Friday, 22 Jan 2010
துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!
மனம் காரணங்கள் அறயாமலேயே அவ்வப்போது துவண்டு போகிறது. மிகச் சில நேரங்களில்தான் இதற்குக் காரணம் புரிகிறது. பல நேரங்களில் புரியாமலே போய்விடுகிறது.
“என்னன்னே தெரியலை. மனசு ஒரு மாதிரியாக இருக்கு. ஒண்ணுமே செய்யத் தோணலை. எதிலேயுமே ஆர்வம் இல்லை. விழுந்து விழுந்து படுத்துக்குறேன்” என்று உதடுகள் பிறருக்கும், உள்ளம் நமக்கும் செய்தி தெரிவிக்கிறது.
காலையில் எழுந்ததும் உடலில் ஓர் இடம் மெல்ல வலி காட்டும். என்னது இது? ஏன் இப்படி வலிக்கிறது? என்று நம் நினைவுகளைப் பின்னோக்கி ஓட்டினால் ஓ! நேற்று இந்த இடத்தில் இடித்துக்கொண்டோமே! அதுதான் காரணம் என்று நம் நினைவாற்றல் எடுத்துக் கொடுக்கும் சில நேரங்களில் இதுவும் சாத்தியமற்றுப் போகிறது. காரணம் நாம் உணராதபடி அடிபட்டதுதான்.
இப்படித்தான் மனக்காயமும் நம்மையறியாமல் நாம் நேற்றையச் செய்தி ஒன்றால், அல்லது செய்திகள் சிலவற்றால் ஏற்பட்டிருக்கக்கூடும் அல்லது நம் மனத்தில் நம்மை வெகுநாளாய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற ஒரு நிரந்தரக் கவலைகள் திடீரென நம் நினைவிற்குக் கொண்டு வரப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம். அல்லது புதிதாக ஒரு கற்பனைப் பயம் ஏற்பட்டிருக்கலாம்.
ஏன் இந்த ஊகங்களுக்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் உள்ளம் துவண்டிருக்கலாம். இதன் காரணத்தை அவரவர்களே அறிவார்கள். அல்லது ஆராய்ந்து உணர்ந்தே ஆகவேண்டும்.
ஆனால் அப்படியும் உணர முடியாத இனம் புரியாத கவலைகளால் தாக்குண்டு மரவட்டையாய்ச் சுருங்கிக் கிடப்பதை எந்த வகையில் நியாயப்படுத்தி விட முடியும்? நோய் இன்னது என்று கண்டறியாமல் ஒரு மருத்துவரால் அந்நோயைக் குணப்படுத்த இயலாது என்பது போலத்தான் இதுவும். ஊசி முனையால் தொட்டுச் சுட்டிக்காட்டுகிற நிலைக்கு உள்ளம் துவண்டதன் காரணங்களை அறியுங்கள்.
இயலவில்லையா? இது காரணமற்ற துவளல் என்கிற இரகத்தில் அடக்கி, மனத்திற்குப்பிடித்த, உற்சாகம் தருகிற செயலில் இறங்கி இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.
அதுவும் உடனே! காரணம், துவண்ட நிலையிலிருந்து உள்ளம் நொறுங்கிப் போகிற நிலையை நோக்கித் தள்ளப்பட்டு விடக்கூடாது அல்லவா?
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!
2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!
2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்
































