Thursday, 21 Jan 2010

‘சந்தித்த வேளை’யில் சிந்திக்க வைத்த ரவி தமிழ்வாணன்!
கலைஞர் தொலைக்காட்சியில் காலையில் மலரும் ‘சந்தித்த வேளை’ நிகழ்ச்சியில் கடந்த வாரம், மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாகி ரவி தமிழ்வாணனின் பேட்டி இடம் பெற்றது. சந்தித்த வேளை நிகழ்ச்சியை அவர் சிந்தித்த வேளையாக மாற்றினார். தமிழகத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் தமிழை அதிகம் நேசிக்கிறார்கள்; வாசிக்கிறார்கள்; சுவாசிக்கிறார்கள் என்ற அவர், தமிழில் அதிகம் புத்தகம் வெளியிட்டாலும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக தமிழ் கற்கலாம் என்கிற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். கிட்டதட்ட 70 நாடுகளுக்கு தான் பயணித்திருப்பதாகவும், அங்கு நடைபெறும் கண்காட்சியில் தங்கள் நிறுவன புத்தகங்கள் இடம் பெறுவதாகவும் தகவலைப் பரிமாறிக்கொண்டார்.
இசைக்கருவிகளை வாசிப்பது குறித்த புத்தகங்கள் பற்றி பேசிய பேட்டியாளர் ரமேஷ்பிரபா, ‘இது ஏதோ கரஸ்பாண்டன்ஸில் கார் ஓட்ட கற்பது போலத் தெரிகிறதே’ என்றார். இதற்கு பதிலளித்த ரவி தமிழ்வாணன், நீச்சல் பழகுவது எப்படி என்ற புத்தகத்தை வைத்துத்தான் தானே நீச்சல் கற்றுக் கொண்டதாக முத்தாய்ப்பாகக் கூறினார். இது போன்ற புத்தகங்கள் ஒரு விஷயம் குறித்த ஆரம்ப அறிவைத் தரும் என்றவர், குரு சிஷ்யன் இடையே ஒரு புரிதலையும் இவை ஏற்படுத்தும் என்றார். மேலும் அவர் படிப்பதும் பயிற்சிப்பதும் தான் தன்னுடைய வேலை என்று குறிப்பிட்டார்.
‘சந்தித்த வேளை’யில் நம்மை சிந்திக்க வைத்த ரவி தமிழ்வாணனின் பேட்டியைக் காணுங்கள்..
சந்தித்த வேளை விடியோ:
Ravi Tamilvanan’s Interview on Kalaingar TV part 1
Ravi Tamilvanan’s Interview on Kalaingar TV part 2
Ravi Tamilvanan’s Interview on Kalaingar TV part 3
Ravi Tamilvanan’s Interview on Kalaingar TV part 4
Ravi Tamilvanan’s Interview on Kalaingar TV part 5

































November 29th, 2010 at 9:06 am
Dear Ravi sir. Your interview on Kalaignar TV is excellent.
Thanks & Regards
Jamalkhan Manzurr
Colombo.