» Turmeric .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 29 Jan 2010

Turmeric

turmeric.jpgமணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து

மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா?
அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

உள்ளத் தூய்மைக்கும், உடல் தூய்மைக்கும் மற்றும் மங்களச் சிறப்புகளுக்கும் நன்கு பயன்பட்டு வரும் அரும்பொருள் மஞ்சள். மருத்துவக் கண்ணோட்டத்துடன் மஞ்சளின் குணாதிசயங்களைச் சிந்திக்க, இது நம் நல்வாழ்க்கைக்கு சொல்வதற்கரிய பயனுள்ளதாய் இருக்கிறது.

மக்களின் மங்களச் சின்னமாகத் திகழும் மஞ்சள் உடலின் ஆரோக்கியத்தைச் சுட்டிக்காட்டவும், பலவித பிணிகளை குணமாக்கும் அற்புதமான மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. மஞ்சளின் குணம் கபத்தைப் போக்குவது, வாதத்தைத தடுப்பது, ரணங்களையும் சொறி சிரங்குகளையும் ஆற்றுவது, தாய்ப்பாலை பெருக்குவது, விஷத்தை முறிப்பது, மஞ்சளிலே பல இனங்கள் உண்டு. அவை கறிமஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மரமஞ்சள், காட்டு மஞ்சள், குரங்கு மஞ்சள், பலா மஞ்சள், காஞ்சிரத்தின் மஞ்சள், நாகமஞ்சள் என்பனவாகும். இவற்றிலே எல்லா மஞ்சளுமே மருத்துவத்திற்கு உகந்தவை. ஆயினும் கூடுதலாக கறிமஞ்சள், மரமஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என்பவையே மக்களினால் பயன்படுத்தப்படுகின்றன.

கறிமஞ்சளிலே ஆண், பெண் என இருபாலும் உண்டு. குடம் போன்ற மஞ்சளை பெண் என்றும், விரல் போன்ற மஞ்சளை ஆண் என்றும் சொல்வார்கள். பெண்கள் பூசிக்கொள்ளப் பயன்படுத்துவது பெண் மஞ்சளைத்தான்.

பெண்கள் மஞ்சளைப் பூசுவதனால் பித்தம், வாதம், வாந்தி தோஷங்கள் அனைத்தும் நீங்குகிறது என்று மருத்துவ சாத்திரம் கூறுகிறது. அதுமட்டுமின்றி மஞ்சளினால் முகத்தில் மினுமினுப்பு உண்டாகும். மற்றும் முகத்தில் தோன்றும் பருக்கள், தேமல்கள் போன்ற சரும வியாதிகளைப் போக்குவது மட்டுமின்றி தூக்கத்திலும் இனிய சுகம் காணலாம். இனி நோய்களையும் அதை விரட்டும் மஞ்சளின் பயன்களையும் பார்ப்போம்.

கஸ்தூரி மஞ்சளை அரைத்துத் தடவிவர முகப்பரு விரைவில் மறையும். அத்துடன் குடமஞ்சளையும் சந்தனத்தையும் குழைத்துத் தடவி வந்தாலும் பருக்கள் மறையும். சாதாரண மஞ்சள் தூளை பாலேட்டுடன் அதாவது பாலாடையுடன் கலந்து குழைத்து முகத்தில் இரவில் பற்றுப் போட்டுக் கொண்டு படுத்துவிட்டால் காலையில் கழுவி விடலாம். இந்த வகைகளில் முகப்பருக்களை அகற்றலாம். பெண்கள் மஞ்சள் பூசிக்கொள்வதனால் முகத்திற்கு வசீகரத்தன்மை ஏற்படுகிறது. வியர்வையால் ஏற்படும் நாற்றம் மறைகிறது. சுவாசிக்கும் காற்றிலுள்ள நோய்க்கிருமிகள் அழிவடைகின்றன. நவநாகரிக அழகுசாதனங்களைப் போல் சரும வறட்சியோ, முதுமைக்குரிய குறிகளையோ மஞ்சள் தோற்றுவிப்பதில்லை. பெண்கள் மஞ்சள் குளித்து மஞ்சளாலான குங்குமத்தை அணிந்து கொண்டிருந்தால் பார்வையால் கவரும் தன்மை படைத்த ஹிப்னாடிஸ்களால் கூட கவர முடிவதில்லை. அத்தனை மகிமை இந்த மங்கள மஞ்சளுக்கு.

குழந்தைகளின் கல்லீரல் நோய்களுக்கும், பாண்டுவுக்கும், பசும்பாலில் மஞ்சளைத் தட்டிப் போட்டுக் காய்ச்சிய கசாயத்தைக் கொடுத்துவர குணமாகும். மஞ்சளையும் மிளகையும் சரிசமமாக எடுத்து அரைத்து விழுதை மோரில் கலந்து சாப்பிட்டுவர பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் வரும தலைவலி, வயிற்றுவலி எல்லாம் குணமாகும்.

இரத்தக்கட்டை அதாவது இரத்தம் கண்டினால் அதை நீக்குவதில் மஞ்சளுக்கு நிகரான மருந்து இல்லையென்றே சொல்லலாம். டிஞ்சர் அயோடின், டிஞ்சர் பென்சாயினைக் காட்டிலும் சிறப்பாக வேலை செய்கிறது என்றால் மஞ்சளின் பெருமையை என்னவென்று சொல்வது.

மஞ்சள் தூளை நெய் அல்லது பாலோடு கலந்து சாப்பிட்டு வந்தால் சாதாரண தொண்டைப்புண் குணமாகிறது. மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்து உடம்பில் ஏற்படும் புண்களின் அரிப்பிற்கு பூசி வரலாம். அம்மை நோயில் கூட அரிப்பு ஏற்படும் சமயங்களில் மேற்கண்ட முறையை அனுசரித்து வந்தால் அரிப்புகள் அடங்கி, புண்களும் சீக்கிரம் ஆறிவிடும். தொடர்ந்து மஞ்சளைத் தேய்த்து குளித்துவர அம்மைத் தழும்புகளும் மறைந்து போகும். உடலில் ஓடும் இரத்தமும் சுத்தமாகும்.

கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மிளகு, நெல்லிவித்து, வேப்பமுத்து, கடுக்காய்த் தோல் முதலியவற்றை சம எடை எடுத்து தூள் செய்து தேவையான அளவு எடுத்து பாலில் காய்ச்சித் தேய்த்து வாரம் ஒரு முறை நீராடி வர மங்கல்பார்வை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை முதலிய பிணிகள் அணுகுவதில்லை. இத்தகைய நீராடலுக்கு பஞ்சகல்ப ஸ்நானம் என்று பெயர்.

சில சமயங்களில் உடலில் குத்தல் வலிகள் தோன்றும். அநேகமாக வாத மேலீட்டால் அப்படி ஏற்படும். அதற்கு மஞ்சளை 50 கிராம் அளவிற்கு எடுத்து சற்று நசுக்கி அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட குணம் தெரியும். இதே பிணிக்கு மற்றொரு மருத்துவமும் உண்டு. மஞ்சளையும் ஓமத்தையும் சம அளவு எடுத்து நசுக்கி அரை லிட்டர் அளவு நீர் விட்டு கால் லிட்டர் அளவு வரும்வரை சுண்டக் காய்ச்சவும். அதில் 100 கிராம் நல்லெண்ணெய் விட்டு சேர்த்துக் காய்ச்சவும். அது இறுகித் தேன் பதமாகும்போது 10 கிராம் கற்பூரத்தை அதில் பொடித்துப் போட்டு இறக்கி ஆறவைத்து உடலில் வாத வலியுள்ள இடங்களில் நன்றாக அழுத்தித தடவித் தேய்த்து வர உடல் வலி மறையும்.

மரமஞ்சளை அரைத்து நீரில் கலந்து உள்ளுக்குச் சாப்பிட்டால் மூல நோய்க்கு சொல்லப்பட்ட அருமருந்தாகும். இதைச் சாப்பிடுவதுடன் ஆசன வாய்ப்பகுதியிலும் தாராளமாகத் தடவலாம். எந்த வகையான மூல நோயும் உடன் சரியாகும்.

மரமஞ்சளை 100 கிராம் அளவிற்கு எடுத்து விழுதாக அரைத்து அரைலிட்டர் நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி தைலமாக தயாரித்து வைத்துக் கொண்டால் இதை புரையோடிப் போன புண்கள், கிரந்திப் புண்கள், கறுப்பு பருக்கள் மற்றும் சரும நோய்கள் அனைத்திற்கும் தடவி வர உடனே குணமாகும்.

ஆஸ்த்மா நோயின் காரணமாக மூச்சிழுப்பும் இரைப்பும் அதிகமாக இருக்கும்போது கஸ்தூரி மஞ்சளை தீயில் சுட்டு புகையை மூக்கின் வழியாக உள்ளிழுத்தால் உடனே இரைப்பு நிற்கும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பிறகு அந்தப் பொல்லாத மூச்சுத்திணறல் வரவே வராது. அத்துடன் அதி போதையில் இருப்பவரது போதையை அகற்றவும் இதே முறையைக் கையாள்வதன் மூலம் போதையை அகற்றலாம். இது மட்டுமின்றி இப்புகை காச நோய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து அதன் கடுமையைத் தடுக்கிறது. இதே மஞ்சள் புகையை நாசியின் வழியாக உள்ளிழுத்தால் தலைவலி, ஜலதோஷம் என்பன சரியாவதுடன் விஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் மாறுகிறது.

குழந்தைகள் அவ்வப்பொழுது இருமிக் கொண்டு சிரமப்பட்டால் அதற்கு ஒரு மிளகு அளவு பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து அதில் சிறிது மஞ்சள் பொடியைத தூவி நான்கு மணிக்கு ஒரு தடவை கொடுத்து வந்தால் போதும் இருமல் உடனே நின்றுவிடும். மற்றும் இந்த மருத்துவத்தினால் தொண்டைப் புண், சளியடைப்பு போன்ற குறைபாடுகளும் நீங்குகிறது.

மஞ்சளை நன்கு கரியாக்கிப் பொடித்து சிறிது உட்கொண்டால் மாரடைப்பு நீங்குகிறது. மேகநோய் அகலுகிறது. காயம், புண், கட்டிகள் இவற்றின் மீது பூசிவந்தால் அவை குணமாகின்றன. மஞ்சள் கரித்தூளை தேனில் குழைத்து உள்ளுக்குச் சாப்பிட்டு வர மேகப்புண், உடல் சருமத் தடிப்பு, ஊறல் எல்லாம் சரியாகின்றன.

பொன்னிறமும் மென்சருமமும் பெண்கள் பெற கஸ்தூரி மஞ்சள், பச்சைப்பயறு, கடலைப்பருப்பு என்பனவற்றை சம அளவில் எடுத்து அரைத்துப் பொடியாக்கி குளிக்கும் போது உடலுக்குத் தேய்த்துக் குளித்து வரலாம். அத்துடன் வியர்வை நாற்றமும் சுத்தமாக அகன்றுவிடும்.

இதுமட்டுமின்றி தற்போதைய விஞ்ஞான ஆராய்ச்சியில் அமெரிக்காவின் டெக்சாஸ் என்னும் பல்கலைக்கழகத்தின் எம்.டி.ஆண்டர்சண் புற்று நோய் மையம் நடத்திய ஆய்வில் மஞ்சளுக்கு தோல் புற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் உண்டு என்று கண்டுபிடிக்கப்ப்பட்டுள்ளது. தோல் புற்று நோய்க்கு காரணமான “மெலனோமா” என்ற கலங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தக் கூடிய ஆற்றல் மஞ்சளுக்குண்டு என்றும், புற்று நோய்க்கு காரணமான செல்கள் வளர்ச்சி பெறாமல் தானாகவே அழிந்துவிடக் கூடிய சூழ்நிலையை மஞ்சள் ஏற்படுத்துகிறது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்ட அரிய உண்மையாகும். இந்த மையத்தின் பேராசிரியர் பாரத்.

பி.அகர்வால் தகுந்த அளவில் மஞ்சள் சேர்ந்த உணவுப் பொருட்களை உண்பது நமது உடல் நலத்திற்கு உகந்தது என்று தெரிவித்துள்ளார். ஆர்த்தரைட்டிஸ், புற்று நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு காரணமான கக்பா-பி என்ற ஒருவகையான சக்தி வாய்ந்த புரதம் தோன்றாமல் இருப்பதற்கு மஞ்சள் உதவி செய்கிறது என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தாய்ப்பால் அதிகளவில் சுரப்பிக்கச் செய்யும் தன்மையும் இந்த மஞ்சளுக்கு உண்டு. பிரசவித்த பெண்களுக்கு நீராட்டும் போது மஞ்சளைப் பூசிக் குளிப்பதன் மூலமும், உணவில் சேர்ப்பதன் மூலமும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யலாம். உணவில் சேர்ப்பதற்கு உகந்த முறை மஞ்சளும் பூண்டும் சேர்த்து சொதி வைத்துக் கொடுக்கலாம். இத்துடன் கருவாட்டையும் சேர்ந்தால் அதிக பலன் கிடைக்கும். ராக்கட்டுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு என்பது அதி நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகும். அப்படிப்பட்ட தாய்ப்பாலையே அதிகளவில் சுரக்கச் செய்யும் தன்மை மஞ்சளுக்கு உண்டெனின் மஞ்சளின் பெருமையை எப்படி வர்ணிப்பது.

மஞ்சளுக்கு காஞ்சனி, அர்சனம், ரஞ்சனி, பீதம், கோணிதம் என்ற மருத்துவப் பெயர்களுமுண்டு. சங்க நூல்களிலேயே மஞ்சள் கிழங்கைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. “சிறுபசு மஞ்சளோடு நறுவிரை நெளித்து” என்ற அடி திருமுருகாற்றுப்படையில் உள்ளது. இந்த அடி இறைவனுக்கே மஞ்சள் பயன்பட்டதை உணர்த்துகிறது. பழமை நிறைந்த மஞ்சள் மருத்துவத்தில் புதுமை படைப்பதென்பது வியத்தகு விந்தையாகும்.

மஞ்சளின் மகிமை மங்களம்!
மஞ்சளின் மகத்துவம் மருத்துவம்!
மங்கள வாழ்விற்கு மஞ்சளின் மருத்துவம்!
தற்கால மஞ்சளின் தற்கால மகத்துவம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Most Commented Posts


Leave a Reply