Friday, 22 Jan 2010
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
நாகப்பட்டினம் திருக்கடைமுடி சிவன் கோவில் தலவிருட்சம்
கிளுவை கோகுல் மரம்
COMMIPHORA CAUDATA, ENGL; BURSERACEAE
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல்
மறையவன் உலகவன் மாயம் அவன்
பிறையவன் புனலவன் அனலும் அவன்
இறையவன் எனஉல கேத்துங் கண்டம்
கறையவன் வளநகர் கடை முடியே
* ஞாபக சக்தி அதிகரிக்கிறது…!
* சிறுநீரகங்கள் சக்தி பெறுகிறது…!
* ஆண்மைக்கு வலிமை தருகிறது…!
* சிறுநீரகக் கற்களைக் கரைக்கிறது…!
* மாதவிலக்கைச் சரி செய்கிறது…!
* எலும்பு மூட்டு தேய்மானத்தைக் குணமாக்குகிறது…!
* பக்கவாதம், பாரிச வாயுவைக் குணமாக்குகிறது…!
* மலச்சிக்கல், மூலத்தைக் குணமாக்குகிறது…!
இதற்குத் தமிழில் கிளுவை என்றும், கோகுல் பிசின் என்றும், ஆங்கிலத்தில் HILL BALSAM என்றும் அழைப்பார்கள். இம்மரத்தின் பிசினை சிறுநீரகக் கோளாறுகள், தோல் நோய்கள், நரம்புக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இதன் பழங்களை ஊறுகாய் போட்டு உண்பார்கள். இலைகளை ஆடுகளுக்கும் தீனியாகப் போடுவார்கள்.
இராஜஸ்தான், ஆந்திரா, அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் காணப்படுகிறது.
ஆயுர்வேதம்
கோகுல் பிசின் சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது. மந்தமான கல்லீரல் மீண்டும் செயல்படுகிறது. வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகள் ஒழிகின்றன. கை கால் வீக்கம், மூட்டு வலிகள், கட்டிகள், வெண் குஷ்டம், வலிப்பு நோய்கள் நீங்க மருந்தாக பயன்படுத்துகின்றார்கள். இந்தப் பிசினைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண், ஈறுவீக்கம் குணமாகிறது.
மார்புச்சளி, மண்டைச் சளி நீங்க இதன் நீராவியைப் பிடிப்பார்கள். ஆயுர்வேதத்தில் கிட்னி ஃபெயிலியர், வெள்ளைப்பாடு நோய், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோய், மூட்டு வலி, பக்கவாத நோய்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
யுனானி வைத்தியம்
கோகுல் மருந்தை லேகியமாகத் தயாரித்துக் கடைகளில் விற்கிறார்கள். “இதரஃபீல் முகில் முலையன்” என்ற லேகியமும் “மாஜுன் முகில்” என்ற லேகியமும், மூட்டு வலி, வாத நோய்கள், இரத்தம் கொட்டாத மூலநோய்களுக்குப் பயன்படுத்துகின்றார்கள். மாஜுன் ரோகராஜ் கோகுல் என்னும் லேகியம் பக்கவாதம், பாரிச வாயு, நடுக்கம், நரம்புத் தளர்ச்சி, மூட்டு வலி மற்றும் இரத்தம் கொட்டும் மூலம் குணம்பெற பயன்படுத்துகின்றார்கள்.
அரபு நாட்டு வைத்தியம்
அரபு நாடுகளில் கோகுல் பிசினை பல நூற்றாண்டுக் காலமாக பெரும் மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றார்கள். இதைப்பற்றி பார்ப்போம்.
நபிமொழிகள்
தனக்கு ஞாபக சக்தி குறைந்து விட்டது. அதற்கு என்ன செய்ய வேண்டும், என்று நபி பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு “குந்தர்” (பரங்கி சாம்பிராணி) எடுத்து அதைத் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துக் காலையில் அதன் நீரை மட்டும் வெறும் வயிற்றில் குடியுங்கள். ஏனென்றால் குந்தர் ஞாபகச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் சிறந்த மருந்து என்று நபிபெருமானார் (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள்.
ஹஜ்ரத் அனஸ் பின்மாலிக் (ரலி) அவர்களின் வாயிலாக இப்னுல் ஹகீம் (ரலி) அவர்கள் ஆதாபுல் ஷாஃபி புத்தகத்தை ஆதாரமாக்கி அவர் எழுதிய திப்பே நபுவியில் இடம் பெறச் செய்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) காலையில் வெறும் வயிற்றில் அதைச் சர்க்கரையுடன் கலந்து குடிப்பார்கள். இது சிறு நீரகத்தின் வியாதிகளைக் குணமாக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் சிறந்த மருந்து என்று பெருமானார் (ஸல்) கூறிய மருத்துவ மொழியையும், பழக்கத்தையும் ஹஜ்ரத் அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக இப்னுல்ஹகீம் (ரலி) அவர்களின் திப்பே நபுலி புத்தகத்தில் சேர்த்துள்ளார்கள்.
ஓர் இடத்தில் “அல்லை பான் ஹீவல் குந்தர்” என்று பெருமானார் (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். எனவே, மேற்கண்டவாறு ஞாபக சக்தியைப் பொருத்தவரையில் குந்தரைத்தான் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள் என்று ஹதீஸ் எழுதும் அறிஞர்கள் கூறுகின்றார்கள். லோபான் சாம்பிராணி சிறுநீரகப் பிரச்சினைகளுக்கும், குந்தர் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் சிறந்த மருந்து என்று டாக்டர்களும் கூறுகின்றார்கள்.
பரங்கி சாம்பிராணி
நபி பெருமானார் (ஸல்) கூறிய குந்தர் தமிழில் பரங்கிச் சாம்பிராணி, ஆங்கிலத்தில் ஒலிபானம், அரபு, பாரசீக, இந்தியில் குந்தர், உருது மொழியில் கோகுல் மற்றும் பலமொழிகளில் குந்துரு, குந்துரு கோந்த், சிலாயினா கோந்த் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
“கோகுல்” முள் கொண்ட மரமாகும். இம்மரத்தின் கிளைகளையும், தண்டையும் கத்தியால் கீறும்போது அதிலிருந்து குந்தர் கிடைக்கிறது. பரங்கிச் சாம்பிராணி என்ற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கிறார்கள். இதை யுனானி மருத்துவர்கள் மாமருநதாகப் பல வியாதிகளைக் குணமாக்க பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.
யுனானி மருத்துவம்
பரங்கிச் சாம்பிராணியை ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை காலை மாலை இரண்டு வேளை மருந்தாகப் பயன்படுத்தலாம். இதை மேற்கூறிய அளவுப்படி சாப்பிட்டால் கீழ்க்காணும் வியாதிகள் குணமாகும் என்று இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட யுனானி மருத்துவப் புத்தகங்களும், மருத்துவ விஞ்ஞானிகளும் கூறுகின்றனர்.
* மலச்சிக்கலை நீக்கும்.
* ஆண்மைச்சக்தி அதிகரிக்கும்.
* மனதிற்கும், மூளைக்கும் உற்சாகம் தரும்.
* தடைப்பட்ட மாதவிலக்கு வெளியேறும்.
* ஒழுங்கற்ற மாதவிலக்கைச் சரி செய்யும்.
* அதிகளவில் வெளியேறும் சிறுநீரைக் கட்டுப்படுத்தும்.
* எலும்பு மூட்டுகளின் வீக்கம், வலி, தேய்வு ஆகியவற்றைக் குணமாக்கும்.
இதை 3 கிராம அளவில் இரவில் தண்ணீரில் ஊற வைத்துக் காலையில் அதைச் சாப்பிட்டால் குண்டானவர்களின் ஊளைச்சதை, வயிற்றுத் தொப்பை, பெரிய அளவு புட்டம், இடுப்பு ஆகியவை இளைத்து உடல் எடையையும் குறைத்துவிடுகிறது. ஞாபக மறதி, கோழைத்தனம், குழப்பங்கள் நீங்கி மனதில் திடமான எண்ணங்களை உருவாக்குகிறது.
குந்தரை கருவேல பிசினுடன் கலந்து சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும். இதை தேனில் கலந்து அரைத்துக் கண் அருகில் உண்டாகும் இரணங்களைக் குணமாக்கப் பூசலாம்.
இதைப் பவுடராக்கி அழுகிய சதை மற்றும் எலும்புகள் மீது இதன் களிம்பைப் பூசினால் அது விரைவில் குணமாகும்.
துஹான் குந்தர் என்னும் வகையைத் தலைமுடியை வளர்க்கும் மருந்துகளில் கலப்பார்கள்.
விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு வெட்டைநோய் உண்டாகும். அதனால் சிறுநீர் துவாரத்தில் வீக்கம், அழற்சி ஏற்பட்டு சொட்டு மூத்திரம் ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலாக இருக்கும். இதைக் குணமாக்க, குந்தரை காலை மாலை இரண்டு வேளைகள் தண்ணீருடன் சாப்பிடலாம்.
ஊமை காயங்கள், நரம்புகளில் இரத்த அடைப்பு குணமாக இதை மேல்பூச்சுக் களிம்பாகவும், உள்ளுக்கு மருந்தாகவும் சாப்பிடலாம்.
இதை வெந்நீரில் கலந்து வாய் கொப்புளித்தால் நாக்கு, வாய்ப்புண், ஈறுகளின் இரணம், டான்சில் கட்டி குணமாகும். இதை சுக்ரோந்தா (திபாரி மூலி) சாற்றில் கலந்து அரைத்து மலத்துவாரத்தின் மூலக்கட்டிகளைக் கரைக்கப் பூசலாம்.
இளம்பிள்ளைவாதம், பாரிச வாயு, கக்குவான், கை, கால் விளங்காமை, வாய் விளங்காமை போன்ற உடல் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும் நோய்களுக்குக் குந்தரை லேகியமாகத் தயாரித்துக் கொடுப்பார்கள். இதைச் சாப்பிடுவதால், தடைப்பட்ட இரத்த ஓட்டம் சரியாகும். பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மீண்டும் இயங்கும். விரைவாதம், மலத்துவாரத்தில் வீக்கம் குணமாகும்.
மூத்திரக்காய் மற்றும் சிறு நீர்ப்பையில் கூடும் கற்களைக் கரைத்துச் சிறுநீரின் வழியாக வெளியேற்றும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீர் அதிகமாக வெளியேறும். இடுப்புவலி, தொடை, நரம்புவலி குணமாகும். ஆண்மைச் சக்தியை அதிகரிக்கச் செய்யும், உடலின் வீக்கங்களையும், கட்டிகளையும் கரைக்கும்.
* குந்தரை சுக்குக் கஷாயத்துடன் சாப்பிட்டால் பசி அதிகரிக்கும்.
* சுரன்ஜான் தலக் வேருடன் மிளகு கலந்து சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகும்.
* காடியில் கலந்து வழுக்கையான இடங்களில் பூசினால் மீண்டும் முடி வளரும்.
* இதை நெருப்பின் மீது வைத்து அதன் புகையை வீட்டிற்குள் பிடித்தால் பூச்சிகள், நச்சக்கிருமிகள், வண்டுகள் ஆகியவை செத்துவிடும். கொசுக்களின் தொல்லையும் நீங்கிவிடும்.
* தினமும் ஒரு கிராம் அளவில் குந்தரைச் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இரத்தத்தின் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கூடும். உடலில் சதை அழிவு நோய், காச நோய் மற்றும் புளுரெசி நோய் நீங்க குந்தரை டாக்டர்கள் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.
தயாரிக்கப்பட்ட மருந்துகள்
குந்தரை யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தலாம். இதைச் சாப்பிடுவதால் முன்பின் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.
இதைத் தயாரிக்க முடியாதவர்கள் பிரபல யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாக விற்கப்படும், கீழ்க்காணும் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தலாம். விபரங்கள் அனைத்தும் மருந்து டப்பாக்களின் மீது இருக்கும்.
மாஜுன் ஜோக்ராஜ் கோகுல்
இந்த லேகியத்தை 5 கிராம் அளவில் காலை அல்லது இரவில் பாலுடன் சாப்பிட்டால் பாரிச வாயு, கைகால் இயங்காமை, நடுக்கம், மூட்டுவலிகள், மூட்டு வாதம், மூட்டு தேய்வு, நரம்பு வலிகள் மற்றும் ஈரத்தால் உண்டாகும் வியாதிகள் குணமாகும்.
மாஜுன் குந்தர் : இந்த லேகியத்தை 5 கிராம் காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வேண்டும். இந்த லேகியத்துடன் குர்ஸே கப்கல் ஹதீத் அல்லது குர்ஸ் குஷ்தா பைஜா முர்க் ஒரு மாத்திரை சாப்பிட்டால் வியாதி விரைவில் குணமாகும்.
இந்த லேகியம் சிறுநீரகம் மற்றம் சிறுநீர்ப்பைக்கு சக்தி தருகிறது. தன்னிச்சையில்லாமல் அடிக்கடி வெளியேறும், அதிகளவில் வெளியேறும் சிறுநீரைக் கட்டுப்படுத்துகிறது. குழந்தைகளின் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஒழிக்கிறது.
மாஜுன் மாசிக்கல் போல் : இந்த லேகியத்தை வெறும் வயிற்றில் காலையிலும், இரவிலும் 5 கிராம் வீதம் சாப்பிட்டால் சிறுநீரகத்திற்கு சக்தி தரும்.
அளவு கடந்த சிறுநீரையும் கட்டுப்படுத்தும், பாரிச வாயு, கை கால் இயங்காமை, நரம்பு வியாதிகள் மற்றும் சளித் தொல்லைகள் நீங்கிட ஒரு கிராம் அளவில் சாப்பிடலாம்.
ஹப்பே மீயா : நாள்பட்ட சளித்தொல்லைகள் நீங்க காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளை ஒரு மாத்திரை வீதம் சாப்பிடலாம்.
இத்ரஃபீல் முகில் : இந்த லேகியத்தை எல்லாவித மூல வியாதிகளிலும் 5 கிராம் அளவில் காலை மாலை 2 வேளை சாப்பிடலாம்.
திர்யாக் ஃபாரூக் : ஒரு கிராம் அளவில் தவாவுல் மிஸ்க் லேகயித்துடன் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் பாரிச வாயு, வலிப்புகள், நடுக்கம், நரம்பு மற்றும் சளித் தொல்லைகள் நீங்கும்.
ஜவாரிஷ் முஸ்தகிப நுஸ்கா கலான் : வயிறு, குடல், கல்லீரலுக்குச் சக்தி தருகிறது. வாயிலிருந்து ஜொள்ளு, எச்சில் ஒழுகுவதைக் கட்டுப்படுத்தும். பேதியை நிறுத்தும், அதிகமாக வெளியேறும் சிறுநீரைக் கட்டுப்படுத்தும், இதை காலை, மாலை 2 வேளை 5 கிராம் வீதம் சாப்பிட வேண்டும்.
மாத்திரைகள் குர்ஸ் பலாதர் : சளி, தும்மல், அலர்ஜி, பாரிசவாயு, வாய் விளங்காமை, சர்க்கரை வியாதிகளைக் கட்டுப்படுத்தும். அதிகமாக வெளியேறும் சிறுநீரைக் கட்டுப்படுத்தும்.
ஹப்பே குர்ஸுல் ஹதீத் : இரத்த மூலம், உள் மூலம் ஆகியவை குணமாகும். வயிற்றுக்கும், கல்லீரலுக்கும் சக்திதரும்.
குர்ஸ் பவாசீர் : இரத்தம் கொட்டும் மூலம், மூலக் கட்டிகளின் வீக்கம், எரிச்சல் ஆகியவை குணமாக வேளைக்கு 2 மாத்திரை வீதம் காலை மாலை இரண்டு வேளைகள் சாப்பிடலாம்.
ரோகன் கலான் : பாரிச வாயு, நடுக்கம், மூட்டு வலிகள், பின்தொடை நரம்பு வலி, இடுப்புவலி ஆகிய நரம்பு, இடுப்பு பிரச்னைகளைக் குணமாக்க இந்த எண்ணெயை லேசாகச் சூடு செய்து காலை மாலை 2 வேளை மசாஜ் செய்ய வேண்டும்.
ஹப்பே பவாசீர் கூனி : இரத்தம் கொட்டும் மூலம் குணம் பெற இரண்டு மாத்திரைகள் காலை மாலை இரண்டு வேளை சாப்பிடலாம்.
ஹப்பே கரன்ஜான் : 3 மாத்திரைகள் காலை மாலை 2 வேளை சாப்பிட்டால் உடல் வலி, மூட்டுவலி குணமாகும்.
ஹப்பே முகில் : மூலம், வாயு, மலச்சிக்கல் குணமாக இரவில் 3 மாத்திரைகள் சாப்பிடலாம்.
ஹப்பே ரஸ்வத் : மூலநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்க 2 மாத்திரைகள் காலை மாலை இரண்டு வேளை சாப்பிடலாம்.
ஹப்பே பவாசீர் : 2 மாத்திரைகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் குணமாகும்.
தலவிருட்சம் கொண்டே திருக்கோயில்கள்
திருக்கடைமுடியெனும் திருக்கோவிலின் தலவிருட்சமாக கிளுவை வணங்கப்படுகிறது.
திருக்கோயில்களில் பல தலவிருட்ச மரங்கள் இருக்கின்றன. அவைகளில் ஒன்று நாகப்பட்டினம், திருக்கடைமுடி ஊரில் உள்ள திருக்கடை முடிநாதர் சிவன் ஆலயத்தில் வணங்கப்படும் கோகுல் மரமாகும்.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2010/01/15 திருவாரூர் திருசெங்கண்டன்குடி ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம் காட்டு அத்தி மரம்
2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி
2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி
2009/12/25 ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்
2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்
2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி
2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு
2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு
2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்
2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்
2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்
2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)
2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்
2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை
2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி
2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை
2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்
2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்
2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்
2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்
2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































