Friday, 22 Jan 2010
மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து
இளநீர்
இயற்கை இப்புவியில் படைத்துள்ள உன்னத டானிக்காக திகழும் இளநீர் பற்றிய தகவலை தருகின்றேன்.
நம் உடல் அழகு, ஆரோக்கியம் அனைத்துமே உணவோடு தொடர்பு கொண்டவை என்பதை எனது இந்நூலில் உள்ள கட்டுரைகள் புரிய வைத்திருக்கும்.
நோயற்று வாழ்வதற்கு நமது அன்றாட உணவிற்கு தேவையான புரதச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்துகள் அடங்கிய உணவு நமக்கு இன்றியமையாதவை ஆகும். பசுமையான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றில் சத்துகள் நிறைந்திருந்தாலும் இயற்கையில் வளரும் தென்னைமரங்கள் தரும் இளநீரின் மகத்துவமே தனிச்சிறப்பு கொண்டதாகும்.
‘உயிர்திரவம்’ என்று கூட சொல்லக்கூடிய பெருமை கொண்ட இளநீரை நமக்கு வழங்கும் தென்னை மரமானது உலகில் உள்ள அனைத்து கடலோரப் பகுதிகளில் மட்டுமின்றி, நமது தாயகமான இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் செழித்து வளர்கிறது. அதிலும் தமிழர்களின் வீடுகளில் உள்ள பின் தோட்டத்தில் தென்னை மரம் நட்டு வளர்ப்பது என்பது நமது மரபாகும். அதன் பயன் என்பது பலவகைகளில் நமது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு மருத்துவ பலன்களும் தருகிறது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். தென்னையை வளர்ப்பது என்பதும் சாதாரணமானது தான். அன்றாடம் உபயோகிக்கும் நீரினை வீணாக்காமல், வீட்டுத் தோட்டத்தில் உள்ள காய்கறி, மரங்களான முருங்கை, தென்னை, கொய்யா, நெல்லி, மாமரம் போன்றவற்றிற்கு ஊற்றியோ அல்லது கழிவு நீர் சென்று அடையும் வகையில் அமைப்பதால், வீணாகின்ற நீரே அம்மரங்களுக்கு உணவாகி, நம் அனைவருக்கும் சிறந்த பலன்களை கொடுக்கின்றது.அதிலும் தென்னைக்கு ஊற்றும் நீரானது இளநீராக, திரும்ப தேங்காயாக மாறி மிக சுவையையும், புத்துணர்ச்சியையும் தருகிறது. பொதுவாகவே தென்னையின் அனைத்து பாகங்களும் பல வகைகளில் பயன்படுத்தப்பட்டாலும், இளநீருக்குத் தான் முதலிடம். சுத்தமான, சுவையான இளநீரை கோடையின் வெப்பம் தணிக்கும் குளிர்பானம் என்று மட்டுமே கருதிவிடக்கூடாது. சத்துக்களும் நோய் தீர்க்கும் தன்மையும் அதில் நிறைய உள்ளது.
குளுகோஸ் மற்றும் புரக்டோஸ் போன்ற சர்க்கரை இளநீரில் காணப்படுவதோடு, சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பாதிக்கு மேல் காணப்படுவது பொட்டாசியம் தான். தென்னைக்கு இடப்படும் பொட்டர் (சாம்பல் சத்து) உரங்களின் அளவைப் பொறுத்து பொட்டாசியத்தின் அளவு மாறுபடுகிறது. கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும், குறைந்த அளவில் உள்ளன. வளர்ச்சியை தூண்டும் ஆற்றல் கொண்ட கனிமப் பொருட்களும் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள சர்க்கரைச் சத்தின் அளவு 1.5 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக அதிகரித்து விடுகிறது. இளநீரிலுள்ள குளுகோஸ் மற்றும் புரக்டோஸ், தேங்காய் முதிர்ச்சி அடையும்போது சுக்ரோசாக மாறிவிடுகிறது. முற்றின தேங்காய் நீரில் காணப்படும் மொத்த சர்க்கரை சத்தில் 90 சதவீதம் சுக்ரோஸ் ஆகும்.
இளநீர் ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு, சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரித்து தாம்பத்யத்தை தூண்டும் என ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன. ஜீரணக் கோளாறினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். இளநீர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் தொல்லையே இருக்காது. அடியோடு அழித்துவிடும். இது தவிர உடலில் ஏற்படும் நீர் வீக்கத்தையும் இளநீர் கட்டுப்படுத்தக் கூடியதாகும்.
முக்கியமாக உடல் சூட்டை தணிப்பதில் இதற்கு நிகரானது ஏதும் இல்லை எனக் கூறலாம். மேலும் வேர்க்குரு, வேனல்கட்டி, பெரியம்மை, தட்டம்மை மற்றும் மஞ்சள் காமாலை போன்றவற்றிற்கும், தடிப்புகளை நீக்கும் குணமும் இளநீருக்கு உண்டு.
இளநீரில் உப்புத் தன்மை, வழுவழுப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு தொடர்ந்து பருகச் செய்து, ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்து விடும். சிறுநீர் பெருக்கியான இளநீர் சிறுநீர் கிருமிநாசினியாக செயல்பட்டு சிறுநீரகச் கற்களை கரைப்பதோடு, சிறுநீரக வியாதிகளையும் தடுத்து குணப்படுத்தக் கூடியது. இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை தாராளமாக இளநீரை பருகலாம் என்பதோடு நோயாளிகளுக்கு நெருக்கடியான கால கட்டத்தில் நரம்பு ஊசி மூலமும் இளநீர் செலுத்தப்படுகிறது.
ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களை அழிக்காது என்பதால் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்று சிகிச்சைப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இதில் புரதச்சத்து குறைவாகவே இருந்தாலும் இப்புரதச்சத்தின் தரம், பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.
இளநீரில் சர்க்கரைச் சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் சற்று கவனமாய் இருக்க வேண்டும். பொதுவாக இளநீரில் மிகவும் பிரசித்தமானது செவ்விளநீர்தான். அதிக அளவு சுவையுடன் கூடிய நீரும், தோசைப்பதம் கொண்ட தேங்காயும் உண்ண உண்ண ருசியும், புத்துணர்வும் தந்து களைப்பு, அசதி ஆகியவற்றைப் போக்கி மனதில் ஒரு தெம்பும், சுறுசுறுப்பும் தரும் என்பதால், அனைவரும் இளநீர் அருந்துவது என்பது இயல்பாகவே எந்த நாட்டிலும் காணலாம். கனடாவில் இளநீர் பேக் செய்யப்பட்ட டின்கள், பாட்டில்கள் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. கோடைகாலத்தில் தான் வெய்யிலின் சூடு, நா வறட்சி, களைப்பு, சோர்வு, தாகம், மயக்கம் போன்றவை சாதாரணம் என்பதால் இளநீர் ஒன்றுதான் கைகொடுக்கும் சஞ்சீவியாக விளங்கி அனைவருக்கும் சுகம் அளிக்கின்றது. எனவே தான் கோடைக்கு சிறந்த குளிர் பானமாக இளநீரும், நீர் மோரும் தமிழர்களிடம் பிரசித்தம். எனவே உடல் உஷ்ணத்தை சீராக வைப்பதோடு, அனைத்து வகைகளிலும் நம் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும் இளநீரை அவ்வப்போது அருந்தி புத்துணர்வும் தெம்பும் பெருகி வாழ்க பல்லாண்டு நோய் நொடியின்றி!
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!
2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!
2009/12/25 இஞ்சியின் மகத்துவம்
2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
































