வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
என் கரம் பற்றிய அந்தப் பெண்!
சியாம் ரியாப் ஓட்டலில் காலையில் எங்களை அழைத்துக் கொள்ள வந்த ஓட்டுநர் மிகச் சரியாக நேரத்திற்கு வந்தபோதும் ஏன் எங்களுக்கு, அறைக்குத் தகவல் தரவில்லை என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் அசத்தலாக இருந்தது என்று சொல்லியிருந்தேன் அல்லவா?
அந்த பதில் என்ன தெரியுமா?
“நான் குறித்த நேரத்திற்கு வந்திருப்பேன் என்ற எதிர்பார்ப்போடு நிங்களல்லாவா கீழே இறங்கி வந்திருக்க வேண்டும்? என்னைக் காணாவிட்டால் அதன் பிறகல்லவா என்னை தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருக்க வேண்டும்? என்னிடமிருந்து தொலைபேசி வராததாலேயே நான் வ்நதிருக்க மாட்டேன் என்று எப்படி நீங்களாக முடிவுக்கு வந்தீர்கள்? நீங்கள் சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டதால் நான் உங்களுக்குத் தெரிவிக்கவில்லை” என்கிற பாணியில் அந்த ஓட்டுநர் பதில் சொன்னார்.
ஓர் ஓட்டுநர் இப்படியெல்லாமா பேசுவார் என்று உங்களுள் சிலர் நினைக்கக்கூடும். ஆனால் இதே பாணியில் கோபமாகவோ கடுமையாகவோ பேசாமல் மிகத் தன்மையாக மிக மென்மையாக கள்ளங்கபடமற்ற புன்சிரிப்புடன் இவை அனைத்தையும் சொன்னார்.
நானும், நண்பர் சிவாவும் இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் வாயடைத்து நின்றோம்.
“சரி சரி! புறப்படுவோம்” என்றேன் அசடு வழியும் புன்னகையுடன்.
இப்போது புறப்பட்டுப் போனால் இரவுதான் அறைக்குத் திரும்புவோம் என்று சிவா தெளிவுபடுத்திவிட்டதால் மதியம் மாலை எல்லாவற்றையும் மனதில் கொண்டு சில பொருள்களை அள்ளிக் கொள்ள வேண்டியிருந்தது.
படிக்கச் சில விஷயங்கள்; நொறுக்குத் தீனிகள்; குறிப்பு எடுத்துக் கொள்ள நோட்டு; போகிற இடத்தில் ஏதும் உடல் நலக்குறைவு என்றால் அதற்கு மாத்திரைகள், உடைகள் நனைந்து விட்டால் அதற்கு மாற்று உடைகள் (ஏன் என்று உரிய இடத்தில் சொல்கிறேன்); செய்திகள் - பாடல் கேட்பதற்கு டிரான்சிஸ்டர்; களைப்புத் தெரியாதபடி இருக்க முகம் கழுவும் சோப்பு, டவல், பவுடர், சீப்பு என்று பல விஷயங்களை ஒரு கைப்பையில் அடக்கி அள்ளிக் கொண்டேன்.
காலையில் புறப்பட்டு மாலை திரும்புவதற்குள் இவ்வளவு பெரிய பையா என்று சிவா வியப்பாகப் பார்த்துக் கொண்டார். ஆனால் இதுபற்றி அவர் ஒன்றும் கேட்கக் காணோம்.
ஆனால் பயணத்தின்போது அவசியமான விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படவெளிப்பட அவரால் வியப்பை அடக்க முடியவில்லை.
நாங்கள் முதலில் காணச் சென்றது மகாலிங்கம் எனப்படும் மிகப் பெரிய லிங்கம் ஒன்றையும் அதனுடன் இணைந்த 1008 லிங்கத் திருமேனிகளையும்.
கம்போடியாவுக்குப் பலரும் சென்றிருக்கக் கூடும். ஆனால் இந்த லிங்கங்களைத் தேடி எவரும் அதிகம் வருவதில்லை என்பதை உணர எனக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை.
இதை எங்கள் ஓட்டுநரும் உறுதி செய்தார். இவ்வளவு நாள்களாக கம்போடியாவிற்கு வந்து செல்லும் சிவாவும் இந்த 1008 லிங்கங்களைக் கண்டது இல்லையாம்; ஏன் - கேள்விப்பட்டது கூட இல்லை என்றார்.
நமக்குத் தெரியாத இந்த விஷயம் இந்த லேனாவுக்கு எப்படித் தெரிந்தது என்பதும் சிவாவுக்குள் ஏற்பட்ட வியப்பாம்.
1008 லிங்கங்கள் இருக்கும் பகுதி எளிதில் வருவேனா என்றது. ஆனால் இவற்றைப் பார்ககிற சாக்கில் கம்போடியாவின் கிராமத்து வாழ்க்கையை ஊடுருவிப் பார்க்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சிட.
ஏதோ தஞ்சாவூர் மாவட்டதிற்குள் புகுந்துவிட்டதைப் போலவே உணர்வு. இரு பக்கமும் விதவிதமான பசுமை வயல்கள். நீர் வளம் இந்த நாட்டில் பெரிய கொடுப்பினை, தஞ்சை மாவட்டச் சாலைகள் போலவே ஓரிரு கிலோ மீட்டர்களுக்கு மேல் நேர்க்கோடு இல்லாத, ஏகப்பட்ட வளைவுகளை உடைய சாலைகள்.
வீடுகள் மட்டும் வித்தியாசமாக இருந்தன.
பத்தடி உயரத்திற்கு மரக் கால்களோ, அல்லது சிமென்ட் கால்களோ கொண்ட வீடுகளே அதிகம் காணப்பட்டன. வேறு வகையில் சொன்னால் சியாம் ரியாப்பில் வீடுகள் பலவும் உயரமான மாடி வீடுகளே. கீழேயும் அறைகள் இருக்கின்றனவே தவிர, மேலேதான் எல்லாம்.
இதற்குக் காரணம்கேட்ட போதுதான் ஓர் உண்மை புரிந்தது. அடிக்கடி மழை பெய்து கொண்டே இருப்பதால் கீழ் தளங்களில் வெள்ளம் புகுந்துவிடுமாம். இதன் காரணமாக பாதுகாப்புக் கருதி உயர வீடுகளில் மக்கள் வசிக்கிறார்கள்.
கிராமத்து வீடுகளில், வயல்வெளிகளில் வேலை செய்தவர்களைவிட வீடுகளின் வாசல்களில் கும்பல் கும்பலாக இருந்த குடும்ப உறுப்பினர்களையே அதிகம் கண்டேன். ஆண்கள் இப்படி அதிக அளவில் ஓய்வெடுப்பதைப் பல நாடுகளில் நான் கண்டதே இல்லை.
தார்ச் சாலையாக வளைந்து வளைந்து ஓடிய பாதை இப்போது சற்றுக் குறுகலான செம்மண் சாலையாக மாறியது. செம்மண் சாலையாக இருந்த பாதை இப்போது ஒரு மலைப்பாதையாக மாறியிருந்தது. மலைப்பாதையோ குறுகலாக இருந்தது. அதுவும் தார்ச் சாலையாக இல்லாமல் மோசமான மண்பாதையாக இருந்தது.
வானுயர்ந்த மரங்கள் அடர்த்தியாக இருக்க நேற்று பெய்த பெரு மழையாக சாலை வேறு கிட்டத்தட்ட ஒரு சிற்றோடையாக மாறியிருந்தது. எங்கள் ஓட்டுநர் கவனமாக ஓட்டியபோதும் சில எதிர்பாராத பள்ளங்களில் விழுந்து எழுந்து முதுகிலும் கைகளிலும் தலையிலும் மொட்டு மொட்டு என்று இடித்துக் கொண்டோம்.
இந்த இடத்தில் நாங்கள் ஏன் அவ்வளவு விடிகாலையில் கிளம்பினோம் என்பதை இந்த நேரத்தில் உங்ளுக்குச் சொல்லியாக வேண்டும்.
சியாம் ரியாப்பின் 1008 சிவலிங்கங்களைக் காண காலை 10 மணிக்குள் வந்துவிட வேண்டுமாம். இந்த 1008 சிவலிங்கப் பாதை 10 மணி வரைக்கும் நுழைய அனுமதிக்கப்படும் பாதையாம். இதன் பிறகு 2.00 மணிக்குத்தான் மறுபடி நுழைய முடியுமாம். 11 முதல் 1 வரை எதிர்ப்புற வாகனங்கள் மட்டும் வருமாம். நாம் எதிர்த்திசையில் இந்நேரம் போகமுடியாது.
ஓரு மலைப்பாதையை இப்படி ஒரு வழிப் பாதையாகப் பயன்படுத்தும் இடத்தை நான் 32 வருடப் பயண அனுபவத்தில் கேள்விப்பட்டதே இல்லை.
எங்கள் ஓட்டுநர் ஏன் இப்படி பள்ளம் மேடு பாராமல் ஓட்டுகிறார் என்பது இப்போதுதான் புரிந்தது.
10.00 மணியைக் கடந்து விட்டால் 2.00 வரை காத்திருக்க வேண்டியதுதான் என்பதால்தான் இந்த ஓட்டம்.
ஏதேனும் மிருகங்கள் வருமா என்று கேட்டேன் ஓட்டுநரிடம். “உண்டு. ஆனால் ஆபத்து அற்ற சிறு மிருகங்கள்” என்றார்.
ஒரு கிரிக்கெட் மைதானம் அளவிற்குத் திறந்த வெளி வந்ததும் கார் நின்றது. அங்குதான் 1008 சிவலிங்கம் பற்றிய அறிவிப்புப் பலகை ஒன்று காணப்பட்டது.
எங்கள் காரைக் கண்டதும் சிறுவர்களும் சிறுமிகளும் பெண்களுமாய்ப் பலரும் ஓடிவந்தார்கள். எதற்கு இப்படி ஓடிவருகிறார்கள் என்றே முதலில் பிடிபடவில்லை.
பிறகுதான் தெரிந்தது. அவர்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் காசு பெறுவதற்கு என்பது.
30-35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி காலை நெருங்கி ஓட்டுநரிடம் ஏதோ பேசினாள். இவரும் ஏதோ சொன்னார்.
“என்னவாம்?” என்றேன்.
“இந்த இரு சுற்றுலாப் பயணிகளுக்கும் நான்தான் இங்கு சுற்றிக் காட்டுவேன்; இதை நீ சொல் என்கிறாள்” என்ற ஓட்டுநர், “உங்களுக்கு இதில் விருப்பமா?” என்றும் கேட்டார்.
“நிறையக் கேட்பாரோ?”
“இல்லை. கொடுப்பதை வாங்கிக் கொள்வாள்.”
“சரி, அழைத்துப் போகச் சொல்லுங்கள்” இதை ஓட்டுநர் மொழி பெயர்த்ததும் மிக உரிமையோடு என் கையைப் பிடித்துக் கொண்டு “வாருங்கள்” என்றாள்.
எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.
ஓர் ஒற்றையடிப்பாதையில் அவள் என்னைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றது ஒரு புதிய அனுபவம். அந்தக் காட்டுப் பாதையில் வழுக்கலான இடங்களில் கைப்பிடியை இன்னும் உறுதியாகப் பிடித்துக் கொண்டாள். சில இடங்களில் என் இடுப்பையும் சேர்த்துப் பிடித்தாள். “விடுவிடு நானாக நடக்கிறேன்” என்று (ஆங்கிலத்தில்) சொல்லியும் அவள் காதில் கேட்டுக் கொள்ளவே இல்லை.
“எங்கே போகிறோம் நாம்? 1008 சிவலிங்கத்தைக் காணத்தானே?”
“ஆமாம். ஆனால் நீங்கள் அதைக் காண முடியாது!”
“என்னது! காண முடியாதா?” குரலில் அதிர்வு காட்டினேன்.
“ஆமாம் நேற்று பெய்த மழையால் ஆற்றில் வெள்ளம் போகிறது.”
“ஆற்றைக் கடந்து போக முடியாது என்கிறாயா?”
“இல்லை. ஆற்றப் படுகைக்குள்தான் அந்த 1008 சிவலிங்கங்களும் இருக்கின்றன.”
என் ஏமாற்றத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































