Friday, 22 Jan 2010
மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!
நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஜெயலலிதா ஆற்றியிருக்கும் பங்கு மிக உருப்படியானது.
நடப்புக் கூட்டத் தொடர் ஆரம்பித்த வேளையில் வெறுமனே கையெழுத்து மட்டுமே போட்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.
ஆனால் கவர்னர் உரை கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட உரையின் ஒளி நகல் போலவே இருந்ததாலோ என்னவோ ஒரு பிடிபிடிக்க இது நல்ல வாய்ப்பு என்று ஜெயலலிதா கருதியிருக்க வேண்டும்.
ஆளுநர் உரையின் சாரத்தைப் பிடிபிடி என்று பிடித்த ஜெயலலிதா மற்ற சில விஷயங்களையும் பிடித்து உலுப்பு உலுப்பு என்று உலுப்பிவிட்டார்.
அதிலும் ஆளுங்கட்சியினரைப் பிலுபிலு எனப் பிடித்துத் தள்ளுமுன் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் ஜனங்களை ஒரு பிடிபிடித்திருக்கிறார் பாருங்கள், நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போல் இருந்திருக்கும் உரியவர்களுக்கு.
இவர்கள் நன்மையடைவதற்காகத் தங்களது வருங்காலத் தலைமுறையை எப்படிப்பட்ட கடுமையான சூழலில் விட்டுச் செல்கிறார்கள் என்கிற கருத்தையும், இந்தப் பணநாயகம் விலைவாசிமீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்.
தமிழக அரசு செய்து கொண்டிருக்கும் இலவசத் திட்டங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதையும் நன்றாகவே எடுத்துரைத்திருக்கிறார்.
நோயில் அழும் குழந்தைக்கு, வித்தைக்காரனைப் போல் சர்க்கரை நீரை வாயில் ஊற்றும் செயல் இது என்கிற பொருத்தமான உதாரணத்தையும் முன் வைத்திருக்கிறார்.
இலவச நிலமும், இலவச வீடும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும், எரிவாயு அடுப்பும் மக்கள் எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், குடிநீர் மற்றும் மின் பற்றாக்குறையையும் சட்டம் ஒழுங்குச் சீர் குலைவையும் ஈடு செய்யக் கூடியனவா என்று ஜெயலலிதா கேட்டிருக்கும் கேள்வி ஆட்சியாளர்களுக்கு ஒரு நல்ல சூடு.
ஜெயலலிதாவின் பேச்சிற்கு அமைச்சர்கள் சில விளக்கங்களை அளித்திருந்தபோதிலும் அவற்றை நல்ல சமாதானங்களாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
விளக்கங்களைச் சரிவரத் கேட்டுக் கொள்ளாமல் ஒரு மணி நேரத்திற்கு மேல் யாரோ எழுதிக் கொடுத்த நாடக வசனத்தைக் கருத்துகளாகக் கூறி சட்டசபையிலிருந்து வெளியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் காலம் வரும் என்று மூத்த அமைச்சரும் பண்பாளருமான அன்பழகனாரே பேசியிருப்பது ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.
இனி நடக்கப்போகும் சட்டமன்றக் கூட்டத்தொடர் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில்தான். இதுவே ஒரு ஆரம்பம் என்று கொண்டு ஜெயலலிதா தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வந்து ஜனநாயகக் கடமைகள் ஆற்றி ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்க வேண்டியது அவசியம்.
இதன் மூலம் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் உற்சாகம் பெறுவர். போரை வழிநடத்திச் செல்லும் தலைவன் அயர்வு காட்டிக் கொண்டு நீங்கள் போரிடுங்கள் என்று படை வீரர்களைப் பார்த்து அவன் சொன்னால் வெற்றி என்பது எப்படி வாய்க்கும்? எல்லாம் போகட்டும்! தமிழகத்தின் மூலை முடுக்களிலெல்லாம் கால்பதிக்காமல் பயணிக்கும் பிரசாரவேனை விட்டு இறங்காமல், பேசும் பேச்சிற்கும், சட்டமன்றத்தில் பதிக்கும் பதிவுகளுக்கும் மடுவிற்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறதா இல்லையா?
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!
2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?
2009/12/31 அம்புகளை நோவானேன்?
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்
































