Thursday, 28 Jan 2010
கலக்கும் மிருகங்கள் : பிறக்கும் புதிய இனங்கள்

மனிதன் பாதி மிருகம் பாதி கலந்துசெய்த கலவை நான் - என்று ‘ஆளவந்தான’ படத்தில் பாட்டுப் பாடுவார் கமல்ஹாசன். அவர் சொன்னது நடக்கிறதோ இல்லையோ உலகமெங்கும் வேவ்வெறு இன மிருகங்களை இணைய செய்து கலப்பினங்களை உருவாக்கும் செயல் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
அப்படி ஆண் சிங்கத்தையும் பெண் புலியையும் இணைய செய்து உருவானதுதான் ஹெர்குலஸ் என்கிற லிகர் (லயன்+டைகர்). அமெரிக்காவில் பிறந்த ஹெர்குலஸ் இப்போது லண்டனுக்குச் சுற்றுலா சென்றுள்ளது. 12 அடி நீளம், 900 பவுண்ட் எடையுடன் இது ஆடி அசைந்து வருவதைப் பார்த்தால், பார்ப்பவர்களுக்கெல்லாம் நாடி நரம்பு ஆடிப்போவது நிஜம். ஹெர்குலஸுடன் பேருந்து ஒன்றும் வருகிறது. இந்தப் பேருந்தில் தான் ஹெர்குலஸின் மதிய உணவான 25 பவுண்டு இறைச்சியும் தேவையான நீரும் இருக்கிறது.
ஹெர்குலஸிடம் சிங்கத்தின் குணமும் புலியின் குணமும் கலந்திருக்கிறது. ஆனால் காட்டில் விட்டால் இது புலியுடனோ சிங்கத்துடனோ சேர இயலாது. இரண்டுமே கிட்ட சேர்க்காது. ஆனாலும் கவலையில்லை. ஹெர்குலஸ் போல நிறைய லிகர்கள் உலகமெங்கும் உருவாக்கப்பட்டு விட்டன என்பதால் செக்ஸை பற்றிய கவலை இதற்கு தேவையில்லை என்கிறார்கள். ஆனால் ஆயுள் கொஞ்சம் கம்மிதானாம்
லிகர்களைப் போல டிக்லான்களும் உருவாக்கப்படுகின்றன. ஆண் புலியை பெண் சிங்கத்துடன் சேர்ப்பதால் உருவாகும் புதிய இனத்துக்கு ‘டிக்லான்’ எனப் பெயர். அதேப்போல் கழுதையையும் வரிக்குதிரையையும் இணைத்து ‘ஜீடாங்க்’, வரிக்குதிரையுடன் குதிரையை இணைத்து ‘ஜோர்ஸ்’ அல்லது ‘ஜெப்ராய்டு’, காட்டெருமையையையும் வீட்டுப் பசுவையையும் இணைத்து ‘பிஃபலோ’, போன்றவை உருவாக்கப்படுகின்றன.
மிருகங்கள்தான்என்றில்லை கடல் உயிரினங்களையும் மனிதன் விட்டுவைக்கவில்லை. திமிங்கலத்தை டால்பின்னோடு சேர வைத்து ‘வுல்ஃபின் என்ற புதிய இனத்தை உருவாக்கி இருக்கிறான். மேலும் ஜப்பான் ஜெர்மனி மற்றும் இத்தாலியிலுள்ள மிருகக்காட்சி சாலைகளில் சிறுத்தையையும் புலியையும் ஒன்றுகூட வைத்து ‘லியபான்ஸ்’களை உருவாக்கி இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய விலங்குகள் சரணாலயத்தில், சின்ன வித்தியாசங்களுடன் கூடிய சிறுத்தையையும் கருஞ்சிறுத்தையையும் இணைய செய்து ‘லெப்ஜாக்ஸ்’ என்ற புதிய இனத்தை உற்பத்தி செய்திருக்கிறார்கள் மனிதர்கள்.
கடைசியில முதல்ல சொன்னதை செய்யாம இருந்தா சரி!

































January 28th, 2010 at 8:19 am
செய்திக்கு நன்றி. அனால் liger இருப்பது லண்டனில் அல்ல.
அமெரிக்க மியாமி மாநிலத்தில். (இங்கு லண்டனில் எல்லாம் இதை வீதியில் வாக்கிங் கூட்டிப்போக முடியாது.