 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
கே.ராஜவேல், எட்டயபுரம்.
|
 |
பொன் சேகா - ராஜபக்சே யார் முந்துவர்?
|
 |
பொன்சேகா ஒரு தற்காலிக அரசியல்வாதி! இவர் வெற்றி பெறுவார் என்று எவர் சொன்னாலும் நான் நம்பத் தயாரில்லை! தமிழர்களுக்குத்தான் தர்மச்சங்கடம். இந்த இருவருள் யாருக்கு ஓட்டளிப்பது என்பதில்!
|
|
 |
ஆ.முருகேஷ்பாபு, சேலம்.
|
 |
இந்திய பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் சைமன்ஸால் பந்துவீச்சுத் தரத்தை உயர்த்த முடியுமா?
|
 |
கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து செய்கிற தவறு ஒன்று உண்டு. இதற்கு முன்பு இருந்த பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத் ஒரு வேகப் பந்து வீச்சாளர். இவர் காலத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் சொதப்பினர். இப்போது எரிக் சைமன்ஸ் வந்துள்ளார். இவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர். இவர் காலத்தில் வேகப் பந்து வீச்சாளர்கள் ஒளிவிட முடியாது. எனவே இரு வகைப் பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட வேண்டும்; இவர்களும் இந்தியர்களாக இருக்க வேண்டும்.
|
|
 |
எம்.ராஜன், புதுவை.
|
 |
புதிய குண்டர் சட்டத்தால் திருட்டு வி.சி.டி. ஒழியுமா?
|
 |
ஒளியும்!
|
|
 |
சி. ரஞ்சித்குமார், முசிறி.
|
 |
இந்திய ஹாக்கி அணியினர் தகராறு செய்வது நியாயமா?
|
 |
ஹாக்கி இந்தியா எனப்படும் இந்திய ஹாக்கி சங்கம் செய்வது மட்டும் நியாயமாக்கும்? சம்பளத்தை சரிவரத் தராமலும் எப்போதோ நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை இன்றளவும் தொடர்வதும் ஹாக்கி இந்தியாவின் நியாயமற்ற செயல்கள். அள்ளிக் கொடுக்க வேண்டியதில்லை; கிள்ளியாவது கொடுக்கலாம் அல்லவா? ஜிம்பாப்வே நாடும் மேற்கிந்தியத் தீவுகளும் இப்படிப்பட்ட புரட்சியாளர்களை சஸ்பெண்ட் செய்து இரண்டாவது அணியை உருவாக்கிவிட்டது. பிறகுதான் மூத்த வீரர்கள் இறங்கி வந்தார்கள். இதற்கும் ஹாக்கி இந்தியா துணிந்துவிட்டதாகவே தெரிகிறது.
|
|
 |
ஆர்.ராகவன், ஈகை.
|
 |
பொதுத் தேர்தலில் பா.ம.க.வின் மூவ் எப்படியிருக்கும்?
|
 |
அதற்கு முன் ஒரு சிறு காரியம் இருக்கு. பென்னாகரம்தான் இவர்களுக்கு அடுத்த சோதனைச் சாவடி. அதைத் தாண்டினால்தான் இவர்களின் அடுத்த பயணம். அதற்குப் பிறகுதான் கூட்டணி பற்றிய பேச்சில் இவர்களின் ‘டீலா நோ டீலா’ எல்லாம்.
|
|
 |
என்.சரவணன், திருச்செந்தூர்.
|
 |
இனி தே.மு.தி.க.?
|
 |
கூட்டணி வைத்தால்தான் இனி அக்கட்சிக்கு மாநில அந்தஸ்து. இல்லாவிடில் அதுவொரு யூனியன் பிரதேசம்தான்! எதுவொன்றுக்கும் டெல்லியை எதிர்பார்க்கணும்.
|
|
 |
ஜி. சேஷகிரிராவ், சென்னை-17.
|
 |
ஆந்திரத்தில் பிரச்னை பெரிதாகிக் கொண்டு வருகிறதே?
|
 |
ஆந்திரா, தெலுங்கானா, ராயலசீமா என்ற மூன்று கற்களை வைத்து அதன் மீது பொங்கித் கொண்டிருந்தார்கள். இப்போது எந்தக் கல்லை எடுத்தாலும் அதனால் அடுப்பும் போகும். சமையலும் போகும் போலிருக்கு. ரொம்பப் பாவம்யா, இந்த ரோசய்யா!
|
|
 |
எம்.கண்ணன், ஆம்பூர்.
|
 |
ஸ்டாலின் வளர்ச்சி பற்றி?
|
 |
இப்போதைக்கு இவர் ஒரு பிறை நிலவு! ஜூனில் இவரே ஒரு முழு நிலவு. தற்போதைய சாலைப் பாதுகாப்புப் போஸ்டர்களில்கூட இளைய காமராஜராக இவர் சித்திரிக்கப்படுகிறார். இரண்டு கைகளில் இரண்ட குழந்தைகளை கூட்டிச் செல்கிறார். ஒரு காலத்தில் விளம்பரமே பிடிக்காதவருக்கு இன்று அல்ட்ரா விளம்பரங்கள் சூரியக்கதிராச்சே? அதனால்தான் எல்லாமே தகதக.
|
|
 |
என். பொன்னுரங்கம், விழுப்புரம்.
|
 |
நீங்கள் எப்படி ஒரு வெற்றியாளராக இருக்கிறீர்கள்?
|
 |
அப்படியா? நன்றி! ‘தன்னை இழப்பவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வான்’ என்கிற ஃபார்முலாபடி என்னிடம் நானே தோற்றுப் போகிறேன். அதனால்தான் இந்த வெற்றி! நான் ஒரு கெமிஸ்ட் இல்லையானாலும் இந்த கெமிஸ்ட்ரியில் நான் அத்துப்படி.
|
|
 |
பி.தாமோதரன், சென்னை-28.
|
 |
தி.மு.க. அரசு விருதுகளாய் வழங்குகிறதே?
|
 |
இந்த அரசுக்கு அவை தாம் கேடயங்கள்!
|
|
 |
எஸ்.தங்கராஜ், தஞ்சாவூர்.
|
 |
நம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எப்போது ஒழியும்?
|
 |
வயதானவர்களை வேலைக்கு அழைத்து, இளைஞர்களை வயதானவர்களாக்கிக் கொண்டிருந்தால் வேலையில்லாத் திண்டாட்டம் எப்போது ஒழியும்? ஒழியாது. இந்த ஆட்சியில் வேலைக்குத் திண்டாட்டமிருக்கும்; திண்டாட்டத்திற்கு நிறையவே வேலையிருக்கும்.
|
|
 |
எஸ்.குப்புசாமி, மானாமதுரை.
|
 |
கர்நாடக பாரதிய ஜனதாவினர் கோபப்படும் அளவிற்கு எடியூரப்பா பற்றி தேவகவுடா பயன்படுத்திய வார்த்தைகள் என்ன?
|
 |
ஐயையோ! நான் சொல்லமாட்டேன்! பெற்ற தாயையே கேவலமாக விமரிசிக்கும் தரக்குறைவான சொற்கள் அவை! ஒரு முன்னாள் பிரதமரா இப்படியெல்லாம் பேசுவது?
|
|
 |
ராம.பழனியப்பன், திருச்சி.
|
 |
அரிசி விலை குறையும் என்கிறார்களே?
|
 |
இயற்கை பொய்க்காவிட்டால் அரிசி விலை இறங்கியே ஆகவேண்டும். அறுவடை நன்கு நடப்பதால் விலை இறங்கும். கூடுதலாக விளைச்சல் நிகழ்கிறபோது இடைத்தரகர்களும், பதுக்கல்காரர்களும், ஆன்லைன் வர்த்தகர்களும் செயற்கையான விலை உயர்வை ஏற்படுத்த முடியாது!
|
|
 |
ஏ. வெற்றிகொண்டான், திருச்சி.
|
 |
நிதி நெருக்கடி இன்றி, புதிய புதிய திட்டங்களை அறிவிக்கும் தி.மு.க. ஆட்சி பற்றி?
|
 |
மயங்கித் தள்ளாடுபவர்கள் தந்த பணத்தைக் கொண்டு, மயங்காதவர்களையும் மயக்கும் கலையை தி.மு.க. நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.
|
|
 |
டி.செல்வம், சிவகங்கை.
|
 |
புதைகுழியில் என் உடல் அருகே புத்தகங்களைப் போட்டு விடுங்கள் என்று சொல்லும் திரைப்படப் பாடலாசிரியர் கபிலனின் நெகிழ்ச்சியான விருப்பம் குறித்து உங்கள் கருத்து?
|
 |
1970களிலேயே தமிழ்வாணன் சொன்னதுதான். ஆனால் இதை நாங்கள் செய்யவில்லை.
|
|
 |
எஸ்.கமல்பாஷா, பாண்டிச்சேரி.
|
 |
முஜிபுர் ரகுமான் கொலை வழக்கு இப்போதுதான் முடிவிற்கு வந்திருக்கிறது. சட்ட நிலைமைகளில் பங்களாதேஷிற்கு இந்தியாவே பரவாயில்லை போலிருக்கிறதே?
|
 |
1975இல் முஜிபுர் கொல்லப்பட்டு 34 ஆண்டுக்ள ஆகிவிட்டன. இடையில் வந்த ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள். எனவே வழக்கை முடுக்காமல் ஆறப்போட்டு, ஊறப்போட்டு விட்டார்கள். பதவிக்கு வந்த முஜிபுரின் மகளுக்கு இது தாங்கமுடியாத விஷயமாக இருந்ததால்தான் இப்போதாவது முடிவிற்கு வந்திருக்கிறது.
|
|
 |
க.துரைராஜ், முசிறி.
|
 |
நீங்கள் வியக்கும் இந்தியர் யார்?
|
 |
உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் துபாயில் 100வது தளத்தையும் 141 தளத்தின் ஒரு பகுதியையும் 80 கோடிக்கு வாங்கி மருத்துவ நிறுவனத்தை நடத்தும் பி.ஆர்.ஷெட்டியைச் சொல்வேன். இந்தியர்களின் பெருமையை 141வது மாடியில் தூக்கி நிறுத்தியிருக்கும் ஷெட்டி மிகுந்த பாராட்டுக்குரிய இந்தியர்!
|
|
 |
எம்.சரஸ்வதி, கும்பகோணம்.
|
 |
அகில இந்திய அளவில் அசுர வளர்ச்சி காட்டும் காங்கிரஸ் வரும் தேர்தலிலாவது தமிழகத்தில் தலைதூக்குமா?
|
 |
தமிழகத்தில் தங்கபாலு காங்கிரஸ்; ஜி.கே.வாசன் காங்கிரஸ்; ப.சிதம்பரம் காங்கிரஸ்; ஈ.வெ.கி.ச. இளங்கோவன் காங்கிரஸ் என்று நான்கு காங்கிரசுகள் இருக்கின்றன. நீங்கள் எந்த காங்கிரசைக் கேட்கிறீர்கள்?
|
|
 |
வி.ராஜகுமாரன், வண்டலூர்.
|
 |
ஜக்குபாய் திரைப்பட சி.டி. அப்படம் வெளியாவதற்கு முன் வெளியாகிவிட்டதே?
|
 |
நீங்கள் நடப்பு தெரியாதவராய் இருக்கிறீர்கள். இப்போது திரையுலகில் பெரும்பாலும் குளோனிங்தான். இயற்கைப் பிரசவங்கள் குறைவு.
|
|
 |
|
|