» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 15 Jan 2010

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

திருவாரூர் திருசெங்கண்டன்குடி
ஆதிவனந்தர் சிவன் கோவில் தலவிருட்சம்
காட்டு அத்தி மரம்
(DIOSPYROS PEREGRINA)

காட்டாத்தி
BAUHINIA TOMENTOSA, LINN:CAESALPINACEAE

திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் - பாடல்
உள்ளுமாயப் புறமு மாகி உருவுமாய்
அருவு மாகி
வெள்ளமாய்க் கரையு மாகி விரிகதிர்
ஞாயிறாகிக்
கள்ளமாய்க் கள்ளத் துள்ளார்
கருத்துமாய அருத்தமாகி
அள்ளுவார்க் கள்ளல் செய்திட
டிருந்தஆப் பாடி யாரே.

திருவாரூர் மாவட்டம் திருசெங்கன்டன்குடி ஊரில் காலத்தில் இந்தக் காட்டு அத்தி மரங்கள் காடுபோல் அடர்த்தியாக இருந்ததாகவும், இந்த மரத்தின் அடியில் சிவபெருமான் வந்து நின்று மக்களுக்கு தரிசனம் கொடுத்ததால் அவ்விடத்தில் கட்டப்பட்ட கோவிலுக்கு ஆதிவனந்தர் சிவன் ஆலயம் என்ற பெயர் வைக்Fப்பட்டதாகவும் ஸ்தல புராணம் நூலில் கூற்பட்டு இருக்கின்றது.

கிராமிய மக்கள் இம்மரத்தின் கிளைகளை வெட்டி வீட்டிற்குள் வைப்பார்கள். இதனால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், காற்று, கண் திருஷ்டி, செய்வினை போன்றவைகள் அங்கு நெருங்காது என்று இந்து சமுதாய மக்கள் நம்புகின்றனர்.

காட்டு அத்திமரம் நல்ல பயனுள்ள மரமாகவும் அமைந்து இருக்கின்றது. வீட்டில் வைத்தால் இந்த மரம் அசுத்தமான காற்றை உறிஞ்சிக் கொண்டு அதைச் சுத்தம் செய்து மனிதனுக்கு வழங்குகின்றது.

எப்போதும் பச்சையாகவே காணப்படும் இந்த மரம் 5 மீட்டர் முதல் 18 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதிய இலைகள் தோன்றுகின்றன. குறுகிய காலத்தில் மீண்டும் பச்சை நிறத்திற்குத் திரும்பி விடுகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் பூக்களும், மழைக் காலங்களில் பழங்களும் தோன்றுகின்றன.

சித்த மருத்துவம்

தமிழகத்தில் வேறு பெயர்களாக மலை அத்தி, அசமந்தம், பேயந்தி எனவும் அழைக்கப்படுகிறது. FICUS OPPOSITIFOLIA எனும் அறிவியல் பெயரோடு தென்னிந்தியாவில் அழைக்கப்படுகிறது.

பழங்களைக் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் நாக்கு மற்றும் தொண்டை நோய் குணம் பெறுகின்றன. இப்பழத்தின் சாறுகளைக் காயம், புண்கள் மீது பூசலாம். பழங்கள் ஜீரணத்தை உண்டாக்குகிறது. உடலுக்குக் குளிர்ச்சி தருகிறது. பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. பழங்களை உலர வைத்து பேதி, வாய்ப்புண் குணம் பெறச் சாப்பிடுவார்கள். பழச்சாறு வெட்டை நோய், உடலுறவு நோய்களைக் குணப்படுத்துகிறது.

இம்மரத்தின் பட்டையை சீதபேதி, ஜுரம் ஆகியவை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். மேலும் உடல் எரிச்சல், வீக்கங்கள், தோல் நோய்கள், சர்க்கரை நோய், இரத்தப்போக்கு நோய், காசநோய், கட்டிகள், இந்திரியக் கோளாறுகள், அரிப்பு, பெண் உடலுறவு உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.

மரப்பட்டையைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது தசைகளில் சுருக்கம் ஏற்பட்டு இரத்தக்கசிவு நின்றுவிடுகிறது. மரப்பட்டை பவுடரை தேங்காய் எண்ணெயில் கலந்து தோல் நோய்கள் மீது பூசுவார்கள். சிறுநீரக நோய்களிலும், புற்ற நோய்களிலும் இதைப் பயன்படுத்துவார்கள்.

இம்மரத்தின் பூக்கள் சிறுநீரைத் தாராளமாகப் பிரியச் செய்கிறது. சிறுநீர் பாதை எரிச்சல், புண், சீழ் குணம் பெறுகிறது. ஆண்மைக்கு வலிமை தருகிறது.

இதன் பழம், பட்டை, பால் ஆகியவை பயன்படுகின்றது. கைப்புச் சுவையுடன் கொண்ட இச்செடி உரமாக்கும் தன்மையும், முறை வெப்பமாதலும் செய்கையும் உள்ளன. இதன் பால் மேக நோய், சொறி, குஷ்டரோக தடிப்பு, முளைவிரணம் ஆகியவற்றைப் போக்கும்.

பட்டையைக் குடிநீரிட்டு 50 மில்லி வீதம் தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் முறை ஜுரத்தைப் போக்கும். பழத்தையும், பட்டையையும் வெந்நீரில் வேக வைத்து குளித்து வந்தால் படை நீங்கும்.

வேரிலிருந்து எடுக்கும் பால் சிறந்ததாகக் கூறப்படுகின்றது. கற்கண்டுடன் சேர்த்து தகுந்த அளவில் கொடுத்தால் மேற்படி நோய்கள் தீரும் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. காட்டு அத்தியின் இலை, மொட்டு, பூ, பிஞ்சு, காய் ஆகியவற்றுக்கும் தனித்தனி குணம் உள்ளன.

இலை : பேதி, மாந்தம், இருமல், நஞ்சு ஆகியவற்றை நீக்குகிறது.

காய் : சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது.

இலை, மொட்டு : இதனை பச்சையாகவோ, உலர்த்தியோ, தனித்தனியாகவோ வேறு சரக்குகளுடன் சேர்த்தோ குடிநீரிட்டு சீதபேதிக்கு கொடுத்தால் குணமாகும்.

பூ : சீதபேதியைப் போக்கி, புழுக்களைக் கொல்கிறது.

விதை : இதனை காடி விட்டரைத்து விஷக்கடிகளுக்கும், புண்களுக்கும் பயன்படுத்தலாம்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

திருஆப்பாடி, திருச்சிற்றேமம், திருச்செங்காட்டங்குடி ஆகிய திருக்கோயில்களின் தலவிருட்சமாக காட்டத்தி வணங்கப்படுகிறது.

அத்தி மரங்களில் பலவகை உண்டு. இதனை FICUS மரம் என்பார்கள். சிவன் ஆலயங்களில் காட்டத்தி என்ற வகை மரம் ஓன்று தலவிருட்ச மரமாக அமைந்திருக்கின்றது.

திருவாரூர் மாவட்டம் திருசெங்கன்டன்குடி ஆதிவனந்தர் சிவன் ஆலயம், திருசிட்டிர்மம் ஊரிலுள்ள சோமாபுரீஸ்வரர் சிவன் ஆலயம், பெரம்பலூர் மாவட்டம் நாகமங்களம் ஊரில் உள்ள சோகேஸ்வரர் சிவன் ஆலயம், தஞ்சாவூர் மாவட்டம், திருவாப்பாடி ஊரிலுள்ள பாலூர் கந்தநாதர் சிவன் ஆலயம் மற்றும் பல சிவன் கோயில்களில் தெய்வத்துடன் சேர்த்து இந்த மரத்தையும் இந்து சமுதாய மக்கள் வணங்குகிறார்கள். இந்த மரம் புத்தர்களுக்கும் புனித மரமாகத் திகழ்கிறது.

சங்க இலக்கியம்

சங்க இலக்கிய நூல்களில் இம்மரம் பின்வருமாறு குறிக்கப்படுகிறது.

“இரும்பனை வெண்தொடு மலைத்தோனல்லன்
கருஞ்சினைவேம்பின் தெரியலோன் அல்லன்
நின்னகண்ணியும் ஆர்மிடைந்தன்றே
நின்னொரு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றோ”

இது புறநானூற்று பாடலாகும். காலப்போக்கில் ‘ஆர்’ ஆட்சி அருகி ஆத்தி ஆட்சி பெருகிற்று. உலக வழக்கில் இரண்டும் உலவின. ஆத்திச்சிறுமரம், காட்டத்தி எனவும் திருவாத்தி எனவும் கூறப்படும்.

சேக்கிழார் இதனைத் திருவாத்தி என்பர். திருச்செங்காட்டாங்குடி, திருக்கோவிலின் திருமரமாக காட்டத்தி வணங்கப்படுகிறது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2010/01/08 காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம் காரைச் செடி

2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி

2009/12/25  ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்

2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்

2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி

2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு

2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு

2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply