி வெளிவர, “உலகில் இப்படி ஒரு நீரூற்று வேறு எங்குமே இல்லை” என்றாள் கியானா.

“தொடலாமா? இறங்கலாமா?”

“ஊகும் இறங்கக் கூடாது. இதன் ஆழத்தைப் பற்றி யாருக்குமே இங்கு தெரியாது. வம்பு. தொட்டு வேண்டுமானால் பாருங்கள்”.

தொட்டுப் பார்த்தேன். அங்குள்ள பருவ நிலைக்குத் தொடர்பில்லாத இளஞ்சூடான நீராக அது இருந்தது.

“கியானா! என்னை ஒரு படம் எடு. நான் இந்த நீரூற்றில் கை வைத்தபடி இருக்கிறேன்” படம் எடுக்கப்பட்டதே தவிர, அது சரியாக வரவில்லை.

சுற்றி நீரூற்றின் ‘பொளக் கொளக்’ சத்தம் விநோதமாகவும் அந்த மிக அமைதியான சூழ்நிலையிலிருந்து மாறுபட்டு சற்றே கலவரப்படுத்துவதாகவும் இருந்தது.

“இன்னும் சற்று நேரத்தில் நிச்சயம் வடிந்துவிடும். நீங்கள் பார்த்துவிட்டே போகலாம்”.

“எவ்வளவு நேரம் ஆகும்”

“இரண்டு மணி நேரம்!”

“ஐயோ! இரண்டு மணி நேரமா! தாங்காது நான் போகணும்”

“நோ! நோ! போகாதீங்க. இந்தத் தரிசனம் உங்களுக்கு ரொம்ப நன்மையைச் செய்யும்” என்றாள் கியானா, ரொம்ப விவரம் தெரிந்த நம்மூர்ப் பெண்மணி போல்! இப்படியெல்லாம் பேச நன்கு கற்றுக் கொண்டிருக்கிறாள் கியானா.

“சிவா சார்! காரை எடுக்கச் சொல்லுங்கள். பக்கத்தில் எங்காவது போய்விட்டு வரலாம். 2 மணி நேரத்தை ஓட்டவேண்டுமே!’

“எங்கு போகலாம்?”

“வரும் வழியில் ஒரு சோதனைச் சாவடியைப் பார்த்தேன். ஒரே மாதிரியான இராணுவ உடையுடன் சிலர் இருந்தார்கள். அங்கு என்ன நடக்கிறது என்று போய்ப் பார்க்கலாம்”

“சரி”

போனோம்.

ஒரு வசதியற்ற தகரக் கூரையால் ஆன அமைப்பு அது. அதில் பச்சை - அரக்குக் கலந்த துணியால் ஆன யூனிபார்மை அணிந்தபடி நான்கு பேர் இருந்தார்கள்.

எங்கள் ஓட்டுநர் செய்ஸ் உள்ளூர் மொழி பேச வல்லவர் என்பதால் “இவர்கள் நால்வருக்கும் என்ன மாதிரியான வேலை” என்று கேட்டுச் சொல்லுங்கள் என்றேன்.

அவர்களிடம் கேட்காமல் செய்ஸே சொன்னார். “காலையிலிருந்து மதியம்வரைக்கும் வாகனங்களை வர அனுமதிக்கிற இவர்கள், கீழே இருக்கிற சோதனைச் சாவடியுடன் பேசி மதியம் சாப்பாட்டு நேரத்திற்குப் பிறகு வருகிற வண்டிகளை நிறுத்தச் செய்து விட்டு, இங்கு இருக்கிற வாகனங்களை இறங்க மட்டும் அனுமதிப்பார்கள். இது குறுகலான மலைப்பாதை என்பதால் நேரப்படி அதை ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தத்தான் இவர்கள். அதுமட்டுமல்ல இறங்க முற்படும்போது இவர்களிடம் கட்டணம் செலுத்த வேண்டும்.”

“ஓ”

செய்ஸ் விவரமாகப் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு மரத்தடியில் கிடந்த பலகையில் அமர்ந்து கொண்டு வந்த டிரான்சிஸ்டரைத் தட்டி விட்டுவிட்டு, பையில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். கொரிக்கக் கொண்டு வந்த பாக்கெட்டுகளையும் என்னைச் சற்றிக் கடைபரப்பிக் கொண்டேன்.

சிவா வியந்தார். என்னடா இது! இந்தக் குறும்பயணத்திற்கு ஒரு பையைக் தூக்குகிறாரே என்று பார்த்தேன். காரணமாகத்தான் தூக்கியிருக்கிறீர்கள்.

“பாருங்கள் சிவா! இந்த ரம்மியமான சூழ்நிலையில் பாட்டு, படிப்பு, கொரிப்பு மூன்றும் எவ்வளவு இனிமையா இருக்குத் தெரியுமா?”

“உண்மைதான்.”

வந்த வாகனங்கள் எல்லாம் திரும்புவதற்குத் தயாராய் அணி வகுத்து நிற்க, அந்த சீருடைக் காரர்கள் அனைத்து வாகனங்களிடமிருந்து வசூல் செய்ய ஆரம்பித்தார்கள்.

எங்களுக்கு நினைப்பெல்லாம் ஆற்றில் நீர் வடித்திருக்குமா? 1008 சிவலிங்கங்களைக் காண இயலுமா என்பதிலேயே இலயித்திருக்க, “வாருங்கள் சிவா! போவோம் தண்ணீர் இன்னமும் வடியாவிட்டால் புறப்பட வேண்டியதுதான்”

“ஆமா” நாங்கள் சியாம் ரியாப் நதியை நெருங்க நெருங்க கியானா எங்கள் காரைப் பார்த்துக் கத்தியபடி ஒடிவந்தாள். மூச்சிரைக்க காரின் அருகில் வந்து “ஆற்றில் நீர் வடிந்துவிட்டது. உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம். சிவலிங்கங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன”

உண்மையாகவா?

ஆமா! வந்து பாருங்களேன். சிவா நிதானமாக நடந்துவர முன்னால் ஓடிய கியானாவைத் தொடர்ந்து நானும் ஓடினேன்.

என்ன அருமையான காட்சி கணுக்கால் உயரமே தண்ணீர் ஓட, கால் வைத்த இடத்தில் முதலில் தெரிந்து ஒரு விஷ்ணுவின் சிலை!

“சரி சரி, சிவலிங்கங்கள் எங்கே?”

“அதோ தெரியவில்லை?”

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Most Commented Posts


Leave a Reply