» Salute the Action On Deemed Varsities .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 29 Jan 2010

Salute the Action On Deemed Varsities

mgr-university.jpgகல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

தமிழகத்தின் 17 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசின் கல்வித்துறை கொடுத்த சாட்டையடிகள் காலா காலத்திற்கும் மறக்கவொண்ணாதவை.

60/120 பேரைச் சேர்க்க அனுமதி வாங்கிக்கொண்டு இவற்றை நான்கு இலக்க எண்ணாக மாற்றிக்கொண்டு ஆட்டம் போட்ட தமிழக நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு சரியான கட்டங்கள் கட்டப்பட்டுவிட்டன.

காசே பிரதானம் என்கிற போக்கில் ஆட்டம் போட்ட கல்வி அமைப்புகள் ஒடுக்கப்பட்டிருக்கின்றன.

இடியாக இறங்கியிருக்கும் இந்த அடி, மாணவ மாணவிகளைப் பாதிக்காது என்கிற ஆறுதலான செய்தியை மனிதவள மேம்பாட்டு மந்திரி கபில்சிபலும், அண்ணா பல்கலையின் துணைவேந்தர் மன்னர் ஜவஹரும் தந்திருப்பதுதான் இதில் ஒரே ஆறுதலான செய்தி.

ஆனால் இப்பல்கலைக்கழகங்களில் படிக்கும் சுமார் 50,000 மாணவர்களும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது நம்பும்படி இல்லை.

காரணம், நிகர்நிலைப் பல்கலைகளின் பாடத் திட்டங்கள் வேறு; கல்விக் கட்டண அமைப்பு முறைகள் வேறு. சரியான பேராசிரியர்கள் இல்லாததால் தோல்வியடையக் கூடிய மாணவ மாணவிகளுக்கு யார் தேர்வை நடத்துவார்கள்? பல்கலையா, தனியார் கல்லூரியா?

நன்றாக எழுப்பினாரய்யா பிரச்னையை இந்த விப்லவ் சர்மா என்கிற வக்கீல்! நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாடுகளை அறுத்துக்கொண்டு வெளியேறியதன் நோக்கம் உயரியதல்ல என்பது இவரத வாதம். கல்வியாளர் பி.டாண்டனும் அவரது குழுவும் எல்லா நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளையும் கட்டமைப்புகளையும் ஆராய்ந்து விப்லவ் சர்மா சொல்வது சரிதான் என்று கண்டுபிடித்துக் சொன்னது நல்லதாகப் போயிற்று.

இல்லாவிட்டால் ஏற்கெனவே நசிந்துகிடக்கும் கல்வித் தரம் (ஒரு விடுமுறை வேண்டும் கடிதத்தைக் கூடத் தவறில்லாமல் எழுதத் தெரியாத இன்ஜினீயரிங் பட்டதாரிகள் எவ்வளவு பேர் தெரியுமா!) இன்னும் தரைமட்டத்திற்குப் போயிருக்கும்.

தமிழகத்தில் இரத்து செய்யப்படாத 126 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இப்போதாவது வயிற்றில் புளி கரைக்கப்பட்டிருக்குமா இல்லையா? இனியாவது அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்; இல்லாவிட்டால் தகுதி பாதிக்கப்படும் என்கிற அச்சம் வந்திருக்குமா வந்திருக்காதா?

நிகர்நிலைப் பல்கலை அந்தஸ்தை வழங்குவதற்கு சிபாரிசு செய்த உயரதிகாரிகளின் ‘நேர்மை’யை உடனே ஆராய வேண்டாமா? விண்ணப்பித்தவர்களுக்கெல்லாம் நிகர்நிலைகளை வழங்கிய வள்ளல்களின் வண்டவாளம் நமக்குத் தெரிய வேண்டாமா? இடையிடையே இவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ளவர்களும் ஏதேனும் இலாபம் அடைந்தார்களா என்பதும் குடையப்பட வேண்டிய பகுதியே!

இந்தியக் கல்வியைச் சீரமைக்கும் இணையற்ற முயற்சிகளுள் ஒன்றுதான் இந்த இரத்து.

தும்பைவிட்டு வாலைப் பிடித்த கதை இது. என்றாலும்கூட இந்தச் செயலை வரவேற்கிறேன்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Most Commented Posts


Leave a Reply