» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 29 Jan 2010

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

திருப்புனவாயில் பழம்பதி நாயகர் கோயில் தலவிருட்சம்.

குரா மரம்
(WEBERA CORYMOSA)

ATLANTIA MISSIONS, OTIV.; RUTACEAE

மாணிக்கவாசகர் பாடிய தேவாரம் - பாடல் :

திருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணணே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே யுன்னை யோலமிட்
டலறி உலகெலாந் தேடியுங் காணேன்
தித்தமாம் பொய்கைத் திருப்பெருந்த
துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே யடியேன் ஆதரித்த
தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே.

கோவில்களில் பல நல்ல மரங்கள் இருந்தன. காலப்போக்கில் மரங்களையும், கோவில்களையும் சரியாக பராமரிக்க முடியாத நிலையில் மரங்கள் அழிந்து விட்டன. தாவரவியல் விஞ்ஞானம் கடலளவிற்கு வளர்ந்த நிலையில் இப்போது ஒட்டுச் செடிகள் அதிகளவில் உருவாக்கப் படுகின்றன. உதாரணமாக ஒரு ரோஜா செடியை எடுத்துக் கொண்டோமானால் ஒரே செடியில் பல நிறமுள்ள ரோஜாக்களை உருவாக்கியிருக்கின்றார்கள், விஞ்ஞானிகள். இதேபோல் ‘பாட்டில் பிரஷ்’ என்ற மரத்தை இப்போதெல்லாம் பெங்களூரில் உருவாக்கப்படும் பல மாடி கட்டிடங்களைச் சுற்றி அழகுபடுத்த நடுகின்றார்கள்.

வேலூர் அருகில் உள்ள பொன்னை விநாயகபுரத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர் ஆலயத்தில் பாட்டில் பிரஷ் மரங்கள் வளர்க்கப்படுவதுடன் இந்து சமுதாய மக்கள் அம்மரத்தை வணங்கவும் செய்கின்றார்கள். இதற்கு தாவரவியல் பெயர் CALLISTEMON என்றும், ஆங்கிலத்தில் பாட்டில் பிரஷ் என்றும், தமிழில் குரா என்றும் அழைக்கின்றார்கள். இதற்கு மேலும் பல பெயர்கள் உள்ளன.

இக்கோயிலில் உள்ள குருந்த மரத்து இலைகளில் ஓர் இதழே உண்டு. திருமால் ஆமை வடிவம் கொண்டு ஆணவமுற்று கடலைக் கலக்கியபோது, சிவபெருமான் இதனை அடக்கி அதன் ஓட்டை அணிந்து கொண்ட ஊராகும்.

அறந்தாங்கியில் இருந்து 48 கி.மீ. தொலைவில் திருப்பெருந்துறையும், மிமீசலும் உள்ளன. திருப்பெருந்துறைக்கு ஆவுடையார் கோயில் என்பது பெயர். காரைக்குடியிலிருந்தும் செல்லலாம். திருவாடானை என்னும் திருவூருக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு பழம்பதி, விருத்தபுரி எனும் பெயர்களும் உண்டு. 4 மறைகளும் பூசித்த திருவூர் இதுவென வரலாறு தெரிவிக்கிறது.

குரவம், குரா, குரவு, குருந்து : இதன் கிளைகள் ஒங்கி நீண்டு வளரும் எனவும், இதன் நிழலில் தனது குட்டியுடன் பெண்மான் தங்கிச் செல்லும் என்றும், குயிலினங்கள் கிளையில் அமர்ந்து கூவும் என்றும் பாடப்பெற்றுள்ளது.

குட்டையான பூக்காம்பில், குறு மலர்கள் ஒருங்கே பூக்கும் இம்மலரைத் தெய்வ மலராகத் திருவாசகம், திருவாய் மொழியும் கூறுகின்றன.

இதன் காய் சற்றுப் பருத்து நீண்டு, சாம்பல் நிறமாகத் தொங்கும். இதனைப் பாவையாகக் கொண்டு மகளிர் தொட்டிலிட்டு தாலாட்டி விளையாடுவர். எனவே, இதனை குரவம்பாவை என்று பெயர் கொண்டு அழைப்பர்.

இதனைச் செய்யாப்பாவை என்றும் அழைப்பார்கள். இதன் காய்களை அறுத்து விளையாடுவதும் உண்டு. இதன் அடிமரம் சற்று மஞ்சள் கலந்த வெண்மை நிறமானது. வலிமை உள்ளது. நீலகிரி, ஆனைமலை, திருவிதாங்கூர் முதலிய இடங்களில் காணப்படுகிறது.

ஆயுர்வேதம்
இதன் இலைகள் பாம்பு, விஷக்கடி மற்றும் விஷப் பூச்சிகளின் விஷத்தை முறிக்கிறது. இளந்துளிர்களைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இறைவனுக்கு அர்ச்சனை செய்ய கோயில்களில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் முருகப் பெருமானுக்கு இதன் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்வார்கள்.

சித்த மருத்துவம்
வேர் :
இதன் புகையால் தூக்கம் உண்டாகும். இதன் வேர் பூச்சி கடிக்காமலிருக்கவும், அதன் மணத்திற்காகவும் கையாளப்படுகிறது. கசப்புச் சுவை கொண்டது. பசியைத் தூண்டும், கோழை அகற்றும், உடலை வலுவாக்கும், உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும், வியர்வையைப் பெருக்கும் குணங்கள் உண்டு.

கண், தாடை, வயிறு, கழுத்து, தலை, நாக்கு, வாய் போன்ற பகுதிகளில் ஏற்படும் நோய்கள், சுரம், வாயு, மூல முளை, புண், இரைப்பு, எலி, பாம்பு முதலியவற்றின் விஷங்கள், மேகக் கட்டி, பைத்தியம் இவை போகும். 5 முதல் 10 கிராம் அளவு கோட்டம், தனியா இவற்றை ஒரே அளவாக அரைத்துப் பூச, மண்டைப் புண் நீங்கும். அல்லது கோட்டத்தை அரைத்து வெண்ணெயில் கலந்தும் பூசலாம்.

கோட்டத் தைலம் : இதனை மூலத்துக்குத் தடவி புகையூட்டினால் தீரும்.

கோட்டச் கரசம் : இத்துடன் வசம்பு, தேன் கலந்து கொடுக்க வெறிநோய் நீங்கும்.

கோட்டக் குடிநீர் : நன்றாக நசுக்கிய கோட்டம் 10 கிராம் அளவு எடையில் வெந்நீர் அரைப்படி அளவு விட்டு, இரண்டு மணி நேரம் மூடிவைத்திருந்து, பிறகு வடிகட்டிக் கொண்டு வேளைக்கு 50 மில்லி அளவு தினமும் 2 அல்லது 3 முறை கொடுத்து வந்தால் மேற்கூறிய நோய்கள் நீங்கும். இதனுடன் தேன், வசம்பு இவை சேர்த்து கொடுக்க வெறி நோய் நீங்கும். கோட்டத்தை நாரத்தைச் சாற்றில் ஊறவைத்து காயவைத்துப் பொடி செய்து தேன் சேர்த்து முகக்குரு, வங்கு இவற்றிற்குப் பூசிவந்தால் குணமாகும்.

கனி : இதன் கனி மருந்துக்குப் பயன்படுகின்றது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவிலின் தலவிருட்சமாக குருந்த மரம் வணங்கப்படுகிறது.

திருத்தண்டலை நீணெறிநாதர் ஞானாம்பிகை கோயிலில் தலவிருட்சமாக குருந்த மரம் வணங்கப்படுகிறது. இக்கோயில் திருத்துறைப்பூண்டியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருக்கோடிக்குழகர் (குழகர் கோயில்) அமிர்தகடேசுரர் மையார் தடங்கண்ணம்மை கோயிலில் குரா மரம் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

இக்கோயில் வேதாரண்யத்துக்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு தெற்கே 2 கி.மீ. தொலைவில் கோடியக்கரை என்னும் கடல் துறை உள்ளது. இக்கோயில் சுற்றில் அமிர்த தீர்த்தக்கிணறு உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சமாக குரா மரம் தெய்வத்துடன் இணைத்து வணங்கப்படுகிறது.

சங்க இலக்கியம்
குருந்த மரம், குரவம், குரா, குரவு, குருந்து என வேறு பல பெயர்களில் குறிக்கப்படுகிறது. இம்மரம் தனித்தும், கோங்கு மரம், மரவம், புன்கு மரங்களுடன் வனம், பூங்காக்களில் வளரும். இளவேனில் காலத்தில் வெள்ளை நிற அரும்புகள் மலரும். இம்மலர் வாசனையுடையது. இதன் நிழலில் இறைவன் குருவடிவாக அமர்ந்திருந்து தமக்கு காட்சி கொடுத்து அருளினார் என மாணிக்கவாசகர் விளக்குகிறார்.

சங்க இலக்கியத்தில் இம் மரம் குருவம், தற்போது குருந்தம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு சிறுமரம். முள் நிறைந்தது. மேலும், வேறு சில நூல்களில் எலுமிச்சை, கோட்டம், குடிலம், கோபி தாரம் எனவும் குறிக்கப்படுகிறது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2010/01/22 நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம் கிளுவை கோகுல் மரம்

2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்

2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி

2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி

2009/12/25  ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்

2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்

2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி

2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு

2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு

2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply