Friday, 22 Jan 2010
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
1008 லிங்கங்களும் சியாம் ரியாப் நதியின் படுகையின் கீழேதான் இருக்கின்றன; அவற்றையும் பார்க்க முடியாது என்றபோது நான் அடைந்த ஏமாற்றத்திற்கு அளவே இல்லை.
இதற்காகவா இவ்வளவு நேரம் பயணித்தேன்? இதற்காகவா இவ்வளவு செலவழித்தேன்? (டாக்சி செலவு)? இதற்காகவா இந்தக் கடும் பயணம்? இதற்காகவா உடல் நோக, எலும்புகள் பதம் பார்க்கப்பட வந்தேன்? மறுபடி நாளை வருவது என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
இதுவரை மிகக் குறைவான தமிழர்களே இந்த 1008 சிவலிங்கங்களைத் தமிழ் நாட்டிலிருந்து வந்து பார்த்திருக்கிறார்கள். நம் முன்னோர் எவ்வளவு காலத்திற்கு முன்பு இங்கே வந்து இப்படி ஆற்றுப் படுகையில் சிவலிங்கங்களைப் பதித்திருக்கிறார்கள்! காலங்காலமாக நூற்றாண்டுகளாக இந்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தும் எப்படி இந்தச் சிவலிங்கங்கள் தேயாமல் இன்னமும் அடையாளம் காணும்படி இருக்கின்றன?
ஏன் இப்படி உலகில் வேறு எங்கும் இல்லாத கலாச்சாரமாய் ஆற்றுப் படுகையைத் தேர்ந்தெடுத்து 1000 சிவலிங்கங்களைப் பதிக்க வேண்டும்?
மனக் கேள்விகள் கொக்கிகளாய் மாறி மூளையைப் போட்டுச் சுருக்கு முடிச்சுகளாய் ஆக்கிக் கொண்டிருந்தன.
“ஆற்றில் அளவுக்கதிகமாய் நீர்போனால் என்ன? சிவலிங்கங்களை நான் பார்க்க வேண்டும். என்னை அழைத்துப் போ” என்றவன், “உன் பெயர் என்ன?” என்றேன்.
“கியானா. இவள் பெயர் நிவின்” என்றாள் அருகில் இருந்த அந்தப் பெண்ணைக் காட்டி. இவளுக்கு அந்தப் பெண் என்ன உறவு என்று சொல்லவில்லை. தங்கையா, மகளா என ஊகிக்க முடியவில்லை.
இருவருக்கும் இடையே என்னிடமிருந்து எப்படியும் கொஞ்சம் அமெரிக்க டாலர்களைப் பெற்றுவிட வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததே தவிர, இருவருக்கும் இடையே தொழிற் போட்டி என்று எதுவும் இல்லை. இருந்திருந்தால் “போடி அந்தப் பக்கம்! இவர் என் கஸ்டமர்!” என்று கியானா இந்நேரம் சொல்லியிருப்பாள். இருவர் இணைந்து கூட்டணியாகச் செயல்படுவதால் குறைவான டாலர்களை நீட்ட முடியாது. இது நல்ல வசூல் தந்திரமாக இருக்கிறதே என்கிற நினைப்பும் எனக்குள் சேர்ந்தே வந்தது. கியானா வலப்புறம் வர, நிவின் இடப்புறம் வர அந்த நொளு, நொளு தரைப்பகுதியில் ஷூ அடிக்கடி காலை வாரி விடப் பார்க்க “என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று நீட்டினாள் கியானா. “பரவாயில்லை” என்றதற்கு அவளே கைகளைக் கோர்த்துக் கொண்டாள்.
இந்த ஊரில் இதெல்லாம் சகஜம் என்பதைத் தவிர, எனக்கு இதிலெல்லாம் கிளுகிளுப்பு என்பது அறவே கிடையாது.
ஆற்றுப் படுகைக்குப் போகிற பாதையில் இரண்டு மூன்று கிராமியக் கடைகளில் அழகான கைவண்ணங்களில் விதவிதமான மரவேலைப்பாடுகள். சில பொம்மைகள் காட்டு மந்திரவாதிகளின் குடிசைகளில் இருக்குமே அப்படி இருந்து மிரட்டின.
கடை வைத்திருந்த ஒரு பெண்மணி ஓர் அழகான மரப்பொருளுடன் வந்து நாங்கள் நடந்துகொண்டிருந்த பாதையை மறித்தாள்.
“யேய்! போடி அந்தப் பக்கம். கடையோடு நின்னுக்க! பாதையை மறிச்சே அப்புறம் நடக்கிறதே வேறு!” என்கிற பாணியில் கியானா அவளை மிரட்ட, “நீ போடி உன் வேலையைப் பார்த்துக்கிட்டு!” என்பது போல் கடைக்கார அம்மணி சூடாக, கடைக்கார அம்மணி அந்தப் மரப்பொருளால் என முகத்தில் அடிக்க வருவது போல் வந்து மூக்கருகே நீட்டினாள். இதுவரை முகர்ந்திராத ஒரு பயங்கரமான மூலிகை நெடி!
“இதை சுவாசிக்கிட்டிருந்தா ரொம்ப நல்லது” என்கிற பாணியில் (எல்லாம் ஓர் ஊகம்தான்!) ஏதோ சொல்ல, இவளிடமிருந்து என்னைக் காப்பாற்று என்கிற பாணியில் நான் கியானாவைப் பரிதாபமாகப் பார்க்க, கியானா காச்மூச் என்று கத்த ஆரம்பித்துவிட்டாள்.
ஐயோ! இதுவரை சிரித்த முகமாகப் பார்த்த கியானாவின் மறுமுகத்தைக் காண நேர்ந்தபோது, “டேய்! டாலரைக் குறைச்சுக் குடுத்தே உனக்கும் இதே முகம் தானடா” என்று உள்மனம் என்னை மிரட்டியது. மரப்பொம்மை மனுஷி மிரண்டு வழிவிட மறுபடி ஒரு பையன் சிறு டப்பாவில் வண்ணவண்ணக் கற்களைக் காட்டியபடி அரைகுறை ஆங்கிலத்தில், “சார்! இந்தக் கல்லை நீங்க மார்க்கெட்டுல வாங்கினா நம்ப முடியாத விலை சார்! எங்கிட்ட ஒரு கல்லு எட்டு டாலர்தான் சார்” இவனோடு இன்னும் சிறு வாண்டுகள் இருவர்.
“எனக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லை சார்” என்றேன்.
“சார்! நான் ஒரு மாணவன் சார். பள்ளியில் படிக்கிறேன். இதை வித்துத்தான் சார் படிக்கிறேன். எனக்கு உதவி பண்றதா நினைச்சு ஒரு கல்லாவது வாங்கிக்குங்க சார்” என்றான் பாருங்கள் நெஞ்சில் சடாரென்று ஈரம் கசிந்தவன் ஆனேன் நான்.
அந்தக் கணமே இவன் நம் வாடிக்கையாளன் தான் என்கிற முடிவிற்கு அவன் வந்திருக்க வேண்டும்.
முதலில் சிவலிங்கம் அப்புறம்தான் வியாபாரம். ஆற்றுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது வாங்குகிறேன் என்றபடி நடக்க, இந்தச் சிறுவர் பட்டாளமும் எங்களோடு வர ஆரம்பித்தது. ஐவர் புடைசூழ நான் நடக்க என் பின்னால் வந்த சிவா இந்த நடவடிக்கைகளையெல்லாம் விநோதமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். நான் வெளி ஆள். அவர் உள்ளூரில் இருப்பவர் என்று இந்தக் கும்பல் எப்படித்தான் கண்டுபிடித்ததோ தெரியவில்லை.
ஆற்றில் எப்படி நீர் ஓடினாலும் பரவாயில்லை. ஏதேனும் சாகசம் புரிந்தாவது சிவலிங்கங்கள் அருகே போய்விட வேண்டும் என்ற எண்ணிய எனக்கு, நான் அங்கு கண்ட காட்சி என்னை மிரள வைத்துவிட்டது.
ஏகப்பட்ட இரைச்சலுடன் அதிவேகத்தில் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு நீர் ஓட, இதில் ஏதேனும் சாகசம் செய்தால் எமலோகம்தான் என்று பட்டது. குறைந்தது பாறைகளில் உருட்டித் தள்ளிக் கையைக் காலையாவது உடைத்துவிடும் என்பது தெரிந்தது.
கரும்பச்சை நிறத்தில் வெள்ளை நுரைகளைக் கிளப்பியபடி நீர் ஓட, “அதோ அங்குதான் சிவலிங்கங்கள் இருக்கின்றன. மையத்தில் இருப்பது மகா சிவலிங்கம்” என்று கியானா அடுக்க ஒன்றுமே தெரியவில்லை.
கரையிலிருந்து மூன்றடி தள்ளி ஒரு சிவலிங்கம் இருப்பதாக நிவின் சொல்ல “அதை மட்டும் இறங்கிப் பார்க்கவா?” என்று கியானாவிடம் கேட்டேன். “சரி நான் பிடிச்சுக்குறேன் இறங்குங்க” என்று அவள் நம்பிக்கையூட்ட, அங்கிருந்த அறிவிப்புப் பலகை வாசகம் என்னை நீரில் இறங்கவிடாமல் செய்தன!
“சிவலிங்கத்தின் மீது நடக்காதீர்கள்” என்பதுதான் அந்த வாசகம்.
புனிதம் கருதி இந்த அறிவிப்பா, அல்லது சரித்திரச் சான்றாய் விளங்கும் இவை மக்களால் மிதிபட்டு, உருத்தெரியாமல் போய்விடும் என்பதற்காக இந்த அறிவிப்பா?
நிச்சயம் முதலாவதாக இருக்க முடியாது. சிவலிங்கத்தின் புனிதம் பற்றியெல்லாம் கவலைப்படுபவர்கள் இவர்களல்லர். ஒரு சரித்திரப் பதிவாக இருப்பது சீரழிந்து விடக்கூடாது என்பதுதான் இவர்களது அக்கறை என்று பட்டது.
சிவா வேறு “வேண்டாம் சார். காட்டாறு சார்! நம்ப முடியாது சார்! இறங்காதீங்க ரிஸ்க்!” என்றார் அக்கறையோடு.
நான் கேட்கவில்லை பாண்ட்டை மடித்துக் கொண்டு ஆற்றில் இறங்க, ஒரு கையை கியானா பிடித்துக் கொண்டே (அட! எத்தனை தடவைப்பா சொல்லுவே என்கிறீர்களா?)
“அதோ! அதோ! ஒரு சிவலிங்கா! தெரியுதா? தெரியுதா?” என்று ஆர்வம் பொங்கக் கேட்க ‘அடிப்போடி! ஒரு எழவும் தெரியலை’ என்று வெறுப்பில் சொல்ல வந்த நான், ஓ! சிவலிங்கத்தை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது என்று நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
மொத்தத்தில் தோல்விதான். உயிரைப் பணயம் வைத்து உள்ளே இறங்கிப் பார்க்கலாம் என்றால் இந்த அறிவிப்புப் பலகை வேறு தடைபோடுதே!
ஏமாற்றத்துடன் கரை ஏறி நடக்க, “சார்! கல் வாங்குறேன் சொன்னீங்களே” என்றான் அந்த மாணவன் இரத்தச் சிவப்பாய் இருந்த அந்தக் கல்லை சூரிய ஒளியில் உயர்த்திப் பிடித்துப் பார்த்தபோது வெளிச்சத்தில் ஒரு ஜாலம் செய்தது பாருங்கள்! நம்பவே முடியவில்லை.
நிச்சயம் இந்தப் பையன் சொன்னது உண்மைதான். இந்தக் கல் ஏகப்பட்ட விலை போகும். சொல்லப்போனால் பயணச் செலவில் ஒரு பகுதியையே சரிக்கட்டும்போல் தோன்றியது.
“சரி, மூன்று கற்கள் கொடு” என்று சொன்னதும் அந்தக் கல் விற்கிற பையன் மூன்றா! என வாயை ‘ஆ’ என்று பிளந்து விட்டான்.
நான் ஏமாந்து வாங்குவதாக அவன் நினைக்க, அவன் ஏமாந்து விற்பதாக நான் நினைக்க, யார் ஏமாளி?
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
































