Friday, 22 Jan 2010

Dhanush confused media in Kutty press meet

குட்டியா, ஆயிரத்தில் ஒருவனா எது வெற்றி?:
‘நான் ஜெயிச்சா அண்ணன் ஜெயிச்சா போல’ தனுஷ் குழப்படி

dhanush1.jpg
குட்டி படம் குறித்த கேள்விக்கு, குழப்பமான பதிலை அளித்து தானும் குழம்பி கேள்வி கேட்ட நிருபர்களையும் குழப்பி்னார் தனுஷ்

பொங்கலுக்கு வந்த படங்களில் முன்னணியில் இருக்கும் ‘குட்டி’ படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில், நடிகர் தனுஷ் கலந்துகொண்டு நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது தனுஷ் நடித்த ‘குட்டி’ படத்தையும், அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தையும் ஒப்பிட்டு கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தனுஷ்.

“என்னை உருவாக்கியதே அண்ணன்தான். அதனால், நான் வெற்றிப் பெற்றாலும் அவர் வெற்றிப்பெற்றது போலதான். என்னுடைய படத்தையும் அவருடைய படத்தையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. என் படமும், அவருடைய படமும் வேறு வேறு ரகம். இதில் போட்டி என்று வந்தால் அவர்தான் வெற்றிபெறுவார்” என்று அண்ணன் செல்வராகவனை விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

பொங்கலுக்கு வந்த நான்கு படங்களில் குட்டி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்குக் கிடையேதான் கடும்போட்டி நிலவுகிறது. இந்நிலையில், குட்டி வெற்றியா ஆயிரத்தில் ஒருவன் வெற்றியா என்ற கேள்விக்கு சரிவர பதிலளிக்காமல் கிளம்பி சென்றார் தனுஷ்.

Related Posts Title


2 Responses to “Dhanush confused media in Kutty press meet”

  1. Soundarya

    VERY IMPORTANT NEWS. SIGH.

  2. ramesh

    both are stupid movies

Leave a Reply